Wednesday 29 August 2012

ஆம்பிள்ளையென்றால்....



பெண்ணே!
ஆணின் வாழ்வுக்கு-
அர்த்தம் தருகிறாள்!


பாவாடை தாவணியில்-
இருந்தவள்!

புடவைக்கு-
மாறிடுவாள்!

பட்டாம் பூச்சியாக-
சிறகடித்தவள்!

குடும்ப பொறுப்பால்-
தன் சிறகை-
சுருக்கி கொள்வாள்!

சாலையோர -
சோலையானவள்!

சொந்தங்களுக்காக-
சோலையிலே-
சாலையாவாள்!

ஸ்திரத்தன்மை-
கட்டிடங்களுக்கு-
அஸ்திவாரம்!

உறவினர்களுக்கு-
சம்சாரம்!

கடைக்கண் பார்வை கூட-
அடுத்தவன் மீது-
விழ கூடாது -
என்பது -
ஆண்கள் புத்தி!

ஆண்களே!-i
என்றாவது எண்ணியுள்ளோமா-
நம்ம" யோக்கியதை-"
பற்றி!?

கற்பு என்பது-
பெண்ணுக்கு -
மட்டுமல்ல!

ஆண்களுக்கு-
அது விதி விலக்கல்ல!

பெண்ணென்றால்-
அடிமை அல்ல!

அப்படி நினைத்தால்-
அவன் ஆம்பிள்ளை-
இல்லை!

ஒற்றை-
 உடன்படிக்கையால்!

"மற்றதையெல்லாம்-"
ஒதுக்கி விட்டு-
வந்தாள்!

நம்பி வந்தவனும்-
முற்கள் செடிஎன்றால்-
அவள் என்னாவாள்!!


"உங்களில் யார்-
சிறந்தவர் என்றால்!
உங்கள் மனைவியர்களில்-
சிறந்தவராவார்-என்றுள்ளது
நபி மொழி இப்படி!

சொந்தங்களே-
நம் நடந்து கொள்வது-
எப்படி....!!???




z

Monday 27 August 2012

எல்லா புகழும் இறைவனுக்கே -5

ஆள்வாரமற்ற-
நெடுஞ்சாலையில்-
உதவிக்கு வாகனம்-
தேடுபவனை போல!

சந்தேக வழக்கில்-
உள்ளே சென்றவர்கள்-
சாகுவதற்குள்ளாவது-
திறக்கபடாதா!?-என
ஏங்கும் ஏழைகளை-
போல!

திரும்பிகூட -
பார்க்க மாட்டாளா!?-என
வருந்தும் காதலனை-
போல!

மண்ணில் விதைத்து விட்டு-
வானை கண்ணீரோடு காணும்-
விவசாயி போல!

"தேதி தள்ளி" போகாதா!?-என
கலங்கி -வசை சொற்களை
தாங்கி கிடக்கும்-
இன்னும் தாய்மை அடையாத-
சகோதரிகள் போல!

எண்ணங்களை இறக்கி-
வைத்திட முடியாமல்-
திணறி கிடக்கும்-
என்னை போல!

படித்ததில் பிடித்தது-
சந்தோசதின்போது-
கைக்குலுக்கும்-
ஐந்து விரல்களை-
விட!

கண்ணீரின் போது-
ஒரு விரல் சிறந்தது-
அதை விட!

சொன்னவர்கள் உண்டு-
"இவன்"-
எழுதலாம்!

"எவன் "-
படிப்பதாம்!?

படித்து விட்டு-
வந்ததே தெரியாமல்-
போனவர்களும் உண்டு!

பின்னூட்டம் கொடுத்து-
தெம்பூட்டியவர்களும்-
உண்டு!

விருது தந்து-
உறமூட்டுபவர்களும் -
உண்டு!


அவர்களித்த விருதினை-
ஏற்றுகொள்கிறேன்!
 

வலையுறவில் இருவருக்கு-
பகிர்ந்து கொள்கிறேன்!


Saturday 25 August 2012

வரவேற்கிறேன்.....



காற்றினால்-
ஒன்று சேர்கிறது-
மேகங்கள்!

வலையினுள் -
சேர்ந்து-
உணவாகிறது-
மீன்கள்!

தாகம் தீர்ந்திட-
தண்ணீர் சேர்த்து தருகிறது-
ஊற்றுகள்!

ஆவணங்கள் சேர்ந்ததே-
''வரலாறுகள்''!

பல மனங்கள்-
ஒன்றுமையா இருப்பதே-
''கிராமங்கள்''!

''கிறுக்கல்களை''-
சீர்செய்தால்-
நேர் கோடுகள்!

கனிமங்களின்-
கூடாரமே-
''சுரங்கங்கள்!''

அது போலதான்-
இன்று மாநாடு நடத்தும்-
தமிழ் பதிவர்கள்!

வலை பதிவு -
சொந்தங்களே!
ஒரு நாள் நம் -
எழுத்துக்களால்-
ஏற்படும்-
மாற்றங்கள்!

நாம் நன்றாக -
அறிகிறோம்!-
உலகில் சமநீதியற்ற-
நிலைதனை!

அனைத்து தரப்பட்ட-
மக்களுக்கும் -
சம நிலை கிடைத்திட-
பயன்படுத்துவோம்-நம்
எழுத்தினை!

இன்று-
சங்கமிக்கும்-
நாம்!

