Sunday 31 March 2013

நாம நம்பனுமாங்க.....!!!?

 இந்தியா -
ஒளிர்கிறதுன்னு-
பிரச்சாரம்-
பண்ணுனீங்க!

நீங்கதான்-
ஆட்சியில-
இல்லாம-
ஒளிஞ்சி -
போனீங்க..!!

சேது திட்டத்திற்கு-
பாதையை தேர்வு-
செஞ்சதே-
நீங்க!

ஆட்சி-
காலாவாதியானதும்-
ராமர் பாலம்னு-
சொல்றீங்க!

எல்லைதாண்டிய -
பயங்கரவாதம்னு-
வாய் கிழிய -
பேசுவீங்க!

எல்லைக்குள்ள-
மத கலவரத்தை-
தூண்டுவீங்க!

பெட்ரோல்-
டீசல் -
உரிமையை-
தனியாருக்கு-
கொடுத்தது-
நீங்க!

இப்போ-
விலை உயர்வுன்னு-
போராடுறீங்க!

உங்க தேசபக்தி-
புல்லரிக்க-
வைக்குதுங்க...!!!!!?

நடந்திருக்கு-
சாதிக்கலவரம்-
மதகலவரம்!

தவறாமல்-
நடந்தேறி இருக்கு-
கற்பழிப்புகளும்!

குஜராத்ல-
கற்பழிக்கப்பட்ட-
கணக்குதான்-
எவ்வளவுங்க!?

நாம என்ன -
சொல்லங்க!?

அவுகளே-
ஆசிஷ் கிட்ட-
சொன்னதுதான்-
தெரியுந்தானேங்க!

இதுல-
அம்மாநில-
முதல்வருக்கு-
தொடர்பு இல்லைங்குறாங்க!

சரி !
அப்படி -
வைத்து கொள்ளுவோம்ங்க!

தன் மாநில-
மக்களையே-
காப்பாற்ற-
முடியாதவருங்க!

பிரமதராகி-
என்ன பண்ணிட-
போறாருங்க!?

மதசார்பற்ற-
கட்சியினு-
சொல்லி -
ஆளும் கட்சியாலேயே-
ஒன்னும் மாறலேங்க!!

கர்நாடக-
சட்டசபையிலேயே-
நீலப்படம்-
பார்த்தீங்க!!

தற்போது-
பலான காட்சியில-
சட்டமன்ற உறுப்பினர்-
அசத்துராருங்க!

ஆனாலும்-
நீங்க-
"கலாசார காவலர்னு-"
சொல்லுவீங்க!

அதையும்-
நாங்க-
நம்பனும்-
ஏங்க....!!!!!!!!!??

// ஆசிஷ் கேதான் எனும் நிருபர் ரகசிய கேமராமூலம் பல உண்மைகளை அவர்களின் வாயாலேயே சொல்லி பெரும் பரபரப்பை உருவாக்கியது.
தெகல்கா பத்திரிகை நிருபர் அவர்/

Saturday 30 March 2013

உத்தமமும்.....!!

உடலை வருத்தி -
உழைத்து உண்ணுவதே-
உத்தமம்!

பிறரை வருத்தி-
பிடுங்கி தின்பவன்-
செத்த பிணம்!

Friday 29 March 2013

மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்!

அடி முதல்-
நுனி வரை!

"அல்லக்கை" முதல்-
ஆள்பவர்கள் வரை!

எங்கும் இருக்குது-
லஞ்சம்!

அது இல்லாத-
இடம்தான்  பஞ்சம்!

டான்சி !
2 ஜி !
மாநில திராவிட-
கட்சிகள்!

போபர்ஸ் ஊழல்!
"போனவங்க "பேர்லயும்-
ஊழல்!
தேசிய கட்சிகள்!

தொகையில்தான்-
கொஞ்சம் -
முன்னே பின்னே!

ஆனாலும்-
ஊழலை ஒழிப்பதாக-
சொல்லாமல் இருக்கிறார்களா-
என்னே!?

அன்று-
"குடிகாரனை"-
எண்ணி விடலாம்!

இன்று-
"குடிக்காதவனை"-
எண்ணி விடலாம்!?

அன்று-
கையூட்டு-
பார்க்கப்பட்டது-
கேவலமாக!

இன்று-
வாங்காதவர்-
தூற்றபடிகிறார்-
"பிழைக்க தெரியாதவராக!"

கவலையை-
கலைத்திடும்-
மழலை சிரிப்பை போல!

விரக்தியின் விளிம்பில்-
இருந்திடும்போது-
நம்பிக்கை கீற்று -
உருவாகுவது போல!

நாசமான உலகில்-
நாணயமானவங்களும்-
இருக்கிறார்கள் போல!

ஒரு ரூபாய்-
லஞ்சம் வாங்கினால்-
என்னை தூக்கில்-
போடுங்கள்!

