Monday 30 September 2013

பெண்ணே...மறவாதே...!!

பெண்ணே-
உன்னை-
மலர் என்பார்கள்!

மருவிட-
முனைவார்கள்!

உன்னுள்-
முள்ளை-
வைத்திருக்கவும்-
மறவாதே!

உன்னை-
மென்மை-
என்பார்கள்!

தன்மையானவள்-
என்பார்கள்!

வன்மையாக-
இருக்கவும்-
மறவாதே!

படிதாண்டாதே-
என்பார்கள்!

அடுப்படியில்-
அடக்கிட-
முனைவார்கள்!

அறிவாலும்-
பெறும் பட்டத்தாலும் -
பாரினை -
ஆளபிறந்தவள்-
நீ-என்பதை
மறவாதே!

பெண் சுதந்திரம்-
சுதந்திரம்-என
பிதற்றுவார்கள்!

ஆடை குறைப்பே-
சுதந்திரம்-
என்பார்கள்!

ஆடை குறைப்பு-
அவமானம்-என்பதை
மறவாதே!

"கட்டி கொடுக்கவேண்டியதற்கு-"
படிப்பெதெற்கு-
என்பார்கள்!

சமூக கட்டமைப்பே-
பெண்கல்வியால்தான்-
என்பதை-
மறவாதே!

பெண் முன்னேற்றம்-
கூடாது-
இது-
அறிவீனர்கள்!

பெண்முன்னேற்றமும்-
அவசியம்-
அதுதான்-
அறிஞர்கள்!

Sunday 29 September 2013

ஏங்க மோடி ஜி ...!!

உத்ரகாண்ட் -
உருண்டது!

நல்லுள்ளமெல்லாம்-
உறைந்தது!

நற்செய்தி-
ஒன்று-
கிடைத்தது!

நம்பும்படியாகவா-
இருந்தது!?

"சூப்பர் ஹீரோ"-
வந்தாரு!

பதினைந்தாயிரம் -
மக்களை-
காப்பாற்றினாரு!

உண்மை-
வெளியில்-
வந்தது!

பொய்யென-
உறுதியானது!

அடுத்தாதாக!-
அஜீத் புகழ்ந்தாருனு!

செய்தி வந்தது-
சமூகதளத்தில் (டுவிட்டரில்)-
கணக்கே (அக்கவுண்ட்)-
இல்லையென்றார்னு!

அடுத்து-
அமிர்தாப்-
புகழ்ந்தார்-
என!

அவரும்-
மறுத்தார்-
அது-
போலியென!

இஸ்லாமிய மக்கள்-
கூட்டம் கூடுது-
"படங்கள் -"
காட்டியது!

பிறகு-
"பத்தாயிரம் பர்தா"-
வாங்கியது-
வெளிவந்தது!

ரஜினி காந்த்-
பூங்கொத்து கொடுத்ததாக-
சுவரொட்டி ஒட்டுனாக!

எங்களுக்கு-
சம்மந்தம் இல்லை-என
லதா ரஜினி-
மறுத்ததாக!

ஏங்க-
மோடி ஜி!

காமெடி பண்ணுறாங்களா -
உங்கள வச்சி...!!!!?


Saturday 28 September 2013

பார்வையற்ற பட்டதாரிகள்..!

இவர்களென்ன!?-
சட்டமன்றத்தில்-
நீல படம் பார்த்த -
கலாசார காவலர்களா!?

தேசத்தை துண்டாடிவிட்டு-
தேசபக்தர்களென-
சொல்லி கொள்பவர்கள!?

அங்கங்களை காட்டி-
ஆடிடும்-
ஆபாச நடனமணிகளா!?

வட்டியால்-
வயிறு வளர்க்கும்-
வஞ்சகர்களா!?

மக்களை-
"தெளியாமல்"வைத்திருக்கும்-
மது விற்பனையாளர்களா!?

காதலென பேரை சொல்லி-
காமகளியாட்டம்-
ஆடுபவர்களா!?

பெற்றெடுத்த-
பெற்றோர்களை-
முதியோர் இல்லத்தில்-
தள்ளியவர்களா!?

நல்லாட்சி மலரும் -என
சொல்லி சொல்லியே-
"மாற்றாத-"
"நல்லவர்களா!?"