என்றும்-
மக்களின் ஒற்றுமைதனை -
கருதி எழுதுவோம்!

வாழ்த்து கிறேன்-
இம்மாநாட்டை -
வரவேற்கிறேன்!

இன்றைய -
அறிமுகங்கள்-
கலந்துள்ளார்கள்-
கவிதையினுள்ளே!

ஆம்-!அவர்கள்
சிப்பிக்குள் உள்ள -
முத்துக்களே!

சொந்தங்களே!
போதுமே-
நீண்ட கால -
இடைவேளை!

தொடர்ந்து நீங்கள்-(அறிமுகங்கள்)
எழுதிடணும் -
என்பதே -என்
ஆவலே!

எவ்வளவு பிரகாசம் உள்ள-
தீபம் ஆனாலும்-
தூண்டிட வேண்டும்-
விரல்களே!

வாய்ப்பு தந்த-
சீனா அவர்களே!

பின்னூட்டம் தந்து-
பின் தொடர்ந்த -
உறவுகளே!

உங்கள் அனைவருக்கும்-
மிக மிக நன்றிகளே!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!

இதனை அழுத்தவும்!

Friday 24 August 2012

நாலாவது தூண்!



பத்தி பத்தியா-
எழுதுவதா!?


'பத்த ' வைக்க-
எழுதுவதா!?

அநீதியை -
எதிர்க்கவா!?

அரை நிர்வாண -
படங்களை -
வெளியிடவா!?

கருமை படிந்த வாழ்வு கொண்ட-
மக்கள் இங்கே-
எத்தனையோ!?

இதில் -
'மஞ்சள்' நிற-
கதையோ!?

மை கொண்ட-
பேனாவின் எழுத்துக்களா!?

கொஞ்சமாவது-
மனசாட்சியை தொட்டு-
எழுதுகிறோமா!?

சந்தேக நபர்கள்-
'உள்ளேயும்'!

'சம்பந்தப்பட்ட ' நபர்கள்-
'வெளியேயும்!'

ஊடகங்கள் -
ஒண்ணுமே தெரியாதது-
 மாதிரியும்!

புலன்விசாரணை-
என்கிற பெயரிலே!

ஏன் புளுகு மூட்டை-
செய்திகளே!

ஜனாநாயகத்தின்-
நாலாவது தூண்!

ஏன் ஆனது-
வீண்!

''மக்களை பிளவுபடுத்துகிறது''!
''வெறுப்புகளை விதைக்கிறது!''

''குண்டு வெடித்த உடனேயே-
முஸ்லிம்கள் மீது வீண்பழி-
சுமத்துகிறது!''

''குறுஞ்செய்தி வருகிறதாம்!''
''மின்னஞ்சல் வருகிறதாம்!''

இவைகளெல்லாம்-
ஆதாரமாம்!?

''குறி'' இட்ட செய்திகளெல்லாம்-
பிரஸ் கவுன்சில் தலைவர்-
முன்னாள் நீதபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்-
பேட்டியின்போது கேட்டது-
இவையெல்லாம்!

எப்படியும் -
வெளியேறாமல் -
விடுவதில்லை-
எரிமலை!

எங்காவது -
ஒருவரிடத்திலாவது-
வெளிவரும் -
உண்மைகளே!

''சஞ்சீவ் பட்'-
போல!

இன்னும் எத்தனை பேர்கள்-
உண்மையை சொல்வார்களோ !?

இன்னும் படிக்க!
இங்கே அழுத்துங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!




Thursday 23 August 2012

மண் வாசம்...



விதைத்த கைகளை-
அறியாது-
முளைத்து வரும்-
செடிகள்!

'உண்டாக்கியவர்களை'-
விட-
உறுதுணையாக நிற்பவர்களை-
நேசிப்பது மனிதர்கள்!

இமைகளை அறிவதை-
விட-
கண்கள் விரும்புவது-
காட்சிகளை!

பொத்தி வளர்த்தவளை -
விட-
எட்டி உதைத்தவளை-
நேசிப்பது காதல்!

வாடிய நிலையை-
மறக்க செய்யும்-
வருமான நிலைகள்!

எதுவோ!?
எப்படியோ!?

குச்சியின் முனையில்-
கிளம்பி -
மறுமுனையில் திரும்பும்-
எறும்பை போல!

மேலே பறந்தாலும்-
கீழே 'கண்' வைக்கும்-
பருந்தை போல!

தவழ்ந்து  செல்லும்-
குழந்தை திரும்பி -
தாயை பார்ப்பது போல!

கடல் கடந்து -
பிழைக்க சென்றாலும்-
'உயிர் பிழைக்க 'சென்றாலும்!

பிறந்த மண்ணை -
நேசிக்கிறார்கள்-
மனதாலும்!

நிறம் ,மொழிகளை -
அடையாளம் கண்டுகொள்ளவே-
இறைவன் படைத்தான்!

அதன் பேராலோ-
அடித்து 'கொல்லும்'-
மனுஷ ஜென்மங்கள்!

காற்றில்-
அலை வரிசை-
கலந்து இருப்பது போல!

கம்பிகளில் -
மின்சாரம் ஒளிந்து -
இருப்பது போல!

ஒவ்வொருவரிடமும்-
பிறந்த மண்ணின் வாசம்-
ஒட்டிகொண்டுதானிருக்கும்!