அப்படி-
முதலமைச்சருக்கு-
கடிதம் எழுதியது-
திரு .சகாயம் அவர்கள்!

இருக்கையின்-
பின்புறம் -
உள்ள வாசகம்!
லஞ்சம் தவிர்!
நெஞ்சை நிமிர்!

அய்யா!-
நீங்க தானய்யா-
நான் மதிக்கும்-
மனிதர்களில்-
ஒருவர்!

உங்களை பற்றி-
பத்திரிக்கைகளில்-
படித்ததுண்டு!

இன்று-
எழுதியதால்-
மகிழ்ச்சி-
கொஞ்சம் உண்டு..!




Thursday 28 March 2013

முடியும்.....!!!??

எல்லாம் முடியும்-
என்னால்-என்பது
அகங்காரம்!

எதுவுமே முடியாது-
என்பது-
கோழைகளின் வாதம்!

என்னாலும் முடியும்-என்பதே
தன்னம்பிக்கையாகும்!

நாறுது....!

நாற்றமெடுத்திடும்-
உடல்!

அதற்காக-
குளியல்!

நாறிடும்-
சொல்!

உளதூய்மைக்கு-
ஏதேனும்-
உள்ளதா-
நம்மிடம்-
முயற்சிகள்!!?


      

Tuesday 26 March 2013

புகழுக்குரியவனே......!(700வது கவிதை)

வலிகளை-
தருபவனே!

அது தீர-
வழிகளையும்-
வைப்பவனே!

சோதித்து அறிய-
சோதனையை-
தருபவனே!

சாதிக்க வைத்து -
சோதிப்பவனே!

வாட்டிடும்-
வறுமையை-
தருபவனே!

வறுமையில்-
வாட்டம்கொள்ளாமல்-
போராட செய்பவனே!

செல்வத்தை-
தருபவனே!

செல்வசெழிப்பால்-
இறுமாப்பு கொள்ளாதிருக்க-
சொல்பவனே!

ஆட்சியையும்-
அதிகாரங்களையும்-
தன் வசம்-
வைத்திருப்பவனே!

தன் நாடியவர்களுக்கு-
கை மாற -
செய்பவனே!

மடமை நீங்க-
சிந்திக்க-
சொல்பவனே!

அறிவை தந்து-
"ஆடாமல்"-
இருக்க சொல்பவனே!

அத்தனை-
மொழிகளும்-
போற்றிட முடியாதவனே!

அறிவுகளெல்லாம்-
மழுங்கும்-
அளவிற்கு-
புகழ்ந்திட-
முடியாதவனே!

புகழுக்குரியவனே!
பரிபாலிப்பவனே!
ரட்சகனே!

எங்களை-
நீ-
நேர்வழியில்-
செலுத்துவாயாக !

விரோதம்-
குரோதம்-
நயவஞ்சகம்-
நன்றி கெட்டதனம்-
இன்னும் ஏனைய -
தீய எண்ணத்திலிருந்து-
காப்பாயாக!

நல்லவர்களின்-
கூட்டத்தில்-
எங்களையும்-
சேர்ப்பாயாக!

கேட்க -
தெரியவில்லை!
எழுதிட-
வரிகளுக்கும்-
வழியில்லை!

கண்ணீரோடு-
கேட்கிறேன்-
இதை தவிர-
வேறுவழியில்லை!

யா!அல்லாஹ்!

உன்னையே-
வணங்குகிறேன்!
உன்னிடமே!
உதவிகளைதேடுகிறேன்!





Monday 25 March 2013

ஓய்வு..!

ஓய்வு-
அடுத்தகட்ட-
"ஓட்டத்திற்கு-"
"இளைப்பாறலாக "-
இருக்கட்டும்.... !!

ஓய்ந்தே-
கிடந்தால்-
நம் வாழ்வது கூட-
இறப்புக்கு-
சமமாகிடும்!


Sunday 24 March 2013

கண்ணியமா!?கலங்கமா!? (3)

அன்று-
தன் சிறப்புகளால்-
"ஹீரோ"-
ஆனார்கள்!

இன்று-
தன்னை-
"ஹீரோ" ஆக்கிக்கொள்ள-
சிலரை வில்லனாக்குகிறார்கள்!

எதையும்-
சாதிக்கலாம்-
சிலகாலம்!

அதனை செய்யும்-
விஷம பிரச்சாரம்!

ஆனால்-
உண்மை -
மண்ணில் புதைந்திருக்கும்-
வைரம்!

ஒருநாள்-
வெளிவந்தே-
தீரும்!

அச்சகோதரி(சகுந்தலா)யின்-
தப்பெண்ணம்!

மாற்றியது-
உண்மை நிலவரம்!

தொடாதே-என்றால்
தொட -முயல்வதுதான்-
பலரின் இயல்பு!

அதனால்தான்-
பல உண்மைக்கு-
முரணான செய்திகளால்-
இருட்டடிப்பு!

