Tuesday 30 April 2013

பெண்ணினம்...!(4)

கருவில் இருப்பதை-
"அறிந்து"-
கலைத்தார்கள்!

பிறந்த குழந்தை-
வாயில -
நெல்லை போட்டு-
சாகடித்தார்கள்!

கள்ளி பாலும்-
கொடுத்தும்-
கொன்றார்கள்!

அதன்பிறகே-
கருவை -
சொல்ல -
தடை-
சட்டம்!

ஆனால்-
நம் நாட்டின்-
சட்டம்!!?

தூக்கு கைதியை-
"தூக்கு"வதற்கு-முன்
குடும்பத்திற்கு-
தெரியபடுத்தனும்!

மேல் முறையீடுக்கு-
வழி வகுக்கனும்!

இந்த முறை-
வீரப்பன் கூட்டாளிகள்-
விசயத்தில் நடந்தது!

அப்சல்-
விசயத்தில்-
ஏன்-
மறுத்தது!?

இதில் கொடுமை-
அக்குடும்பம்-
தொலைக்காட்சி பார்த்தே-
அறிந்தது!

"இவர்களையும்"-
தூக்கில் போடணும்-என
சொல்ல வரவில்லை!

ஏன் சட்டம் கூட-
இரட்டை நிலை!!?

கள்ளி பாலென்றால்-
சொல்லப்பட்டது-
உசிலம்பட்டி!

இப்படியே-
அறிந்தது-
பட்டி தொட்டி!

மூன்று-
நான்கு-
வருடத்திற்கு-
முன்னால்!

ஒரு செய்தி-
அறிய முடிந்தது-
வார இதழால்!

அது......!!-
சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுங்கள்!

கோபப்படாமல்-
பின் தொடருங்கள்!

(தொடரும்....)



Monday 29 April 2013

பெண்ணினம்...! (3)

திகைத்தேன்-
விக்கித்தவனாக!

செய்தி தாளில்-
படித்த-
செய்தியோ-
சுடும் தீயாக!

பெற்ற தாயே-
பெண் குழந்தையை-
கழுத்தை நெறித்து-
கொன்றதாக!

வறுமையே-
காரணம்-என
ஏழைத்தாய்-
சொன்னதாக!

நீங்களும்-
நானும்-
பிறக்கும்போதும்!

இன்னும் -
ஏனைய உயிகள்-
உலகிற்கு வரும்போதும்!

கொண்டு வந்தோமா!?-
கொண்டு வந்ததுவா!?-
பணத்தையும்-
சொத்து பத்திரத்தையும்!?

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

உணருங்கள்-
உறவுகளே!

"வறுமைக்கு-
பயந்து -
உங்கள் குழந்தைகளை-
கொல்லாதீர்கள்-
உங்களுக்கும் -
அவர்களுக்கும்-
நாமே(இறைவன்)-
உணவளிக்கிறோம்-
இறை மறை!

ஏன் விலக-
மறுக்கிறது-
நம் மன-
திரை!

ஒரு வட்டத்திற்குள்தான்-
"படைக்கபட்டவனின்"-
சிந்தனைகள்!

அதற்கும்-
மேலானது-
"படைப்பாளனின்"-
அற்புதங்கள்!

முதியோர்கள்-
அதிகரிப்பதாக-
இளையோர்கள் -
குறைவதாக-
சீனா கவலை-என
ஒரு தகவல்!

இனி-
கள்ளிபாலால்-
கொள்ளி வைத்த-
தமிழக-
தகவல்..!!

(தொடரும்....)



Sunday 28 April 2013

பெண்ணினம்...!(2)

பெண்மையின்-
சிறப்பு-
தாய்மை!

தாய்மைக்காக-
ஏங்கும்-
திருமணமான-
பெண்களின் நிலைமை!?

காலம் -
தள்ளி -
போனால்!

எப்படியெல்லாம்-
குத்தி கிழிக்கபடுகிறாள்-
சொற்களால்!

"தாமதத்திற்கு"-
ஆணும்-
பெண்ணும்-
பரிசோதிக்க-
உள்ளாகனும்!

ஆனால்-
பெண்ணைத்தானே-
முதலில் கை நீட்டுது-
உலகம்!

எத்தனை-
தம்பதிகள்!

குழந்தை-
பாக்கியத்திற்காக-
பரிதவிக்கிறார்கள்!

எவ்வளவு-
லட்சங்கள்-
செலவுகள்!

குழந்தைக்காக-
ஏங்கும் -
உறவுகளுக்காக-
என்றும் நீடிக்கும்-
என்-
பிரார்தனைகள்!

இப்படியாகவும்-
உள்ளார்கள்!

வேறு ஒரு-
நிலையை-
 பாருங்கள்!

கருவுற்றவுடன்-
கலங்குபவர்கள்-
எத்தனை பேர்கள்!?

முதல் -
குழந்தை-
பெண்ணென்றால்-
எவ்வளவோ-
நிந்தனைகள்!

பிரசவ வலியை-
விட!

எத்தனை-
மன வலிகள்-
அதை விட!?

வயிற்றில்-
உள்ளது -
ஆணா!?
பெண்ணா!?

பிறப்பது-
தூளியில் ஆடவா!?
கள்ளி பால் ஊற்றவா!?

(தொடரும்....!)


       

Saturday 27 April 2013

பெண்ணினம்..!(1)

பெண்!
தாயானவள்!
தாதியானவள்!

மழலைக்கு-
முதல் மடி -
அவள்!

வாழ்வின்-
பகுதி அவள்!

வாழ்வே-
அவளானவள்!

உயிரை-
பணயம் வைத்து-
உயிரை-
பெற்றெடுப்பவள்!