இப்படிப்பட்டவர்கள்-
கூட!

சமூகத்தில்-
அந்தஸ்துகளோட!

ஆனால்-
பார்வையற்ற பட்டதாரிகள்!?

அவர்கள்-
கேட்கவில்லை-
யாசகங்கள்!

வழிகளை-
கேட்கிறார்கள்!

தலை நிமிர்ந்து-
பவனி வர-
விரும்புகிறார்கள்!

அவர்களின்-
ஆசையில் -
என்ன தவறு-
இருக்கிறது!?

அம்மக்களுக்கு-
நல் வழிகாட்டணும்-
திறந்த மனதோடு!

உலகில்-
எத்தனையோ பேர்கள்-
கண்களிருந்தும்-
பார்க்கமறுக்கிறார்கள் !

இவர்களோ-
நம்பிக்கை ஒளியால்-
நடக்கிறார்கள்!


Friday 27 September 2013

செவ்விதழாள்.....!!

"செவ்விதழாள்"-என
வர்ணிக்கபட்டார்கள்-
கவிதைகளால்!

இனி அது-
"தீஞ்ச இதழுடையாள்"-என
மாற்றம்பெறும்-
"புகைப்பதால்"!

Thursday 26 September 2013

ஒரு பார்வையிலே....

உன் -
ஒத்த விழி-
பார்வை!

எனக்கானது-
ஒரு வழி பாதை!

பார்வையின்-
தாக்கத்தை-
தடுக்கவும்-
முடியவில்லை!

போன வழியிலிருந்து-
திரும்பவும்-
முடியவில்லை!

Wednesday 25 September 2013

விதை....!!

புதையுண்டது-
கற்பாறையிலா!?

களிமண்ணிலா!?

விதைகள்-
மலைப்பதில்லை!

மயங்குவதில்லை!

"உணர்வற்றவைகள்"-
மக்கி மண்ணாகிறது!

"வீரியம்" கொண்டவைகள்-
முக்கி வெளிவந்து-
மரமாகிறது!

அதுபோலவே-
மனிதன்!

சோதனையின்போது-
சோம்பிடுபவன்-
சமாதியாகிறான்!

சிலுத்து கொண்டு-
பயணிப்பவன்-
சரித்திரமாகிறான்!

Tuesday 24 September 2013

குட்டை பாவாடை..!!

மானம்-
காக்கவா!?

சந்தி-
சிரிக்கவா!?

தீர்மானிப்பது -
காற்று!

Monday 23 September 2013

இரை...!!

நெருப்பிற்கு-
விறகு!

வெற்றிக்கு-
எதிர்ப்பு!

மறத்து போச்சி...!!

அநீதிகளும்-
அட்டூழியங்களும்-
தினந்தோறுமே-
நடக்குது!

பாதிக்கப்பட்டவரை-
பொறுத்தே-
"மனசாட்சிகளும்"-
கொதிக்குது!

ஆதலால்தான்-
"டெல்லி சம்பவத்திற்கு-"
தூக்கு!

தெரு தெருவாக-
நடக்கும்-
"கொடூரங்களுக்கு"-
பொடுபோக்கு!

நல்லா இருக்கு-
இவங்க-
நியாயங்கள்!

மறத்து போனதோ-
நம் -
உள்ளங்கள்...!?



பெயர் மாற்றம் ..!

இல்லை அது-
உலக அழகி-
போட்டி!

உடை அவிழ்ப்பு-
போட்டி!

Sunday 22 September 2013

ஹஸ்ரத் மகலும்-பீபியம்மாளும்!

சுதந்திரம்-
எங்கள்-
பிறப்புரிமை!

அதை-
தடுக்க-
மற்றவர்களுக்கென்ன-
உரிமை!?

மற்ற நாடுகள்-
சுதந்திர தினம்-
கொண்டாட-
ஊக்கமளிப்பு!

நம் தேசத்திலோ-
தடை விதிப்பு!

சுதந்திரம்-
அடையத்தானே-
போராட்டம்!

அதனை-
கொண்டாடவுமா-
போராட்டம்!?

சுதந்திரத்தில்-
முஸ்லிம் பெண்களின்-
பங்கில்லையா!?

அதனை-
நீங்கள்-
அறியாத-
அறிவிலியா!?