அதனை-
முறியடித்து-
உணர்த்துவதே-
"சத்தியத்தின்"-
சிறப்பு!

----------------முற்றும்------------

Saturday 23 March 2013

கண்ணியமா!? கலங்கமா!?(2)

"நோபலுக்கு"-
இணையான-
நிகழ்ச்சி அது!

நானும்-
கலந்துகொள்ள-
அழைப்பு வந்தபோது!

சவுதிக்கு-
போகணுமே-என்று
எண்ணியபோது!

மனதில்-
சஞ்சலம்-
ஏற்பட்டது!

தங்கும் விடுதியில்-
கண்ணியமாக-
சவுகரியமாக-
இருக்க -
பர்தா அணிய சொல்லி-
தந்தபோது!

வெறுப்பே-
மேலிட்டது!

பிரின்ஸ் சுல்தான்-
க்ராண்ட் செரமொனியல் ஹால்-
வந்தாச்சி!

பெண்கள் பகுதியில்-
பர்தா அணிந்தவர்களாகவே-
காட்சியாக-
இருந்திச்சி!

அங்கு நடந்த-
சம்பவங்களால்-
நானும் பர்தா-
அணிந்திட ஆர்வம்-
வந்திச்சி!

ஆம்-
சவுகரிமான-
உடை என -
மனதுக்கு-
பட்டுச்சி!

அரபு நாட்டுக்கு-
சென்ற பிறகு-
பர்தாவும்-
பிடிச்சி போச்சி !

அப்போது ஏன்!?-
பெண்ணடிமை என-
தூற்றபடுகிறது என-
கேள்வியும் மனதில்-
ஏற்பட்டுச்சி!

இச்சம்பவத்தை-
சுருக்கி கவிதையாக -
தந்ததுதான்-
நான்!

இச்சம்பவத்தை-
விளக்கியது-
சகுந்தலா நரசிம்ஹன்-என்ற
எழுத்தாளரான பெண்!

(தொடரும்...)

//// சகுந்தலா-முனைவர் பட்டம் பெற்றவர்.
பெண்ணுரிமைக்காக போராடுபவர்.
மேலும் முழுதகவல் அறிய இத்தொடர்பை படியுங்கள்!//

http://tamimansari.blogspot.sg/2012/11/blog-post.html?m=0

இத்தொடரை எழுதிட காரணமே இத்தகவல்.என்னை சேர்ந்ததுதான்.

Friday 22 March 2013

கண்ணியமா!? கலங்கமா!? (1)

குனிந்தாலும்-
போச்சி!

குளிச்சாலும்-
போச்சி!

சேலை கொஞ்சம்-
சோர்ந்தாலும்-
போச்சி!

சோலைகளில்-
கொஞ்சம்-
அசந்தாலும்-
போச்சி!

தாய்மையுடன்-
பாலூட்டும்-
தாயை கூட-
ஆபாச படம் எடுக்கும்-
நாய்ங்க வாழுது-
இங்கே!

மானத்தோட-
வாழ நினைக்கும்-
பெண்களையும்-
ஆடை குறைப்பது-
பெண் சுதந்திரம்-என்பது
என்ன முறைங்க!?

காசுக்காக-
"காட்சிபொருளான-"
"கர்மாந்திரங்களை"-
சொல்வதற்கு ஒன்னும்-
இல்லை!

கண்ணியமாக-
வாழ என்னும்-
யோக்கியமானவங்களை-
அடக்கு முறை -என்பதுதான்
இருக்கிறது-
பிடரியில் அடித்தாற்போல!

"திறந்து"கொண்டு-
அலைவது-
சுதந்திரமா!?

ஒழுக்கமா-
உடை அணிந்தால்-
பழமை வாதமா!?

முழுக்க ஆடை-
அணிந்தால்-
தவறுகள்-
நடக்காதா!?-
கேள்வி கேட்குறாங்க!

நகைகளை-
வீட்டுல பூட்டி-
வைக்கிறாங்க-
களவு போறதில்லையாங்க!?

அதனால -
நகைகளை தெருவிலா-
வீசிட்டு போறாங்க!?

ஆடை என்பது-
கண்ணியமுங்க!

கண்டபடி-
"காட்டுன-"
கட்டினா-
என்ன சொல்ல-
சொல்றீங்க!?

சந்நியாசிகள்-
கன்னியாஸ்திரிகள்-
முழு ஆடைதான்-
அணியிறாங்க!

அவர்களை பார்த்தால்-
நமக்கு மரியாதை-
வருதுதானேங்க!?

சாமானிய பெண்கள்-
அணிந்தால்-
ஏன் அடிமைத்தனம் -
என்கிறாங்க!?

நோபல் பரிசு பெற்ற-
கார்மன் என்கிற-
முஸ்லிம் பெண்மணி!-
கேள்வி கேட்கபட்டார்!

