Sunday 9 October 2011

பணக்காரி சகவாசம்....!



சடக் சடக் -என
சத்தம்!
ஜன்னல் கதவுகளின் -
கதறல் சாத்து சாத்து என!

இருட்டான அறை!
என்னை சுற்றி -
கொசு வலை எனும் திரை!

கண் மூடி கொண்டேன்!
எப்படியோ தூங்கி கொண்டேன்!

உருண்டு படுத்தவனுக்கு -
ஏதோ உறுத்தலாக பட்டது!

கண்களை முழித்து  பாரேன்-
என்றது மனசாக பட்டது!

கண் விழித்து பார்த்தேன் !
அருகிலே என் தேன்!

அழகுக்கே அடையாளம் !
அவள் !

என்னை பார்த்து -
சிரித்தாள்!

முகம் நிலவென!
சிவந்த இதழ்கள் -
செவ்வாய் என!
பற்களோ நட்சத்திரம் -
என!

வானிலுள்ள கிரகங்கள் -
என்னருகில் பெண்ணாக !

என் கனவு தேவதை -
என் கைகிட்ட இருந்தது!
எனக்கு பிடித்து இருந்தது!

அதனால் தானோ -
எல்லோரும் என்னை -
கிரகம் பிடித்தவனே-என சொன்னார்களோ!?

எறிந்த மெழுகு வர்த்தியை -
ஊதி அணைத்தாள்!

என்னை -
அணைத்து அணைத்து -
எரிய விட்டாள்!

காலில் வலி!
பதறி கொண்டு பார்த்தாள்-
காலுக்கடியில் எலி!

எறும்பு கடித்தாலும் -
நியாயம் !-
நான்-
"சீனி "என்பதால்!

எலி கடிக்கலாமா?-
இது அநியாயம்!

அது சரி!
எலி என் படுக்கை -
வரவில்லை!
நான்தானே!
எலி இடத்தில்-
படுத்து இருந்தேன்!

எலி கடித்ததில் -
கனவு கலைந்தது!

ஊதியம் வாங்க -
உணவகங்களில் வேலை -
பார்க்க வில்லை!

உணவு கிடைத்தாலே-
 போதும் -என
நினைத்த நான் !

உயர்ந்த வீட்டு காரி -
உறவை விரும்பியது ஏன்?

பணத்தை-
 காட்டி இருக்கணும்!
பல்சரில் பந்தா பண்ணி -இருக்கணும்!

பாசத்தை மட்டும்-
 வைத்து கொண்டு-
ஆளை மடக்க முடியுமா?

கண்ட கனவும் ,
கொண்ட காதலும் ,-
என்னை தள்ளியது-
 வெளியே!

கொஞ்ச தூரத்தில் -
தெரிந்தது !

வண்ண விளக்குடன் -
வஞ்சி அவளின் வீடு!

தலைகளின் எண்ணிக்கையை -
வைத்து தெரிந்து கொள்ளலாம்!
அறுக்க பட்ட ஆடுகள் இத்தனை -என!

அவளால் மூக்கு அறுபட்ட-இளவட்டங்களின்-
கணக்கை எப்படி பார்க்க முடியும்-இத்தனை என!

காதில் தானே சொன்னேன்-
என் காதலை!
உன் காதில்-
 என் வாய் -
வைத்து!

இதற்க்கா!-
கிடைக்கணும்-
அருவா வெட்டு!

கொட்டிய ரத்தம் சொல்லி இருக்கும்-
அவளது பெயரை -
முடிந்தால்-
அருவாவிடம் கேட்டு -
பார்!

கதறிய சத்தம் கேட்டே-
ஏற்க்காதவள்!
என் கன்னத்தில் -
வடியும் கண்ணீர் -
சத்தம் கேட்டா-?

அவள் ஏற்க போகிறாள்!
ஏறிட்டு பார்க்க போகிறாள்!

மண நாள் முடிந்து -
மறு நாள் போறாளாம் -
தூரா தொலைவில்!

அவ தூரத்தில் -
போனாலும் சரி-
தொலைந்து -
போனாலும் சரி!

அவ எண்ணத்தை -
என்னிலிருந்து -
எடுத்து விட்டு -
போக சொல்லுங்க !

இல்லையினா-
அவ எண்ணத்தை-
மறக்க ஒரு வழி இருந்தா -சொல்லுங்க!

2 comments:

  1. kavithai superaa irukku...

    ..tholajathudaa nnu nimmathiyaa irunga..ungalukku mudinjathu ezharai sani...inimel vaazkkai superaa irukkum

    ReplyDelete