Thursday 31 October 2013

வாழ்வில்.....!!

வாழ்வில்-
பழிப்பவர்களுக்கு-
பதில் சொல்லி-
நேரம் கழிப்பதை விட!

உதவிய உள்ளங்களுக்கு-
உபகாரம் செய்ய-
நேரத்தை செலவிடலாம் !

Wednesday 30 October 2013

முழு ஆடை....!!

முழு ஆடை-
உடலைத்தான்-
மறைக்கும்!

அறிவின்-
வளர்ச்சியை-
தடுக்காது!

அரை குறை ஆடை-
உடலைத்தான்-
காட்டும்!

அறிவை-
காட்டாது!

குழந்தை பார்வை..!!

பார்வைகளும்-
பலவற்றை சொல்லும்!

சில -
கதைகளை-
தரும்!

பல-
கவிதையை-
தரும்!

குழந்தைகளின்-
கண்களை-
கவனித்தால்-
"வெள்ளை மனம்-"
ஒட்டி கொள்ளும் !

Monday 28 October 2013

மௌனம்..!!

மௌனம்-
அற்புதமானது!

அதை-
விளக்கிட-
பேச வேண்டியுள்ளது!

Sunday 27 October 2013

ரசிகன்...!

நீ!
"பார்த்தால்தான்"-
நடிகருக்கு-
சம்பளம்!

அந்நடிகர்-
உன்னை வாழ வைப்பதாக-
பதாகைகள் வைத்தால்-
கேவலம்!

Saturday 26 October 2013

கல்லு வச்ச ...!!

ஜொலிப்பில்-
குறைவில்லை-
உன்-
கல்லு வச்ச -
மூக்குத்திற்கு!

சல்லி சல்லியாக-
சிதறுவதை விட-
வேறு வழியில்லை-
என் மனதிற்கு!!

ஓடுதென்கிறோம்...!!

ஓடுதென்கிறோம்-
நகரும் முட்கள் கொண்ட-
கடிகாரத்தை!

உழைக்க-
நகராமல்-
மனிதன்-
குறை சொல்கிறான்-
நேரத்தை!

Friday 25 October 2013

பண்டிகை நாள்!

இலக்கை நோக்கி-
பயணிப்பவர்கள்-
லட்சியவாதிகள்!

சரக்கு விற்க-
"இலக்கு"(டார்கெட்)-
வைப்பது-
ஆளும் கட்சிகள்!

கடல் தண்ணியில-
பயணித்தாலும்-
"திரும்புவது-"
நிச்சயமில்லை!

உழைச்ச காசு-
வீடு வருமா!?-
"டாஸ்மாக்"கினால் -
உத்திரவாதமில்லை!

தமிழ் நாட்டிற்கு-
தண்ணியில-
கண்டம்போல!

குடிச்சி மடிகிறவனுங்களும்-
திருந்துவதாக-
இல்ல !

Thursday 24 October 2013

விளம்பரங்கள்.!

லட்சக்கணக்குல-
பணம் வாங்கி-
விளம்பரத்தில்-
நடிச்சிட்டு-
போய்டுறாங்க.!

"பார்க்கிறவங்க"-
"கடன்பட்டு" வாங்கி-
காலமெல்லாம்-
வட்டி கட்டுறாங்க..!!!

Wednesday 23 October 2013

தியாகி கோபி!

குருதி தானம்-
செய்திட-
சென்றவன்!

திரும்பி வருகையில்-
விபத்துக்கு உள்ளானான்!

குருதியில்-
நனைந்தவன்!

மூளைச்சாவு -
அடைந்தான்!

அதிர்ந்தார்கள்-
அவனது-
பெற்றோர்கள்!

ஆனாலும்-
அனுமதித்தார்கள்-
செய்திட-
உறுப்பு தானங்கள்!

எப்படியெல்லாம்-
அப்பெற்றோர்கள்-
வளர்த்திருப்பார்கள் !?

எத்தனை-
கனவுகள்-
கண்டிருப்பார்கள்!

நினைத்தாலே!
உள்ளம் கலங்குகிறது!

கண்களும்-
அதன் பங்கிற்கு-
கலங்குகிறது!

கோபி-
இருபது வயது-
கல்லூரி மாணவன்!

அவன் செயலால்-
அவன்தான் -
மனிதன்!

