Friday 30 November 2012

வெளிச்சங்கள்"! (4)

சொல்வார்கள்-
யானை வரும்-
பின்னே!

மணி ஓசை வரும்-
முன்னே!

அதுபோலவே-
நாட்டின் விழா-
நாட்கள்-
வரும் பின்னே!

பரபரப்பு-
செய்திகள்-
வரும்-
முன்னே!

தியாகிகளை-
நினைக்க வேண்டிய-
நாட்கள் அது!

திகிலான -
நாளாக -
பார்க்கபடுகிறது!

செய்திகள்-
தீயாக-
பரவும்!

பிறகு-
சில பல-
பேர்களின்-
வாழ்வு-
கேள்வி குறிகளாகும்!

"ஊடுருவி-"
விட்டார்கள்!

இதோ-
வந்து விட்டார்கள்!

பக்கத்து-
தெருவை-
தாண்டி விட்டார்கள்!

என்பதாகவெல்லாம்-
"சப்பை"-
கட்டுவார்கள்!

"கொடூரமானவர்களை"-
கையும் களவுமாக-
பிடிக்கணும்!

தவறு உறுதி என்றால்-
தண்டித்தே ஆகணும்!

இதில்-
மாற்று கருத்தில்லை!

அச்செய்திகள்-
வெளியிடுவதால்-
தப்பு செய்ய முயல்பவர்கள்-
திட்டத்தை -
மாற்ற வாய்ப்பில்லை-என
சொல்வதற்கில்லை!

மற்ற சமூகத்தினர்கள்-
ஒரு சமூகத்தின்-
மேல்-
வெறுப்புகொள்ள-
வழி செய்யாது-என
சொல்வதற்கில்லை!

என்னென்னமோ-
பெயர்கள் கொண்ட-
அமைப்புகளாம்!

எங்கிருந்து-
"இவர்கள்"-
வருகிறார்களாம்! ?

அப்பாவிகளை-
கொல்ல எவன்-
அனுமதிதானாம்!?

பதவி பவுசு-
கொண்டவனாக-
இருந்தாலும்-
சரி!

பஞ்ச பரதேசியாக-
இருந்தாலும்-
சரி!

அப்பாவி மக்களை-
கொல்ல அனுமதிக்கவில்லை-
மார்க்கம்-என்பதே-
சரி!

பரபரப்பு-
செய்திகளில்-
உண்மை இருக்குமா!?-
கேள்வி குறி!

திருச்சியில்-
அமைச்சராக பொறுப்பேற்று-
சில தினங்களில்-
விபத்தில்-
மரணமடைந்தார்-
மரியம் பிச்சை-
அவர்கள்!

வாகன-
ஓட்டுனரை-
சில தினங்கள்-
"கழித்துதான்-"
காவல்துறை-
கைது செய்தார்கள்!

அப்படியெல்லாம்-
இருக்கும்பொழுது!

ஒரு -
அசம்பாவிதம்-
நடக்கும்போது!

உடனடியாக-
சில நபர்கள்-
படங்கள்-
அமைப்புகள்-
பெயர்கள்-
செய்திகளில்-
வெளியிடும்போது!

எப்படி-
சந்தேகம்-
இல்லாமல்-
இருப்பது!?

சொல்லபடுது!

மின்னஞ்சல்-
வந்தது!

குறுஞ்செய்தி-
வந்தது!

ஒரு சமூக தளத்தில்-
எண்பது மில்லியன்-
போலி கணக்காளர்கள்-
இருப்பதாக-
ஒரு ஆய்வு-
சொல்லுது!

இப்படியெல்லாம்-
வேடிக்கைகள்-
இருக்கும்போது!

மக்களும்-
யோசிக்காமல்-
எப்படி-
நம்புவது!?

அல்லது!

"இவர்களிடம்"-
சொல்லி விட்டு-
"அவர்கள்"-
வருகிறார்களா!?

"அவர்களே"-
"இவர்களை"-
அனுப்புகிறார்களா!?

நடுநிலையானவர்களே!?

சந்தேகம்-
வருதுங்களா!?

இல்லைங்களா!?

(குமுறல்கள் தொடரும்...)











Wednesday 28 November 2012

வெளிச்சங்கள்"! (3)

எத்தனை பேர்-
மடிந்தார்கள்-
சுதந்திர-
வேட்கையிலே!

இன்று-
சுதந்திரத்தை-
தேட வேண்டி -
உள்ளது-
தேசத்திலே!

காந்தியை-
நாம்-
அறிவோம்!

காந்தி-
சொன்ன-
"என் தோளில்-
இரு புலிகள்"-
அலி சகோதரர்கள்!-
என்றார்கள்!
அச்சகோதரர்களை-
எத்தனை பேர்-
நாம்-
அறிவோம்!?

போராட்டகளம்-
கண்டதால்-
சிறையில் -
அடைக்க பட்டார்கள்-
அச்சகோதரர்கள்!

வெளியில்-
வந்தவர்களுக்கு-
கொடுப்பட்டது-
பணமுடிப்புகள்!

அப்பணமுடிப்புகளை-
அப்படியே -
போராட்ட இயக்கத்திற்கு-
கொடுத்தார்கள்!

வெறும்-
கையுடன்-
வீடு திரும்பினார்கள்!

இன்று-
அத்தியாகிகளை-
எத்தனை பேர்-
அறிந்தவர்கள்!?

நேதாஜி-
நமக்கு-
தெரியும்!

அவருடன்-
கடைசி வரை-
பயணம் சென்ற-
கர்னல் ஹபிபுர் ரஹ்மானை-
நமக்கெல்லாம்-
தெரியும்!!?

கப்பலோட்டிய தமிழர்-
வ.உ .சி -
தெரியும்!