அயோத்தியை-
ஆங்கிலேயன்-
கைப்பற்றினான்!

பிறகு-
கைசேதபட்டான்!

காரணம்-
எதிர்த்து-
போராடியது-
ஒரு பெண்மணி!

ஆம்-
ஹஸ்ரத் மகல்-எனும்
கண்மணி!

ஒன்பது மத-
போராட்டத்திற்கு பின்-
தானும்-
தன் மகனும்-
கொல்லபட்டார்கள்!

சுதந்திரத்திற்காக-
புதைந்தார்கள்!

இதுதான்-
எங்கள்-
வரலாறு!

சுதந்திரதினம்-
கொண்டாட-
மறுக்க-
நீங்க யாரு!?

என் தோளில்-
இரு புலிகள்-என
காந்தி சொன்னார்கள்!

அப்புலிகள்தான்-
அலி சகோதரர்கள்!

கிலாபத் இயக்கம்-
வைத்து-
சுதந்திரத்திற்காக-
களமாடியவர்கள்!

மகன்களை-
மிஞ்சிய தியாகம்-
கொண்டவர்-
தாயார் பீபியம்மாள்-
அவர்கள்!

ஆங்கிலேயனிடம் கைதான -
என் மகன்கள்-
மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!

அப்படி -
கேட்டால்-
என் கையாலேயே-
கழுத்து நெரித்து-
கொல்லபடுவார்கள்!

இதுதான்-
அந்த தாயின்-
வீராவேசம்!

அதுதானே-
வீர வம்சம்!

ஓ!
நாட்டுக்காக-
உயிர்நீத்த-
தியாகிகளே!

ஒரு நாள்-
நனவாகும்-
உங்கள் கனவுகளே!

பூம் பூம் மாடு....!!

"சொல்வதற்கெல்லாம்-"
"செய்வதற்கெல்லாம்"-
தலையாட்டிட-
நண்பன்-
 தேவையில்லை!

பூம் பூம் மாடு-
வளர்த்தால்-
போதும்!

Saturday 21 September 2013

சன்னல் வச்ச ஜாக்கெட்....!!

சன்னல் வச்ச-
சட்டை(ஜாக்கெட்) என்று-
சொன்னாங்க!

பெரிய-
கதவுல-
வச்சிகிறாங்க....!!

Friday 20 September 2013

பெண்மையின் மேன்மை...!!

உலகின்-
முதல் -
ஆணையும்-
பெண்ணையும்-
இறைவன்-
படைத்தான்!

அதன் -
பின்-
மனித உயிர்களுக்கு-
முதல் மடி-
பெண்ணாக -
அமைத்தான்!

எழுதுவதும்-
எறிவதும்-
பேனா வைத்திருப்பவன்-
கைகளில்!

பறக்க விடுவதும்-
பிச்சி எறிவதும்-
பட்டாம் பூச்சியை-
கையில் வைத்திருப்பவன்-
முடிவில்!

சமூக ஒற்றுமைக்கான-
சந்ததிகள்-
வளர்வது-
பெண்களின் மடிகளில்!

அறிஞன் ஆனாலும்-
அவன் -
முதல் வார்த்தை-
தாயின் மொழியில்!

சென்றாள்-
பெண்ணொருத்தி-
சித்த மருத்துவரிடம்!

காரணம்-
சொன்னாள்-
அன்பில்லையாம்-
அன்பிற்குரியவர்களிடம்!

மருத்துவர்-
மருந்து செய்திட-
புலியின் வால் முடி-
வேண்டும் -
என்றார்!

கட்டாயம்-
என்றார்!

புலியை -
தேடினாள்!

தேடலுன் பின்-
கண்டாள்!

பயம்!
தயக்கம்!

ஆனாலும்-
செயலில்-
தீர்க்கம்!

புலி -
பார்த்தது!

முறைத்தது!

இருந்தாள்-
புதுமுகமாக-
புலிக்கு!

நாள் -
செல்ல செல்ல-
ஆனாள்!-
பழக்கபட்டவளாக!

புலி-
அமைதியானது!

அவள்-
 வேலை -
இலகுவானது!

முடியுடன்-
சென்றாள்-
மருத்துவரிடம்!

மருத்துவர்-
முடியை-
எறிந்தார்-
எரியும்-
நெருப்பிடம்!

சொன்னார்-
அவளிடம்!

புலியே-
அடங்கியது-
உன் அன்பிடம்!

உன்-
உறவினர்களும்-
அடங்குவார்கள்-
உனது-
அன்பிடம்!

இதை-
கதைதானே-என
ஒதுக்க முடியாது!

அன்பினாலும்-
முடியும்-என்பதை
மறுக்கமுடியாது!

உடன்பிறப்புகளிடம்-
சொல்வோம்-
நல்லவற்றை!

உரிமையானவர்களிடம்-
சொல்வோம்-
நல்லவற்றை!

ஹுதைபியா-
உடன்படிக்கை!

நபிகள் நாயகத்தின்-
அரச தந்திர-
நடவடிக்கை!

இவ்வுடன்படிக்கையால்-
சஹாபிக்களுக்கு-
வருத்தம்!

இதனால்-
பெருமானாருக்கும்-
மன வருத்தம்!

நபிகளிடம்-(முஹம்மது நபி (ஸல்)
முக்மீன்களின் தாய்-(பெருமானாரின் மனைவிகளில் ஒருவர்)
கேட்டறிந்தார்!

ஆலோசனை-
நாயகத்திடம்-
சொல்லி முடித்தார்!

நாயகம்-
எழுந்தார்கள்!

தலை முடியை-
இறக்கினார்கள்!

குர்பானி-
கொடுத்தார்கள்!

இதனை  கண்ட -
சகாபிகளும்-(நபி தோழர்கள்)
கடைபிடித்தார்கள்!

சங்கடமான-
சூழ்நிலை!

சந்தோசமாக்கியது-
அத்தாயின்-
ஆலோசனை!

பெண்மை -
என்றும்-
மேன்மை!

அதனை புரிந்தால்-
என்றும்-
நன்மை!

புரிந்தவன்-
மனிதன்!

மறுப்பவன்-
மனிதன் எனும்-
மடையன்!

Thursday 19 September 2013

சுடு சொல்!

நானொன்றும்-
பூ இதழ்களின்-
மென்மையில்-
லயித்து -
வளர்ந்தவனில்லை!

முற்களை-
முத்தமிட்டு-
வளர்ந்தவன்!

சுடு சொற்கள்-
என்னை-
சுடுவதில்லை!

பாவம்-
அச்சொற்களுக்கே -
சூடுபட்டிருக்கும்!

Wednesday 18 September 2013

அன்றும் -இன்றும்-காதல்!

பேசி -
தீராமல்-
மிச்சம் இருந்தது-
அன்றைய காதல்!

பேச -
இனி -
ஒன்றும் இல்லை-என
பிரிகிறது-
இன்றைய காதல்!

Tuesday 17 September 2013

வீணர்கள்....!!

வீணர்கள்-
பேசியே -
காலத்தை -
கழிப்பவர்கள்!

சாதிப்பவர்கள்-
முயற்சித்துக்கொண்டே-
இருப்பவர்கள்!

தாய்மொழி...!!

எத்தனையோ மொழியில்-
புலமை பெற்றாலும்-
அலங்காரமே!

தாய்மொழி-
அறியவில்லையென்றால்-
அவமானமே!

வறுமை....!!

வறுமைக்கு-
பிறந்தோமென-
வாடாதே!

வறுமையின்-
வழி வந்தவர்களே-
சாதித்தவர்கள் என்பதனை-
மறவாதே!

விதை -
என்னவோ-
"இத்துனூண்டுதான்"!

விருட்சம்-
அடங்கி இருப்பது-
அதனுள்தான்!

தனிமை....!!

தனிமை-
இனிமை-
தருவதில்லை!

ஆனால்-
கவிதை -
தருகிறது..!!

Monday 16 September 2013

அறியோம்....!!

விழுமா!?
காய்ந்திடுமா!?

விழும் இடம்-
நன்னீரா!?
கழிவின் நீரா!?

அறியாது!
தெரியாது!

கிளையில்-
தொங்கிடும்-
மழை துளிக்கு!

தொங்குவது-
அதனோட-
நிலை!

சேர்ப்பது-
"நாடியவனின்"-
முடிவில!

முயல்வது-
நம்-
நிலை!

வெற்றியையோ-
தோல்வியையோ-
தருவது-
இறைவனின்-
நாட்டத்திலே!