எங்கே வாழ்ந்தாலும்-
எப்படி வாழ்ந்தாலும்-
தன்னுள் இருந்து வெளிப்பட்டு -
கொண்டே தானிருக்கும்!

மேலும் பார்க்க!
இங்கே வாங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!





Wednesday 22 August 2012

கவிதை....



மலர்கள்!
தேனீக்கள்!

மண்ணும்!
விண்ணும்!

காதல்!
காமம்!

காலசுவடுகளும்!
வரலாற்று நிகழ்வுகளும்!

உடலும்!
உயிரும்!

நேர்மையும்!
எதிரானவையும்!

குழு கொண்ட-
விளையாட்டும்!
அவர்களின்-
எண்ணங்களின் ஓட்டமும்!

புதைந்துள்ள-
தண்ணீரும்!
மறைந்துள்ள-
கண்ணீரும்!

மதுவுக்கும்!
மதிவீனதிற்க்கும்!

பருவத்திற்கும்!
அடங்கிட மறுப்பதிற்கும்!

தாய் அரவணைப்பிற்கும்!
குழந்தை சிரிப்பதற்கும்!

இத்தனைக்கும்-
ஒவ்வொன்றுக்கும்-
தொடர்பிருக்கு!

கண்ணுக்கு புலப்படாத-
உணர்வு பாலமே-
தொடர்பு-
இதற்க்கு!

புலவர்கள்-
அன்றைய-
அரசவைகளை -
அலங்கரித்தார்கள்!

வலைபதிவர்களோ-
தன் ஆதங்கங்களையும்-
'சுமைகளையும்'-
பதிகிறார்கள்!

புலவர்களுக்கு-
பொன்னும் பொருளும்!

வலை சொந்தங்களுக்கு........?

என்ன கிடைக்குதுங்க!
அதை தெரிந்து கொள்ள-
வாங்க!

அதுக்கு-இதை அழுத்துங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!


Tuesday 21 August 2012

படித்தவர்கள்!



வண்ணம் மட்டும்-
இருந்தால்-
பூக்களா!?

பெயருக்கு பின்னால்-
பட்டங்கள் மட்டும் -
இருந்துவிட்டால்-
படித்தவர்களா!?

அநேகமான -
பட்டங்கள் உலகில்-
உண்டு!

மனிதாபிமானங்கள்-
தேடவேண்டிய நிலை-
உலகில் இன்று!

ஒருவரை-
 கண்டால்-
பாதி தெரிகிறான்!

பேச ஆரம்பித்தவுடன்-
மீதம் தெரிகிறான்!

அரசன் ஒருவன்-
கனவு கண்டான்!

அனைத்து பல்லும்-
விழுந்து விட்டு-
ஒரு பல் இருக்கும்-
காட்சியை கண்டான்!

கனவின் பலன் அறிய-
சபை கூட்டப்பட்டது!

காரணம்-
சொல்லப்பட்டது!

அதிகமானவர்கள்-
சொன்னார்கள்!

உனக்கு முன்னாலேயே-
உன்குடும்பம் -
இறந்து விடும் -
என்றார்கள்!

அனைவரும்-
தண்டனைகள் பெற்றார்கள்!

கடைசியாக ஒருவர்-
வந்தார்!

அவரும்-
அதைதான்-
சொன்னார்!

பொன்னும் பொருளும்-
பெற்றார்!

அது எப்படிங்க!
இப்படிதாங்க!

இதை அமுங்குங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!

Monday 20 August 2012

மூத்தவர்கள்!



மூத்தவர்கள்-
கடந்த காலத்தின்-
பெட்டகங்கள்!

இளைய சமூகம்-
மறந்து விட்ட-
அறிய புத்தகங்கள்!

அவசர கதி ஓட்டம்-
சுறு சுறுப்பா!?

அவசியமான ஓட்டமே-
அவசியமப்பா!!

ஓடி உழைத்து-
ஓடானவர்கள் -
பெரியவர்கள்!

அவர்களிடம்-
கொட்டி கிடக்குது-
அனுபவங்கள்!

அன்றொரு நாள்-
கிளம்பியது -
ஒரு கூட்டம்-
 புனித யாத்திரைக்கு !

தடை விதித்தான்-
அரசன்-
பெரியவங்களுக்கு!

நெடுந்தூர பயணத்திற்கு-
அசௌகரியம் ஏற்படக்கூடாது-
என்பதற்கு!

பயணத்தின்-
நடுவில் !

தண்ணீர்-
தீர்ந்தது!

நாக்கு-
வரண்டது!

பாலைவனமோ-
அதை விட வறட்சி-
கொண்டது!

தேடினார்கள்!
தேடினார்கள்!

தெரியவே -
இல்லை!
நீர் நிலை!

ஒரு இளைஞன் -
கூறினான்-
ஆலோசனை!

அங்கு கிடைத்தது-
நீர் சுனை!

அழைத்து வரபட்டான்-
அரசனிடம்!

கேட்க பட்டது-
கேள்விகள்-
அவனிடம்!

முதலில் மன்னிப்பை-
பெற்று கொண்டான்!

சாமான்களின் நடுவில்-
ஒளிந்து வந்தார்-
என் தகப்பன்!

தடையின்-
காரணத்தை-
கேட்டறிந்தார்!

பிறகு வானத்தை-
பார்த்தார்!

'குறிப்பிட்ட ' பறவை கூட்டம்-
கண்டார்!