அக்கப்பல் வாங்க-
அன்றைய மதிப்பான-
இரண்டு லட்சம்-
கொடுத்த -
ஹாஜி பக்கீர் முஹம்மது-
எத்தனை பேர்களுக்கு-
தெரியும்!?

தூக்கு தண்டனை-
விதிக்க பட்டார்கள்-
பல போராட்ட-
தியாகிகள்!

அத்தியாகிகள்-
அழுது புரண்டு-
கேட்கவில்லை-
உயிர் பிச்சைகள்!!

சொன்னார்கள்-
தூக்கில் போடாதீர்கள்-
"கழுவ" மரத்தில்!

தூக்கில் போடுங்கள்-
தூக்கு மேடையில்!

எங்கள் உயிர்-
பிரிகையிலும்-
உடல் பட வேண்டும்-
எம்மண்ணில்!

மறுநாள்-
தொங்க -
வேண்டியவர்கள்!

மலர்ந்த-
முகம்-
கொண்டிருந்தார்கள்!

அத்தியாகிகள்-
வீர மரணம் -
அடைய போகிறார்கள்!

அதுதான்-
மகிழ்ச்சியில்-
இருக்கிறார்கள்-என்பதை
கேட்டறிந்த -
அதிகாரிகள்!

தண்டனைகள்-
மாற்றி-
கொடுத்தார்கள்-
ஆயுள் தண்டனைகள்!

சிறுபான்மை -
மக்களாக இருந்தாலும்-
பெரும்பான்மையாக-
நாட்டுக்காக -
உயிர் துறந்தார்கள்!

இவர்களையெல்லாம்-
ஏன் மறந்தார்கள்!?

அல்லது-

ஏன்-
மறைத்தார்கள்!

அத்தியாகிகளின்-
வாரிசுகளின்-
இன்றைய நிலைகள்...!?

(குமுறல்கள் தொடரும்)

Tuesday 27 November 2012

வெளிச்சங்கள்" (2)

"கச்சையை"-
கட்டி விட்டு-
கவர்ச்சி-
காட்டுபவர்கள்!

அதை வைத்து-
"கல்லா"-
கட்டியவர்கள்!

அவர்களின்-
பங்கிற்கு-
கட்டவிழ்த்து-
விடுவார்கள்!

தீவிரவாதி-என
புளுகு மூட்டைகள்!

சிலர்-
வாதிடுகிறார்கள்!

படத்தை-
பார்த்து-
யாராவது-
முடிவெடுப்பார்களா!?-
என்கிறார்கள்!

அவர்களிடம்-
சில-
கேள்விகள்!

சில குழந்தைகள்-
மாடியில் இருந்து -
விழவில்லையா!?

தன்னை-
"சக்திமான்"-
காப்பாற்றுவார்-என
நம்பவில்லையா!?

அது-
அத்தொடரின்-
விளைவில்லையா!?

"கள்ள தொடர்புகளுக்கு"-
"சீரியல்கள்"-
காரணமில்லையா!?

இதை-
மனோவியலாளர்கள் -
சொல்லவில்லையா!?

வளரும்போது-
குழந்தைகள்-
வன்முறையாளனாக-
மாறுவதற்கு!?

அவர்கள்-
காணும்-
வன்முறை காட்சிகளும்-
காரணம்-
அதற்க்கு!!

ஆனால்-
அச்சமூக-
மக்கள் மட்டுமா!?-
விதிவிலக்கு!?

பெண்களை-
கேவலபடுத்தியதாக-
பெண்கள் அமைப்புகள்-
போராடுவார்கள்!

அதை -
எல்லோரும்-
அவர்கள்-
உரிமை-
என்பார்கள்!

சமூகத்தை பற்றிய-
 தவறான காட்சிகளை-
நீக்க சொன்னால்-
கருத்து சுதந்திரத்துக்கு-
எதிரானவர்கள்-
என்கிறார்கள்!

உயிருக்கும்-
மேலாக நேசிக்கபடுபவரை-
அசிங்க படுத்திய-
திரை படத்திற்கு-
அறப்போராட்டம்-
நடத்தப்பட்டது!

போக்குவரத்துக்கு-
இடையூறு என-
தலையங்கங்கள்-
தீட்டப்பட்டது!

வருஷா வருஷம்-
குருபூஜைகளின்போது-
விழும்-
சாதிய கொலைகள்!

இவ்வருடம் மட்டும்-
நூற்றி ஒன்பது கொலைகள்-என
பத்திரிகை-
செய்திகள்!

ஏன்-
மறந்தது-
இதை பற்றிய -
எழுதிட-
பேனாக்கள்!

ஏன் இந்த-
இரட்டை வித-
பார்வைகள்..!!?

(குமுறல்கள் தொடரும்....)






Monday 26 November 2012

வெளிச்சங்கள்! (1)

நடக்கும்-
"வெடிப்பு "-
சம்பவங்கள்!

பரப்பப்படும்-
அவதூறுகள்!

நடைபெறும்-
கலவரங்கள்!

சாதாரண-
செய்திகளாகும்-
கொலைகள்!

நடக்கும்-
கூட்டு-
கற்பழிப்புகள்!

மாண்டுவிடும்-
மனித நேயங்கள்!

ஒரு பக்கம்-
உண்மையை மறைக்கும்-
ஊடகங்கள்!

மறுபக்கம்-
பொய்யை உண்மையாக-
எழுதிடும்-
விஷம பேனாக்கள்!

சிலர்-
கைது-
செய்யபடுவார்கள்!

சிலர்-
போலி தாக்குதலில்-
சாவார்கள்!

காரணம்-
சொல்வார்கள்-
"நடத்தியவர்கள்"-
அவர்கள்-
என்பார்கள்!

ஆனாலும்-
குறையவில்லை-
"அசம்பாவிதங்கள்"!

திருடியவன்-
செத்து விட்டால்!

குறையனுமல்லவா-
திருட்டுகள்!

குற்றவாளிகள்-என
என்கௌன்டரில் (தற்காப்பு தாக்குதல்!)-
இறந்தவர்கள்-
என்றால்!

எப்படி-
தொடர்ந்து-
கொண்டிருக்கிறது-
வெடிப்பு-
சம்பவங்கள்!?

ஒரு சமூகத்தில்-
தவறு செய்பவர்கள்-
இருக்கலாம்!?

அதற்காக-
ஒரு சமுதாயத்தையே-
குற்றவாளி கூண்டில்-
நிறுத்தலாம்!?

அப்படிஎன்றால்-
இனிவருபவர்கள்!?

"தீர்ப்பு-"
சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகளை-
எரித்தவர்கள்!!

"கணிப்பு "-
சொன்னதுக்கு-
பத்திரிகை -
அலுவலகத்தில்-
சில உயிர்களை-
எரித்தவர்கள்!!

கேரளத்தில்-
தன் கட்சியினர்-
செய்த கொலைகளை-
பெருமையாக-
முழங்கியவர்கள்!!

இன்னும்-
எத்தனையோ-
நடத்தப்படும்-
அரசியல்-
கொலைகள்!

ஆனாலும்-
இவர்களுக்கு-
"உத்தம புருஷ"-
வேடங்கள்!

இது-
எந்த ஊரு-
நியாயம்யா!?

இது-
ஒரு-
 சாமானியனின்-
சங்கடங்களைய்யா!?

கொஞ்சம்-
சொல்லிட -
ஆசைகொள்கிறது-
என் -
கவிதைகளய்யா!!


(குமுறல்கள் தொடரும்....)





Sunday 25 November 2012

நினைவானவளே....

உன்-
நினைவானது!

மலைபாம்பு-
போன்றது!

மலைப்பாம்பு-
இரையை -
விழுங்கி-
உடலை-
முறுக்கி-
கொள்கிறது!

உன் நினைவோ-
என்னை-
விழுங்கி-
உருக்கி-
கொல்கிறது!


Saturday 24 November 2012

கேவலபட்டவன்...."

மடியிலும் -
மார்பிலும்-
சுமந்தவள்!

உச்சி முகர்ந்து-
முத்தமிட்டவள்!

காய்ச்சலில்-
காய்ந்தபோது-
நெஞ்சு குழி-
கனன்றவள்!

விடிய விடிய-
விழித்திருந்தவள்!

விழியாக-
பார்த்து-
இருந்தவள்!

ஒண்ட இடமில்லாத-
என்னை-
"ராசா"-என
அழைத்தவள்!

அக்கம் பக்கம்-
அடிக்க முனைகையில்-
அரவணைத்தவள்!

அறிவு கெட்ட-
என்னை-
"அறிவு அறிவு"-என
கொஞ்சியவள்!

படுக்க-
 பாயில்லாதபோது-
தாவணியை-
விரித்து தூங்க-
வைத்தவள்!

"இவனா"-என
ஏளனமாக -
பார்த்தவர்கள்-
மத்தியில்-
"எம் பேரன்-"என
உரக்க சொன்னவள்!

அலை பேசியில்-
உறவுகளிடம்-
பேசி கொண்டிருந்தபோது!

அறிந்தேன்-
அவள் அருகில்-
இருந்ததை-
சப்தம் கேட்டபோது!

யாரென்று-
கேட்டாள்!

"சப்தாமாக"-
சொன்னபிறகு-
வாங்கி -
பேசினாள்!

என்னடா-
நல்லா இருக்கியா!?

-------------

சாப்பிட்டியா!?

----------------

எங்கேயும்-
சுத்தாதே!

---------------

கவலை -
படாதே!

-------------

பேச மாட்டியாடா!-
"கேவலபட்டவனே!?-என்று
சொல்லிவிட்டு!

காதும்-
கேட்கமாட்டேங்குது-
அலுத்து கொண்டு!

சென்றாள்-
அலை பேசியை-
கொடுத்து விட்டு!

நான்-
பேசியது-
அவள் காதில்-
விழவில்லை!

அவள்-
சொன்ன-
"கேவலபட்டவன்"-
வார்த்தை-
இனிக்காமல்-
இருக்கவில்லை!

என்னை-
தாங்கிய-
ஆச்சா (பாட்டி)-
உனக்கு!

என்ன செய்தாலும்-
கைம்மாறு ஆகுமா!?-
உனக்கு!

அப்படி என்றால்-
கேட்காமலே-
உன்னை போன்ற-
உறவுகளை தந்த -
இறைவனுக்கு!?

ஆனாலும்-
முயல்கிறேன்-
நன்றி செலுத்தும்-
கூட்டத்தாரில்-
இணைவதற்கு!




Friday 23 November 2012

தேவை விளக்கம்...

எப்பொழுதும்-
ஏன்-
"வெளக்கமாருடன்"-
நிற்கிறாய்!

என்னை-
பார்த்ததும்-
எடுக்கிறாயா!?

இல்லை-
நீ-
அதை -
எடுக்கும்போது-
நான்-
பார்க்கிறேனா!?

வெளங்காதவளே!-
விளக்கம்தான்-
சொல்லேன்!

நீ-!
எடுப்பது-
குப்பைகளை-
கூட்டி பெருக்கவா!?

இல்லை-
என்னையவும்-
குப்பையாக-
ஒதுக்கவா....!!?


தானாக......

தானாக-
கிடைத்தால்-
அது-
மரியாதை!

நாமாக-
கேட்டு-
பெற்றால்-
அது-
பிச்சை!