பிறருக்கு-
"இருக்கும்போது"-
உதவினான்!

இறந்தபிறகும்-
உதவி இருக்கிறான்!

பிறரை கொன்று-
தன்னை வளர்க்கும்-
மனித மிருகங்கள்-
எங்கே!?

மற்ற மனிதர்களுக்கும்-
உழைக்கும்-
உத்தமர்கள்-
எங்கே..!!?

(நன்றி-தகவல் பகிர்ந்த "உங்களுக்கு தெரியுமா.!?""முகநூல் பக்கத்திற்கு)

Tuesday 22 October 2013

""நிசப்தம்"...!!

தூரத்தில் கேட்கும்-
நாய் ஊளையிடும்-
சப்தம்!

குழாயில்-
வடியும்-
தண்ணீரின்-
சப்தம்!

அடைபட்ட-
கோழிகள்-
சிறகடித்துகொள்ளும்-
சப்தம்!

காற்றில் -
நகரும்-
சருகுகளின்-
சப்தம்!

சாலையில் செல்லும்-
வாகனங்களின்-
சப்தம்!

வாகனத்தில்-
எழும்-
பாடல்களின்-
 சப்தம்!

நிசப்தமான-
இரவிலும்-
கேட்கிறது-
சப்தங்கள்!

அமைதியை விரும்பும்-
உள்ளத்திலும்-
அலைக்கழிக்கும்-
நினைவுகள்!

சில-
நாக்கில்-
சர்க்கரைபோல்-
இனிக்கிறது!

பல-
தொண்டையில்-
மீன் முள்ளாய்-
குத்துகிறது!


Monday 21 October 2013

ஆடையின்றி...!!

படித்தேன்-
ஒரு பத்திரிக்கையில்-
செய்தி!

என்னுள்-
மூண்டது-
கோபத்தீ!

ஆடையின்றி-
நகைகள்மட்டும் அணிந்து-
நடித்தாளாம்-
ஒருத்தி!

காசின்றி -
நடிக்க சொன்னால்-
ஒத்துகொள்வாளா!?-
சிந்திப்போம் -
மனதில் நிறுத்தி!

செய்வதெல்லாம்-
"களையும் " வேலையாக.!

பேர் மட்டும்-
கலைத்துறையாக.!

பாலியல் வன்கொடுமைக்கு-
கடும்தண்டனை-
உலகெல்லாம்-
கேட்கிறது!

அதன் -
தூண்டுகோல்களான -
இவர்களை-
வையகம் -
புகழ்ந்து தள்ளுது!

Sunday 20 October 2013

"நல்லா காட்டு"...!!

சமைத்ததை-
மூடி வை!
"ஏதாவது "விழுந்திடும்!

காய்கறிகளை-
குளிர்சாதன பெட்டியில் வை!
இல்லையென்றால் -
கெட்டுவிடும்!

பணம் நகையெல்லாம்-
பூட்டி வை!
திருடு போய்விடும்!

ஆனால்-
உடலை மட்டும்-
"நல்லா காட்டு-"
இல்லையானால்-
உலகம் உன்னை-
தூற்றும்!

உணர்வற்றவைகளுக்காவது -
பாதுகாப்பு வளையம்-
தேவையாக இருக்கு!

உணர்வுள்ள மனிதர்களின்-
"எல்லை மீறலுக்கோ"-
நாகரீகம் என்ற-
பெயர் இருக்கு...!!

Saturday 19 October 2013

திரை சீலை!

வா! வா!-
என்றழைக்கிறதா.!?

போ!போ!-
என்றென்னை-
விரட்டுகிறதா.!?

அசையும்-
உன் வீட்டு-
ஜன்னலோர -
திரை சீலை!

திரைசீலையின்-
மொழியே-
நான்-
அறியவில்லையே!

"தேன்மொழியாளே"-
உன் மௌனமொழி -
அறிந்திட-
நான்-
அறிஞனும் இல்லை!

Friday 18 October 2013

சிந்தனை கீற்றுகள்!

ஆழ்கடல்-
மௌனத்தில்-
வீற்றிருக்கும்-
முத்துக்கள் போல்!

ஆழ்மன -
நிசப்தத்தில்-
துளிர்கிறது-
சிந்தனை கீற்றுகள்!

ஐந்து அடுக்கு...!!