உயிருள்ளவரை-
பெத்தபிள்ளைகளை-
எண்ணுபவள்!

இன்னும்-
எவ்வளவோ-
சொல்ல தகுதியானவள்!

இன்றைக்கு-
பார்க்கவேண்டியது-
அவர்களது-
நிலைகள்!

மனிதர்களின்-
பெண்கள்-
ஓர் அங்கம்!

வியாபாரமாகி-
விட்டது-
பெண்களின்-
அங்கம்!

பழங்களைத்தான்-(இளம் பெண்கள்)
பாழாக்கினார்கள்!

பூக்களையும்-(சிறுமிகள்)
பிச்சி எறிகிறார்கள்!

பெண்ணென்பவள்-
சாபமா!?

வரமா!?

(தொடரும்....)





Friday 26 April 2013

பேனா...!

யாரிடமும்-
சொல்லாதே-என
நான்-
சொன்னதையெல்லாம்!

யாருக்கும்-
தெரியாமல்-
எழுதி -
உலகத்திற்கே-
சொல்லிடுது-
"அது"-
"கேட்டதையெல்லாம்!"

பொல்லாத-
பேனா!

ஆனாலும்-
என் தனிமைக்கு-
இனிமை சேர்க்குது-
அப்பேனா..!!

பேனாவை-
நான்-
எறியணுமா!?

மேலும்-
தனியாக-
புலம்பனுமா!?



சாதா புரோட்டா....!

சாதா புரோட்டா-
எல்லாம்-
எனக்கு-
 சாதாரணம்!

உன் -
நினைவோ -
செய்யுதடி-
"சதா ரணம்!"

தலையணை..!

தலைக்கு-
மட்டுமல்ல!

கண்ணீர்களை-
பிறரிடம்-
"அது"-
சொல்வதில்ல!

சேமிப்பு!

தொடர் வாசிப்பு!

சிந்தனைக்கான-
சேமிப்பு!

Thursday 25 April 2013

மூன்றெழுத்து...!!

உயிர் என்ற-
மூன்றெழுத்தை-
சிந்திக்கையில்!

பதில் முடிந்தது-
இறைவன் என்ற-
நான்கெழுத்தில்!

தீய செயல்கள்!

சிறுக சிறுக-
ஆரம்பிப்பது!

முழுவதுமாக-
மூழ்கிடுவது!

கொத்து புரோட்டா...!!

சுவை தரும்-
கொத்து புரோட்டா!

சுவை தர-
மறுக்குதடி-
உன்னை -
காணா விட்டால்...!!


Wednesday 24 April 2013

கண்ணே....!!

கண்ணும்-
கருத்துமாக-
இருப்பேன்-என
சொன்னாய்!

கண்ணே..!
கருத்தை-(கவிதை) தந்து -
"விட்டு" ஏன் -
சென்றாய்...!?

பரதேசி...!

பெண் பிள்ளைகள்-
கட்டி கொண்டு-
போக!

ஆண்பிள்ளைகள்-
கட்டியவளோடு-
சம்பாதிக்க -
போக!

பெரிய வீட்டில்-
பெற்றோர்கள்-
தனியாக!

ஊரில்-
இவர்கள்-
பேர் மட்டும்-
பணக்காரவுக!

ஆனால்-
பாசத்தில்-
இவங்க-
பரதேசியாக!

இளமையில்-
தனிமை-
கொடியது!

முதுமையில்-
தனிமை-
கொடூரமானது!

அத்தாட்சி...!

வானில்-
பருந்து-இருக்க!

கடலில்-
மீன்-
இருக்க!

எப்படி-
வாய்ப்புள்ளது-
பரந்திற்கு-
மீன் -
உணவாக!

இக்கேள்வி-
மனதில்-
மேலோங்க!

பதிலாக-
நினைவுக்கு-
வந்தது!

"இறைவனின் -
அத்தாட்சிகள்"-
இவ்வுலகில்-
உள்ளது-என
இறை மறை வசனம்-
ஞாபகத்திற்கு-
வந்தது..!!

Tuesday 23 April 2013

உலைகள்"....!!


அடுத்த வீடு-
உலை கொதிக்க-
நாற்று நடுகிறது-
உன் பிஞ்சு விரல்கள்!

மற்றவர்கள்-
எக்கேடு கெட்டால்-எனக்கென்ன-என
"உலை" திறப்பவர்கள்-
படித்தவர்கள்!?

இதுவா "சுதந்திரம்"!?

இதுதான்-
பெண் சுதந்திரமா!?

அரை குறை-
ஆடைக்கு பேரும்-
பெண் சுதந்திரமா!?

தீட்டு...!?

பார்த்தால்-
தீட்டு!

தொட்டால்-
தீட்டு!

இப்படியெல்லாம்-
பார்ப்பவனே!

சிந்தித்தால்-
வந்திடும்-
உன் மன -
கண்ணுக்கு முன்னே!

உன் தட்டில்-
சாதம்-
வந்திருக்கு-
ஆயிரம் கைகள்-
பட்டு!

உண்மை -
இப்படி இருக்க-
உனக்கென்ன-
"தீண்டாமை"-எனும்
தெனாவட்டு!?

Monday 22 April 2013

சாதனையோ சாதனை...!!

"ஜட்டி" போடுற-
வயசுல!

"புட்டி"சொருகுகிறான்-
இடுப்புல!

இதனையும்-
சேர்க்கலாம்-
அரசின் -
"சாதனை" பட்டியலிலே!

வீரம்....!!


வீரம் என்பது-
இல்லை-
ஒருவன் தாங்கி இருக்கும்-
ஆயுதத்தில்!


