Thursday 23 August 2012

மண் வாசம்...



விதைத்த கைகளை-
அறியாது-
முளைத்து வரும்-
செடிகள்!

'உண்டாக்கியவர்களை'-
விட-
உறுதுணையாக நிற்பவர்களை-
நேசிப்பது மனிதர்கள்!

இமைகளை அறிவதை-
விட-
கண்கள் விரும்புவது-
காட்சிகளை!

பொத்தி வளர்த்தவளை -
விட-
எட்டி உதைத்தவளை-
நேசிப்பது காதல்!

வாடிய நிலையை-
மறக்க செய்யும்-
வருமான நிலைகள்!

எதுவோ!?
எப்படியோ!?

குச்சியின் முனையில்-
கிளம்பி -
மறுமுனையில் திரும்பும்-
எறும்பை போல!

மேலே பறந்தாலும்-
கீழே 'கண்' வைக்கும்-
பருந்தை போல!

தவழ்ந்து  செல்லும்-
குழந்தை திரும்பி -
தாயை பார்ப்பது போல!

கடல் கடந்து -
பிழைக்க சென்றாலும்-
'உயிர் பிழைக்க 'சென்றாலும்!

பிறந்த மண்ணை -
நேசிக்கிறார்கள்-
மனதாலும்!

நிறம் ,மொழிகளை -
அடையாளம் கண்டுகொள்ளவே-
இறைவன் படைத்தான்!

அதன் பேராலோ-
அடித்து 'கொல்லும்'-
மனுஷ ஜென்மங்கள்!

காற்றில்-
அலை வரிசை-
கலந்து இருப்பது போல!

கம்பிகளில் -
மின்சாரம் ஒளிந்து -
இருப்பது போல!

ஒவ்வொருவரிடமும்-
பிறந்த மண்ணின் வாசம்-
ஒட்டிகொண்டுதானிருக்கும்!

எங்கே வாழ்ந்தாலும்-
எப்படி வாழ்ந்தாலும்-
தன்னுள் இருந்து வெளிப்பட்டு -
கொண்டே தானிருக்கும்!

மேலும் பார்க்க!
இங்கே வாங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!





14 comments:

  1. #உண்டாக்கியவர்களை'-
    விட-
    உறுதுணையாக நிற்பவர்களை-
    நேசிப்பது மனிதர்கள்!#

    ஆழமான வரிகள்...

    ReplyDelete
  2. உண்மைதான் .... சொந்த மண் பந்தம்
    நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
    அழகான வரிகள்.

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  4. உண்மை வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. சிறப்பான படைப்பாக்கம் ... என்னையும் மற்ற நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் நன்றிகள் தோழரே

    ReplyDelete
  6. // ஒவ்வொருவரிடமும்-
    பிறந்த மண்ணின் வாசம்-
    ஒட்டிகொண்டுதானிருக்கும்!

    எங்கே வாழ்ந்தாலும்-
    எப்படி வாழ்ந்தாலும்-
    தன்னுள் இருந்து வெளிப்பட்டு -
    கொண்டே தானிருக்கும்! // கண்டிப்பாக.

    நன்றாகவுள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் வாரம் முழுவதும் அசத்தறீங்க சீனி... தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்ல கவிதை நண்பா!

    ReplyDelete
  9. ஆரம்பமே அமர்க்களம் அண்ணா! அருமையான வரிகள்!

    ReplyDelete