Saturday 31 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(20)

கவிதைகள்
தந்தவளுக்கு!

நீ தந்ததோ
கண்ணீரை..!!

     

Friday 30 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(19)

புன்னகைக்குள்
சோகத்தை புதைக்க
எங்கே நீ கற்றுக்கொண்டாய்..!?

     

Wednesday 28 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..! (18)

ஆயுதங்கள் ஏதுமின்றி
என்னுள் வன்முறை நடத்தி விடுகிறது!

உனது மௌனம் !

     

Monday 26 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(17)

என்னை
எரியவும் செய்கிறாய்!
எறிந்திடவும் செய்கிறாய்!
நீ.!

    

அவள் சொல்ல மறந்த கவிதை.!(16)

கனவுகளைத்
தந்துவிட்டு !

எனது தூக்கத்தைத்
தின்றவன்
நீ!

      

Sunday 25 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(15)

பெண்ணாகப் பிறந்ததற்கு
கவிதை வரியாக எழுதப்பட்டிருப்பனேயானால்!

நீ இந்நேரம்
என்னை
உனது மனதில் பதிந்து வைத்திருந்திருப்பாய்..!!

     


Friday 23 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(14)

என்னை
அதிசயமாகப் பார்த்த
பூக்களெல்லாம்!

இப்போது
அலட்சியமாகப் பார்க்கிறது!

நீ நடத்தும்
உதாசீன நாடகத்தால்.!

     

Thursday 22 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(13)

ஓர் வார்த்தைக்கூட
என்னிடம் பேசாத நீயா..!?

ஊரே படிக்குமாறு
எழுதுகிறாய்..!!?

     

Wednesday 21 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(12)

எனக்குப் பிடித்த
கவிதைகளில்
புரியாத வார்த்தை
நீ..!!

    

அவள் சொல்ல மறந்த கவிதை.!(11)

நீ காவியம் படைக்கவே
உன்னை நெருங்குகிறேன்!

நீயோ
சிறு கவிதைகளே
போதுமென்றா.!?
ஒதுங்குகிறாய்...!!

       

Monday 19 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(10)

தீபத்தையேற்றி விட்டு
கண்களை மூடிக்கொள்ளும்
முட்டாள் நீயடா...!!

   

Sunday 18 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(9)

புல்லாங்குழலாக
நானிருந்தாலும்!

உனது மூச்சுக்காற்று
என்னுள் உறவாட வேண்டுமே..!!

         

Saturday 17 January 2015

அவள் சொல்ல மறந்த கதை.!(8)

நீ நெருப்பென்று
எனக்குத் தெரியும் !

ஆனாலும்
அந்நெருப்பினுள் திரியாகிட
நான் ஆசைக் கொள்கிறேன் !

     

Friday 16 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(7)

நீயொன்றும்
என் கண்ணில் விழுந்த
தூசியல்ல!

நானாக விரும்பி பூசிக்கொண்ட
கண் மை!

      

Wednesday 14 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(6)

உன் மீசையின்
வயதுதான்!

என் தாவணிக்கும்!

      

அவள் சொல்ல மறந்த கவிதை.!(5)

எனது நினைவுகளை
உனது பேனாவுக்குள் நிரப்பி
எழுதுவதைதான்!

நீ ஊருக்குள்
கவிதையென்று சொல்லிக்கொண்டு
அலைகிறாயோ..!?

       

Monday 12 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(4)

உனது
சிந்தனைக்குள் சிக்காத
வார்த்தை நான் !

      

Sunday 11 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(3)

வாய்வழி மொழியை
தாயிடம் கற்றேன்!

விழிவழி மொழியையோ
உன்னிடமே கற்றேன்!

      

Saturday 10 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(2)

உன் ஆண்மைக்குள்ளிருக்கும்
பெண்மை நான்!

என் பெண்மைக்குள்ளிருக்கும்
ஆண்மை நீ!