பர்தா அணிவது-
பழமைவாதமா-
தெரியலையா!?-என்ற
கேள்வியை -
நிருபர் முன்வைத்தார்!

பழங்கால மனிதன்-
நிர்வாணமாக -
அலைந்தார்கள்-
நாகரீகம் -
வந்தபோதுதான்-
ஆடை அணிந்தார்கள்!-என
பொட்டில் அறைந்ததுபோல்-
சொன்னார்!

(தொடரும்....!)





Thursday 21 March 2013

புரட்டினேன்-புரட்டபட்டேன்(2)

அறியமுடிந்தது -
எப்படியெல்லாம்-
சேர முடிகிறது-
எழுத்திற்கு!?

எழுதி வைப்பதால்-
ஒரு நாள் சேரும்-
இவ்வையகத்திற்கு!

நடிகைகளின்-
"நடு ராத்திரிகள்"!

அரசியல்வாதிகளின்-
அசிங்க ராத்திரிகள்!

காவல்துறையின்-
காமகளியாட்டங்கள்!

இவைகளுக்குள்-
இணைப்பை ஏற்படுத்தியது-
சங்கரின் வேலைகள்!

சங்கர் மட்டும்-
கெட்டவராக!

மற்றவர்களெல்லாம்-
உத்தமர்களாக!

சங்கருக்கு-
தூக்கு கயிறு!

"உருவாக்கியவர்களுக்கு"-
நாட்டில் நல்ல பேரு!

மரங்கள்-
இலைகளை-
உதிர்க்கிறது!

மரங்களோ-
நிலைத்து நிற்கிறது!

அதுபோலதானோ-
"சிறு தலைகளை"-
"இறுக்குகிறது"!

"பெரும்தலைகள்"-
வெள்ளையும் -
சொள்ளையுமாக-
அலைகிறது!
------------முற்றும்-----/-----








Wednesday 20 March 2013

புரட்டினேன்-புரட்டபட்டேன்! (1)

படிக்கத்தான்-
புரட்டினேன்!  

"புரட்டும் "-என
தெரியாமல்-
தொடர்ந்தேன்!

ஆரம்பமே-
தாய் -தகப்பன்-
வேறொருவருடன்-
ஓட்டம்!

மகனும்-
காதலியுடன்-
ஓட்டம்!

வந்த-
இடத்தில்-
பசி கொடுமை!

கடன்கூட-
நம்பி தராத-
வறுமை!

"அதிகாரி" ஒருவரால்-
நடத்தபடுது-
வன்மம்!

அன்றுதான்-
அவருள் இருந்து-
வெளிபடுது-
மிருகம்!

கடன்தராத-
கடை-
துவம்சம்!


அன்றையிலிருந்து -
அப்பகுதி-
ரவுடி!

தொடர்ந்தது-
அடி தடி!

அடாவடி!

சாராயம்!
விபச்சாரம்!

கொட்டியது-
பணம்!

தறுதலையான-
சகாக்கள்!

வாழ்வின் பயணத்தினூடே-
சில கொலைகள்!

கொலைகளை-
தவிர்த்து!

"மற்றவையெல்லாம்-"
நடந்தது-
"அதிகாரவட்டங்களுக்கு"-
தெரிந்து!

கைது-
செய்யபட்டார்!

சிறையிலடைக்கபட்டார்!

தூக்கிலிடபட்டார்!

யார் இது-
"கௌரி சங்கர்"!

என்ன தெரியலையா!?-
அதான்-
"ஆட்டோ சங்கர்"!

"ஆட்டோ சங்கரின்-
மரண வாக்கு மூலம்!"

நான் படித்த-
சமீபத்திய-
புத்தகம்!

இனி நான்-
சொல்வது-
படித்தபோது-
அடைந்த அனுபவம்!

(தொடரும்.....)

// நன்றி-
வெளியிட்டது-
நக்கீரன் பப்ளிஷர்ஸ்.

புத்தக பெயர் -ஆட்டோ சங்கரின்
மரண வாக்குமூலம்/

Tuesday 19 March 2013

வாசிப்பு!

வாழ்வாதாரத்திற்கு -
உடல் உழைப்பு!

சிந்தனைக்கான-
உழைப்பு-
வாசிப்பு!

Monday 18 March 2013

ஆயுள்...!

உயிர்பிக்க-
முடியாதவன்!      

உயிர்பறிக்க-
பார்க்கிறான்!

இயற்கையை-
அழித்தவன்!

மனிதர்கள்-
பூமியில்-
வாழ வழியை-
அடைத்தவன்!

கொஞ்ச கொஞ்சமாக-
கொத்து கொத்தாக-
சாகடிக்கிறான்!

அநியாயம்-
அடக்கம் -
இல்லாமல்-
செய்யலாம்!

உலகையே-
நீதி பேசாமல்-
ஊமையாக்கலாம்!