வெறுங்கையுடன்-
இருப்பவனையும்-
எதிர்க்க செய்யும்-
மாயம் உள்ளது-
ஒருவன் கொண்ட-
கொள்கையில்!

தன் முயற்சி...!!

ஆயிரம்தான்-
"எழுப்பும் மணி"-
இருந்தாலும்-
எழுந்திட முடியாது!

தானாக-
எழ -
முயற்சிக்காதவரை!

ஆயிரம்பேர் உதவினாலும்-
ஒருவன் உயர முடியாது!

அவனாக-
வாழ்வில் உயரனும்-என
எண்ணாதவரை!

அன்பிற்குள்.....!!?


மடுவுக்குள் உள்ள-
பாலில் மாசில்லை!

குழந்தைகளின்-
அன்பிற்குள் -
அழுக்கில்லை!

Sunday 21 April 2013

சில்லறை வர்த்தகம்!

ஏழை தாயே!
உன் -
தன்னம்பிக்கை-
சிரிப்பு!

அதுதான்-
உன்னைபோன்றவர்களுக்கு-
சிறப்பு!


நீ-
செய்வது-
சில்லறை வியாபாரம்!

அதிலும்-
"சில்லறை தனம்"-
செய்து விட்டது-
அரசாங்கம்!

சில்லறை வர்த்தகத்தில-
அந்நிய முதலீடு-
வழி செய்தவங்களே-
இன்றைய -
எதிர்க்கட்சி!

எதிர்ப்பது போல்-
நடித்து காட்டுச்சி!

அதெல்லாம்-
கண்டுக்காம-
இன்றைய அரசு-
நிறைவேற்றுச்சி!

ஏமாந்து-
ஏமாந்து-
மக்கள் நமக்குதான்-
சகஜமா-
போச்சி!

ஆளும்-
கட்சிகளின்-
பெயர்களின் தான்-
மாற்றம்!

பொது மக்களுக்கு-
தொடர்வதோ-
ஏமாற்றம்!

கேவலப்பட்ட பொழப்பு!


இது ஒரு-
கேவலப்பட்ட-
பொழப்பு!

ஆனாலும்-
"நாற்றத்தை-"
குடிப்பது-
கௌரவம்-என்று
நினைப்பு!


பஞ்சம்-
குடிக்க-
குளிக்க-
தண்ணிக்குதாண்டா!!

"அடிக்கிற"-
தண்ணிக்கில்லடா.....!!

நாடே-
நாசாமா -
போகுது!

நாம-
சொல்லி -
என்னவாக-
போகுது...!!?


பாக்கியம்!

எல்லா -
தந்தைக்கும் -
கிடைக்காத-
பாக்கியம்!

தன்-
தாயை-
மகளாக பெறும்-
அரும்பாக்கியம்!

Saturday 20 April 2013

பதில் தேடும் பார்வை!

என் தோளில்-
ஊசி குத்துது!

அம்மாவே-
உன் கண்ணு -
ஏன்-
கலங்குது...!?

அடியே...!அடியே...!!

    நீ-
போகும் பாதையில்-
என்னை-
வராதே !-என்று
சொல்லிடு!

இல்லைஎன்றால்-
யாரிடமாவது-
சொல்லியாவது-
விடு!


இப்படி-
"கூர்ந்து "பார்க்காதே!

என்னை-
"கூறு "போடாதே..!!

Friday 19 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(14)

என்னது..!?-
நாடு-
முன்னேறுமா..!?

வறுமை-
ஒழியுமா!?

நல்லாட்சி-
நடக்குமா..!?

இதெல்லாம்-
நடக்கிற-
காரியமா!?

என்றெல்லாம்-
மனதோடு-
போராட்டமா!?

இன்றைக்கு-
இரு நாடுகளை பற்றி-
பார்ப்போமா!?

நூறு சதவிகிதம்-
கல்வியறிவு-
பெற்ற நாடு!

முதல் வகுப்பு முதல்-
பல்கலைகழகம் வரை-
இலவசாமாக-
பயிற்றுவிக்கும் நாடு!

வீடில்லாதவர்களை-
வீடு கட்டி-
வாழவைக்கும்-
நாடு!

அது-
வெனிசுலா எனும்-
நாடு!

மற்றொரு-
நாடு-
இங்கு சாதாரண-
குடும்பத்தில் பிறந்தவர்!

அதிபரான -
பிறகு-
உலகவங்கி கடன்களை-
அடைத்தவர்!

ஐரோப்பிய நாடுகளில்-
தவிர்க முடியாத சக்தியாக-
உருவெடுப்பவர்!

"அது செய்வேன்"-
"இது செய்வேன்"-என
பிரச்சாரம் செய்யாதவர்!

இன்னும் -
மேன்படுத்துவேன்-என
தேர்தலை சந்தித்தவர்!

அவர்தான்-
துருக்கி அதிபர்-
எர்துகான் ஆவார்!

இந்நாடுகளில்-
நடப்பது!

நடந்தது-
மாற்றமில்லையா!?

நம் நாடு-
மாறாது-என்று
சொன்னால்-
அது நம்மையே-
 ஏமாற்றுவது-
இல்லையா!?

வரும்-
நாடாளு மன்றதேர்தலில்-
சிந்தித்து வாக்களித்தால்-
பாவமில்லை இல்லையா!?

(முற்றும்)

//வெனிசுலா தகவல் படித்தது-
சிந்திக்கவும் வலை தளத்திற்கு மிக்க நன்றி!
அதன் இணைப்பு...!
http://www.sinthikkavum.net/2013/04/blog-post_6455.html?m=1////




Thursday 18 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(13)

அதிகாரம் -
அதிகம் கொண்ட-
இடம்!

அரசியல் -
தளம்!

