Tuesday 5 June 2012

மாறும் மண் வாசம்....



விளக்குகள்-
தாங்கிய -
கோபுரங்கள்!

கூடு கட்டி-
வாழ்ந்த-
புறாக்கள்!

பிறரும்-
அமர்ந்திட-
இருந்த-
திண்ணைகள்!

இன்று-
மறைந்து போன-
சுவடுகள்!

மின்சார இணைப்பு-
இல்லாத காலத்திலும்-
அச்சமற்று -
தூங்கிய இரவுகள்!

பக்கத்து வீட்டுக்கும்-
சேர்த்து சமைத்த-
'விஷேச ' உணவுகள்!

புள்ளை பிறந்த-
வீடுகளில்-
மூக்கை துளைத்த-
பூண்டு-
வாசனைகள் !

குழந்தைகளை-
வளர்க்க-
மழலையாக-
மாறிய-
மூத்தவர்கள்!

நிலவின்-
வெளிச்சத்தில்-
அமுதுண்ட-
நாட்கள்!

அன்னத்தை -
கண்டவுடன்-
நிலவின் வெளிச்சம்-
கொண்ட முகங்கள்!

வற்றி விட்டால்-
விளையாட்டு திடல்-
கண்மாய் கரைகள்!

மழை பெய்தால் -
மக்களின் அழுக்கெடுக்கும்-
தொழிற்சாலைகள்!

அணில் விளையாடிய-
தென்னைகள்!

இன்று-
அணிலை தேடும்-
தென்னம் பாலைகள்!

ஊரை சுற்றி வந்தாலும்-
மனசு சுத்தமான-
மனிதர்கள்!

இன்று-
'சுதி'யுடன்-
அலையும்-
'சுள்ளான்கள்!

பெரிய பாக்கியமாக-
கருதப்பட்டது-
தவிச்ச வாயிக்கு-
தண்ணீர் கொடுப்பது!

நிரஞ்ச தண்ணிய-
குறைஞ்ச அளவு கொடுப்பது-
அரசியல் சாணக்கியத்தனமாக -
கருதபடுது!

அன்று-
குளிர்ந்த காற்று-
வீசும்போதும்!
சிறு சிறு தூறல்கள்-
சிந்திடும்போதும்!
மனதை குளிர்விக்கும்!
மண் வாசம்!

இன்று!
நாட்டு நடப்புகளும்-
அநாகரீக அரசியலும்-
மண்ணில் கலந்து -
விட்ட-'அணு' வாசமும்!
குருதிகள் நாற்றமும்!
மூச்சடைக்கும்-
காலம்!



19 comments:

  1. அந்நாளைய நினைவுகளின் ஈரமண்வாசம் இன்னும் கவிதைக்குள் வீசுகிறது. இந்நாளின் இயந்திரவாழ்க்கையில் நாம் இழந்ததை எண்ணி ஆதங்கம் மேலிடுகிறது. அருமையான மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சூரி!

      உங்கள் உடனடிமற்றும்-முதல் வரவுக்கும் -
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. சென்றது போலும் பொன் போலும் காலம்!கால மாற்றத்தின் கோல மாற்றங்களை அருமையாகச் சொல்லும் கவிதை

    ReplyDelete
    Replies
    1. அய்யா!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      Delete
  3. அருமை நண்பரே .. :)

    ReplyDelete
    Replies
    1. சுவடுகள்!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      Delete
  4. Really nice
    Just I back few years

    Good nanba

    ReplyDelete
    Replies
    1. சிட்டு குருவி!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      Delete
  5. மின்சார இணைப்பு-
    இல்லாத காலத்திலும்-
    அச்சமற்று -
    தூங்கிய இரவுகள்!//அருமை.

    ReplyDelete
  6. நாட்டு நடப்புக்கள் சொல்லும் நாற்றம் ம்ம்ம் மனசில் இருக்கும் கேள்வியை கவிதையாக்கி விட்டீர்கள்§

    ReplyDelete
  7. அந்த மண் வாசம் மீண்டும்
    கிடைக்குமா என்ற ஏக்கத்தைத் தருகிறது
    உங்கள் கவிதை நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. arouna!உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. ஒப்பீடு மிக மிக அருமை
    தற்கால நிலையை நினைக்க நினக்கத்தான்
    மனம் வெறுத்துப்போகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ramani ayya!
      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. நிலவின்-
    வெளிச்சத்தில்-
    அமுதுண்ட-
    நாட்கள்!

    மாறிய மண் வாசம் கனக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. raje
      உங்கள் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றிsh!

      Delete
  10. மண்வாசனை நாசித்துவாரத்துள்.சாகும்வரை மறக்காது !

    ReplyDelete
    Replies
    1. ஹேமா!

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்-
      மிக்க நன்றி!

      Delete