வாழும்போது-
சாமானியனையும்-
சாவின் விழும்பிற்கு-
தள்ளலாம்!

மரணம் -
ஒவ்வொருவரின்-
தொண்டைக்குழியை-
அடைக்கையில்-
எப்படித்தான்-
தப்பிக்கலாம்!?

ஹிட்லரும்-
முசொலினும்-
நேற்றைய-
சர்வாதிகள்!

இருந்திருப்பார்கள்-
இருக்கிறார்கள்-
அவர்களையும்-
மிஞ்சியவர்கள்!

அச்சர்வாதிகாரர்களின்-
எப்படி இருந்தது-
இறுதி முடிவுகள்!?

இறைவனால்-
ஒருவனுக்கு-
கொடுக்கப்படும்-
ஆயுள்!

ஒன்று-
பாவத்தில் இருந்து-
மீண்டிட!

மற்றொன்று-
பாவசெயல்களிலேயே-
தட்டழிந்திட!

கொஞ்சம் நாம்-
சிந்திப்போமாக-
நம்மை நாமே-
சீர்தூக்கி-
பார்த்திட....!!




Sunday 17 March 2013

போராட்டங்கள்.....!!

"கொல்வதினால்"-
போராட்டங்கள்-
சாவதில்லை!

போராட்டங்கள்-
உயிர் பெற்றெழுவதே-
உண்மை நிலை!

உலகம்-
பல வரலாறுகளை-
கண்டிருக்கிறது!

சில தீ பொறிகளே-
அநீதிகளை-
எரித்திருக்கிறது..!

Saturday 16 March 2013

"கனவு தேவதை...!"


புன்னகைத்தாள்-
என்னை-
பார்த்துதான்!

புறப்பட்டு-
வந்தாள்-
என்னை-
நோக்கிதான்!

இன்னும்-
சிறு தூரம்தான்!

கரைந்தது-
தண்ணியில்-
விழுந்த-
பனிகட்டியாகதான்!

பனியில்-
குளித்தது-
பூந்தோட்டம்!

எனக்கு-
ஏனோ-
மன கலக்கம்!

"சட்-சட்"-
தட்டச்சு-
சப்தம்!

"படக்கு படக்கு-"
என்றது-
என் நெஞ்சம்!

என்னருகில்-
வந்துவிட்டாள்!

கூர்ந்து-
பார்த்தாள்!

பார்வையிலேயே-
" கூறு"  போட்டாள்!

வந்தது-
குற்றால-
அருவியை-
என் மேல்-
கொட்டிடவா!?

கொடைக்கானல்-
மலையிலிருந்து-
குப்புற தள்ளிடவா!?

கேட்டாள்-
ஏன் பேச-
தயக்கமா!?

இல்லை-
பயமா!?

பூவை தேடி-
வண்டுகள்-
செல்வதுண்டு!

இங்கு-
பூ ஒன்று-
"கரு வண்டு" என்னிடம்-
கேள்வி கேட்கிறது-
எதிரே நின்று கொண்டு!

எவ்வளவோ-
பேச எண்ணங்கள்!

எவ்வார்த்தை-
முதலில் பிரசவிக்க-
அவைகளுக்குள்ளே-
முட்டல்கள்!

சின்னதாய்-
சிரித்தாள்!

சிக்கலில்-
என்னை-
மாட்டினாள்!

திருவென-
முழிக்கும்-
என் தலையில்-
செல்லமாய்-
தட்டினாள்!

அடி-
தொடர்ந்தது!

பிறகு-
உரைத்தது!

தூக்கம்-
கலைந்தது!

நட்பின் கை-
என்னை-
அடித்து-
எழுப்பியது!

வேலைக்கு-
நேரம் ஆகிவிட்டதாக-
சுவர் கடிகாரம்-
தெரிவித்தது!

நிஜத்தில்தான்-
என்னுள்-
புதைந்தது-
எத்தனையோ-
வார்த்தைகள்!

கனவிலுமா-
சொல்லாமல்-
தவிக்கும்படி-
என் நிலைகள்....!?



அறிந்தவன்...!!

நேரத்தின்-
முக்கியத்துவத்தை-
அறிந்தவன்!

பிறப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவன்!

Thursday 14 March 2013

நீங்களே சொல்லுங்க...!!

காதலெனும்-
முள்ளில்-
மாட்டிடாமல்-
எத்தனை-
" பருவமெனும்"-
பட்டங்கள் -
பறந்தனவோ-
தெரியவில்லை!?

வறுத்தெடுக்கும்-
வேதனைகள்-
அனுபவிக்காமல்-
எந்த வரலாறும்-
இல்லை-என்பதில்-
பொய்யில்லை!

நல்லவர்களுக்கும்-
நியாயவான்களுமே -
எத்தனையோ-
வலிகள்!-
அனுபவித்தாங்க..!