அரசியலா!?-என
முகம் சுளிப்போர்-
உண்டு!


"அதனால்-"
ஆகாத-
காரியமும்-
உண்டு!!?

அரசியலை-
ஒதுக்கி!
ஒதுங்கி!

இன்றோ-
இருக்கிறது-
சாக்கடை-என்ற
சொல்லில்-
அடங்கி!

நாம்-
சாக்கடை-
எங்கோ-
ஓடுது-
என்றிருக்க!

இன்றோ-
நம் வீடு நோக்கி-
வந்திருக்க!

எவ்வளவு-
காலம்தான்-
மூக்கை பொத்தி-
வாழ்ந்திருக்க!?

அரசியலில்-
அசிங்கங்களை-
பேசுகிறோம்!

கொள்கை சிங்கங்களை-
ஏன் -
மறக்கிறோம்!?

அரசியல்வாதிகளெல்லாம் -
நம் மனதில்-
நிற்கிறார்களா!?

அய்யா -காமராசரும்!
அத்தா-காயித மில்லத் இஸ்மாயிலும்!
அண்ணா-பேரறிஞர் அண்ணாதுரையும் -
மறக்க கூடியவர்களா!?

நடுநிலையாளர்களே!
சமூக நலன்  விரும்பிகளே!
இன்னும் நீங்கள்-
ஒதுங்கலாகுமா!?

தேசம்தான்-
தானாக-
மாறுமா!?

(தொடரும்...)







Wednesday 17 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(12)

நாம்-
இந்தியர்கள்-
தேசத்தால்!

இத்தேசம்-
சிதைகிறது-
மதவாதத்தால்!

சாதியத்தால்!

அதிகாரவர்கத்தால்!

ஆட்சியாளர்களின்-
பொடுபோக்குதனத்தால்!

எப்படியெல்லாம்-
குளிப்பாட்டபடுகிறது-
ரத்தத்தால் !

சொல்லிடவுள்ளது-
அநியாயங்கள்-
கடல் நுரை அளவு!

சொல்லியதோ-
ஒரு நுரை குமிழியில்-(குஜராத் கலவரம்)
ஒரு துளி அளவு!

நம் விவசாயிகள்-
கழுத்தை நெரித்த-
தூக்கு கயிறுகள்-
எத்தனை!?

ஆண்டு தோறும்-
பட்டினியில்-
சாகும் குழந்தைகள்-
எத்தனை!?

பிரசவகாலத்தில்-
இறக்கும் சகோதரிகள்-
எத்தனை!?

இதில் -அக்கறைகொண்டவர்கள்தான்-
எத்தனை!?

எத்தனை-
எத்தனை-
இல்லாமைகள்!
கல்லாமைகள் !

இதற்காக-
சுதந்திர போராட்ட தியாகிகள்-
தன்னையவே-
நாட்டுக்காக-
"சிதைத்தார்கள்"!

"அமாவாசைகளும்"-
"அப்துல் காதர்களும்"-
"அந்தோனிகளும்"-
சுபிட்சமா வாழனும்!

பசியிலிருந்தும்-
பயத்திலிருந்தும்-
பாதுகாக்கபடனும்!

தேசத்தில்-
அமைதி-
நீதி-
தென்றாலாக-
தழுவனும்!

அதற்கு-
நாம்-
என்ன -
செய்யணும்..!!?

(தொடரும்...






Tuesday 16 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (11)

"ஊழலை ஒழிப்போம்"-
இந்த வாசகம்!

தேர்தலின்போது-
கேட்கும்-
வாசகம்!

இதெப்படி-
இருக்கிறதென்றால்!

வேரில்லாமல்-
மரங்கள்-
இருப்பது போல்!

அடித்தளம்-
இல்லாமல்-
கட்டிடங்கள்-
இருப்பது போல்!

இதெப்படி-
முடியாதென்போமோ..!?

அதுபோலவே-
அரசியலுடன்-
ஊழலுமோ!?

உங்களுக்கு-
இவ்விஷயம்-
தெரிந்ததா!?

அதுதான்-
லோக் ஆயுக்தா!

தெரிந்திருந்தால்-
நல்லது!

என்னை போலவே-
தெரியாதவர் என்றால்-
அறிவது-
நல்லது!

லோக் ஆயுக்தா-
லஞ்சத்திற்கு எதிரான-
மாநில அமைப்பாகும்!

அதிகாரிகளை-
நியமிப்பது-
நீதிமன்றமும்-
அம்மாநில கவர்னரும்-
ஆகும்!

இவ்வமைப்பு-
தன் மாநிலத்திற்கு-
வேண்டாமென-
எதிர்ப்பு!

எதிர்ப்பு-
தெரிவித்தவர்தான்-
வருங்காலத்தில்-
பிரதம வேட்பாளராவார்-என
எதிர்பார்ப்பு!

ஊழல் நடவடிக்கைக்கு-
இவர்(மோடி) ஏன்-
தடுக்கணும்!?

தடுத்தாலும்-
இவர் நல்லாட்சி-
செய்கிறார்-என
நம்பனும்!?

நல்லா-
விளங்கிடும்....!!

(தொடரும்....)

//லோக் ஆயுக்தா பற்றிய விபரம்.
இத்தளத்தில் பார்க்கலாம்-
நன்றி தினக்ஸ் வலைத்தளம்.
http://dinaex.blogspot.sg/2013/04/blog-post_2388.html?m=1//




Monday 15 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!(10)

இந்தியாவிலேயே-
குஜராத்-
சிறந்த மாநிலம்!

சொல்லுது-
ஊடகம்!

மோடி-
நல்லவரு!

அவரு-
வல்லவரு!

