Sunday 18 November 2012

உள்ளங்களை சீராக்குவாயாக....!!

வானம்-
தூணில்லாமல்-
நிற்பது!

இன்னும்-
பூமியில்-
விழாமல்-
இருப்பது!

நீராவிகள்-
மேகத்தில்-
சேர்வது!

ஒரு இடத்திற்கு-
மேகங்கள்-
செல்வது!

வெறும் வயிறுடன்-
செல்லும் -
பறவைகள்-
வயிறு நிரம்பி-
கூடு-
திரும்புவது!

எதுவுமே-
இருப்பு இல்லாமல்-
பிறக்கும்-
உயிர்களுக்கு-
அனைத்தும்-
உலகில்-
கிடைப்பது!

ஆரோக்கிய-
தேகங்களும்-
நாட்கள்-
செல்ல செல்ல-
வலிமை-
இழப்பது!

உயிருக்கு-
உயிரானவர்கள்-
சுற்றி நின்றாலும்-
உயிர் பிரிதலை-
தடுக்க -
முடியாதது!

போர் முனையில்-
உள்ளவர்கள்-
நீண்ட நாள்-
வாழ்வது!

வீட்டில்-
அடைபட்டு-
கிடப்பவர்கள்-
அற்ப ஆயுளில்-
போவது!

ஒரே தண்ணீர்-
பாய்ச்சினாலும்-
மரங்களிடையே-
பழங்களிடையே-
வித்தியாசம்-
இருப்பது!

அந்தஸ்தின்-
உச்சத்தில்-
இருப்பவர்கள்-
அசிங்கபடுவது!

வறுமையானவர்கள்-
வாழ்வாங்கு-
உயர்வது!

அடாவடிகளுக்கு-
ஆட்சிகள்-
அதிகாரங்கள்-
நிலைப்பது!

அடாவடிகளை-
சிறை பிடிக்க-
மறுமலர்ச்சி-
உருவாகுவது!

இப்படியாக-
கால சக்கரங்கள்-
சுழல்வது!

இவ்வாறாக-
எத்தனையோ-
எண்ணங்கள்-
என்னுள்-
உதிப்பது!

அனைத்தையும்-
எழுதிட-
இந்த-
"அற்பனால்"-
முடியாது!

"அறிவுடையவர்களுக்கு-
எத்தனையோ-
இறைவனின்-
அத்தாட்சிகள்-
உலகில்-
இருக்கு!-
இறை மறை-
வாக்கு!-
இருக்கு-
இப்படியாக!!

இறைவா!
அறிவுடைய-
மக்களாக-
எங்களது-
உள்ளங்களை-
சீராக்குவாயாக!!




8 comments:

  1. இறைவா!
    அறிவுடைய-
    மக்களாக-
    எங்களது-
    உள்ளங்களை-
    சீராக்குவாயாக!!

    சிறப்பு.

    ReplyDelete
  2. நண்பரே... இறைமறையில் இருப்பதும்
    உங்களைப் போன்றவர்கள்
    எழுதியது தானே...
    சீரானவர்கள் எழுதும் எழுத்து அனைத்தும்
    உங்கள் கவிதைகளைப் போலச்
    சிறப்பான தாகத் தான் இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Aruna selvam sako...!

      Naan irai marai entru sonnathu-
      al qur-aan aakum.athu iraivanin (allah)
      vaarthaikalaakum.muhammathu(napi)avarkalukku iraivan jiprayil(alai) enum vaanavar vaayilaaka sollapattathaakum.
      athanai napi avarkalin thozharkal-
      ezhuthivaiththaarkal-
      piraku moththamaaka serththaarkal.
      aathalaal irai marai (qur aan) iraivanin vaarththaikalaakum-
      innum vilakkamaaka arinthida ungalathu-
      arukaamaiyil ulla masoothiyil irukkum aalim(hasarath)avarkalidam kettu kollungal sonthame....

      Delete
  3. பிரார்த்தனைகள் மட்டுமே எங்கள் வசம்...மனிதன் முதலில் தன்னைத் தானே உணர்வதே முக்கியம் !

    ReplyDelete
  4. சிறந்த ஆக்கம் நண்பரே...

    ReplyDelete
  5. உள்ளங்களை சீராக்குவாயாக....!!
    குறி பார்க்க அம்பை நேரக்குவது போல் எங்கள் உள்ளத்தை சீராக்குவாயாக

    ReplyDelete
  6. உள்ளங்கள் சீரானால் நல்லது தான்...

    ReplyDelete