உங்களுக்கும்-
எனக்கும்-
இலகுவாக-
வாழ்வு அமையனும்-என்றால்
என்ன நியாயம்-
சொல்லுங்க...!?



Wednesday 13 March 2013

பொறு....!

செதுக்குதலில்-
வலியை-
பொறுக்கும்-
மரப்பலகைகள்-
வீட்டு அலங்காரமாகிறது!

சிணுங்கி-
உடைந்திடும்-
பலகைகள்-
அடுப்புக்கு-
விறகாகிறது!

வாழ்வில்-
வலிகளை-
தாங்குபவனே-
சாதிக்கிறான்!

முனங்கி-
அலைபவனோ-
கரண்டைக்கால்-
நீரிலேயே-
மூழ்கிவிடுகிறான்!

Tuesday 12 March 2013

ஆக.....!

ஆரம்பம்-
இருப்பதோ-
சிறிதாக..!

அரித்து-
விடுகிறது-
மனிதர்களை-
முழுவதுமாக!

ஏனோ -
மறந்தோம்-
மறக்கிறோம் -
"கெட்ட செயல்கள்"-
ஆரம்பிப்பதற்கு-
முன்பாக..!

Monday 11 March 2013

ஏண்டா இந்த மானம் கெட்ட பொழப்பு...!?

கட்டி பிடிக்க-
இவ்வளவு!

இறுக்கி-
அணைக்க-
இவ்வளவு!

சாதா முத்தம்-
இவ்வளவு!

சாக்கடை-
முத்தம்-
இவ்வளவு!

சேலைக்கு-
இவ்வளவு!

சேலை தவிர்க்க-
இவ்வளவு!

முழு ஆடை-
இவ்வளவு!

இரு ஆடை-(டூ பீஸ்)
இவ்வளவு!

அரை நிர்வாணம்!
முக்கால் நிர்வாணம்!

முழு நிர்வாணம்!
எல்லாம் செய்யபடுது-
வருமானம்!

நாறுவது -
என்னவோ-
தன்மானம்!

ஆண்-
"சிக்ஸ் பேக்"-
காட்டுகிறான்!

பெண்ணை-
"செக்ஸ் பாம்"-என
காட்டுகிறான்!

அச்சம் -
மடம்-
நாணம்-
பெண்களுக்கு-
மட்டுமா!?

ஆண் கடைபிடித்தால்-
மோசம் போய்டுமா!?

திரை துறை-
நல்ல பல-
பொழுதுபோக்கு-
சாதனம்!

சாதனம்-
விழுந்து விட்டதோ-
சில சாக்கடைகளிடம்!

அன்று-
மண்ணையும்-
மனிதனையும்-
பதிந்தார்கள்!

இன்று-
மனதையும்-
மானத்தையும்-
குதறுகிறார்கள்!

இதன் -
விளைவாக!

இரு நடிகைகள் மீது-
நடவடிக்கை-
எடுக்க சொல்லி-
தீர்ப்பு சொல்லிடாங்க..!

இனியாவது-
புரிந்து-
நடப்பார்களா!?

பிரயோசனமான-
கலைப்படைப்பை-
தருவார்களா..!?

// வழக்கு தொடுத்தவர்- சமூக சேவகர்-ஆந்திர மாநில வழக்குரைஞர் எல். சுபுதி.
தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்-
ஹைதராபாத் நீதி மன்றம்.
நடிகைகள்-அனுஷ்கா .பிரியாமணி.//
நன்றி- சிந்திக்கவும் வலைத்தளம்.
மேலும் தகவல் படிக்க பார்க்கவும்-
இந்த இணைப்பை..!





Sunday 10 March 2013

நேசத்தை.....!

சொல்-
இல்லைஎன்றால்-
கொல்!

என்னவளே-
அதெப்படி!?

சொல்லாமலே-
"கொல்லமுடிகிறது"-
இப்படி!

உருவாக்கம்..!

சிப்பிக்குள்-
உருவாகும்-
முத்து!

சிந்தனையின்-
உருவாக்கம்-
எழுத்து!

Saturday 9 March 2013

பேசுவது....!

வாதம்-
பிரதிவாதம்-
வரவேற்கத்தக்கது!

பிடிவாதம்-
விதண்டவாதம்-
தவிர்ப்பது-
நல்லது!

இல்லையேல்-
நேர விரயம்-
அது...!


Friday 8 March 2013

தீக்குளிப்பு!

வட்டியில-
வயிறு -
வளர்கிறவர்கள் கூட-
வாழுறாங்க!

கள்ள உறவு-
கல்சடைகளும்-
கலியுலகில்-
இருக்குறாங்க!

எல்லை -
விரிவுபடுத்தகூட -
"எழவுகளை" நடத்தி-
எகத்தாளமா-
இருக்கிறாங்க!

பச்ச பிள்ளைகளை-
பிச்சி எரிந்தவங்க கூட-
பந்தா காட்டுறாங்க!

