செய்வது-
சில்லறை வணிகம்!
சிதறிடாதது-
உங்களது-
உள்ளம்!
தலை கால்-
தெரியாமல் ,
ஆடுற உலகம்-
நாலு காசை -
'பார்த்த'பின்னாலே!
கொண்ட தொழிலை-
விடலியே-கை நிறைய
காசு -
'பார்த்த பின்னாலே'!
நூலை அசைத்தால்-
ஆடும்-
வானில் பறக்கும்-
பட்டம்!
வேர்களை கொண்ட-
பெரும் மரங்கள்-
நமது அசைப்பினால்-
காணுவதில்லை-
ஆட்டம்!
'கறைகள்' படிந்த-
கைகளுண்டு!
கண்ணாடி குடுவைகளினால்-
கீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!
'சராமாரியான' பாதிப்பு-
சுழன்று அடிக்கும்-
காற்றினால்!
வயோதிகம் வந்தது-
உங்களுக்கு-
சுழன்ற காலத்தினால்!
நாட்டை ஏய்த்து-
ஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!
உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!
நேற்றைய பயணம்-
மிதி வண்டியில்!
இன்றைய-
மதிப்பு பல-
கோடிகளில்!
இந்த 'பாபாவுக்கு'-
ஆர்வமாம்-
ஊழலை ஒழிப்பதில்!
இதுபோன்ற -
நாடகங்கள் சாதாரணம்-
நம் நாட்டில்!
உழைப்பாளிகளே-
உங்களுக்கு கண்ணும்-
கருத்தும்-
உழைப்பில்!
உணவில் சிறந்தது-
தன் உழைப்பில்-
உண்பது-நபி மொழி!
உங்களை -
செம்மை படுத்திருக்கும்-
அம்மொழி!
ம்ம்ம்
ReplyDelete''உண்மை''
நல்ல கவிதை நண்பா
செய்தலி!
Deleteஉங்கள் முதல் வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
“கண்ணாடி குடுவைகளினால்-
ReplyDeleteகீறல் தான்- உங்கள்-
கைகளில் உண்டு!“
அந்தக் கீறல்களின் வடுக்கள்
விழுப்புண்கள் இல்லையா அவர்களுக்கு....
நல்ல கருத்துங்க சீனி.
arouna!உங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
Deleteமிக்க நன்றி!
பெரும் செல்வந்தர்கள்
ReplyDeleteசிறுவணிகத்தில் நுழைந்து
அதனால் பயனுறும்
சிறுவணிகர்களை
அடியோடு அழித்து விடக்கூடாது
என்ற ஆதங்கம்
நமக்குப் புரிந்தாலும்
அதனை செயல் படுத்துவோருக்குப்
புரிய வேண்டும்..
அழகான எண்ணம் நண்பரே...
மகேந்திரன்!
Deleteஉங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
மிக்க நன்றி!
அருமையான கவிதை நண்பரே ..!
ReplyDeleteவரலாற்று சுவடுகள்!
Deleteஉங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-
வரவுக்கும் மிக்க நன்றி!
அருமையான கவிதை...காதல் கவிதை மட்டுமே படிக்காமல் சமுதாய சமூக கவிதைகள் இன்னும் இன்னும் படைக்க வேண்டுகிறேன்...இணைந்திருப்போம்.
ReplyDeleteசதீஷ்!
Deleteஉங்களுடைய அழகிய பின்னூட்டதிற்கு-சமூக ஆர்வத்துக்கும்
வரவுக்கும் மிக்க நன்றி!
உழைப்பின் உயர்வு சொல்லும் உயர் கவிதை
ReplyDeleteஅய்யா!
Deleteஉங்கள் வரவுக்கும் -
கருத்துக்கும் மிக்க நன்றி!
சுயநலம் கூடி எல்லாமே வியாபாரமாகி வரும் காலத்தில் புத்தியோடு செயற்பட்டால் மட்டுமே வெற்றி !
ReplyDeleteஹேமா!
Deleteஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும்-
மிக்க நன்றி!
//நாட்டை ஏய்த்து-
ReplyDeleteஏப்பம் விடுபவர்கள்-
வருகிறார்கள்-
பந்தாவாக!
உழைத்து உரமேறிய-
உடலைகொண்டவர்களே-
நீங்களோ இருக்கீங்க-
சாந்தமாக!//
அழுத்தமான வரிகள். உங்கள் சிந்தனை சமுகத்தை குறித்து எழுதியதால் இந்தக் கவிதை இன்னும் சிறப்பை இருக்கிறது
சீனு!
Deleteஉங்களுடைய வரவுக்கும்-
கருத்துக்கும் மிக்க நன்றி!
இனிய கவிதை.. ரசித்தேன்..
ReplyDeletegovi!ungal muthal varavukkum karuthukkum-
Deletemikka nantri!