Friday 29 March 2013

மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்!

அடி முதல்-
நுனி வரை!

"அல்லக்கை" முதல்-
ஆள்பவர்கள் வரை!

எங்கும் இருக்குது-
லஞ்சம்!

அது இல்லாத-
இடம்தான்  பஞ்சம்!

டான்சி !
2 ஜி !
மாநில திராவிட-
கட்சிகள்!

போபர்ஸ் ஊழல்!
"போனவங்க "பேர்லயும்-
ஊழல்!
தேசிய கட்சிகள்!

தொகையில்தான்-
கொஞ்சம் -
முன்னே பின்னே!

ஆனாலும்-
ஊழலை ஒழிப்பதாக-
சொல்லாமல் இருக்கிறார்களா-
என்னே!?

அன்று-
"குடிகாரனை"-
எண்ணி விடலாம்!

இன்று-
"குடிக்காதவனை"-
எண்ணி விடலாம்!?

அன்று-
கையூட்டு-
பார்க்கப்பட்டது-
கேவலமாக!

இன்று-
வாங்காதவர்-
தூற்றபடிகிறார்-
"பிழைக்க தெரியாதவராக!"

கவலையை-
கலைத்திடும்-
மழலை சிரிப்பை போல!

விரக்தியின் விளிம்பில்-
இருந்திடும்போது-
நம்பிக்கை கீற்று -
உருவாகுவது போல!

நாசமான உலகில்-
நாணயமானவங்களும்-
இருக்கிறார்கள் போல!

ஒரு ரூபாய்-
லஞ்சம் வாங்கினால்-
என்னை தூக்கில்-
போடுங்கள்!

அப்படி-
முதலமைச்சருக்கு-
கடிதம் எழுதியது-
திரு .சகாயம் அவர்கள்!

இருக்கையின்-
பின்புறம் -
உள்ள வாசகம்!
லஞ்சம் தவிர்!
நெஞ்சை நிமிர்!

அய்யா!-
நீங்க தானய்யா-
நான் மதிக்கும்-
மனிதர்களில்-
ஒருவர்!

உங்களை பற்றி-
பத்திரிக்கைகளில்-
படித்ததுண்டு!

இன்று-
எழுதியதால்-
மகிழ்ச்சி-
கொஞ்சம் உண்டு..!




5 comments:

  1. நேர்மையான ஆட்சியருக்கு ஒரு கவிதை...! அருமை...!

    ReplyDelete
  2. அவரை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. நல்லதொரு மாவட்ட ஆட்சியர்! சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
  4. அதிகாரிகளுக்கு அதிகாரம் மட்டுமின்றி, உரிய சுதந்திரமும் வழங்கினால் அவர்களால் சமுதாயத்திற்கு எத்தகைய நன்மைகளைக் கொண்டுவர முடியும் என்பதற்கு சகாயம் போன்றவர்கள் எடுத்துக்காட்டு. ஆனால் எந்த அரசாங்கமும் இத்தகைய அதிகாரிகளை அதிக நாட்கள் நன்மை புரிய அனுமதிப்பதில்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.

    ReplyDelete
  5. நல்ல மனிதருக்கு நயமான கவிதைப்பாராட்டு சகோ வாழ்த்துக்கள்!

    ReplyDelete