     

அவள் சொல்ல மறந்த கவிதை.!(1)

என்னை முழுவதுமாக
படிக்காத நீ!

என்ன கவிதை எழுதிட
போகிறாய்.!?

      

Thursday 8 January 2015

இருளொளி..!!

கண் விழிக்க முயலாதவனுக்கு
சூரிய ஒளி கூட வெளிச்சம் கொடுப்பதில்லை!

        

Wednesday 7 January 2015

தாய்ப்பேரு..!!

அன்பைப் பற்றிய
தமிழின் அத்தனை வார்த்தைகளையும்
எழுதினேன் !

அத்தனை வார்த்தைகளும்
என்னிடம் சொல்லியது!

"உனது தாயின் பெயரை எங்களுக்கு மேலே எழுது" இல்லையென்றால்
நாங்கள் தலையில்லா முண்டமாகிடுவோம்" என்று!

       

Tuesday 6 January 2015

மனக்கதவு..!!

நீ மட்டும்
என் மனக்கதவை தட்டாமல்
போயிருந்தால்!

எனக்குள்ளிருந்த
கவிஞன் தூங்கியே கிடந்திருப்பான்!

 

Monday 5 January 2015

எஸ்.டி.பி.ஐ.! (20)

ஈழத்துக் கதறல்
தமிழகத்தில் எதிரொலித்தது !

ஆனால்
எஸ்.டி.பி.ஐ யால்தான்
தலைநகர் டெல்லயில் எதிரொலித்தது !

        
// ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறலுக்காக டெல்லியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம் நடத்தியது.//

எஸ்.டி.பி.ஐ.! (19)

முடியும் என்பவன்
பயணிக்கிறான்!

முடியாது என்பவன்
பதுங்குகிறான்!

உன்னால் முடியும் என
நம்பினால் 
எஸ் .டி.பி.ஐ யில் இணையலாம் !

எஸ்.டி.பி.ஐ.!(18)

காந்தியவாதிகள் மக்களிடம்
கோட்சேக்களை அடையாளம் 
காட்டத் தவறியதால்!

இன்று
கோட்சேக்களின் துப்பாக்கிகள் 
காந்தியம் பேசுகிறது!

Sunday 4 January 2015

எஸ்.டி.பி.ஐ.!! (17)

இதொன்றும் 
மாவட்ட அளவிளோ
மாநில அளவிளோ மட்டும் பயணிக்கும்
நதியல்ல!

தேசமெங்கும் 
வியாபித்து இருக்கும்
சமுத்திரம் !

எஸ்.டி.பி.ஐ.! (16)

இவர்களொன்றும்
நேற்றுப் பேய்ந்த மழையில்
இன்றைக்கு முளைத்த காளான்களல்ல!

பல வருடங்கள் விதைகளைக்
சமூகநீதிக்காக விதைக்கப்பட்டு 
இன்று விருட்சமான ஆலமரங்கள்!

Saturday 3 January 2015

எஸ்.டி.பி.ஐ.! (15)

இருளென்றாலும்
இருட்டென்றாலும்
ஒன்றுதான்!

அதுப்போலவே
பாஜக வும்
காங்கிரசும்!

Friday 2 January 2015

எஸ்.டி.பி.ஐ.!(14)

அரசியலுக்காக போராடுபவர்கள் 
கட்சியல்ல!

போராடவே அரசியலுக்கு வந்தவர்களின்
கட்சி!

Thursday 1 January 2015

எஸ்.டி.பி.ஐ.! (13)

இஸ்லாமியர்களின் கட்சியல்ல!

இஸ்லாமியர்களும் இருக்கும் கட்சி!

எஸ்.டி.பி.ஐ.! (12)

தேசத்தை நேசிப்போரே!

பாசிச இருள் மண்டிவிட்டதாக
கலங்காதே!

இருட்டினால் விடியப்போகிறதென்றே
அர்த்தமென்பதை மறவாதே!