நயவஞ்சக-
நம்பிக்கை துரோகிகள்கூட-
நல்லவனா-
நாடகமாடுறாங்க !

பார்வையாலேயே-
பலாத்காரம்-
பண்ணிக்கொண்டு-
புனித வேடமும்-
போடுறாங்க!

இன சுத்திகரிப்பு-
நடத்தி விட்டு-
இன்முகத்தோடு-
பேட்டியளிக்கிறாங்க!

இத்தனை -
ஜென்மங்களும்-
வாழயிலே!

"ஒற்றை கோரிக்கைக்காக"-
ஒற்ற உயிரை-
மாய்ப்பது-
உயர்ந்ததல்ல!

தீக்குளிப்பதால்-
தற்கொலை செய்வதால்-
நீதி கிடைக்குமா!?

அநியாயம்-
செய்தவனுக்குதான்-
தண்டனை கிட்டுமா!?

அநீதி இழைக்கப்பட்ட-
மக்களுக்காக-
குரல் கொடுப்பதில்-
தவறில்லை!

"ஒரே கூக்குரலில்"-
உயிர் இழப்பது-
சரி இல்லை!

உயிருள்ளவரை-
நீதிக்காக-
போராடுங்கள்!

உலகம்-
ஒருநாள்-
இல்லாவிட்டாலும்-
ஒரு நாள்-
செவி சாய்ப்பார்கள்!

உங்களது-
"குரலே அடங்கி"-
விட்டால்-
யார் அறிவார்கள்!?

திடீர் காளான்களாக-
"திடீர் மறைவு"-
வேண்டாம்!

மலைபோல்-
நிலைத்திருக்க-
நியாயவாதங்களை-
விதைத்திட-
வேண்டும்!

தீக்குளிப்பு!

இனி வேண்டாம்-
அந்நினைப்பு!

// சில கோரிக்கைகளுக்காக சில
பேர்கள் தீக்குளிப்பு செய்த செய்தி வாசித்தபோது மனதை நெருடிய வரிகள்//





Thursday 7 March 2013

இருபாலரும்....!!

அடித்தளத்தை-
அலட்சியம்-
செய்து விட்டு-
அடுக்குமாடி-
கட்டுவது!

பசுவின்-
"மடியை"-
அறுத்துவிட்டு-
பசும்பால்-
விரும்புவது!

முதுகுத்தண்டை-
உடைத்து விட்டு-
நிமிர்ந்து நிற்க-
சொல்வது!

காடுகளை-
அழித்து விட்டு-
மழையை -
எதிர்பார்ப்பது !

மூக்கின் துவாரத்தை-
முழுவதும்-
அடைத்து விட்டு-
நறுமணத்தை-
நுகர சொல்வது!

ஒரே படகில்-
பயணித்து விட்டு-
"ஓரத்தை"-
ஒருவன் உடைப்பதை-
வேடிக்கை பார்ப்பது!

இவைகளெல்லாம்-
எப்படி-
மடத்தனமோ!?
மூடத்தனமோ!?

இதில் -
நீங்கள் -
சேர்த்துகொள்ளலாம்-
என்னென்னமோ!!

அதுபோலதான்-
ஆண் எனும்-
அகந்தையில்-
பெண்மையை-
அழிச்சாட்டியம்-
செய்வதும் !

பெண் சுதந்திரம்-எனும்
பெயரில்-
"போக்கழிந்து "-
போவதும்!

இரு பாலருக்கும்-
இரு வேறு-
தன்மைகள்-
உண்டு!

அத்தன்மைக்குள்-
இருந்துகொண்டால்-
சிறப்புண்டு!

முருங்கை மரம்-
கொஞ்ச வேகமான-
காற்றில்-
முறிந்து விடும்!

புளியமரம்-
நன்றாக-
வளைந்து -
கொடுக்கும்!

இரண்டும்-
மரவகைகள்தானே!?

ஆணும்-
பெண்ணும்-
இதுபோல்தானே...!?

//போக்கழிந்து-நாசமாக போவது//





Wednesday 6 March 2013

சசி பெருமாள்...!!

அன்றைக்கு-
கஞ்சி தண்ணி-
இல்லையினாலும்-
கண்ணியமா-
வாழ்தாங்க!

இன்றைக்கு-
மாடியில-
வாழ்ந்தாலும்-
மானங்கெட்டு-
மதுவிலே-
மடியிறாங்க!

தாலி ஏற-
திருமண உதவி தொகை!

அதை-
"அறுக்கவா"-
தெருவெங்கும்-
டாஸ்மாக் கடை!?

அன்று-
குடிகாரனை-
எண்ணிடலாம்!

இன்று-
குடிக்காதவனை-
எண்ணிடலாம்!?

பூரண மது விலக்கு கோரி-
சசி பெருமாள்-எனும்
முதியவர்-
உண்ணாவிரதம்-
உள்ளார்!