"ரத்தம் பார்த்தவருக்கு"-
ஐந்து அடுக்கு-
பாதுகாப்பு!

சப்தமிட்டு-
எதிர்ப்பு தெரிவித்தால்-
புண்ணாக்கபடுது-
உடம்பு!

Thursday 17 October 2013

மெழுகுவர்த்தியும்- குடும்பத்தலைவனும்!

ஒன்றுதான்-
மெழுகுவர்த்தியும்-
குடும்பத்தலைவனும்!

கண்ணீர் மட்டுமே-
அவர்களுக்கு-
சொந்தம்!

வெளிச்சம்-
உறவுகள் அடைவதால்-
நெஞ்சோடு-
சாந்தம்!

பஞ்சம்!

அன்பானவர்களுடன்-
இருக்கையில்-
பொருளாரத்தில்-
பஞ்சம்!

பொருளாதாரம் -
தேடுகையில்-
உறவுகளின் பிரிவால்-
வலிபடுகிறது-
நெஞ்சம்!

Wednesday 16 October 2013

கற்பனை பறவை!

வான் வெளியெங்கும்-
பறந்து திரிந்து!

பூலோகமெங்கும் -
பயணித்து!

பூங்காவனங்களின்-
வாசனைகளை-
நுகர்ந்து!

பாலைவனங்களின்-
வெயிலில்-
காய்ந்து!

மலைகளின் -
பசுமைகளை-
மனகண்ணில்-
உள்ளிழுத்து!

அருவிகளின்-
நீரோட்டைதில்-
இரண்டற கலந்து!

அனுபவங்களை-
எழுதிட-
எனக்கும்-
ஆசையே!

ஆனால்-
ஒவ்வொரும் முறையும்-
அடைவது-
நிராசையே!

பறக்கும்-
எனது-
கற்பனை எனும்  பறவை!

உடைபட்டு-
இழக்கிறது-
தன் சிறகை!

போர்விமானங்களில்-
அடிபட்டு!

சாதிய- 
மதரீதியான-
அரிவாள்களில்-
வெட்டுப்பட்டு!

பாலியல் கதறல்களின்-
சப்தம் கேட்டு!

என்-
கற்பனை பறவை-
குற்றுயிராக-
கிடக்குறது-

அதனால்தான்-
நாட்டு நடப்புகளை-
பெரும்பாலும்-
சொல்கிறது!


Tuesday 15 October 2013

தொட்டால்...!!

தொட்டால் தீட்டு!
பார்த்தால் தீட்டு!-
சொல்கிறார்கள்!

கலவரத்தில்-
கற்பழிப்பை-
தவறாமல்-
நடத்துகிறார்கள்!

Monday 14 October 2013

தமிழருவி..!!

மலையில் பிறந்து-
நதியில் கலந்து-
கடலில் கலக்கிறது-
அருவி!

பிறப்பு-
நன்னீர்!

சேர்ப்பு-
உப்பு நீர்!

அகிம்சை வழிவந்து-
"ரத்த ஆற்றில்" கலக்கிறது-
"தமிழருவி"!

வளர்ந்தது-
காந்தி வழி!

சேர்ந்தது-
கோட்சே வழி!

Sunday 13 October 2013

அம்மியும்-உரலும்.!

காங்கிரசை -
எதிர்ப்பதும் !

பாரதீய ஜனதாவை-
ஆதரிப்பதும்!

அம்மி -
கொத்தும்-
சப்தம் -
தொந்தரவென்று!

உரலுக்கும்-
உலக்கைக்கும்-
இடையில் -
தலையை வைப்பது-
போன்று!


பொருள்கள் ...!!

பயன்பாட்டிற்கு-
பொருள்கள் -
வாங்கப்பட்டது-
அக்காலம்!

பகட்டிற்கு-
வாங்கிகொள்வது-
இக்காலம்!

இது-
விளம்பரங்கள் செய்யும்-
மாயம்!

மக்களின்-
பொருட்கள் மீதான-
மோகம்!

நம்பமுடியாத......!!

நல்லாட்சி புரிபவர்கள்!
காங்கிரஸ்காரர்கள்!

அதைவிட-
சிறப்பான ஆட்சி-
பாரதீய ஜனதா கட்சியினர்-
நடத்துவார்கள்!

