Wednesday 25 January 2017

ரத்த உறவு.!

சின்னஞ்சிறு கண்களை சுருக்கிக்கொண்டு
குறு குறுவென பார்த்து விட்டு
எச்சில் உதட்டில் புன்னை பூத்துக் கொண்டு
பிஞ்சுக் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு
பாய்ந்து வரும் குழந்தையை
தூக்கி அணைந்திடுகையில் தான் உணர்கிறேன் !

ரத்த உறவென்பது எத்தனை அற்புதமானதென்று!

Friday 6 January 2017

நீயில்லை ..!

நீள் கடல்
நுரை தள்ளிய கடல் அலை
தாழப் பறக்கும் கடல் புறா
மணலில் பதிந்த மழலைப் பாதம்
சலசலத்த பனை ஓலை
காற்றில் பறந்த காகிதம்
சுண்டலில் மணத்த தாளிப்பு வாசம்

இத்தனையும்
என் காதில் சொன்ன கவிதையை
உன்னிடம் நான் சொல்லிட
என்னருகே நீயில்லை!


Sunday 1 January 2017

சின்ன சின்னதாய்...!(8)

"அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல,எழுத்திலும் தெரிந்து விடுகிறது."


"பண்படாமல் பட்டங்களை மட்டும் சுமப்பதென்பது,கழுதையின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் குதிரை என்ற பெயர்ப்பலகையை போன்றது."


"வாழ்வின் நியதியை புரிந்தவர்கள்,வாழ்வில் நிம்மதியை இழப்பதில்லை"

   

"ஆரம்பங்களெல்லாம் முடிவை நோக்கியே நகர்கிறது .ஆனால் முடிவுகளோ இன்னொன்றின் ஆரம்பமாகி விடுகின்றது !"