Wednesday, 5 October 2011

பூமிக்கு வர வேண்டாம்!



கருவறை சிசுக்களே!
வேறொரு இடம் -
சென்று விடுங்களேன்!

பூலோகத்தில்-
 பூக்கள் இருக்கு-
பூவின் மென்மை -
இல்லாமல்!

மனிதன் இருக்கிறான்-
மனிதம் இல்லாமல்!

வாசிக்க -
புத்தகம் இருக்கு-
சுவாசிக்க காற்று  இல்ல!

சமாதிகளில்-
 சமத்துவம் இருக்கலாம்-
சமத்துவம் இங்கே -
சமாதி ஆகிவிட்டது!

விளை நிலங்கள் -
இப்போ-
'விலை' நிலமாகி விட்டது!

ஜனங்களின்-
பிணத்தில் நடக்கிறான் -
ஜன நாயகத்திற்கு -
நடக்கிறது -
என்கிறான்!

அழிவு கொஞ்சமே-
ஆழி பேரலையால்!

அதனையும் மிஞ்சுதே-
அணு உலையால்!

விலங்குகள் அழியுதாம் -சொல்கிறான்-
காடுகளை அழிக்கும்-
 மனிதன்!

சிசுக்களே!
வேறொரு இடம்-
 சென்று விடுங்கள்!
சென்றால்-
 எனக்கும்-
சொல்லி விடுங்கள்!

No comments:

Post a Comment