தாவணி...!!

பூ போட்ட-
தாவணி!

போட்டுக்கொண்ட-
பூவடி-
நீ!

Sunday 15 September 2013

பூவழகே....!!

உலகின் -
பூவெல்லாம்-
ஒன்றாக-
கோர்த்தாலும்!

அழகே-
உன் கூந்தலில்-
சேராவிட்டால்-
அப்பூக்களே-
கதறிக்கொண்டு-
அழும்!

Saturday 14 September 2013

சதுரங்க விளையாட்டு!

வாழ்க்கை-
ஒரு-
சதுரங்க விளையாட்டு!

"முடிவுகளை"-
தீர்மானிக்கிறது-
தாயக்கட்டை-
உருண்டு கொண்டு!

பாம்பு கொத்தி -
கீழிறக்குமா!?

ஏணி வந்து-
மேலேற்றுமா!?

சாதக-
பாதகங்களை-
நாமறியோம்!

ஆனாலும்-
இலக்கை (வெற்றி )-
நோக்கி-
பயணிப்போம்!

மழலை சிரிப்பு...!!

அந்தஸ்துகளைபார்த்து-
மழலைகள்-
புன்னைக்காது!

அன்புடையோரைகண்டால்-
முகம் சுளிக்க தெரியாது!

பிறந்தவர்களும்-பெற்றோர்களும்!


பிறந்தவர்களையெல்லாம்-
வளர்கிறார்கள்-
"பெற்றவர்கள்!"

பெற்றோர்களை-
பாதுகாப்பவர்கள்-
நம்மில்-
எத்தனை பேர்கள்!?

தாய் தந்தையை-
ஒதுக்கிவைப்பவன்!

ஆன்மாவை-
இழந்தவன்!

Friday 13 September 2013

ஏளன சிரிப்பு....!!

கையேந்தி நிற்கும்-
பிஞ்சுகள்!

புகைபடிந்த-
முகங்கள்!

எண்ணெய் காணாத-
தலைகள்!

காய்ந்த-
உதடுகள்!

பஞ்சமில்லாத-
கிழிஞ்சல் கொண்ட-
 ஆடைகள்!

இப்படியாக-
எத்தனையோ-
வாகன நெரிசல்களில்!

தேசத்தின்-
வருங்கால சந்ததிகள்!

பொருளாதார -
வளர்ச்சின்னு-
காதுலதாங்க-
விழுகுது!

பார்க்கும்-
காட்சியெல்லாம்-
ஏளனமாக-
சிரிக்குது...!!




Thursday 12 September 2013

பறை...!!

தட்டப்படும்-
பறை ஓசையில்-
மனம் துள்ளும்!

காலங்காலமாக-
ஒட்டிய வயிற்றின்-
பசியை-
யார் அறிய கூடும்!?

உலகெல்லாம்-
கலைஞன்-
போற்றபடுவான்!

நம் தேசத்தில்-
தொழிலை வைத்து-
சாதியை வைக்கிறான்!

கம்பத்தை கண்டால்....!!

கம்பத்தை கண்டால்-
காலை தூக்கும்-
நாய்கள்!

மறைவான இடத்தை கண்டால்-
"ஒதுங்குது-"
நாய் காதல்கள்!

Wednesday 11 September 2013

"எங்கே நிற்கிறோம்"..!!

குளத்து நீரில்-
கிடைப்பதால்-
அயிரை மீன்கள்-
ருசிக்கமறுக்கிறதா!?

கிணற்றில்-
நீர் இருப்பதினால்-
மேகத்தை-
அடையாதிருக்கிறதா!?

நீள் குழலில்-(நிப்பு)
மை இருப்பதினால்-
"ஆழ கருத்துக்களை-"
எழுதிட-
மறுக்கிறதா!?

விதைக்குள் இருப்பதினால்-
மரங்கள்-
விருட்சம் கொள்ளாதிருக்கிறதா!?

"எங்கே நிற்கிறோம்-"
என்பதல்ல-
முக்கியம்!

"எதை நோக்கி நிற்கிறோம்"-
என்பதே-
முக்கியம்!!

மனதின் எச்சரிக்கை!

தெரிகிறது-
பாராட்டப்படும்போது-
போகும் தரையில்-
எண்ணெய் கொட்டிகிடப்பதும்!

