Saturday 6 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (2)

தொடர்கிறேன்-
அனுபவத்தை!

இல்லை-
கண்ணில் விழுந்த-
எரி அமிலத்தை!

"ஹோ..."-என
ஒரு கூட்டம்-
ரத்த வெறியுடன்!

"ஆ..."-என
ஓடியது-
ஒரு கூட்டம்-
உயிர் பயத்துடன்!

மாறி மாறி-
மானபங்கம்!

மயக்கநிலையிலேயே-
மரணம்!

தாயின்-
கண் முன்னால்-
மகளும்!

கணவனுக்கு-
முன்னால்-
மனைவியும்!

சிறுமி முதல்-
முதுமையானவர்களும்!

இல்லை-
அங்கே-
வித்தியாசம்!

விறகு கட்டைகளுடன்-
எரிக்கவில்லை-
உடல்கள்!

எரிந்து கட்டைகளானது-
பல உயிர்கள்!

"நடக்கும்வரை"-
கோடீஸ்வரர்கள்!

"நடந்த "-
பிறகு-
ரொட்டிக்கு-
கையேந்திய நிலைகள்!

அறுத்து எறியப்பட்ட-
உறுப்புகள்!

அல்லோகலப்பட்ட-
நியாயங்கள்!

யார் சொன்னது-
"அன்றைய காலத்தை"-
அறிவீனர்கள் காலம்-
என!?

இன்றைக்கு மட்டும்-
வாழ்வதும்-
நடப்பதும்-
என்ன!?

அரசு இயந்திரங்கள்-
அம்மக்களை-
பாதுகாக்கவில்லை!

வேடிக்கை பார்த்தது-
என்பதை தவிர-
பொய்யில்லை!

யார்-
இந்த -
மக்கள்!?

ஏன் இந்த-
அநியாயங்கள்!?

(தொடரும்....)







4 comments:

  1. ஏன் இந்த அநியாயங்கள்? அறிய காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. ஆம் சகோதரா...
    நடந்தது... நடந்துகொண்டுதான் இன்னும் இருக்கிறது.
    நம் நாட்டில்....:(

    ReplyDelete
  3. ஏன் இந்த அநியாயங்கள் ?

    ReplyDelete