அதன்படி இவ்வளவு-
தூரத்தில் தண்ணீர் இருக்கும்-
என்றுரைத்தார்!

அதன்படியே-
தண்ணீர் கிடைத்தது.....

அது எப்படின்னு-
விடைகாண!
வாருங்கள்!

இதை சொடுக்குங்கள்!

வலைச்சரத்தில் இன்றைய  பதிவு!





Sunday 19 August 2012

நோக்கம்...(அறிமுகம்)


கோடிகளில் ஒன்றே-
உயிர் பிழைக்கிறது-
கருவறையில்!

கோடானு கோடி மக்களில்-
ஒரே துளிதான் நாம்-
உலகில்!

வந்தவர்கள்-
கணக்கு என்ன?

"இருப்பவர்கள்"-
கணக்குதான் என்ன!?

"போனவர்கள்"-
நிலைதான் என்ன!?

அனைத்திற்கும் -
"முடிவில்லாமல்"-
இருக்குமா என்ன!?

அறிய விழைகிறேன்-
பிறந்ததின் -
நோக்கத்தை!

அதிலொன்றே-
தொடர்கிறேன்-
"எழுத்தை".........

வலைச்சரத்தில் -
என் எழுத்துக்கள்!

வந்து விடும்-'தொட்டு'பாருங்கள்!

Saturday 18 August 2012

கெட்ட சதையாக...


பகலில் -
பசித்திருந்தோம்!

இரவில்-
விழித்திருந்தோம்!

இரண்டிலும்-
இறைவனை-
தியானித்திருந்தோம்!

சாக்கடையே-
கதியென்றால்-
சந்தனமாகவே-
மணக்கும்!

கிணற்று தவளை-
கிணறையே-
சுவர்க்கமாக-
நினைக்கும்!

அதுபோலவே-
மனிதர்களாகிய-
நாமளும்!

பாவங்கள்-
பழகியே போனதால்-
பாழாகி போனோம்!

இருந்தது -
விடவே முடியாத -
புகையாக!

ஆனது-
சில மணி நேரங்கள்-
பகையாக!

ஊரான் வீட்டு-
பேச்சென்றால்-
ஊறுகாயை பார்த்தது போல்-
வாய் ஊரும்-
எச்சிலாக!

இருக்கிறது-
எத்தனையோ-
விதமான பாவங்களாக!

அத்தனை நாம்-
நினைத்தோம்-
சாதாரணவைகளாக!

தப்புகளை-
தவறென உணர்த்தியது-
நோன்பு காலம்!

"அதனை" மீண்டும்-
தொடர்ந்தால்-
யாருக்குதான்-
என்ன லாபம்!?

இருந்தது-
தவறுகள்-
விட்ட கதையா!
தொட்ட கதையா!

ஒதுக்குவோம்-
அதனை-
உடலில் ஒட்டிய -
கெட்ட சதையா...!!


தொடர்புடைய இடுகை





Friday 17 August 2012

புத்தாடை...$



நண்பன் கேட்டான்-
சட்டையின் -
வண்ணத்தை!

வாடகை ஓட்டுனர்-
கேட்டார்!
வாங்கிய இடத்தை!

பக்கத்துக்கு வீட்டுவாசி-
கேட்டு-
உதிர்ந்தார்-
ஏளன சிரிப்பை!

பையுனுள் மகள்-
தேடியது-
"தனக்கானதை"!

கட்டியவள்-
கேட்டாள்-
விலையை!

தகப்பன்-
பார்த்தார்-
பின் தொடர்ந்தார்-
மௌனத்தை!

தாய் நீட்டினாள்-
உணவு தட்டை!

அவள் மட்டும்-
உணர்ந்திருந்தால்-
என் பசியின்-
வாட்டத்தை...!!!.

Thursday 16 August 2012

குமுறி கொண்டு இருக்கிறான்......




ஆட்சி இருந்ததால்-
ஆடிடவில்லை!

அது எனது-
சொத்தும் இல்ல!

இறைவன் எனக்கு-
போட்ட பிச்சை -
அதுவே!

தன் இச்சைக்கு பயன்படுத்தினால்-
கேவலம் அதுவே!

உடைத்தெறிந்தேன்-
உயிரை காக்க!-
"உடன் கட்டை" ஏறுதல்
முறையை!

தடுக்க துணிந்தேன்-
பெண்கள் சட்டை போட-
மறுத்த-
தீண்டாமையை!

அதனால்தானோ-
எனக்கு சூட்டுகிறார்கள்-
மதவெறியன் என்ற-
பெயரை!

அரசுக்கு வருமானம்-
கொட்டும் என்றார்கள்-
பிரதானிகள்-
மது விற்றால்!

முற்றாக மறுத்தேன்-
காரணம்-
மக்கள் அலங்கோலமாகி விடுவார்கள்-
மது விற்றால்!

அசிங்கங்கள்-
அந்நியனுக்கு-
கப்பம் கட்டி கொண்டு-
அண்டி வாழ்ந்தார்கள்!

அடி பணிய மறுத்து-
சின்னா பின்ன மாக்கபட்டவன்-
நாங்கள்!

அதனால்தான்-
என்னை அநியாயக்காரன்-
என்கிறீர்கள்!?

எதிரிகள் படையை கண்டு-
அஞ்சிட வில்லை!