எதிர்ப்பு வலுக்கும்போது-
பயணத்தின் நடுவே-
முட்டு சுவர் -
எழுப்பபட்டிருப்பதும்!

மனமோ-
எச்சரிக்கிறது-
"தவிரடாமல்"-
பயணிக்கவும்!

"முடங்கிடாமல்"-
துணியவும்!

Tuesday 10 September 2013

வாழ்வது...!!?

வாழ்ந்து விட்டு-
போனவர்களை-
உலகம் நினைக்காது!

"வாழ்ந்துகாட்டி விட்டு "-
போனவர்களை-
இவ்வுலகம் -
மறக்காது!
------------------------------
// எனது முதல் கவிதை புத்தகம்!
//நேசமும்-அரியாசனமும்//!
தற்போது விற்பனையில்...!

கிடைக்கும் இடம்!
அல் இஹ்வான் மீடியா பேலஸ்.
no -4 அலங்கார வாசல்,
ஏர்வாடி தர்கா,
ராமநாதபுரம்(மாவட்டம்)
இந்தியா.
கை பேசி. +91 9944863014(இஸ்ஹாக்)

மேலும் புத்தகத்தை வாங்கி விற்க விரும்புவோர் ;
அழைக்கவும்;

முஹம்மது ஆரிபு -
கை பேசி- +91 7373430413
 சீனி பக்கீர்.+91 9659084870//

Monday 9 September 2013

"கரு" மாற்றம்!

ஆயிரம் வேர்களை -
கற்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இதுவே பழமொழி!

ஆயிரம்பேரை -
கொன்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இப்படி உருமாறியது-
அம்மொழி!

மன்னராட்சியானாலும்-
மக்களை-
வாழ வழி செய்தவர்கள்-
அன்றைய காலம் !

ஜனங்களை கொன்று-
குவித்துவிட்டு-
வல்லரசு நாடு -என
பிதற்றுது-
இன்றைய-
கேவல உலகம்!

Sunday 8 September 2013

சிப்பியும்-சிந்தனையும்!(900 வது கவிதை)

விழும்-
மழைத்துளியெல்லாம்-
சிப்பியை அடையாது!

சிப்பியும்-
நிராசையால்-
துவளாது!

சிப்பிகான-
துளியும்!

துளிக்கான-
சிப்பியும்!

காத்துகொண்டிருக்கிறது !

முத்துக்கான-
பிறப்பிற்கு-
சங்கமிக்க இருக்கிறது!

அதுபோலவே!
என் நிலையானதுவே!

மனதில்-
உதிக்கும்-
சிந்தனைகளை-
எழுதி செல்கிறேன்!

ஒரு -
நற்சிந்தனையாவது-
சொல்லிட-
நிற்காமல் பயணிக்கிறேன்!




"அழகிய" "கவிதை..!"

அழகே!
உன்னை-
கவிதையாக-
எழுதிட-
முயல்கிறேன்!

எழுதியதெல்லாம்-
அழகு கவிதையானதால்-
திகைக்கிறேன்!

நாற்றம்!

நம்-
உடல் நாற்றத்தை-
தடுக்க முடியாத-
நாம்!

பிறர்-
நாற்றத்தை(குறைகள்)-
பேசி அலைகிறோம்!

Saturday 7 September 2013

நண்பா...! தளராதே...!!

நண்பா!
தாங்கும் -
பலம் உள்ளதாலேயே-
கிளையில்-
கனிகள் -
தொங்குகிறது!

தாங்கிடும்-
உள்ளம் உள்ளதாலேயே-
நம்மை -
சோகங்களும்-
தொடுகிறது!

தளராதே!

வந்ததுபோலவே-
திரும்பி சென்றிடும் வேதனை-
கலங்காதே!

வலியும்-வழியும்!

வலி தீர-
வழி உண்டு!

வழிகளை-
தேடுபவனுக்கே-
வலிகளும்-
தீர்வதுண்டு!

Friday 6 September 2013

கரப்பான் பூச்சி!

கரப்பான் பூச்சியே...!!
உனக்கு-
அஞ்சி நடுங்குபவர்களும்-
உண்டு!

ஆனால்-
மனசாட்சிக்கு பயந்து-
நடப்பவர்கள்-
எத்தனை பேர்கள்-
உண்டு....!!?