Thursday 22 November 2012

செத்தான் சீக்காளி...

வஞ்சியே!
விஷம் தடவிய-
அம்பு குத்தியவனாவது-
உயிரோடு-
இருப்பான்!!

மை தடவிய-
உன் விழியால்-
தாக்குண்டவன்-
உயிர்-
வாழ்வான்....!?

கொலுசு ...

சாகசக்காரியே!
"சலக்கு சலக்கு"-என
நீ!-
விட்டு செல்லும்-
கொலுசு-
சப்தம்!

"சதக்கு சதக்கு"-என
என்னை -
ஏன் !?-
வெட்டுது-
நித்தம்!?

Wednesday 21 November 2012

மனசே மனசே...

சொன்னாலும்-
கேட்காது!

தடுத்தாலும்-
கேட்காது!

அடம்பிடித்தாலும்-
அடங்காது!

முந்தி-
செல்லும்!

சந்தி சிரிக்க-
திரும்பும்!

பாசம் வைக்கும்-
பின்-
பரிதவிக்கும்!

நேசம் கொள்ளும்-
பின்னால்-
"அதுவே-"
கொல்லும்!

எதிர்ப்பை-
சொல்லும்-
பிறகு-
எறியப்படும்!

சலிப்படைந்து-
கிடக்கும்!

"அடைந்தே-"
கிடைக்க-
மறுக்கும்!

அன்பை காட்டும்-
அடிபட்டு-
திரும்பும்!

ஆசைகொள்ளும்-
அசிங்கப்படும்!

எத்தனை முறை-
இப்படி -
நடந்தாலும்!

அது-
என்னிடமே-
திரும்பி வரும்!

அதுதான்-
என்-
மனசாகபட்டது!

சொல்லடிகளால்-
சல்லடையாக்கபட்டது!

அம்மனசை-
ஏற்று கொள்வதே-
என் வழக்கமாக-
போனது!

மனசே இல்லாமல்-
பச்சிளம் பிள்ளைகளை-
கொன்று விட்டு!

குருட்டு நியாயம்-
பேசிக்கொண்டு!

உலகில்-
தெரிகிறது-
மனித மிருகங்கள்-
வாழ்ந்து கொண்டு!

அதனால்தான்-
மனசே இல்லாமல்-
வாழ்வதை விட!

பிஞ்சுபோன-
மனசோட-
வாழ்வது-
நல்லது-
அதைவிட!

ஒன்றுதான்-
ரப்பர்-
மரமும்!
என்-
மனமும்!

தாங்கி உள்ளது-
அத்தனை-
தழும்புகளும்!

ரப்பர்-
மரத்தை-
வெட்டினால்-
பால்-
வரும்!

மனம்-
காயம்ப்படும்போதேல்லாம்-
எழுத-
வருது!





Tuesday 20 November 2012

வலை...

ஒரு ஆண்-
கட்டுக்கடங்கா-
ஜல்லி கட்டு-
காளை!

கட்டுண்டு -
கட்டுப்பட -
வைக்கிறது-
மகள்கள் எனும்-
பாச வலை!

Monday 19 November 2012

துப் துப் துப்.........!!!

துருபிடித்த-
மனம் கொண்டவர்களின்-
கைகளில் இருப்பதை-
எண்ணி!

"துப்" "துப்"-என
துப்பி கொண்டும்-
கதறி கொண்டும்-
துப்பாக்கிகளும்-
வடிக்கிறது-
கண்ணீர்!

Sunday 18 November 2012

உள்ளங்களை சீராக்குவாயாக....!!

வானம்-
தூணில்லாமல்-
நிற்பது!

இன்னும்-
பூமியில்-
விழாமல்-
இருப்பது!

நீராவிகள்-
மேகத்தில்-
சேர்வது!

ஒரு இடத்திற்கு-
மேகங்கள்-
செல்வது!

வெறும் வயிறுடன்-
செல்லும் -
பறவைகள்-
வயிறு நிரம்பி-
கூடு-
திரும்புவது!

எதுவுமே-
இருப்பு இல்லாமல்-
பிறக்கும்-
உயிர்களுக்கு-
அனைத்தும்-
உலகில்-
கிடைப்பது!

ஆரோக்கிய-
தேகங்களும்-
நாட்கள்-
செல்ல செல்ல-
வலிமை-
இழப்பது!

உயிருக்கு-
உயிரானவர்கள்-
சுற்றி நின்றாலும்-
உயிர் பிரிதலை-
தடுக்க -
முடியாதது!

போர் முனையில்-
உள்ளவர்கள்-
நீண்ட நாள்-
வாழ்வது!

வீட்டில்-
அடைபட்டு-
கிடப்பவர்கள்-
அற்ப ஆயுளில்-
போவது!

ஒரே தண்ணீர்-
பாய்ச்சினாலும்-
மரங்களிடையே-
பழங்களிடையே-
வித்தியாசம்-
இருப்பது!

அந்தஸ்தின்-
உச்சத்தில்-
இருப்பவர்கள்-
அசிங்கபடுவது!

வறுமையானவர்கள்-
வாழ்வாங்கு-
உயர்வது!

அடாவடிகளுக்கு-
ஆட்சிகள்-
அதிகாரங்கள்-
நிலைப்பது!

அடாவடிகளை-
சிறை பிடிக்க-
மறுமலர்ச்சி-
உருவாகுவது!

இப்படியாக-
கால சக்கரங்கள்-
சுழல்வது!

இவ்வாறாக-
எத்தனையோ-
எண்ணங்கள்-
என்னுள்-
உதிப்பது!

அனைத்தையும்-
எழுதிட-
இந்த-
"அற்பனால்"-
முடியாது!