நயவஞ்சக நரிகள்-
தள்ளியது என்னை-
படு குழியிலே!

அடிமைத்தனத்துக்கு எதிராகவும்-
என் தேசத்திற்காகவும்-
சல்லடையாக்க பட்டேன்!

அப்படி என் உயிர் -
போனதில் மகிழ்ச்சியுற்றேன்!

கொடுத்தாலும்-
வாங்கினாலும்-
இன்பம்-
முத்தத்தில்!

வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
இன்பம்-
போராட்ட களத்தில்!

இன்று நான்-
வருந்துகிறேன்!-
ஒரே உயிர் இருந்ததை-
எண்ணி!

இன்னொரு உயிர்-
எனக்கு இருந்திருந்தால்-
போராடி இருப்பேன்-
நாட்டி நிலையை எண்ணி!

இப்படிதான்-
உறுமி கொண்டிருப்பான்!

மைசூர் புலி-
தீரன் திப்பு சுல்தான்!









Wednesday 15 August 2012

முன்னோட்டங்கள்...!



ஒரு வருட படிப்பு-
மறு வகுப்பு-
செல்வதற்கு!

அடியையும் மிதியையும்-
தாங்குவது-
தற்காப்பு கலை-
கற்பதற்கு!

முழங்காலிலும்-
முழங்கையிலும்-
காயங்கள்-
மிதிவண்டி-
பயில்வதற்கு!

வலியும் வேதனையும்-
தாங்கி கொள்வது-
பளு தூக்கும்-
வீரனாவதற்கு!

விமர்சனங்களையும்-
வீண் விவாதங்களையும்-
கண்டு கொள்ளாதது-
"இலக்கை "-
அடைவதற்கு!

பருவகாலத்தில்-
"படும் பாடு"-
பக்குவமாய் -
வாழ்வதற்கு!

ஒரு மாத கால-
நோன்பு இருப்பது-
பிற மக்களிடம்-
பரிவோடு நடந்திடவும்-
இறைவனுக்கு நன்றியுடன்-
நடப்பதற்கு!

ஒவ்வொரு முன்னோட்டம்-
அடைவதும்-
பாடம் படித்து கொள்வதும்-
வாழ்வில்-
முன்னேறுவதற்கு!!

Monday 13 August 2012

அழகாம் அழகு.....



கொட்டி கிடக்கும்-
விண் மீன்களே!

ஒத்தையாய் இருக்கும்-
வெண்ணிலவே!

இதுதான்-
விண்வெளியே!

சுற்றி கட்டி இருக்கும்-
நீள் குழல் விளக்கு!


சுற்றியவாறு இருக்கும்-
சிறு சிறு விளக்கு!

இருவகையும் உண்டு-
விசேசங்களுக்கு!

வறண்டு கிடக்கும்-
நிலங்களும் உண்டு!

வாட்டி கொல்லும்-
பனி பிரதேசங்களும்-
உண்டு!

இவ்விரண்டிலும்-
உயிர் வாழ்வதுண்டு!

கழுத்து வலிக்கும் அளவுக்கு-
உயர்ந்துள்ள -
மலைகளும் உண்டு!

வயிற்றில் புளியை-
கரைத்திடும்-
பாதாள பள்ளங்களும்-
உண்டு!

இதனை பார்த்து-
லயித்திடும்-
மனங்களும் உண்டு!

காலில் சொறி உள்ளதால்-
மயிலின் அழகு-
குறைந்ததா..!?

குயில் கருப்பு என்பதால்-
குரல்தான்-
கசந்ததா...!?

மானின் மேல் உள்ள-
புள்ளியால்-வனப்புக்கு-
கொள்ளியானதா...!?

ஒவ்வொன்றும்-
மாறுபட்ட அழகுதானே!?

மாசுபட்டதாக-
நமக்கு தெரியவில்லைதானே!?

மனித பிறவியே!

தோலின் நிறம்தான்-
அழகா!?

அழகு சாதனா பொருட்களினால்-
மெருகேரிடுவது
அழகா!?

இல்லவே !
இல்லை -
இதில் அழகு!

உண்மை-
அழகு!

மொழிந்திடும்-
வார்த்தையிலும்!

நடந்திடும்-
நடத்தையிலும்!



Saturday 11 August 2012

உரு" கொள்வது...



முத்து-
சிற்பிக்குள்!

வைரம்-
மண்ணுக்குள்!

எரிமலை-
மலைகளுக்குள்!

மரம்-
விதைக்குள்!

கவிதை-
சிந்தனைக்குள்!

வெற்றி-
தோல்விக்குள்!

பெரும் சாதனை-
விடா முயற்சிக்குள்!

ஊதியம்-
வியர்வைக்குள்!

உயர்வு-
உழைப்பிற்க்குள்!

மொழிகள்-
புரிதல்களுக்குள்!

ஆஜானுபாகுவானவன்-
கருவிற்குள்!

"எழுத்தால்"-நல்
சிந்தனை விதைப்போம்!

மனித-
மனதுக்குள்!

Friday 10 August 2012

முடிவெடுத்தேன்....



என்ன?-
என்றோ!

ஏன்?-
என்றோ!

நலமா ?-
என்றோ!

கேட்காத-
"தெரிந்தவர்கள்"-
எத்தனையோ!

வாடா!-
என்றும்!

வாடாதே-
என்றும்!