இது-
எந்த முட்டாளும்-
நம்பமுடியாத-
பொய்கள்!

Saturday 12 October 2013

இரண்டுமே...!!!

வறுமையோ-
"செழுமையோ"-
இரண்டுமே-
சோதனையோ..!!?

பலர்-
இரண்டிலுமே-
லட்சியத்தை விட்டு -
போய் விடுகிறார்கள்!

Friday 11 October 2013

தியாகம்....!!

வாழ்கையென்பது-
மெழுகுவர்த்தியென்றால்!

தியாகம்-
இங்கே-
தீபமாகிறது!
---------------
தியாகமெனும்-
கிளையின்-
வழியில்தான்-
வெற்றியெனும்-
கனிகள்-
காய்க்கிறது!
---------------

Thursday 10 October 2013

திருவோடு.....!!

உச்சந்தலையில்-
தொடங்கி!

நெஞ்சுகுழிவரை-
இறங்கி!

இன்னும் கிடைக்கும் -
இடமெல்லாம்-
"செதுக்கி"!

உள்ளங்கால்வரை-
உள்ளடக்கி!

வெட்டி-
சிதைத்து!

சின்னாபின்னமாக்கி-
வைத்து!

அனாதை-
பிணமாக்குவார்கள்!

பிணமாவதால்-
பலர்-
அனாதையாவார்கள்!

தடுத்திருக்கலாம்!

வேடிக்கையே -
பார்க்கிறது-
"அதிகாரங்கலெல்லாம்"!

திருவோடை வைத்து-
பிச்சை எடுப்போரை-
பார்த்திருப்போம்!

திருவோடு கிடைத்ததால்-
பிச்சை எடுப்போரை-
கண்டிருப்போம்!?

இங்கே-
ஒட்டு பிச்சைக்கு-
பிணங்களை-
பயன்படுத்துகிறார்கள்!

பிச்சையெடுக்கவும்-
பிணங்கள் -
விழ செய்கிறார்கள்!



Wednesday 9 October 2013

நையாண்டி....!!

விளம்பரத்திலும்-
நடிக்கிறாங்க!

"நடிக்கிரவங்களும்"-
விளம்பரத்துக்கு-
போறாங்க!

"நடிச்சது-"
பிரபலமாக-
சர்ச்சையை-
உருவாக்குறாங்க!

இதை-
வாய்கிழிய-
ஊடகங்கள்-
கத்துறாங்க!

நம் தேசமக்கள்-
இடுப்பு வேட்டி-
நழுவுவதை-
மறந்துட்டான்!

தொப்புள்-
தெரிஞ்சதாம்-
கர்மம்-
பதறுகிறான்!

அவங்க-
நையாண்டி-(கேலி)
பண்ணுறாங்க!

நீங்க-
பொழப்ப-
பாருங்க!

Tuesday 8 October 2013

உ -பி .முசாபர் நகர்!

கூவுவதற்குள்-
குரல் வளையை-
அறுக்கப்பட்ட-
குயில்கள்!

பறக்க-
முனைகையில்-
சிறகுகள்-
பிச்சி எறியப்பட்ட-
பட்டாம்பூசிகள்!

மணம் வீசுவதற்குள்-
மண்ணில் புதையுண்ட-
மாங்கனிகள்!

தலை துண்டித்து-
துடிக்கும்-
தும்பிகள்!

கழுகுகூட்டதில்-
சிக்கி கொண்ட-
மைனாக்கள்!

இவர்களென்ன!?-
வேடந்தாங்கல் வந்த-
வெளிநாட்டு பறவைகளா!?

விபத்துக்குள்ளாகி-
கரைசேர்ந்த-
படகுகளா!?

இல்லை!
இல்லை!

இப்பாரதத்தை-
சேர்ந்தவர்கள்!

தேசகாற்றை-
சுவாசித்தவர்கள்!

மற்ற நாட்டிலிருந்து-
வந்தால்-
அகதிகள்-
என்கிறோம்!

இங்கோ-
சொந்த மக்களையே-
அகதியாக்குவதை-
வேடிக்கை-
பார்க்கிறோம்!

கடல் காற்றில்-
உப்பு கலந்திருக்கும்!

இன்று-
கண்ணீரின் உப்பு-
கரிக்கிறது-
சுவாசிக்கும்-
காற்றிலெல்லாம்!!



