Thursday 26 January 2012

நண்பா...

ஓட்டை விழுந்த-
அரைக்கால் சட்டை-
போட்டு இருந்த போதும்!

பித்தான்கள் இல்லாத-
சட்டை அணிந்து இருந்த-
போதும்!

வேப்பங்கொட்டை -
சேர்த்த போதும்!

வெறுங்கையோட-
அலைந்த போதும்!

வீதிகளில்-
சுற்றிய போதும்!

புழுதிகளில்-
உருண்ட போதும்!

கண்மாய் தண்ணிய-
"கலக்கிய"போதும்!

கண்மாய் வற்றிய போது-
கண்கலங்கி நின்ற போதும்!

தேவையில்லாததுக்கு-
அடிசிகிட்ட போது!

அடிச்சிக்க வேண்டியதுக்கும்-
சிரிசிகிட்ட போதும்!

வேடிக்கை பார்க்கும்-
காவல் துறை-"
மத வெறி"-
சொற்பொழிவு நடக்கும்போதும்!

முன்னெச்சரிக்கை-
நடவடிக்கை என-
நம்மை கைது பண்ண-
முயன்ற போதும்!

கன்னிகளை-
 பார்த்த உடனே-
காதல் வயபட்ட போதும் !

காதலித்தவள்-
வேறொருவனை-
மணக்கும் போதும்!

இரண்டையுமே-
ஒரே போல-
நினைத்து-
 கவலை இல்லாமல்-
இருந்த போதும்!

"அடி மேல் அடி-
விழுந்த போதும்!

அடிக்கு அடி-
திருப்பி அடித்தபோதும்!

அடிக்கடி இது-
தொடர்ந்த போதும்!

கல்யாணம் முடிஞ்சா-
"பிரிஞ்சிடுவானுங்க"-என
மூத்தவங்க சொன்னபோதும்!

விதண்ட வாதம் பேசி-
அவங்க வாயை-
அடைத்த போதும்!

இத்தனைக்கும்-
நாம பிரியல-
பிரியவும் மனம் வரல!

எங்கோ பிறந்து-
வளர்ந்து!

திருமணம் என்ற-
ஒப்பந்தத்தில்-
இணைந்தது!

இணைந்து "வாழ்ந்ததால்"-
ஒரு குழந்தையும் -
பிறந்து!

தாய் தகப்பன்-
வயோதிகம் அடைந்து!

தங்கை இருக்கிறாள் -
பூப்படைந்தது!

தம்பியும் இருக்கிறான்-
கல்லூரி செல்ல பரீட்சை -
முடிவை எதிர் பார்த்து!

இத்தனை பேரும்-
இவன் உழைக்க போக -
மாட்டானா? -என
இருக்கிறார்கள்-
என்னை எதிர்பார்த்து!

நண்பா..!

நாம சென்றோம் -
பிரிந்து !

"பொறுப்புகளை"-
சுமந்து!

பொறுப்புகளை யாரும்-
சுமக்க விரும்புவதில்லை!

ஒவ்வொருவர் மீதும்-
பொறுப்புகள்-
 ஏறாமல்-
இருப்பதில்லை!

தன் மீதே கண்ணீரை-
ஊற்றி கொள்ளும்-
மெழுகுவர்த்தியை போல!

சிலரின் தேவைக்காக-
இலக்கே இல்லாமல் பயணிக்கிறோம்-
ஓடையில் விழுந்த -
சருகுகளை போல!!

2 comments:

  1. தன் மீதே கண்ணீரை-
    ஊற்றி கொள்ளும்-
    மெழுகுவர்த்தியை போல!

    சிலரின் தேவைக்காக-
    இலக்கே இல்லாமல் பயணிக்கிறோம்-
    ஓடையில் விழுந்த -
    சருகுகளை போல!! //

    கருவும் மொழிலாவகமும்
    சிறப்பாக உள்ளது
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. rRamani ayyaa!
      nantri ungalukkayya!
      theepam oliveesa koodiyathaa -
      irunthaalum!
      athai thoonda "
      thoondukol vendum !
      ungalai pola!

      Delete