"வாழ்ந்து"காட்டுடா-
என்றும்!

இருக்கிறார்கள்-
வாஞ்சையுடன்-
அழைத்தவர்களும்!

அள்ளி கொண்ட-
கைகளும் உண்டு

"தள்ளி" விட்ட-
கைங்கரியமும்-
உண்டு!

ஏக்க பார்வைகளும்-
உண்டு!

ஏளன பார்வைகளும்-
உண்டு!

முடிவெடுத்தேன்-

அணைத்தவர்களை-
அரவணைத்திடவும்!

ஒதுக்கியவர்களை-
ஒதுக்கிடவும்!

ஒரே வழி-
வாழ்வில்-
முன்னேறி விடனும்!

ஒதுக்கியவர்களுடன்-
உண்மையாய் நடந்து கொண்டாள்-
அன்னை!

மனம் ஒத்துகொள்ளாமல்-
வாட்டும்-
என்னை!

அன்னை மனம்-
நோக கூடாதென்று-
விழுங்கி கொண்டேன்-
கோபம்தனை!

இணைத்து கொள்வேன்-
"அவர்களின்"-
விசேசங்களில் -
என்னை!

பிறகுதான்-
அறிந்தேன்-
உண்மைதனை!

இரு மான்கள்-
தாகித்த நிலையில்!

ஒரு மானின்-
தாகம் தீர்க்கும் அளவே-
தண்ணீர்-
நீர் நிலையில்!

முதலில்-
ஒரு மான்-
குடித்தது!

பிறகு-
மறுமான்-
குடித்தது!

அதிசயம்-
தண்ணீர் குறையாமல்-
இருந்தது!

ஆம்-
இரண்டும்-
குடிக்காமல்-
குடிப்பதுபோல்-
நடித்திருக்கிறது!

அதுபோலவே-
நானும்-
என் தாயும்!

தாய் மனதை-
நானும்!

என் மனதை-
தாயும்!

நோக செய்திடாதற்கு-
"பொறுத்து" -
போய் இருக்கிறோம்!

அதனால் தானோ-
உறவுகளை வெறுக்காமல்-
இன்னும் பயணிக்கிறோம்.....!!!



Wednesday 8 August 2012

எல்லா புகழும் இறைவனுக்கே....(4)


எங்கெங்கோ உள்ள-
நீரெல்லாம் ஆவியாகி-
மேகத்தில் சங்கமிக்கிறது!

எங்கெங்கோ மலர்ந்துள்ள-
மலர்களுக்கிடையே-
வண்டுகள் மூலம்-
மகசூல் ஏற்படுகிறது!

எங்கெங்கோ தரித்திட்ட-
உயிர்கள் -திருமணத்தில்
இணைகிறது!

எங்கெங்கோ உள்ள-
பூக்களின் தேனை உண்டு-
தேனீக்கள் தேனடை தருகிறது!

எங்கெங்கோ உள்ள -
பறவைகள் -
பருவகாலங்களில் சரணாலயம்-
சேர்க்கிறது!

எங்கெங்கோ -
திரிக்கப்பட்ட திரியும்-
பிழியப்பட்ட எண்ணையும்-
தீபத்தில் ஒன்றிணைகிறது!

எது எங்கே உருவாக்கபடுது-
எங்கே அது சேர்கிறது-என்பதை
'ஒருவன்'தீர்மானிக்கிறான்!

'அவனே'-
ஒரே எண்ணங்களில் மனிதர்கள்-
பயணிக்கிரார்களோ-
அவர்களையும் ஒன்று சேர்க்கிறான்!

என்னருமை -
வலைபதிவு சொந்தங்களே!

நம்மை ஒன்று சேர்த்தது-
ஒரே எண்ணங்களும்!-
ஒரே எழுத்துக்களே!

சிலர்-
பின்னூட்டம் தருவதுண்டு!

சிலர்-
விளக்கங்கள் தருவதுண்டு!

சிலர்-
விருதுகளும் தருவதுண்டு!

அய்யா!
வை, கோபால கிருஷ்ணன் தந்தார்கள்-
விருது எனக்கொன்று!
அவர்களுக்கு மனதார -
நன்றிகள் -
எனக்குள் உண்டு!

நான் பகிரும் -
பதிவாளர்கள் இரண்டு!

௧ .நாடகம் ,வரலாறு,ஆன்மிகம், கவிதை-
பன்முகம் கொண்ட சதக் அவர்கள்!

௨.பதினாறு வயதிலேயே எழுதிட முனைந்த -
'அர்ஷத் காஜா'அவர்கள்!

நாம்-
மனிதத்தை நேசிப்போம்!
மனிதர்களாக வாழ்வோம்!


Monday 6 August 2012

இனி தான் ஆரம்பம்....(500 வது கவிதை)



மரத்துண்டுகள்!
ஓலை சுவடிகள்!

கல்வெட்டுகள்!
அழிந்த கட்டிடங்கள்!

சிற்பங்கள்!
சிதிலங்கள்!

இவைகள்-
அன்று-
சாதாரண நிகழ்வுகள்!

சாமானியனின்-
பதிவுகள்!

அவைகள்-
தீர்மானிப்பதே-
இன்றைய -
வரலாறுகள்!

இன்றைய -
நிகழ்வுதனை-
பதிகிறது-நம்முடைய
வலைப்பதிவுகள்!

