Wednesday 25 January 2012

தாய்க்கு ஒரு தகவல்...$

சனியன் பிடிச்சவ-
மாமியாளுக்கு!

முட்டா சிரிக்கி-
தகப்பனுக்கு!

பொழைக்க தெரியாதவ-
சொந்தகாரவங்களுக்கு!

ஆம்பள புள்ளையை பெத்தவ-
பொறாமைகாரர்களுக்கு!

உயிருள்ள பொம்மை-
பேரன் பேத்திகளுக்கு!

தகப்பனிடம்-
 தகவல் சொல்லும்-
தபால் பொட்டி-
மகன்களுக்கு!

எதிரானவ (தெரியாதவ)-
எரி வாயு அடுப்புக்கு!

உறவானவ-
விறகு அடுப்புக்கு!

சந்திராயன்-
 போனதாம்-
நிலவுக்கு!

முருங்கை கீரையை-
"சுத்தமா" கழுவனுமே-
என்ற கவலைதான் -
உனக்கு!

மாவட்ட ஆட்சியாளராக-
ஆசை இருந்தது-
எனக்கு!

கிடைத்ததோ-

மாவை பிசைந்து-
புரோட்டா போடுறேன்-
இப்போதைக்கு!

ஆசை இருந்த-
 என்னிடம்-
காசு இல்ல!

பாசம் இருந்த-
 உன்னிடமும்-
பணம் இல்ல!

படிக்க வைக்க முடியாம -
போனவளே!

"மனுசனா" என்னை-
வளர்க்க மட்டும்-
மறக்கலையே!

பணம் பணம் என்ற-
ஆசையிலே!

பெத்த புள்ளயை-
வேலைக்காரர்களிடம்
ஒப்படைத்து-
போறவங்க-
மத்தியிலே!

உன் வாழ்கையவே-
எங்களுக்காக-
இழந்தாயே!

உன்"கடனை"-
எப்படி நான் தீர்ப்பேன்-
என் தாயே!?

2 comments:

  1. பெத்த புள்ளயை -வேலைக்காரர்களிடம்
    ஒப்படைத்து-போறவங்க
    மத்தியிலே!

    உன் வாழ்கையவே-
    எங்களுக்காக-இழந்தாயே!

    உன்"கடனை"-
    எப்படி நான் தீர்ப்பேன்-
    என் தாயே!?

    அருமையான மாறுபட்ட சிந்தனை
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete