Monday 1 August 2011

குழந்தைகளே...!

 மழலைகளே...!
கற்று -
தாருங்களேன் !
உங்களது -
குணங்களை !

கள்ளங்கபடம்-
 இல்லாத-
வெள்ளை -
உள்ளத்தை -
என் நெஞ்சில் -
கொஞ்சம் -
ஊற்றுங்களேன்!

அணைப்பீர்களே!
அடித்த-
 அம்மாவையே!-
அந்த அன்பை -
அணு அளவாவது-
எனக்கு -
தாருங்களேன்!

அடி மேல் -
அடி விழுந்தாலும் -
அடி மேல் -
அடி வைக்கும் வரை-
அடங்க மாட்டீர்களே!-
அந்த-
அயராத -
குணத்தை!

திரும்ப திரும்ப-
 சொல்லியாவது -
"திருந்த" -
சொல்வீர்களே!-
அந்த-
திறன் வாய்ந்த -
குணத்தை!

சிடு சிடுத்து -
பார்ப்பவகளையும்-
சிரித்து பார்ப்பீர்களே!-
அந்த
சிறந்த-
 குணத்தை!

நீங்கள் கற்று -
கொள்வீர்கள் -
பெரியவர்களிடம்!

கற்று கொள்ளத்தான் -தெரியவில்லை -
பெரியவர்கள்-
உங்களிடம்!

நண்பேண்டா........

 நண்பனானவன்-
கூட பிறக்காத -
பிறப்பானவன்!

வார்த்தைகளில் -
வரையறை உண்டு-
வார்த்து -
எடுத்தவளிடமும்!

வரையறை இல்லாமல் -வாழ்கையை-
பங்கிட்டு-
 கொள்ளலாம் -
நண்பனிடம்!

நட்பு!
புண்ணான -
மனசுக்கு -
களும்பாக-
 மாறும்!

காதலுக்கு-
 தூதாகும்-
காயத்திற்கு -
மருந்தாகும்!

கண்ணீரை -
துடைப்பான்-
கண் துடைப்புக்காக -
அல்ல!

காற்றில் -
அசையும் -
கண்மாய் -
தண்ணியை போல !

கஷ்டத்தின்போது-
 முந்தும்
கண்ணீரை -
போல!

துன்பத்தின் -
போது-
தோள் கொடுப்பவனே -
தோழன்!

நல் வழி படுத்தினால் -
தானே-
நண்பன்!

புன்னகை -
தர வேண்டிய -
உதட்டில் -
புற்று நோயை தரும் -
புகை இலையை -
வைப்பதா -
நட்பு!?

மனக்கஷ்டத்தில் -
வருபவனுக்கு -
மன நோயை தரும் -
மதுவை ஊற்றி -
கொடுப்பதா-நட்பு!?

'தவறும்போது'-
திருத்தணும்-
'தவறான'விஷயத்திற்கு -
அழைத்து -
செல்வதா !-
நட்பு!?

இவையெல்லாம் -
நட்பு அல்ல!
நடிப்பு எனலாம்!

உயிர் காப்பான் -
தோழன்-
என்பது -
முது மொழி!

நட்பு -
கொள்ளலாம் -
நட்பே கொல்லலாமா!?-இதுதான்-
எனது 'வலி'!

தெரிந்தும் தெரியாமலும்...!

திரும்ப-
 தெரியாமல் -
வலைக்குள் -
செல்லும் -
மீனை -
போல!

சாம்பலாவோம் -என-
தெரிந்தே -
நெருப்பை தொடும் -
விட்டில் பூச்சியை -
போல!

வாழ்க்கை மாறாது-
'வாங்கியதற்காக'-
வாக்களிக்கும்
வாக்காளர்களை -
போல!

தேங்காய் -
சில்லுக்கு -
ஆசை பட்டு-
பொறிக்குள்-
மாட்டும் -
எலியை -
போல!

காயங்களை -
தரும்-என
தெரிந்தே -
காதல் செய்கிறோம் -
நாமலும்!-
எல்லோரையும் -
போல!