அதனால்தான்-
தொடர்ந்து-
முதல்வராக-
பதவி-
வகிக்கிறார்!

இப்படி-
ஒரு சாரார்!

அதிகாரத்தில்-
இருப்பதால்!

நல்லது-
நடக்குது-
சொல்வோமானால்!

சில எதார்த்தங்கள்-
இருக்குது-
கேள்விகளாக-
நமக்கு-
முன்னால்!

ஒபாமா-
அதிபாராக-
நீடிப்பதால்!

அமெரிக்கா-
போர் விமானங்கள்-
பூக்களை தூவுகிறது-
சொல்வோமானால்!

ராஜபக்சே-
அதிபராக -
நீடிப்பதால்!

முள்ளி வாய்க்காலில்-
முல்லை மலர்களை-
கொட்டினார்கள்-என
சொல்வோமானால்!

எகிப்து-
ஹோஸ்னி முபாரக்-
நல்லவரானால்!

அந்நாட்டு மக்கள்-
புரட்சி -
தப்பென்று -
வாதிடுவோமானால்!

நம் நாட்டில்-
காங்கிரஸ் -
"இருந்ததால்-
"இருப்பதால்"-
நடக்கிறதா-
நல்லாட்சி!?

ஆமாம்-
என்றால்-
நாசமா போச்சி!

மூன்றாவது-
அணியால்-
ஓட்டுகள்-
பிரிஞ்சி!

பி.ஜே.பி-
வந்திடுமோ-என
நினச்சி!

காங்கிரசுக்கு-
ஓட்டுக்கள்-
விழுந்துச்சி!

இப்படியாகவே-
பரவலாக-
பேச்சுக்கள்-
அடிபட்டுச்சி!

அதுதான்-
உண்மையாகவும்-
இருந்துச்சி!

(தொடரும்....)






Saturday 13 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(9)

இனி-
ஆசிஷ் கேதானின்-
பேட்டியிலிருந்து-
சில வரிகள்!

இல்லை-
"வடுக்கள்"!

காட்சிகளை-(வீடியோக்கள்)
ஒப்படைத்தேன்!

நாளை-
வெளி வரும்-என்று
ஆவலுடன் -
இருந்தேன்!

நாடே-
அதிரும்!

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு-
நீதி கிடைக்கும்!

என்றெல்லாம்-
எண்ணங்கள்!

ஆனால்-
நடந்தது-
என்னவோ-
வேறு விதங்கள்!

அரசியலாக்கினார்கள்!
அரசியலை -
என் மீதும் -
பூசினார்கள்!

குறைவு-
கொடூரங்களை-
கேட்டபின்பு-
தூங்கிய இரவுகள்!

நிறைய-
தூங்காமல்-
அழுத இரவுகள்!

"துகிலுரித்த "-
புகைப்படங்களை வெளியிட்டு -
பணம் பார்ப்பவர்கள்!-
மத்தியில்!

உயிரையும்-
துச்சமென எண்ணி -
உண்மையை -
வெளிக்கொண்டுவந்த-
ஆசிஷ் இருப்பார்-
நல்லவர்கள்-
நெஞ்சில்!

தெகல்கா இதழ்-
ஒரு புலனாய்வு-
இதழ்!

அதன் தமிழாக்கங்கள்-
தந்துள்ளது-
சில தமிழக -
இதழ்கள்!

ஒரு முறை-
பரபரப்பை-
உருவாக்கியது!

லஞ்சம்-
வாங்கியவரை-
வெளியிட்டு-
மானத்தை வாங்கியது!

பங்காரு லட்சுமணன்-
லஞ்சம் வாங்கியது!

தெகல்காதான்-
"கொடுத்து"-
"படம்"-
பிடித்தது!

(தொடரும்....)

/ பங்காரு லட்சுமணன் பி.ஜே.பி
யை சார்ந்தவர்//



Friday 12 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (8)

"ப்யுஷர் அகர்வால்"-என்ற
பல்கலை கழக-
மாணவன்!

"அவர்களின்"-
"சித்தாந்தத்தை"-
ஆய்வு செய்ய-
குஜராத்-
சென்றான்!

உச்சி முகர்ந்து-
வரவேற்றார்கள்!

உன்னை போல-
இளைஞர்கள்தான் -
தேவை-
என்றார்கள்!

ஒன்றாக-
கலந்தார்கள்!

இரண்டற-
இருந்தார்கள்!

மாணவனின்-
ஆய்வுகளும்-
தொடர்ந்தது!

ஆறு மாதங்களும்-
ஆனது!

பிரமுகருடன்-
மாணவனும்-
வாகனத்தில்-
செல்லுகையில்!

பிரமுகர்-
எடுத்து பேசினார்-
கை பேசி-
அலறுகையில்!

பேசினார்!
வைத்தார்!

மாணவனை-
பார்த்தார்!

பிறகு-
சொன்னார்!

"எவனோ-
டெல்லியில் இருந்து-
வாரானாம்!

ரகசிய கேமரா மூலம்-
படம் எடுத்து-
கலவரத்தை-
வெளியிட போறானாம்!

பேசியதை-
சொல்லி முடித்தார்-
பிரமுகர்!

கேட்டு கொண்டார்-
மாணவர்!

கலவர சூத்திரதாரிகளை-
அலைவரிசைகள்-
சொன்னது!

பத்திரிகைகள்-
சொன்னது!

ஆனால்-
நீதி ஏன்-
இன்னும் தாமதமாகுது!?

ஆம்-
மாணவனாக-
சென்றது-
நிருபர்தான்!

அவர்தான்-
தெகல்கா பத்திரிகை-
ஆசிஷ் கேதான்!