Monday 7 October 2013

கிடங்கு..!

மனிதன்தான்-
அள்ளனுமாம்-
"மல கிடங்கை!"

"அக்கிடங்கை"விட-
நாற்றம்-
சொல்பவன்-
"உள்ளகிடங்கு"!

Sunday 6 October 2013

கண்ணீர் பூக்கள்.!!!

தண்ணீர் தெளித்த-
பூக்களை-
கண்டிருப்பீர்கள்!

கண்ணீரில்-
மூழ்கும்-
பூக்கள்-
நாங்கள்!

மல்லிகை பூக்கள்-
மன்னவனை-
நினைவூட்டும்!

எங்கள்-
கண்ணீரால்-
தலையணை-
நனைந்திடும்!

தண்ணீரின்-
உயரத்திற்கு-
அல்லி உயரும்!

அல்லிக்கும்-
எங்கள் நிலையறிந்தால்-
தண்ணீரிலேயே-
அழுகிடும்!

பத்து மணி பூக்கள்-
பத்து மணிக்கு-
பூக்கும்!

எங்களது-
வாழ்வில்-
வசந்த பூக்கள்-
பூக்கும்!?

வண்ண வண்ண பூவெல்லாம்-
பூமாலையில்-
சேரலாம்!

பூசூடியவுடன்-
"போனவன்"-
திரும்புவானா!?-
கேள்வியே-
மிஞ்சும்!

பிள்ளை முகம்-
காணாத-
தந்தைகள்!

மகனை-
காணாமல்-
இறந்த-
தாய்மார்கள்!

இப்படியாக-
அனாதையாக்கப்பட்ட-
பூங்கவனங்கள்-
நாங்கள்!

இன்னும்-
பாடையில்-
ஏற்றபடாத-
உயிருள்ள பிணங்கள்-
நாங்கள்!

யார் இவர்கள்!?
மதகலவரங்களில்-
கணவனை -
இழந்தவர்கள்!

சாதீய சண்டையில்-
சம்பாதிப்பவர்களை-
இழந்தவர்கள்!

சிறைபட்ட-
அப்பாவிகளின்-
அபலைகள்!

துடைக்கப்படுமா!?-
இவர்களது-
கண்ணீர்கள்!?

Saturday 5 October 2013

நம்புங்க பாஸ்!

எப்போதும்-
"படம்-"
பார்ப்பார்கள்!

அன்றைக்கு-
சட்டமன்றத்தில்-
பார்த்து விட்டார்கள்!

ஊழல் -என
ஊளையிடுவார்கள் !

பிணபெட்டியிலேயே-
ஊழல் பண்ணினார்கள்!

தீவிரவாதம்-என
தீவிர பிரச்சாரம்!

தன் ஆட்சியிலேயே-
நாடாளுமன்ற தாக்குதல்-
அரங்கேற்றம்!

வெடிகுண்டு கலாசாரம்-என
கத்துவார்கள்!

அவர்கள்-
அலுவலகத்தில்-
அவர்களே -
வைப்பார்கள்!

கதற கதற-
கலவரத்தின்போது-
கற்பழிப்பார்கள்!

ஆனால்-
பெண்கள் பாதுகாப்பு-
பேசுவார்கள்!

இரவு நேர விடுதியில்-
பெண்களை -
அடிப்பார்கள்!

ஆனால்-
இவர்கள்-
பெண்ணின் நிர்வாண நடனம்-
பார்ப்பார்கள்!

நம்புங்க பாஸ்!
இவர்கள்தான்!

கலாசார காவலர்கள்!
தேச பக்தர்கள்!

நாட்டு பற்றாளர்கள்!
நிறைய பெயர்களை-
இவர்களே-
சூட்டி கொள்வார்கள்!

பி.ஜே .பி யை-
வைத்து-
காங்கிரஸ் பயங்காட்டுது!

காங்கிரஸ் மேலுள்ள-
கோபத்தை -
பி.ஜே.பி -
பயன்படுத்த பார்க்குது!

இவ்விரு கட்சிகளால்-
என்ன நாட்டின் வளர்ச்சி!?

தெரிகிறது-
அவர்களின்-
கட்சியினரின்-
வளர்ச்சி!

தேவை-
நாட்டை ஆள-
மாற்று அரசியல்!