"அறிவுடையவர்களுக்கு-
எத்தனையோ-
இறைவனின்-
அத்தாட்சிகள்-
உலகில்-
இருக்கு!-
இறை மறை-
வாக்கு!-
இருக்கு-
இப்படியாக!!

இறைவா!
அறிவுடைய-
மக்களாக-
எங்களது-
உள்ளங்களை-
சீராக்குவாயாக!!




Friday 16 November 2012

வானும்- நானும்!

கொட்டி கிடக்கும்-
நட்சத்திரங்கள்!

படைத்தவனின்-
சித்திரங்கள்!

வளரும்-
தேயும்!

மறையும்-
தெரியும்-
நிலவு!

இது போன்றே-
நியாங்களை-
காணுது-
உலகு!

நிரந்தரமில்லை-
சந்திர கிரகணம்!

தண்டனை-
பெறாமல்-
இருப்பதில்லை-
அநியாயகாரனின்-
தலை கணம்!

அத்தனையும்-
அண்ணாந்து-
பார்க்கும்-
வானை!

உயரத்தில்-
இருந்தாலும்-
பணிந்தே பார்க்குது-
பூமிதனை!

அது போலவே-
தகுதி உள்ளவனுக்கு-
பதவி -
கிடைத்தாலும்-
பணிந்து-
நடக்கிறான்!

தராதாரம்-
தெரியாதவனுக்கு-
அதிகாரம் -
கிடைத்தால்-
"ஆடி" தொலைகிறான்!

சூரியன்-
மெல்ல-
மெல்ல-
சூடேற்றுது!

யார் ஆண்டாலும்-
என் தேச-
மக்களின்-
வயிறோ -
பசியால்-
காயுது!

பெத்தபுள்ள-
"அள்ளி கொண்டு"-
வந்தாலும்-
"அல்லக்கையாக"-
வந்தாலும்-
மாறாது-
தாய் பாசம்!

வாழ்வாதாரம் தேடி-
"வாக்கப்பட்டு"-
தேசங்கள் -
கடந்து போனாலும்-
பிறந்த மண்ணை-
நினைவூட்டும்-
வானம்!

வானம்-
எத்தனையோ-
தத்துவங்கள்-
தந்து கொண்டிருக்கிறது!

நமது-(மனிதர்கள்)
வாழ்வோ-
பரபரப்பில் (பிசி)-
தொலைந்து-
கொண்டிருக்கிறது...!!





Thursday 15 November 2012

ஆசைகள்....

அடங்கிடாத-
ஆசைகள்!

"அடங்கும் வரை-"
விடாது -
ஆசைகள்!

Wednesday 14 November 2012

யாருக்கேனும்.....

விறகு ஆவதற்கு-
முன்-
நிழல் தருகிறது-
மரங்கள்!

காய்வதற்கு-
முன்-
மணம் வீசுகிறது-
மல்லிகைகள்!

சருகாவதற்க்கு-
முன்-
பசுமை தருகிறது-
இலைகள்!

புதைவதற்க்கு-
முன்-
பிற உயிர்களை-
வாழ வழி செய்கிறது-
மழை துளிகள்!

உப்பில் -
சேர்வதற்கு-
முன்-
நிலத்தை-
செழிக்க செய்கிறது-
நதிகள்!

கரை சேர்வதற்கு-
முன்பு வரை-
"சுமைகளை-"
சுமக்கிறது-
கட்டு மரங்கள்!

சாம்பலாவதற்க்கு-
முன்-
பழைய கஞ்சிக்கு-
ருசி தருகிறது-
வாளமீன் -
கருவாடுகள்!

"அத்தனையும்"-
அழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!

மானுடர்களே!
நாம் "மறைவதற்குள்"-
யாருக்கேனும்-
உண்டா!?-
பிரயோசனங்கள்!

இருந்தால்-
சிறப்பு!

இல்லைஎன்றால்-
உயிருடன்-
"மரிப்பு"!


Tuesday 13 November 2012

குளித்த குழந்தையும்- உதித்த எண்ணங்களும்!

பூக்கள்-
அழுவதில்லை-
மழையில்-
நனைவதற்கு!

மழலை-
நீ!-
ஏன்!?-
அழுகிறாய்-
குளிப்பதற்கு!?

கிணத்து-
தண்ணியும்-
கொஞ்சம்-
உப்பு குறைக்கும்!

கூடுதலாக-
தண்ணீரும்-
சுரக்கும்!

நீருக்குள்ளே-
கூடுதலாக-
ஈரம்-
சுரக்கும்!

ஒரு பக்கம்-
உன்னை-
பெத்தவ!

மறுபக்கம்-
உன்-
அப்பனை-
பெத்தவ!

தென்றலும்-
நின்று பார்க்குது-
உன் அழுகை-
சத்தம்-
கேட்கவே!

குடும்பமே-
போராடுது!

உன்-
அழுகையை-
நிறுத்த மன்றாடுது!

வாசனை பூச்சுகள்(பவுடர்)-
வாசம்-
பெறவில்லை!

ஒரு பாவம்-
அறியா-
குழந்தைகள் என்பதால்-
மணக்க-
மறுப்பதில்லை!

உன் -
மொக்கை வாய்-
சிரிப்புக்கு!

அத்தனை-
மலர்களும்-
தோற்கும்!

சிறியவர்கள் மேல்-
அன்பு காட்டாதவரும்-
பெரியவர்களிடம்-
மரியாதை-
காட்டதவரும்-
நம்மை சார்ந்தவர்-
அல்ல!-
நபி மொழி!

நம் பிள்ளைகளிடம்-
நாம் எப்படி நடக்கிறோம்-
சிந்தித்தால்-
அடையலாம்-
நல்வழி!