அவர்-
பிடித்த -
ரகசிய கேமரா-
சொல்லியது-
கயவர்களின்-
ரகசியங்களைதான்...!!

(தொடரும்....)



Thursday 11 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (7)


கற்பழிப்பு-
நடந்தது!

கருவறுப்பு-
நடந்தது !

துண்டு கட்டாக-
தூக்கபட்டார்கள்!

துண்டு,துண்டாக-
வெட்டபட்டார்கள்!

தீக்கிரையான-
சொத்துக்கள்!

சோற்றுக்கே-
கையேந்திய-
முன்னாள்-
"சொத்துக்காரர்கள்"!

ஓட-
ஓட-
விரட்டி!

ரத்தத்தில்-
குளிப்பாட்டி!

கர்ப்பிணி-
வயிற்றை-
கிழிச்சி!

சிசுவை-
எடுத்து-
அடிச்சே-
சாகடிச்சி!

"சுட்டும்-"
செத்தார்கள்!

செத்தும்-
சுடபட்டார்கள்!

குண்டுகளையும்-
பயன்படுத்தினார்கள்!

இவர்களுக்கு-
கொலைகள்-
கை வந்த-
கலைகள்!

அரசியல் சாயம்-
பூசலாம்-
குற்றம்-
சாட்டுபவர்கள்-
அரசியல்வாதி என்றால்!

மத சாயம்-
பூசலாம்-
இதை-
சிறுபான்மை -
சமூக தலைவர்கள்-
சொன்னால்!

செய்தவர்களே-
இதை-
சொன்னால்!!?

ஆம்-
சொன்னது-
செய்தவர்களே-
பெருமிதமாக!

"ஒளி பதிவு-"( வீடியோ பதிவு)
எடுப்பது-
தெரியாதவர்களாக!

ஆனாலும்-
இவர்கள்-
சொல்லுவார்கள்-
தேச பக்தர்கள் என!

கலாசார காவலர்கள்-
என!

உயிரையே-
பயணம் வைத்து-
உண்மையை -
வெளிக்கொண்டுவந்தவர்-
ஆசிஷ் கேதான்!

யார்-
இந்த -
ஆசிஷ் கேதான்!!?

(தொடரும்....)



Wednesday 10 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(6)

கெட்டிகாரன்-
பொய் -
எட்டு நாளைக்கு-
இது நம் -
முன்னோர்கள்!

உண்மை-
கிளம்புவதற்குள்-
பொய் உலகை-
சுற்றி விடுகிறது-
இது இன்றைய-
நடப்புகள்!

கண்ணை  மூடி-
தூங்கினாலும்-
கனவுகள் -
காட்சி-
தருவதுபோல் !

எப்படித்தான்-
மறைத்தாலும்-
உண்மை வெளிவந்திடும்-
அதுபோல்!

கலவரத்திற்கு-
"சாதகமாக"-
நடக்க சொல்லி-
உயர் அதிகாரிகளுக்கு-
மேலிட உத்தரவு!

இதன் பிறகு-
அவர் சிறைபிடிப்பு!

இல்லை-
சொன்னவர் -
சாமானியர்!

கலவரக்காலத்தில்-
உளவுத்துறை துணை-
ஆணையர்!

அவர்-
தொலைகாட்சியில்-
சொன்னார்!

இன்று-
அவர் (மோடி)-
முதலமைச்சராக-
இருக்கலாம்!

2002 கலவர காலத்தில்-
கிரிமினல் அவரல்லாமல்-
வேறு யாரு!?-
இருக்கலாம்!


இப்படியாக-
சொன்னவர்-
சஞ்சீவ் பட்-
அவர்கள்!

அநியாயக்காரர்களுக்கு-
கிடைக்குமா-
தண்டனைகள்!?

(தொடரும்...)




Tuesday 9 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(5)

தலைப்பு செய்தியாக-
தலை தெறிக்க-
சொன்னது!

முக்கிய செய்தியாக-
"முக்கி கொண்டு"-
சொன்னது!

மோடியை-
கொல்ல தீவிரவாதிகள்-
வந்ததாக!

"அவர்கள்"-
தற்காப்பு தாக்குதலில்-(என்கவுண்டர்)
மாண்டதாக!

அதில்-
ஒரு பெண்ணும்-
அடக்கம்!

அத்தனைபேரும்-
செய்யபட்டார்கள்-
"அடக்கம்"!

இருந்தது-
சாமானிய மக்களிடமும்-
முனக்கங்களாக!

சமூக ஆர்வலர்களிடம்-
மேடை முழக்கங்களாக!

அது-
பின்வருபவனாக!

நாதியற்று-
"நரபலி" நடக்கையில்-
வராதவர்கள்!!

தாகத்தில் வந்த-
குழந்தைவாயில்-
பெட்ரோலை ஊற்றி- எரிக்கும்போது-
வராதவர்கள்!!

மோடிக்கு -
எதிரான குரல் எழும்பும்போது-
ஏன் வருகிறார்கள்!?

இதன்பிறகு-
கட்சியினரின்-
மோடியை-
"கதானாயகனாக்கினார்கள்"!

நாட்கள் -
ஆண்டுகளானது!

ஓர்-
உண்மை வெளியில்-
வந்தது!

"அத்தீவிரவாதிகள்"(!!!!)-
அப்பாவிகள்!

வேலைக்காக-
குஜராத் வந்தவர்கள்!

நீதிமன்றம்-
"போலிதாக்குதல்-"என
தீர்ப்பு வழங்கியது!

காவல்துறையினர்-
குற்றவாளிகளாக-
கைதுகள்-
நடக்கிறது!

இவ்வுண்மையை-
எத்தனை பேர்-
நம்மில் அறிந்தது!!?

(தொடரும்....)