Thursday 5 September 2013

நாமறிவோம்....!!

திண்டுக்கல்!

மிரட்டும்-
இருள்கள்!

நாய் ஊளையிடுது!

வீட்டில்-
"பொருளொன்று" -
வீசபடுது!

அது -
பெட்ரோல் குண்டு!

அந்நகரம்-
பரபரப்பானது-
இச்செய்தியை-
 கேட்டுக்கொண்டு!


நீறு பூத்த-
நெருப்பாக-
மத துவேசம்!

வரவிருக்கும்-
"விநாயகர்"-
விசேஷம்!

இந்நேரத்தில்-
இப்படியொரு-
சம்பவம்!

தாக்கப்பட்டது கூட-
பி ஜே பி காரர்-
வீடானதும்!

எங்கே-
விபரீதம் நடந்திடுமோ!?

தடுக்க -
முடியாமல் போய்விடுமோ!?

சாமானியர்களுக்கு-
கவலை!

கலவரகாரர்களுக்கோ-
சந்தோஷ அலை!

காவல்துறை-
விசாரணை!

கண்டுபிடித்தது-
அக்கயவனை!

குண்டு வீசியவன்-
வீட்டுக்கு சொந்தகாரனே!

பிஜேபியை சேர்ந்த -
பிரவீன் குமார்-
என்பவனே!

காரணம்-
பிரபலம் ஆகணுமாம்!

அதற்கு-
இப்படி செய்தானாம்!

சங்க்பரிவாரர்களே!
உங்கள் "புத்தியை"-
மக்கள் அறிந்தவர்களே!

காந்தியை-
கொண்டீர்கள்!

கையில்-
இஸ்மாயில் என-
எழுதிகொண்டீர்கள்!

தென்காசியில்-
உங்கள் அலுவலகத்திலேயே-
குண்டு வைத்தீர்கள்!

பிறகு -
மாட்டிகொண்டீர்கள்!

இப்படியாக-
எத்தனை எத்தனை-
உங்களது-
பிரித்தாளும் சூழ்ச்சி!

அண்ணன் தம்பிகளாக-
இருக்கும் -
இந்து மற்றும் முஸ்லிம்களிடம்-
பலிக்காது-
உங்கள் சூழ்ச்சி!

இறை வணக்கத்தில்தான்-
வேறுபாடு!

மற்றபடி-
நாங்கள் (இந்து-முஸ்லிம்)-
வாழ்கிறோம்-
நல்லிணக்கத்தோடு!

// திண்டுக்கல் தகவல் -நன்றி;.ஜூனியர் விகடன் 8.9.13//







செப் 4ஹிஜாப் தினம்!

நீதி மன்றத்தில்-
அன்று!

நடந்தது-
வழக்கொன்று!

விவாதங்கள்-
நடைபெற்றது!

விசாரணைகள்-
நடந்தது!

வழக்கின் விபரம்-
ஆடையை பற்றியது!

ஒழுங்கான ஆடை-
ஒழுக்கங்கெட்டவனுக்கு-
கோபம் மூட்டியது!

தகாத வார்த்தைகளை-
கொட்டினான்!

கண்டபடி -
திட்டினான்!

அப்பெண் -
பயம் கொள்ளவில்லை !

நீதி மன்றத்தை-
நாட வேண்டிய நிலை!

தீர்ப்பு-
திட்டியதற்கு-
அபராதம்!

அப்போதுதான்-
நடந்தேறியது-
அக்கொடூரம்!

அரக்கன் -
கத்தியால்-
அப்பெண்ணை-
 குத்தினான்!

பதினெட்டு குத்துக்களால்-
சிதைத்தான்!

அத்தாயும்-
மடிந்தாள்!

அவளின்-
மூன்று மாத சிசுவும்-
அழிந்தது-
குத்தியதால்!

இறந்தாள்-
வீர மங்கை!

கொளுத்தினாள்-
நெருப்பின் வேட்கை!

மர்வா ஷெர்பினி-
அப்பெண்ணின் பெயர்!

அலெக்ஸ்-
அக்கயவனின்-
பெயர்!

ஜெர்மனி நாட்டில்-
இது நடந்தது!

2009 ஆண்டு -
செப் 4ல் -
நடந்தது!

