கழுதையின் சத்தம் -
கேட்கும் கவிதையாக!
கவிதை பேசும்-
கவிஞன் தெரிவான்-
கழுதையாக!
சிறகு முளைக்கும்-
படகுக்கும்!
சிறகு விரிய மறுக்கும்-
பறவைக்கும்!
தெரு கோடி பிடிக்கும்-
மாடியில உள்ளவனுக்கு!
விண் மீனை சேர்த்து -
வீடுகட்ட தோண்டும்!-
குடிசையில் உள்ளவனுக்கு!
வன்முறை பேசும்-
சமாதான புறாவும்'!
பூக்களை துப்பும்-
துப்பாக்கியின் முனைகளும்!
அற்புதமாக்கும்-
அற்பனையும்!
அசிங்க படுத்தும்-
அழகனையும்!
உயிர் நண்பனையும் -
ஒதுக்கிட வைக்கும்!
ஒதுங்கி போறவளை-
உயிராய் நினைக்க வைக்கும்!
மணம் இருக்காது-
தன் வீட்டு மல்லிக்கு!
மூக்கை துளைக்கும்-
அவ வீட்டு ஊமத்தம் பூ!
காதல்-
எத்தனையோ-
மாற்றங்கள் தருவது!
எத்தனையோ பேருக்கு-
ஏமாற்றங்கள் தந்தது!
உள்ளதைச் சொல்வதும் தியாகிகள் குணம்தானே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ramani sir!
Deleteungal vimarsanathukku nantri!
ungal karuththukkal ennai
pontravarai valarkkum!