//தற்காப்புதாக்குதல்  சம்பவம் நடந்தது- ஜூன் 15 2004.
போலிதாக்குதலில் இறந்தவர்கள்-
இஸ்ரத் ஜகான் (பெண் ) . ஜாவித் ஷேக்.அம்சத் அலி ரானா.சீசான் ஜோஹர்.

குற்றவாளிகாளாக சேர்க்கப்பட்ட காவல்துறையினர்கள்!
அப்போதைய உதவி கமிஷனர் ஜி.எல்.சிங்கால்,டி.ஜி.பி வன்சாரா ,தற்போதைய கூடுதல் டி.ஜி.பி .பி.பி. பாண்டே ஆகியோர்கள்.
 பிப் 21 சி பி ஐ யால் சிங்கால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்சாரா சொஹ்ராபுதீன் போலி தாக்குதலில் சிறையில்தான் உள்ளார்.//

Monday 8 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(4)

நடந்த -
கலவரம்!

அதற்கு-
சொல்லப்பட்ட-
காரணம்!

கோத்ரா-
ரயில் எரிப்பு-
சம்பவம்!

எரிந்தது!-
இது-
ஆய்வுகள்-
சொன்னது!

எரிக்கபட்டது-
இது-
அம்மாநில அரசு-
சொன்னது!

சதியா!?-
விதியா!?-
விசாரித்து-
குற்றம் செய்தவர்களை-
தண்டித்தால்-
நல்லது!

அதற்கு-
மாறாக-
மக்களை-
கொன்று மலைகளாக்கியது-
கேவலமானது!

அம்மாநில -
பத்திரிக்கைகள்-
விஷத்தை-
செய்தியாக்கியது!

அவ்விஷம்-
மக்களை-
பலியாக்கியது!

காலம்-
கடந்தது!

நாடாளு மன்ற-
தேர்தலும்-
வந்தது!

"ஜெயிப்போம்"-என
ஆசை மனப்பால்-
குடித்தது!

ஆனால்-
தேர்தல் முடிவு-
ஆசையில்-
 மண்ணை அள்ளி -
போட்டது!

தோற்றத்துக்கு-
காரணம்!

குஜராத்-
கலவரமே-
ஆகும்!

சொல்லியது-
அதே கட்சியினர்கள்-
ஆகும்!

அரசியல்-
கட்சிகளுக்கோ-
இக்கலாசார-
 காவலர்களுக்கோ-
பிரச்னை வந்தால்-
என்னவாகும்!?

பிரச்னை-
திருப்பபட-
பெரிய பிரச்னை-
வரும்!

அப்படி-
வந்தது!

அது-
என்னது....!!?

(தொடரும்....)

// குஜராத் கலவரத்தை படமாக்கினார்கள்.
அப்படம் அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.அப்படத்தின்
பெயர் parzania ஆகும்.
யு டியுபில் கூட காண முடிகிறது.//






     

Sunday 7 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(3)

அம்மக்கள்-
தேச துரோகம்-
செய்தார்களா!?

சட்டத்திற்கு-
சதி செய்தார்களா!?

போராட்டம்-
நடத்தி-
வன்முறை-
செய்தவர்களா!?

தனி நாடு-
கேட்டவர்களா!?

ஆயுதம் தரித்து-
சேதாரம்-
செய்தவர்களா!?

எல்லை-
 தாண்டிவந்து-
தங்கி-
கொள்ளையடித்தவர்களா!?

சிறப்பு சலுகை-
கேட்டவர்களா!?

இல்லை-
இல்லை!

சத்தியமாக-
இதில் ஒன்றும்-
இல்லை!

நம் இந்திய தேசத்தில்-
சிறுபான்மைகள்-(முஸ்லிம்கள்)
அவர்கள்!

எங்கே-
அவர்கள்!?

"டெல்லி சம்பவத்தில்-"
துள்ளி குதித்தவர்கள்!

இங்கே-
பல "பேருந்து அவமானம்"-
நடந்தபோது-
எங்கே போனீர்கள்!?

போராட்ட உணர்வுகள்-
இருக்கட்டும்-
உண்மையானதாக!

இல்லைஎன்றால்-
போலி வேசம்போட-
பயன்படுத்தாமல்-
இருப்பீர்களாக!

நடந்தது-
குஜராத்தில்!

படித்தது-
"குஜராத்"-எனும்
புத்தகத்தில்!

அதனை-
தொடர்ந்த-
சில உண்மைகளை-
உங்களுக்கு சொல்கிறேன்!

இல்லை-
நினைவூட்டுகிறேன்!

(தொடரும்....!)

//புத்தகத்தின் பெயர்-குஜராத்!

கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//



Saturday 6 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (2)

தொடர்கிறேன்-
அனுபவத்தை!

இல்லை-
கண்ணில் விழுந்த-
எரி அமிலத்தை!

"ஹோ..."-என
ஒரு கூட்டம்-
ரத்த வெறியுடன்!

"ஆ..."-என
ஓடியது-
ஒரு கூட்டம்-
உயிர் பயத்துடன்!

மாறி மாறி-
மானபங்கம்!

மயக்கநிலையிலேயே-
மரணம்!

தாயின்-
கண் முன்னால்-
மகளும்!

கணவனுக்கு-
முன்னால்-
மனைவியும்!

சிறுமி முதல்-
முதுமையானவர்களும்!

இல்லை-
அங்கே-
வித்தியாசம்!

விறகு கட்டைகளுடன்-
எரிக்கவில்லை-
உடல்கள்!

எரிந்து கட்டைகளானது-
பல உயிர்கள்!

"நடக்கும்வரை"-
கோடீஸ்வரர்கள்!

