Wednesday 26 October 2011

இருப்பதும் /இல்லாததும் !

வேகம் இருந்து -
விவேகம் இல்லாதது -
இளமை!

விவேகம் இருந்து -
வேகம் இல்லாதது -
முதுமை!

விதைக்கும் போது-
மழை வராது!
மழை வரும் -
அறுவடையின் போது!

காசு இல்லாத போது -
காதல் வந்தது!

காசு வந்த போது -
அவளுக்கு-
கல்யாணம்-
 ஆகி போனது !

ருசியா தின்ன -
வாய்ப்பில்லை -
வறுமையின் போது!

வசதியும் வாய்ப்பும்-
வந்த பின்-
நோயானது -
உடம்பானது!

தலை வலின்னு -
முனங்குனாலே-
தைலத்தோட வருவா -
பெத்தவ !

தாயோட கையை -
தட்டி விட்ட -
காலமுண்டு!

தலை போற -
விசயத்திலும்-
தலை கோர கூட -
விரல்கள்-
இல்லாத போது-
கலங்கி-
நிற்கிற காலம்!-
இப்போது!

அருகே இருந்தவளிடம் -
அன்பா-
பேசுவதில்லை!

'அனைத்தும்' -
முடிந்த பின் -
அழுவதில்-
 புண்ணியமில்லை!

இல்லாத ஒன்றுக்கு -
இருப்பதை இழக்கிறோம்!

இருப்பதை மறந்துட்டு -
இல்லாததற்கு ஏங்குகிறோம்!

4 comments:

  1. //காசு வந்த போது -அவளுக்கு
    கல்யாணம் ஆகி போனது !

    :(

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை!

      உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete
  2. இல்லாத ஒன்றுக்கு -
    இருப்பதை இழக்கிறோம்!

    இருப்பதை மறந்துட்டு -
    இல்லாததற்கு ஏங்குகிறோம்!

    அருமை

    ReplyDelete