அதற்கு-
பயன்படுமா-
வரும்-
நாடாளு மன்ற தேர்தல்...!!,


Friday 4 October 2013

உதாசீனம்..!!

கழுதையைபோல-
உதறி விட்டு-
சென்று இருக்கிறேன்!

எத்தனை முறையோ-
அசிங்கப்பட்டு!

இன்று-
துண்டாடப்ட்ட-
மண்புழுவைப்போல-
துடிக்கிறேன்!

என்னவளே-
உன் -
உதாசீனம் கண்டு!

Thursday 3 October 2013

மெல்லிடையாள்....!!

நல்லவேளையாக-
உனக்கு-
"இடையே "-
இல்லை!

என்னிடமும்-
"சாவிகொத்து " வைத்திருக்கும் -
அளவிற்கு-
பணமும் இல்லை!

Wednesday 2 October 2013

சமையல்காரர்!

இவ்வுலகம் -
என்ன -
என் முகத்தில்-
கரியை பூச!

"கரி சட்டிகளே"-
என் உறவுகள்!

தொடுவானம்...!!

கடலுக்கு-
தடுப்பாக-
தெரியும்-
தொடுவானம்!

நெருங்க-
நெருங்க-
அது-
வழி விடும்!

வாழ்வில்-
இன்னல்களும்-
அதுபோலவே!

எதிர்கொண்டால்-
திரும்பி செல்லும்-
வந்தவழியே!

சிரிக்கிறார்கள்.....!!

கவலை இல்லாமல்-
சிலரே-
சிரிக்கிறார்கள்!

கவலையை-
மறைக்கவே-
பலர்-
சிரிக்கிறார்கள்!

பள்ளி தோழிகள்!

பெண்ணொருவர்-
என்னுடன்-
படித்ததாக-
சொன்னார்!

எனக்கு-
நினைவு இல்லை!

மற்றொரு பெண்ணிடம்-
நாம் ஒன்றாக-
படித்தோம்-
என்றேன்!

அப்பெண்ணிற்கு-
நினைவு இல்லை!

இன்னொரு பெண்ணை-
சந்தித்தேன்!
இருவருக்கும்-
படித்தது-
நினைவு-
இருந்தது!

ஆனால்-
பேசிட வார்த்தையில்லை!

உடலின்-
காயங்கள்-
ஆறிடுவதுண்டு!

மனதின் காயங்கள்-
சமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!



Tuesday 1 October 2013

காந்தி ஜி அவர்களே...!!

மகாத்மாவே-
நலமா!?

சுதந்திர போராட்ட-
உயிர்த்தியாகிகளெல்லாம் -
சுகமா!?

எப்படி-
நலமாக-
இருப்பீர்கள்!?

நாட்டின் -
நிலையறிந்து-
"வெம்பி "-
இருப்பீர்கள்!!

மற்ற தியாகிகள்-
வெள்ளையனால்-
பலியானார்கள்!

நீங்களோ-
ஒரு துரோகியால்-
"பொலி"-ஆனீர்கள்!

அதனையும்-
முஸ்லிம்கள் மேல்-
பழி போட-
முனைந்தார்கள்!

துப்பப்பட்ட -
தோட்டா(கோட்சே)-
தண்டனைக்குள்ளானது!

துப்பாக்கியும்-
மிச்ச தோட்டாக்களும்-
ரத்த வெறியில்-
அலைகிறது!

பயமில்லாமல்-
இரவில் பெண் -
நடந்தாலே-
முழு சுதந்திரம்-
என்றீர்கள்!

இன்று-
பட்டப்பகலிலேயே-
பச்ச குழந்தைகளையும்-
பிச்சி எறிகிறது-
"நர"மாமிச பட்சிகள்!

மது -
கூடதென்றீர்கள்!

தெரு தெருவுக்கு-
மதுக்கடைகள்-
இருக்கிறது-
போங்கள்!

உங்கள்-
கொள்கைகளை-
மறந்துவிட்டார்கள்!

உங்கள்-
பிறந்த நாளை மட்டும்-
கொண்டாடுவார்கள்!

மிட்டாயெல்லாம்-
கொடுக்கிறார்கள்!

இல்லை-
இல்லை-
"அல்வா"-
கொடுக்கிறார்கள்!