செப் 4இன்று-
ஹிஜாப் தினமாக-
பிரகடமாகியுள்ளது!

மானத்தோடு-
வாழ்வது-
அவ்வளவு பாவமா!?

உடை அவிழ்த்து-
அலைவதுதான்-
பெண் சுதந்திரமா!?

ஆடையின்றி-
வாழ்பவர்களை-
மறைக்க -
நான் சொல்லவரவில்லை!

ஆடையோடு -
வாழ்பவர்களை-
தடுக்க -
எவனுக்கு-
அதிகாரமில்லை!








Wednesday 4 September 2013

வண்ணத்து பூச்சிகள் எத்தனையோ...!?

வண்ணங்கள் -
கலையபடுது!

மெல்லிய உடலில்-
அமிலங்கள் ஊற்றபடுது!

சிறகுகள்-
பிச்சி எறியபடுது!

தெருவில் யாரும் -
தட்டி கேட்க முடியாது!

எதிர்த்து கேட்டால்-
அவ்வண்ணத்து பூச்சியே-
அவமானத்திற்கு உள்ளாக்கப்படும்!

அமிலத்தினால் "பட்ட-"
 காயத்தில்-
நெருப்பு குச்சியால்-
சுடப்படும்!


இது போன்ற-
வண்ணத்து பூச்சிகள்-
எத்தனையோ!?

வரதட்சணை-
கேவலத்தால்-
கொடூரர்களை-
கரம்பிடித்த-
சகோதரிகள்-
எத்தனையோ...!?

எனக்குதான் தெரியவில்லை...!?

குடி குடியை கெடுக்கும்-என
விளம்பரங்கள்!

ஆனால்-
மது-
வீதியெங்கும்-
விற்பனைகள்!

குடும்பதொடர்- என
சொல்வார்கள்!

குடும்பத்தை-
சீரழிக்கும்-
தொடர்கள்!

சொல்வதுதான்-
நல்லது போல!

எனக்குதான்-
தெரியவில்லை-
இதை விட-
 நாசம் இருப்பதை போல!

Tuesday 3 September 2013

கருகிடும் மொட்டுக்கள்!

மலர இருந்த-
மொட்டொன்று!

எச்சில் படுத்தியது-
நாயொன்று!

மலரின் நிலை-
அறிவாரில்லை!

நாயிக்கோ-
அது-
சாதக நிலை!

பல ரூபங்களில்-
வெறி நாய்கள்!

தடுக்கவேண்டியவர்களோ-
தருவது-
பத்தோடு-
பதினோராவது-
செய்திகள்!

Monday 2 September 2013

நாடகம்..!

விலைவாசி-
கழுத்தில் -
சுருக்கானது!

ரூபாய் சரிவு-
வேஷ்டியை பிடித்து-
இழுக்குது!

தேச மக்களின்-
உயிரும்-
மானமும்-
ஆபத்தில் உள்ளது!

பிரதான கட்சிகளோ-
நான் நீ என-
நாடகமாடுது!

பா ஜ க- கா க! (காங்கிரஸ் கட்சி)

எண்ணெய்-
நாடுகளில்-
குண்டு மழை!

ஏழைகள் கொண்ட-
நம் தேசத்தில்-
கட்டுப்பாடே இல்லாத-
விலைஏற்றும் நிலை!

விலை நிர்மாணத்தை-
நிறுவனத்திற்கு-
கொடுத்தது-
அன்றைய பா ஜ க!

அதே பாணியில் -
பயணிக்குது-
கா க!

ஆனாலும்-
தினந்தோறும்-
அறிக்கைகள்!

மாறவில்லை-
மக்களின் நிலைகள்!

Sunday 1 September 2013

இந்திய அரசியல்!

நரியால் -
ஆடுகளுக்கு-
இந்த கதி!

ஓநாய்கள்-
ஊளையிடுவதை பார்த்து-
மனம் சொல்கிறது-
எல்லாம் தலைவிதி!

காங்கிரசால்தான்-
தேசத்திற்கு-
நாசமாம்!

பாரதீய ஜனதா-
என்ன!?-
யோக்கியமா!?

தேசம் அடையவேண்டியது-
நல்லாட்சி!

அதற்கு -
ஆளவேண்டும்-
மாற்று கட்சி!