Monday 12 November 2012

"எப்படியடி".....!!?

கத்தியின்றி!
ரத்தமின்றி!
எத்தனை -
ரணங்கள்!

நீ!
பார்த்த-
தருணங்கள்!

எப்படியடி-
உன்னால்-
முடியுது-
இப்படி....!!?


Sunday 11 November 2012

நம்மை நாமே அறிவோமா....!!

அனுப்பினோம்-
விண்வெளிக்கு-
விண்கலம்!

அமைத்தோம்-
பூமிக்குள்-
சுரங்கம்!

அடக்கினோம்-
ஆயிரம் பேர்-
பலம் கொண்ட-
யானையை!

அடைத்தோம்-
வீரத்திற்கு-
பேர் போன-
புலியை!

எத்தனையோ-
சாகசங்கள்-
செய்துள்ளான்-
மனிதன்!

அத்தனையிலும்-
இன்னும்-
எத்தனையோ-
புதிர்களை-
வைத்துள்ளான்-
இறைவன்!

இறப்புக்கு பின்-
காரணம்-
சொல்கிறோம்!

இயற்க்கை -
சீற்றத்திற்கு பின்-
காரணம்-
தேடுகிறோம்!

எல்லாவற்றுக்கும்-
காரணம்-
நடந்த பிறகு-
தேடும்-
நாம்!

"நடத்துபவனை-"
பார்த்தால்தான்-
நம்புவேன்-
என்கிறோம்!

ஒரு துளி நீரை-
கடலின் நீர்-
எனலாம்!

முழு கடலும்-
இந்த ஒரு-
துளிதானும்-
சொல்லலாம்!!?

நேற்றைய-
கண்டுபிடிப்பை-
இன்றைய-
கண்டுபிடிப்பு-
மிஞ்சுகிறது!

இன்றையதை-
நாளையது-
மிஞ்ச முயல்கிறது!

அதே போல்தான்-
விஞ்ஞானம்!-
நேற்று உள்ளதை-
இன்றுள்ளது-
மறுக்கிறது!

அல்லது-
கூடுதலாக-
ஒன்றை-
சொல்கிறது!

வியப்பாக-
உள்ளது-
விஞ்ஞானிகள்-
சொல்வது!

"விஞ்ஞான முயற்சி-
முற்று பெறுவதில்லை-
இன்னொரு -
தொடக்கத்தை-
தாராமல்-
போவதில்லை-"
என்பது!

விஞ்ஞானம்-
வரவேற்க்கதக்கது!

விஞ்ஞானம்-
மட்டுமே-
முடிவும்-
ஆகாது!

"தன்னை-
அறிந்தவன்-
தன் -
இறைவனை -
அறிவான்!-"
நபிகள்-
பெருமானார்!

சொந்தங்களே!
நம்மை -
அறிந்தோமா!?-

இறைவனை-
அறிந்திடதான்-
சிந்திப்போமா!?




Saturday 10 November 2012

நம்புகிறேன்...!!

நான்-
நம்பவில்லை-
அப்பொழுது!

"தென்னை மரத்தில்-
தேள் கொட்டினால்-
பனை மரத்தில்-
"நெரி" கெட்டுமாம்"-என
சொல்லும்போது!

நம்பாமல்-
இருக்க முடியவில்லை-
நான்-
இப்பொழுது!

என்னவளே!
நீ!
பின்னிய சடையில்-
நான்-
பித்து பிடித்து-
அலைகிறேனே-
இப்பொழுது...!!

Friday 9 November 2012

எனக்கெல்லாம்.....!!

தப்பாக-
ஒன்னும்-
சொல்லவில்லை!

தவறாக-
நினைத்தாளோ-
தெரியவில்லை!

இதுவரைக்கும்-
தவிப்பதுதான்-
என்-
நிலை!

சொன்னது-
சுட்டிருக்குமோ!?

இல்லை-
முள்ளாக-
குத்தி இருக்குமோ!?

"அவுகளை-"
பார்க்கும்போதெல்லாம்-
அந்த-
எண்ணம் வரும்!

"அவுக"-
போன பிறகுதான்-
சொல்லலையே-
என-
நினைவு -
வரும்!

ஒரு-
நீண்ட-
இடைவெளி!

அவுகளை-
கண்டேன்-
தெருவழி!

குளிர்ந்து-
என் -
நெஞ்சு குழி!

என்னை-
பார்த்தாக!
சிரிச்சாக!

அருகே-
போனேன்!

"என் உம்மாவ-
மாதிரியே-
இருக்கீக!-என
சொன்னேன்!

என்ன-
நினைத்தாங்களோ-
தெரியல!

அக்கணம்-
கண்ணீர் மல்கியதை-
மறைக்க-
முடியல!

என்னை போல-
மகன் இல்லையேனு-
நினைத்தாங்களோ!?

இவனெல்லாம்-
இரக்கம் படும்-
அளவுக்கு-
என் நிலைமையா-என
நினைத்தாங்களோ!?

நல்லது தானடா!
நல்லது தானடா!-என்று
சொல்லி விட்டு-
சென்றார்கள்!

என் பதிலை-
எதிர்பாராமலே-
சென்று விட்டார்கள்!

ஒரு துளி-
கண்ணீருக்கே-
அர்த்தம் தெரியவில்லை-
எனக்கு!

அப்படிஎன்றால்-
எனக்கும்-
என்னை போன்றவர்களுக்கும்-
என்ன-
அறிவு-
இருக்கும்!?

உணர்வுகள்-
பல எண்ணங்களை-
பகிர்ந்து-
போகின்றது!

அதை-
எழுத்தில்-
வடித்திட-
முனைகளில்-
மொழிகளும்-
தோற்று-
விடுகின்றது!