"நடந்த "-
பிறகு-
ரொட்டிக்கு-
கையேந்திய நிலைகள்!

அறுத்து எறியப்பட்ட-
உறுப்புகள்!

அல்லோகலப்பட்ட-
நியாயங்கள்!

யார் சொன்னது-
"அன்றைய காலத்தை"-
அறிவீனர்கள் காலம்-
என!?

இன்றைக்கு மட்டும்-
வாழ்வதும்-
நடப்பதும்-
என்ன!?

அரசு இயந்திரங்கள்-
அம்மக்களை-
பாதுகாக்கவில்லை!

வேடிக்கை பார்த்தது-
என்பதை தவிர-
பொய்யில்லை!

யார்-
இந்த -
மக்கள்!?

ஏன் இந்த-
அநியாயங்கள்!?

(தொடரும்....)







Friday 5 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்! (1)

கிடுகுகளால் -
வெய்யப்பட்ட-
குடில்!

அதில்தான்-
அடங்கியது-
என் தேடல்!

அடுக்கி -
இருக்கும்-
புத்தகங்கள்!

அடிக்கடி-
அதில்-
அடங்கி உள்ளது-
என் தாகங்கள்!

இருக்கும்-
கெத்தாகவும்-
மொத்தையாகவும்!

சில சமயம்-
தலைக்கு-
மெத்தையாகவும்!

அதிலொரு-
புத்தகம்!

என் கண்ணில் படுவதே-
அதன் வேலையாகும்!

கண்ணீருடன்-
ஒரு பெண்ணின்-
புகைப்படம்!

அதுவே-
அப்புத்தகத்தின்-
முகப்புறம்!

படித்தால்-
"படுத்திடும்"-என
தெரியும்!

அதனாலேயே-
தவிர்த்து-
என் மனம்!

ஆனாலும்-
ஆசை யாரை-
விட்டது!?

கைகள்-
தொட்டு விட்டது!

இல்லை-
அது-
கற்பனை காவியமோ!
கவிதை இலக்கணமோ!

இப்போதும்-
மனம் கனக்குது-
எப்படியெல்லாமோ!!

படிக்க-
படிக்க-
பக்கங்கள்-
கரைந்தது!

நெஞ்சிலோ-
ரத்தம்-
கசிந்தது!

(தொடரும்.....)




Thursday 4 April 2013

சிமிட்டி".....!!

கண்களை-
சிமிட்டி விட்டு-
நீயோ!
சென்றாய்!

என்னை-
ஏனடி!?-
கண்ணை கட்டி-
காட்டில் விட்டாய்...!!!

Wednesday 3 April 2013

உதவி பேராசிரியர் செல்வகுமார் அவர்கள்!

பூக்கள் என்றால்-
மணம் தர-
வேண்டாமா!?

காதல் என்றால்-
கனிவு-
வேண்டாமா!?

உளி என்றால்-
செதுக்கிட -
வேண்டாமா!?

தலைமை என்றால்-
அர்பணிப்பு-
வேண்டாமா!?

ஆட்சியாளர் என்றால்-
ஆளுமை-
வேண்டாமா!?

பட்டங்கள் பெற்றுவிட்டால்-
பண்புகள்-
வேண்டாமா!?

மதிப்பெண்ணை வைத்து-
பெண்களை நாசம்-
செய்த நாய்களையும்-
படித்ததுண்டு!

மாணவனையே-
"கூட்டி போன"-
"பாதகத்தியையும்"-
படித்ததுண்டு!

நல்லொழுக்கம்-
தர வேண்டியவர்களே-
நாசம் செய்ததை-
அறிந்ததுண்டு!

அமாவாசைக்கு பின்-
அழகும் வெளிச்சமும்-
தரும் இளம்பிறையைபோல!

ஒரு செய்தி இருந்தது-
காயத்தில் மருந்தை-
தடவியது போல!

செருப்புகளுக்கு-
வர்ணம் பூசுகிறார்!( ஷூ பாலிஷ்)

அநாதை குழந்தை-
படிப்புகளுக்காக-
பகுதி நேரமாக-
பார்கிறார்!

செல்வகுமார் எனும்-
உதவி பேராசிரியர்!

சுயநலத்தால-
சொத்து சேர்க்கும்-
உலகத்துல!

பிறர் நலத்தில்-
அக்கறை கொள்ளும்-
சிலரால !

மனிதாபிமானம்-
சாகாமல்-
இருக்குதுபோல!

//இத்தகவலை பகிர்ந்த சுரேஷ் சகோதருக்கு மிக்க நன்றி!
முழுவதும் படிக்க இங்கு செல்லவும்.
.http://thalirssb.blogspot.sg/2013/04/blog-post.html?m=1///







Tuesday 2 April 2013

முதல் தேதி...!

தொட்டு விடும்-
தூரம்!

தொட்டுவிட்டதும்-
மனம்-
இலகுவாகும்!

மீண்டும்-
கொஞ்ச தூரம்-
போய்-
"அது"-
பல்லிளிக்கும்!

மீண்டும்-
மீண்டும்-
தொட நினைத்து-
ஓட்டம்!

இதுதான்-
மாத சம்பளகாரர்களின்-
தொடர்போராட்டம்!

Monday 1 April 2013

தவறொன்றும் இல்லை....

பிறர்-
தலை நிமிர்ந்து-
பார்க்கும்படி-
நம் வாழ்வின்-
உயரத்திற்கு-
செல்லலாம்!

ஆனாலும்-
தலை கவிழ்ந்து-(பணிவு)
வாழ மறவாதிருப்போம்!

எந்நிலையும்-
நிலையில்லை!

தன்னிலை-
மாறாதிருப்போம்-
அது-
தவறில்லை!