வாக்காள பெருமக்களே!-என
கூவுறாங்க!
வாழ வக்கில்லாம-
ஆக்குனவுங்க!
நம்ம நிலைமை தான்-
மாறலையே!
அந்த கொடுமை தான் -
என்ன சொல்ல!
'மை'கறை-வாக்களித்த
மக்களுக்கு!
ஓட்டு போடலாமா?-'கறை'
படிந்தவங்களுக்கு!
மாறி மாறி ஆண்டு விட்டது-
ஒவ்வொரு கட்சியும்!
மாற தான் இல்லையே-
மக்களோட அவல காட்சிகள்!
மண்ணுல பொறந்தவனுக்கு -
வாழ உரிமை இல்ல!
அடுத்த நாட்டு காரனுக்கு-
விக்கிறவங்களுக்கு-தயக்கம்
கூட இல்ல!
கலவரம் நடக்கையில -
தடுக்க துப்பு இல்ல!
கமிசன் அறிக்கைக்கு -
பின்னும் நியாயம் இல்ல!
மகாத்மாவே!
உன்னை கொன்னவன்களே!
மகாத்மா-வேடம் போடுறாங்களே!
தப்ப வழி இருந்தும் -
போராடி செத்தவன் -
திப்பு'டா!
அவன் வாரிசுகள் வாழ-
கூடாதென்றால் -என்னே
கேவலம்டா!
ஆடு செத்தாலும் -
பதில் சொல்லணும் -என
பயந்தார் உமர் அவர்கள்!
உமரோட ஆட்சி வேண்டும் -என
விரும்பினார் காந்தி அவர்கள்!
தன் ஆட்சியில -நடந்த
ஊழல் தெரியாது என்கிறார்-நம்
பிரதமர் அவர்கள்!?
எம்மக்களே!
அரண்டு வாழ்ந்தது -
போதும்!
அடங்கி வாழ்ந்தது -
போதும்!
ஒதுங்கியது -போதும் !
ஒடுங்கியது -போதும்!
நியாயவான்கள் -இனி
அனுமதிக்க மாட்டார்கள் -இதை
ஒரு போதும்!
எதுக்கும் கொள்கை-
இழப்பவர்கள் மத்தியில்!
எதுக்காகவும் கொள்கை-
இழக்காதவர்கள்-ஆழ
வேண்டும் 'மத்தியில்'!
கொள்ளை கூட்டத்துக்கு -இடையே
ஒரு கொள்கை கூட்டம்!
அசத்தியம் கொண்ட -அசிங்கங்களே
ஒதுங்குங்கள்!
சத்தியத்தோடு வருகிறது -
சிங்கங்கள்!
மக்கள் வாழ வேண்டும்-
பசியும் ,பயமும் இல்லாமல்-
இந்தியாவில்!
அதுக்காக ஒன்றுஇணைவோம்-
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் -
இந்தியாவில்!
சும்மா பின்னிட்டீங்க சீனி ஷா!
ReplyDeleteallaku akbar...
ReplyDelete