Thursday 8 November 2012

"இருந்தால்" என்ன.....!!?

ஆசை -
காட்டி!

நல்லவன்-
வேஷம்-
கட்டி!

மோகத்தை-
ஊட்டி!

ஆடி இருக்கலாம்-
கட்டில்!

இணையத்தில்-
நட்பு-
பாராட்டி!

மடங்கும்வரை-
மின்னஞ்சலால்-
விரட்டி!

சீரழித்து இருக்கலாம்-
மிரட்டி!

விசாரணை-என
அழைத்து-
கொண்டு!

விலங்குகளால்-
கட்டி-
விட்டு!

விடுவித்து-
இருக்கலாம்-
"விவகாரம்"-
முடித்து விட்டு!

அப்பாவிகளை-
சுட்டு விட்டு!

தீவிரவாதி-என
பட்டம் சூட்டி-
விட்டு!

"இதை"-
அப்புறபடுத்தி-
இருக்கலாம்-
அவ்விடத்தை-
விட்டு!

வறுமைக்கு-
பயந்து-
கொண்டு!

போயிருக்கலாம்-
"இங்கே"-
போட்டு விட்டு!

மனம் -
ஒத்து -
"வாழ்ந்து"-
விட்டு!

சலிப்பு -
தட்டியதும்-
பிரிந்து-
விட்டு!

தடையாக-
நினைத்து-
போயிருக்கலாம்-
இங்கே-
வீசி  விட்டு!

இப்படியாக-
எத்தனையோ-
காரணங்கள்-
இருக்கு!

அதனால்தானோ-
குழந்தைகளும்-
குப்பை தொட்டிகளிலும்-
காண கிடக்குது!?

ஒரே-
வித்தியாசம்!

மனிதனுக்கும்-
மிருகத்திற்கும்!

அது தான்-
இரக்கம்!

இரக்கம்-
இல்லாதவர்கள்!
"இருந்தால்"-
என்ன!?

இறந்தால்-
என்ன!?

அதற்காகத்தான்-
இயற்கை சீற்றங்களா-
என்ன!?

"தானே"-
தானா-
வரலாம்!

"நீலம்"-
நீளமா-
வரலாம்!

"சாண்டி"-
தாக்கிடலாம்!

"போண்டி"-
ஆக்கிடலாம்!

எதுவும்-
நிரந்தரம்-
இல்லை-
இவ்வுலகில்!

இரக்கம்-
இருக்கவேணாமா!?-
நம்-
மனதில்!!



Wednesday 7 November 2012

யார் வகுத்தது....!!?

யார்-
உசத்தி!

இதனால்தான்-
கலவர தீ!

குரு பூஜைகள்!

சாமானியனுக்கும்-
விழும்-
பூசைகள்!

கொண்டாடபடுது-
ஜெயந்தியாய்!

எரிகிறது-
ஏழைகள்-
வயிறெல்லாம்-
ஜெகஜோதியாய்!

சிறுபான்மை!
பெரும்பான்மை!

ஏன் இந்த-
மனப்பான்மை!

உயர்ந்தவன்!
தாழ்ந்தவன்!

இதை-
எவன்-
வகுத்தவன்!

ஒவ்வொன்றும்-
மனித-
உயிர்!

ஓட ஓட-
வெட்டுவது-
எதற்கு-
இந்த-
துயர்!?

இனம்-
மதம்-
மொழி!

அது-
அவரவர்களின்-
வழி!

கருத்துகளை-
சொல்வதில்-
தவறில்லை!

கழுத்தறுத்து-
கொல்வதில்-
நியாயமில்லை!

ஒவ்வொருவரின்-
பிறப்பும்-
ஒரே-
மாதிரி!

அவர்கள்-
நடத்தையால்-
ஆகிறார்கள்-
முன் மாதிரி!

தலைவர்கள்-
பிறந்தநாள்-
கொண்டாடுவதில்-
அவரவர்-
இஷ்டம்!

கொடுக்கனுமா-
மற்றவர்களுக்கும்-
கஷ்டம்!?

தலைர்கள்-
தேசத்துக்காக-
உழைத்தவர்கள்!

மனமாச்சரியங்களை-
மறந்தார்கள்!

ரத்தபந்தங்களை-
கூட-
துறந்தவர்கள்!

இன்றைய-
தலைமுறைகளால்-
சாதி-
மதம் -என்ற -
வட்டத்திற்குள்-
சிக்கி கொண்டவர்கள்!

உன்னால்-
என்னால்-
முடிந்தால்-
ஒரு உயிர்-
வாழவாவது-
உதவுவோம்!

முடியாதென்றால்-
தொந்தரவு-
செய்யாமலாவது-
ஒதுங்குவோம்!

"ஒரு ஆத்மாவை-
வாழ செய்பவன்-
உலகில் உள்ள-
அத்தனை பேர்களையும்-
வாழ வைத்தவனாவான்..."-
இது இறைவாக்கு!

மனதை -
தொட்டு கொள்வோம்-
எப்படி உள்ளது-
நம் போக்கு..!!





Tuesday 6 November 2012

என்னை விடு....

தாங்கி விடு-
இல்லை-
தாக்கி விடு!

சொல்லி விடு-
இல்லை-
கொள்ளி இடு!

அள்ளி கொடு-
இல்லை-
அள்ள விடு!

மேய விடு!
இல்லை-
விரட்டி விடு!

அண்ட விடு!
இல்லை-
சண்டை இடு!

படித்து விடு-
இல்லை-
திருப்பி கொடுத்து-
விடு!

எரிந்து விடு!
இல்லை-
எரிய விடு!

சென்று விடு!
இல்லை-
வழி விடு!

என்னவளே!
நீதானே!
பார்வையால்-
கொளுத்தி-
போட்டாய்!

