Friday 14 September 2012

பேழையினுள் பேதை...

அது ஒரு-
புகை பட-
பேழை!

தன்னுள்-
வைத்திருந்தது-
நிழற்படங்களை!

புரட்டினேன்-
பக்கங்களை!

உருண்டோடி-
மனம் தந்து-
நினைவுகளை!

அன்று-
இன்றைய-
நிலைபாடுகளை!

சில-
உள்ளத்தை-
உரசியது!

பல-
உளியாக-
குத்தியது!

குழந்தை -
பருவங்கள்!
அன்று!

பருவ வயதில்-
இன்று!

"முறை " இருந்தும்-
முறைத்தவர்கள்!

முகம் தெரியாதவர்களும்-
சிரித்து சென்ற-
தருணங்கள்!

பொழிவாக-
இருந்தவர்கள்!

என்ன பொழப்புடா-!
என-
முழிப்பவர்கள்!

வசந்தம்-
தந்தவர்கள்!

வாசலிலே-
நிறுத்தியவர்கள்!

நகை-
 நட்டுடனும்!

நகையா!?
எட்டாகனியாகவும்!

ஏக்கங்களுடன் -
பார்க்கபட்டவர்கள்!

ஏங்குவதே-
வாழ்கையானவர்கள்!

சொந்தம் என-
சொல்லிகொண்டவர்கள்!

"தெரிந்தும்"-
தள்ளி சென்றவர்கள்!

இவன் யாரென்று-
கேட்டவர்கள்!

இன்னாரென்று -
அன்பு மொழி-
பேசியவர்கள்!

பக்கங்கள்-
முடிந்தது!

பரிதவிப்போ-
தொடங்கியது!

சீலா மீன்-
ஆனத்தில்(குழம்பு)-
எண்ணையாக மிதக்கும்-
கொழுப்பை போல!

பக்குவமாய்-
பார்த்து சாப்பிட்டாலும்-
தொண்டைடில் குத்திடும்-
வாள மீன் முள்ளை போல!

பார்த்த -
முகங்களிடையே!

"பாதகத்தி"-
முகமும் இருந்தது-
இடையே!

அனாசிடமாக -
பார்த்து விட்டேன்-
முகங்கள் அத்தனையும்!

அனலில் கிடத்திய-
புழுவாய் துடிக்குமாறு-ஆனது
"பேதையின்" நினைவால்-
என் நிலையும்!!



20 comments:

  1. சில நினைவுகள் (நிழற்படங்கள்) சந்தோசத்தையும், வியப்பையும்... இன்னும் பலவற்றை சிந்திக்க வைக்கும்... வைக்கிறது உங்கள் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோ டைனமிக் டெம்ளெட்டில் என்னால் கீழே லெச்ச முடியவில்லை.. அதனால் தான் இங்கு கருத்திடுகிறேன்...

      முள்ளாகவும் உளியாகவும் குத்தியிருந்தாலும் படமும் வரிகளும் என் நினைவுகளையும் மீட்டி விட்டது

      Delete
  2. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

    இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

    தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

    அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

    please visit: www.tamilnaththam.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. tamil naththam!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete
  3. நினைவுகள்
    சில
    நேரங்களில்
    அப்படிதான்
    எனக்கும்
    உண்டு
    அனுபவம்

    ReplyDelete
  4. புகை பட-பேழை! அருமை !

    ReplyDelete
  5. புகைப்படங்கள் நினைவுகளை கிளறி விடக்கூடியதுதான்! அருமையான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    ReplyDelete
  6. நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete
  7. வணக்கம் நண்பரே..
    நலமா?
    நீண்ட இடைவெளிக்குப் பின் வருகிறேன்...

    பேதையின் நினைவுகளை
    பேழையாக வர்ணித்தது அழகு...

    ReplyDelete
  8. ம்ம் அருமை................

    ReplyDelete
  9. புகை பட பேழை அருமையாகவுள்ளது. பகிரந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. nagaraj sako!

      ungal pinnoottam -
      kaanavillai!

      neengal pakirnthum kaanavillai!

      aanaalum-
      mikka nantri!

      Delete
  10. எதையோ சொல்லத்தொடங்கி...கொண்டு வந்து முடித்த இடம் அருமை.

    ஆணம்(குழம்பு)...நீங்கள் ஈழத்தவரா சீனி ?ஆணம் என்று கொழும்புத் தமிழில்தான் சொல்வார்கள் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      mikka nantri!

      naan raamanathapuram maavattam-
      engaloorilum kurippaa
      muslim makkal "aanam"entruthaan solvaarkal!

      Delete