எத்தனை பேர்-
நம்மில் அறிவார்!?

எவனோ-
எவளோ காதலிப்பது-
உண்மையா!?-என
கூவும் ஊடகமே!

இப்பெரியவரின்-
முப்பது நாட்கள்-
மேலாகியும் தொடரும்-
போராட்டத்திற்கு-
ஏன் மௌனமே!?

ஒரு படத்துக்கு-
எதிர்ப்பு-
தமிழ் நாடே-
கொதிப்பு!

"தண்ணியால-"
எத்தனை குடும்பம்-
நடுத்தெருவுல-
நிற்குது-
ஏன் வாயடைப்பு!?

வருமானம்-
வருதாம்!

குடியால-
போகுதடா-
மானம்!

அப்படிஎன்றால்-
அனைத்து-
"கொள்ளைகளையும்"-
அனுமதிப்போமா!?

அதில்-
பங்கு-(கமிசன்)
பெறுவோமா!?

அய்யா-
சசி பெருமாளே-
நீங்களும்-
நானும்-
எண்ணத்தால்-
ஒன்றுதான்!

இதனை-
புரியாதவர்கள்-
வாயில -
மண்ணுதான்!!

//முக நூல் (பேஷ் புக்) வாயிலாக சசி பெருமாள் அவர்களின் உண்ணாவிரதத்தை அறிந்தேன்-
இரண்டு நாட்கள் முன்பாகவே முப்பத்தி மூன்று நாட்களாகி விட்டதாக எழுதி இருந்தார்கள்.உங்களுக்கு மேலும் தகவல் தெரிந்தால் பின்னூட்டம்(கமெண்ட்) இடுங்கள்! அப்பெரியவருக்கும் மது ஒழிப்புக்கு போராடும்
மனித உரிமை ஆர்வலர்களுக்கும்.
இக்கவிதை அர்பணம்//







Monday 4 March 2013

அழகாகிட....!!

முடிவை-
சொல்லுங்கள்-
உங்கள் -
மனதை தொட்டு!

யாரும் உள்ளார்களா!?-
நீங்காமல்-
உங்கள்-
மனதை விட்டு!?

அப்படி இருப்பவர்-
எப்படி உங்களை-
கவர்ந்தவர்!?

எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?

நிறத்தை-
 வைத்தா!?

நடத்தையை-
வைத்தா!?

ஆம் -
முடிவு-
 இப்படியாகத்தான்-
இருக்கும்!

நடை முறை-
முதலிடம்!

"நிறமெல்லாம்-"
அடுத்த இடம்!

நிறத்தை-
மாற்றுவதாக-
விளம்பரம்!

இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!

சொல்லில்-
மென்மை வையுங்கள்!

மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!

உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!






Sunday 3 March 2013

பேதையும்......!!??

படித்துள்ளேன்-
"கேட்டும் உள்ளேன்"-
கவிதை வரிகளில்!

போதைகள் தரும்-என
பேதை அழகில் -மயங்கியவர்களின்-
எழுத்துகளில்!

இன்றோ-
வேதனையே -
மிஞ்சுகிறது-
"போதையாக" அலையும்-
பெண்களையும்-
 காணுகையில்!

இதுதான்-
நாகரீகமா !?

இல்லை-
கேவலமா!?

கர்மம் என்றால்-
இவ்வுலகம்-
ஏற்குமா!?

ஆனால்-
குடிக்கும் ஆண்கள்-
குடும்பம் எனும்-
பூந்தோட்டதின்மேல்-
எரி திராவகம்(ஆசிட்)-
தெளிக்கிறார்கள்!

குடிக்கும் பெண்களோ-
பூச்செடிகளின்-
வேர்களில் -
ஊற்றுகிறார்கள்!

வீடுகளை-
நாசபடுத்தி விட்டு-
நாட்டின் -
"சாதனை விற்பனை"-
என்கிறார்கள்-
ஆள்பவர்கள்..!!!!


Saturday 2 March 2013

யாசகம்...!

"கொடுக்கணுமே"-என
ஒதுங்கி செல்லும்-
பணக்காரன்!

கொடுக்க-
"ஒன்னும் இல்லையே"-என
கலங்கி செல்லும்-
"இல்லாதவன்"!

இவர்களின்-
உள்ளத்தின்-
"உதாசினதையும்"-
"உறுத்தலையும்"-
மனிதர்களின்-
அறிந்தவர்கள்-
யார்!?

உள்ளத்தின்-"
நிலை" அறிந்து-
கூலி கொடுக்க-
இறைவனன்றி -
வேறு யார்!?

Friday 1 March 2013

பணிவு...!!

மனிதனுக்கு-
மனிதன்-
"பணிந்து" போவதில்-
தவறில்லை!


படைத்தவனை-
தவிர்த்து-
யாருக்கும்-
யாரும்-
"அடிபணிந்து"போக-
தேவை இல்லை!