ஏன்?-
பதில் தராமல்-
கொளுத்தியதை-
அணைக்க -
மறுக்கிறாய்!

நீ தானே!-
புன்னகையை-
பொசுக்கென-
சிந்தி சென்றாய்!

என்னை-
பூவில் திரவம்-
ஊற்றியது போல்-
பொசுங்கிட-
செய்தாய்!

உன்-
மௌனம்-
இருக்கிறது-
கிணற்றில்-
விழுந்த-
கல்லாட்டமாய்!

என் -
முயற்சி-
தொடர்கிறது-
கூடன்குள-
மக்களின்-
போராட்டமாய்!

ஒன்று-
வாழ -
பதில்-
சொல்லு!

இல்லை-
மறக்க-
வழி-
சொல்லு!



Monday 5 November 2012

தெரியாது.....

இரை-
கிட்டயா!?-
எட்டயா!?-
தெரியாது!

உணவு -
கிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!

விழும் இடம்-
நதியா!?-
கடலா!?-
தெரியாது!

பெய்யும்-
மழை-
கொட்டுவதை-
நிறுத்தாது!

அடுத்து-
பள்ளமா!?-
மேடா!?-
தெரியாது!

ஓடும்-
நதி-
பயணத்தை-
நிறுத்தாது!

நீர்-
தருமா!?-
நிறுத்துமா!?-
ஊற்று கண்-
தெரியாது!

தண்ணீர்-
அள்ளுவதை-
கிணறுகள்-
தடுக்காது!

அண்ணாந்து-
பார்த்ததா!?-
இல்லையா!?-
எலி-
தெரியாது!

தனக்கான-
"வலைக்கு"-
மலையை -
குடையவும்-
மலைக்காது!

தாங்குமா!?-
தொங்குமா!?-
புயல் காற்றுக்கு-
தெரியாது!

தூக்கணாங்குருவி-
கூடு கட்டுவதை-
நிறுத்தாது!

மற்றவைகள் -
எல்லாம்-
தன் கடமை-
செய்ய தவறியதா!?-
தெரியாது!

அப்படி-
நடந்திருந்தால்-
இரவும்-
பகலும்-
வராது!

படைப்புகளிலெல்லாம்-
சிறந்த படைப்பான-
மனிதா!?
நம் திறமை-
பற்றி சிந்தித்தோமா!?-
என்றால்-
தெரியாது!

சிந்தித்தவர்கள்தான்-
இன்றைய-
வரலாறு!

நாம்-
நம் படைப்பின்-
நோக்கம்-
அறிந்தோமா-
என்றால்-
தெரியாது!

"ஒவ்வொருவரும்-
சுரங்கத்தை -
போன்றவர்கள்-என
தன்னம்பிக்கையூட்டுது-
நபி மொழியானது!


Sunday 4 November 2012

சிறப்பு நிகழ்சிகள்!

கடைசி வரை-
கலை சேவை-
செய்வேன்!-என
பேட்டிகள்!

பின் திரையில்-
"அவர்"-
ஒவ்வொரு உடையாக-
காற்றில் விடும்-
காட்சிகள்!

இப்படிதான்-
தொலைகாட்சியில்-
சுதந்திர தின-
சிறப்பு காட்சிகள்!

நாட்டில்-
உணவுக்குதான்-
பஞ்சம்!

பண வரவால்-
"இவர்களுக்கு"-
ஆடையில்-
பஞ்சம்!

தியாகத்தை-
பேசுபவர்களுக்குமா!?-
நாட்டில்-
பஞ்சம்..!?


Saturday 3 November 2012

"சுற்றிய ....."

வேலிகள்-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டதுண்டு!

ஆடை-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டேன்-
இன்று!

மகிழ்ந்து-
கொண்டது-
என் கண்கள்-
இரண்டு!

"பூவழகி"-
உன்னை -
கண்ட பின்பு!

Friday 2 November 2012

சிக்கிய....

வேண்டாம்-
வேண்டாம்-
என்றது!

நான்-
போகும்போது!

போடா-
போ-என
அலுத்து கொண்டது!

நான்-
திரும்ப திரும்ப-
போகும்போது!

வேணும்டா-
உனக்கு-
என்றது!

நான்-
வாடிய-
முகத்துடன்-
வந்தபோது!

தலை வாரும்போது-
"சிக்கியதால்"-
தெருவில்-
எறிந்தால்!

அந்த அழகில்-
"சிக்கிய "உன்னை-
எப்படி -
ஏற்றுகொள்வாள்!?

என்றெல்லாம்-
என்னிடம்-
குழம்பியது!

சீப்பில்-
சிக்கி -
தெருவில்-
கிடக்கும்-
அவளது-
கேசமானது!
(தலை முடி)

Thursday 1 November 2012

என்னை கேட்டால்...

அங்கங்களை-
மறைக்கத்தானே-
ஆடை!

"அங்கங்கே"-
தெரிகிறதே-
அவலட்சணமாக-
உள்ளாடை!

ஒழுங்கா-
உடை அணிந்தால்-
பழமை-
என்கிறார்கள்!

ஒழுக்கம் கெட்டு-
உடை அணிந்தால்-
புதுமை-
என்கிறார்கள்!

என்னை  கேட்டால்-
கொடுமை-
என்பேன்!

கவிதையா தெரியுமா...!?

திக்கி-
திணறி-
முக்கி-
முணங்கி-
எழுதினாலும்-
எனக்கே-
தெரியவில்லை-
கவிதையாக!

கனியே-
முக்கனியே!

நீ!
பிச்சி-
கசக்கி-
வீசும்-
காகித துண்டுகளும்-
தெரிகிறதே-
ஹைக்கூ-
கவிதைகளாக!