Monday 23 July 2012

நோன்பு காலங்களில்...$


ஊரு உலகமெல்லாம்-
சுற்றி வருவேன்!

உறங்க மட்டுமே-
வீடு வருவேன்!

மழையில் நனைந்த-
கோழியை போல-
"குன்னி" கொண்டு-
உறக்கம் கொள்வேன்!

தாயே-
பனி பெய்யும் காலத்திலும்-
கோழி ஆனமும்-
கொத்து பரோட்டாவும்-
வாங்கி வருவாள்!

"எந்திரிச்சி "வந்தால்-
என்ன !?-
கேட்டவர்கள் எத்தனையோ!

"எந்திரிச்சி" போடா-என
இதுவரை சொல்லாதவள்-
என்தாயே!

மற்றவர்களுக்கு-
நான் "எப்படியோ"-
தெரிகிறேன்!

பெற்ற தாயிக்கோ-
இன்னும் குழந்தையாகவே-
நான் தெரிகிறேன்!

தாயே-
உன் பாசத்துக்கு-
ஈடு கெட்ட என்னால்-
முடியுமா!?-
தெரியல!

உன்னை மனம்-
நோகாமல் வைத்து கொள்ள-
முடியுமான்னு-
எனக்கு தெரியல...!!!
---------------------------
சரிவர கட்டாத-
கைலியுடன்-
வரும் பாலகன்!

நச்சரிப்பு தாளாமல்-
சில்லறை எடுத்து கொடுக்கும்-
அப்பன்!

வாங்கிய காசை-
விறு விறு என போய்-
யாசகரிடம்-
கொடுக்கிறது-
பிஞ்சு கைகள்!

கண்டும் காணாமலும்-
கடந்து போனவர்கள்-
எத்தனையோ பேர்கள்-
மத்தியில்!

"பொடி பயல்"-என
நான் நினைத்தவன்!

என்னையவும்-
வெட்கித்து-
தலை குனியவைத்தவன்!

ஆம்-
கடந்து போனவர்களில்-
நானும் ஒருவன்!



18 comments:

  1. மனதைத் தொட்ட கவிதை சீனி.....

    ReplyDelete
  2. Replies
    1. sako!!

      neenga sonnathuthaan sari-
      avasarathil ezhuthi vitten!

      neengal ariviththavudan maatri vitten!

      mikka nantri!

      Delete
  3. சிறப்பு என்று சொல்வதே வெகு பொருத்தமாக இருக்கும் நண்பா

    ReplyDelete
  4. மனம் நிறைந்த கவி....!வாழ்த்துக்கள்.தாய் சேய் இரண்டுமே அற்புதம்.

    ReplyDelete
  5. நெஞ்சை தொட்ட கவிதை!

    ReplyDelete
  6. தாயே-
    உன் பாசத்துக்கு-
    ஈடு கெட்ட என்னால்-
    முடியுமா!?-
    தெரியல!

    உன்னை மனம்-
    நோகாமல் வைத்து கொள்ள-
    முடியுமான்னு-
    எனக்கு தெரியல...!!!

    முடியுமா....? நானும் யோசிக்கிறேன்.

    ReplyDelete
  7. இதயத்தினை இதமாய் தொட்ட அருமையான கவிதை,

    ReplyDelete
  8. அழகான கவிதை நண்பா.....நோன்பு என்றவுடன் நான் படித்த ஒரு ரீ மேக் கவிதை ஞாபகத்துக்கு வருகுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்


    நோன்பு பிடித்துப் பார்.....

    நோன்பு பிடித்துப் பார்,
    உன்னை சுற்றி
    சம்சா, பெற்ரிஸ்
    தோன்றும்....

    ஒரு முறை
    பல் துலக்குவாய்....
    கஞ்சி வாளி
    உன் நண்பனாகும்....

    சஹருக்கு உன்னை
    எழுப்பினால்,
    வருடங்கள் நிமிடம்
    என்பாய்....

    மாலை ஐந்து மணி
    ஆனதும்
    நிமிடங்கள் வருடம்
    என்பாய்....

    காக்கை கூட
    "நீ நோன்பா..."
    என கவனியாது...
    ஆனால்,

    உலகமே கேட்பதாய்
    உணர்ந்து கொள்வாய்....

    பதினைந்து நோன்புதான்
    பிடித்திருப்பாய்..
    நோன்பை கண்டுபிடித்தவன் போல்
    கதை கதைப்பாய்....

    இருபத்தேழாம் நாள்
    மட்டும் விழித்திருப்பாய்,
    காலை எட்டு மணிக்கே
    நோன்பு வாட்டுது என்பாய்.....

    நோன்பு பிடித்து பார்......

    ReplyDelete
    Replies
    1. sako!
      varukaikku mikka nantri!

      ungal re-make nalla irukku!

      Delete
  9. அம்மாவின் பாசமும்,மனிதநேயமும் மனதை நெகிழவைக்கிறது சீனி !

    ReplyDelete