Wednesday 5 October 2011

எம் மவளே...!



குட்டி சுவர் என்னை -
கட்டி எழுப்பினா -
உன் அன்னை!

எம் மவளே!
என்னை-
 பெத்தவளே!

கடல் தாண்டி -
பொழக்கிற பொழப்பு -எங்களோடது!

புள்ள முகத்தை-
 பார்க்காம -
அவதி படுறோம் -
மனசோடு!

போட்டு கொண்ட -
மண மாலை-
காயிரதுக்கு -
முன்னே!

கப்ப ஏறி செல்லுற -
கொடுமை தான் -
என்னே!

திருமண நாளில் -
நண்பன்-
கொடுத்த பரிசு -
கையில தவழுது!

இறைவனின்-
 பரிசான -
எம் மவளே!

உன்னை நான் தூக்கிட -
கைகள் ஏங்குது!

குழந்தைங்க --
அப்பனுட்ட-
ஒட்டுறது இல்ல!

நீங்க குழந்தையா -
இருக்கையிலே !

நாங்க உங்களோட-
இருக்குறது இல்ல!

சில வருஷம் கழிச்சி-
வருவான் -
அப்பனுங்குறவன்!

புள்ள நினைக்கும் -
புள்ள புடிக்கிரவன்னு!

புள்ளைக -
 உள்ளம் -
வெள்ள!

எழுதுனதை மாத்தி -
எழுதினாலும்!

அழிச்ச அடையாளம் -
மாறாது!

எம் மவளே!

உன்னோடு நான் -
இல்லாதது -
இழப்பு தான்!

என்னை பெத்தவ -
உன்னை வளக்குரதாலே-
ரொம்ப சந்தோசம் தான்!

எல்லோரும்-
 சொல்லுவாங்க -
உன் அப்பன் ஒரு -
'மக்குன்னு'!

கருத்து வேறு பாடு -
இல்ல -
எனக்கும்!

மக்கு என்னை -
மனுசனா ஆக்கினவங்க -
என்னை பெத்தவளும் !
உன்னை பெத்தவளும்!


என்னை விட -
பொறுப்பானவங்க -
வளக்குரதாலே!

உப்பு கரிக்கும் கண்ணீர்-
சில நேரம் இனிக்கிறது!

No comments:

Post a Comment