Thursday 21 June 2012

மீனவன்!



இரும்பே -
இத்து போகும்-
துருபிடித்து!

அத்தனை வலிமை -
கொண்டது-
கடல் காத்து!

வாட்டும் குளிரில்-
வாடியதுண்டா!?

கொல்லும் வெயிலில்-
செத்ததுண்டா!?

இதனை அனுபவிக்க-
மீனவனா வாழ-
உங்களுக்கு தைரியம்-
உண்டா!?

கடலை விட்டு-
வெளியே வந்து-
காய்ந்தால்தான் -
கருவாடாகும் -
மீன்கள்!

கடலுக்கு மேலேயே-
காய்ந்து கருவாடாகுபவர்கள்-
மீனவர்கள்!

அலைகளில் -
அசைந்தாடும்-
படகுகள்!

கடல் நீரில்-
மிதக்கும்-
"போயாக்கள்"!

நீருக்குள்-
விரித்து இருக்கும்-
வலைகள்!

பார்த்ததுண்டா!,?-
கரை ஒதுங்கையில்-
"மடி"அறுந்து-
என் மீனவர்கள் படும்-
அவதியை!

ஆனாலும் -
மறந்தும் -
காட்டி கொள்ளமாட்டார்கள்-
கண்ணீரை!

கரை சேராதவர்கள்-
எத்தனை பேர்!?

"கரை" ஏறாத -
குமருகள் எத்தனை-
பேர்!?

தாய் மடி-
எல்லோருக்கும்-
கிடைக்கும்-
அரியணை!

அரிதாகிவிட்டதே-
கண்டிட-
அரியணையை -
அரவணைக்கும் -
மகன் -மகளை!

முள்ளில்லாத மீனை-
தின்ன ஆசைபடுகிறோம்!

முதுகு எழும்பு-
ஒடிய கரை வலை-
இழுக்கும் -மக்களின்
வலியை-எத்தனை பேர்
உணர்ந்தோம்!?

மீனவனின்-
வேதனையை -
வார்த்தையில்-
வடித்திட முடியாது!

சொற்களிலும்-
சுருக்கிட முடியாது!

(மீனவ மக்களுக்கு அர்ப்பணம்)



22 comments:

  1. மீனவருக்கு அர்ப்பணித்த மீனவக் கவிதை என்னைக் கவர்ந்தது..

    ReplyDelete
    Replies
    1. mathumathi!

      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete
  2. மீனவனின்-
    வேதனையை -
    வார்த்தையில்-
    வடித்திட முடியாது!// உண்மையான உருக்கும் வரிகள் .

    ReplyDelete
  3. கஷ்டம் தான் அவர்களின் வாழ்க்கை.
    அதை அப்படியே கவியில் வடித்திருக்கிறீர்கள் நண்பரே.

    ReplyDelete
  4. முதுகு எழும்பு-
    ஒடிய கரை வலை-
    இழுக்கும் -மக்களின்
    வலியை-எத்தனை பேர்
    உணர்ந்தோம்!?
    ////
    அறியப்படாத வலி தான் அண்ணா! அதை இங்கு உணர வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  5. வலிகூடியது நண்பா....:(

    ReplyDelete
  6. //அத்தனை வலிமை -
    கொண்டது-
    கடல் காத்து!//

    இந்த வார்த்தைகளிலேயே மீனவர்களின் வலிமையா படம் பிடித்து காட்டி விடீர்

    மீனவ நண்பர்கள் ம்மேதுள்ள மரியாதையை உயர்த்திவிட்டீர்கள்


    படித்துப் பாருங்கள்

    வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

    ReplyDelete
  7. மீனவர்களின் வலியை வரிகளில் சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. மீனவனின்-
    வேதனையை -
    வார்த்தையில்-
    வடித்திட முடியாது!

    சொற்களிலும்-
    சுருக்கிட முடியாது!
    ..///உண்மை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. sathika!
      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  9. ஒடுக்கப்பட்ட படும் ஒரு இனத்திற்கு கவிதை தந்த சீனிக்கு நன்றிகள்

    ReplyDelete