இது-
நிர்மாணிப்பதே-
நாளைய-
வரலாறுகள்!

வாழ்ந்தவர்கள்-
எத்தனையோ!

மடிந்தவர்கள்-
எத்தனயோ!

நினைவு கூறபடுபவர்கள்-
எத்தனை பேரோ!?

உலகம்-
இலட்சியவாதிகளை-
இழக்கலாம்-
இலட்சியங்களை-
இழப்பதில்லை!

சிந்தனைவாதிகளை-
சீரழிக்கலாம்-
சிந்தனைகள்-
சீரழிவதில்லை!

எழுச்சியாளர்கள்-
இறக்கலாம்-
எழுச்சி-
மக்களை -
எழுப்பாமல் விடுவதில்லை!

"கருத்தை விதை"-என்ற
வார்தைதானாம்!

மருவி-
கவிதை-
என்றானதாம்!

கருத்தை விதைத்திருந்தால்-
நான் மனிதன்!

இல்லைஎன்றால்-
ஒரு அற்பன்!

என்றுமே -
நான்!

அற்பன் என்ற -
நிலையிலிருந்து-
மனிதனாக -
முயல்பவன்!



Sunday 5 August 2012

புண்ணான மனசை....



வீட்டிலயும்-
பார்த்தது!

தெருவெங்கும்-
கண்டது!

மறைமுகமாக-
நடக்காத-
ஒன்று!

பந்தாவா-
நடக்கிறது!
இன்று!

எனக்குள்ளும்-
ஆசை துளிர் விட்டது!

ருசித்திட-
ஆசை உந்தி தள்ளியது!

உதவிட மறுத்தான்-
உற்ற நண்பன்!

அப்போதிலிருந்து-
எனக்கு-
அவன்தான்-
கெட்டநண்பன்!

நல்லது சொல்றவந்தானே-
இன்று-
பொல்லாதவன்!

புதிய நட்பு-
வரவு!

என் ஆசைக்கு-
இசைவு!

இடமும் ஆனது-
தேர்வு!

திரை அரங்கம்-
பகல் காட்சி!

"தெரிந்தவர்கள்" வருவது-
குறைவான-
காட்சி!

இடைவேளை -
விடப்பட்டது!

"தேவையானது"-
வாங்கபட்டது!

ஆளுக்கொன்று!
வாயில் வைத்துகொண்டு!

பத்தவைதோம்-
தீக்குச்சியை கொண்டு!

தெரியவில்லை-
அக்குச்சி வாழ்கையை-
எரிப்பது என்று!

முதல் அனுபவம்-
புகை வராமல்-
"புகைச்சல்" வந்தது!

அவனுக்கு-
மூக்கு வழியெல்லாம்-
புகைவந்தது!

விடாமல்-
முயற்சித்தேன்!

இன்று-
விட்டிட முயற்சிக்கிறேன்!

பிஞ்சு இதழ்-
எரிஞ்ச இதழானது!

பளிங்கு சாலையா இருந்த-
பல்லு-
தார் சாலையானது!

கழிவறை வீச்சம்-
வாய் வீச்சம்-
தந்தது!

"புண் பட்ட மனசை-
புகையை விட்டு ஆத்துன்னு-
சொன்னாயங்க!

"புகைச்சி புகைச்சி"-
புண்ணான நெஞ்சோட -
அலையிறாங்க!

புண்ணியவான்களே!

ஒரு புண்ணாக்கும்-
இல்ல !-புகையிலே!

புகைந்துதான் ஆகணுமா-
நம் வாழ்வினிலே!

இப்படிக்கு-
"புகையால"-
புதைந்தவர்கள்!


Saturday 4 August 2012

போராட்டமாம் போராட்டம்.....



"அகிம்சை" பிறந்த-
மாநிலம்!

"இம்சை"ஆளும்-
செந்நிலம்!

மிருக வேட்டைக்கு-
எத்தனையோ தண்டனைகள்!

மனித வேட்டைக்கு பின்னும்-
மௌனிக்கும்-
நீதிமன்றங்கள்!

இதில்-
மத நல்லிணக்க-
உண்ணாவிரத நாடகங்கள்!

ஒரு "ஆகாசவாணி"-
ஊழலுக்கு எதிரா-
யாத்திரை கிளம்பினாரு!

லாவகமா-
கர்நாடக பாதையை-
மறந்துட்டாரு!

அதிகாரிகளால்-
சூறையாட பட்ட-
இருளால சமூக-
சகோதரிகள்!

தண்டனை-
அபராதமாக-
ஐம்பதாயிரம்-
ரூபாய்கள்!

நடிகை பாலியல் தொந்தரவுக்கு-
உள்ளானதுக்கு-
வீடு முற்றுகை-
போராட்டமாம்!

இப்பெண்களின் நிலையை-
ஏன் மறந்தார்களாமாம்!

சுதந்திரம் கொண்டாடமாட்டார்கள்-
சிறுபான்மையினர்கள்-என
ஓலமிடும் ஒரு கூட்டம்!

வகுக்கப்டுது-
சுதந்திர தின அணி வகுப்பை-
தடுக்க போடும்-
திட்டம்!

ஒரு பக்கம்-
கொண்டாடலை -என
கூப்பாடு!

மறுபக்கம்-
கொண்டாட விடாம-
தடுக்கும் நிலைப்பாடு!

இம்மக்கள் -
என்ன செய்ய வேண்டும்-என்பது
இவர்களின் நிலைப்பாடு!?

முஸ்லிம் நாடுகள்-
விளையாட்டு போட்டிகளில்-
பெண்களை அனுமதிப்பதில்லை-என
பொய் குற்றச்சாட்டு!

அப்போட்டிகளில்-
ஒழுங்கான ஆடையுடன்-
கலந்து கொள்ள அனுமதிக்கிறது-
அந்நாடு!

ஒழுங்கான ஆடை-
பழமை வாதமாம்!

ஆடையை குறைக்க சொல்லி-
மார்பை காட்டி கொண்டு-
போராட்டமாம்!

ஓ!

அறிவு ஜீவுகளே!

ஆதிமனிதன்-
நிர்வாணமாக அலைந்தான்!

பின்புதான்-
நாகரீகமாக-
ஆடைதனை அணிந்தான்!

இன்னொரு போராட்டம்-
நடத்தலாம்!

எல்லோரும்-
சோறு சாப்பிடுகிறார்கள்-
என!

அதனை எதிர்த்து-
மலத்தை சாப்பிடுவோம்-
என...!!!



Friday 3 August 2012

பிரியனுமா.......!?



"பிடித்த பிறகு"-
"பேசி முடித்தோ"!!

"பேசி முடித்த பிறகு"-
"பிடித்தோ"!!

ஊரு கூடி!
உறவுகளும் கூடி!

மகால்கல் தேடி!
சாப்பிட சிற்றுண்டி!

வருகை புரிந்தவர்கள்-
சென்று விடுவார்கள்-
வாழ்த்தி விட்டு!

வாழ்கை படகினில்-
ஒன்றிணைத்து விட்டு!

ஆணும் பெண்ணும்-
திருமணத்தில்-
இணைவது!

பிறந்ததின்-
வரம் அது!

அது ஒரு-
உடன் படிக்கை!

சேர்ந்தே வாழனும்-
என்கிற நம்பிக்கை!

கையெழுத்திடும் -
ஒப்பந்தம்!

அது-
அன்பின் அச்சாரம்!

சமூகத்தின் -
அங்கீகாரம்!

சிலரோ-
மனம் ஒத்தால்-
"சேர்ந்து "வாழ்வாங்கலாம்!

பிடிக்கவில்லைஎன்றால்-
பிரிந்திடுவார்களாம்!

பிள்ளைக்கு அப்பன்-
யார் என்பார்களாம்!!?

இவர்கள்-
இச்சை தீர -
வாழ்ந்து விட்டு!

"சேர்ந்திடுவார்கள்"-
பிள்ளைக்கு-
விலாசத்துக்கு(இன்சியல்)-
பிச்சை எடுக்க-
விட்டுட்டு!

காதல் காலத்தின்போது-
கடும் சொல்லும்-
கரும்பாய் இனிக்கும்!

கல்யாணத்திற்கு பின்னோ-
சாதாரண வார்தையுன்-
சதா சுடும்!

எதிர்பார்ப்புகளுடனும்-
ஆசைகளுடனும்-
கனவுகளுடனும்-
இணைகிறோம்!

எதிர்பாராதவிதமாக-
பிரியவும் முனைகிறோம்!

பிரிந்து இருந்தவர்கள்-
பந்தத்தில்-
இணைகிறோம்!

"இணைந்த "பிறகோ-
ஏன் பிரியமுனைகிறோம்!

வாழ்கை -
பஞ்சு மெத்தை அல்ல!

அதில் நெறிஞ்சி முற்களும்-
குத்தாமல் விடுவதில்லை!

நீ பெரிதா!?
நான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!

"நமக்குள் பிரிவா"!?-
என்றிருந்தால்-
ஏன் பிரிகிறது-
உறவின் முறை!?




Wednesday 1 August 2012

நடப்பதெல்லாம்....



மணற்வெளியில்-
புதைக்க இடம் -
பார்ப்பான்-
கொலைகாரன்!

மணலின் தரம் பார்ப்பான்-
பானை செய்யும்-
தோழன்!

நம் மீது-
ஆப்பிள் விழுந்திருந்தால்-
உணவாகி இருக்கும்!

நியுட்டன் மேல்-
விழுந்ததால்-
புவி ஈர்ப்பு அறிந்தது-
உலகம்!

பாறாங்கல்லே -
தெரிகிறது-
நம் கண்களுக்கு!

அதில் சிற்பம்-
தெரிகிறது-
சிற்பிக்கு!

புல்லில் பனியை-
ரசிப்பது-
ரசனை!

அதனை மிதித்து-
செல்பவன்-
மூடனே!

அழகை-
எழுத்தில் தருபவன்-
கவிஞன்!

அழகை "கெடுத்திட"-
நினைப்பவன்-
காமுகன்!

காந்தி கொலை மட்டும்-
தெரிந்தவன்-
சராசரி வாசகன்!

சுட்டானே கோட்சே-
அதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!

இயற்கை சீற்றத்தின்-
காரணம் தேடுபவன்-
விஞ்ஞானி!

"சீறிட"செய்தவனை-
நினைத்து அஞ்சுபவனே-
ஞானி !

உடலை வளர்ப்பவன்-
மனிதன்!

உயிரை வைத்திருப்பவன்-
இறைவன்!

"நடப்புகள்" எல்லாம்-
ஒன்றுதான்!

நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!