தேன் நிலவு என-
வீண் அலைச்சல் -
எதுக்கு?
நிலவென முகமும்-
தேன் இதழுடையவள்-
அருகில் இருக்க!!
Tuesday, 31 January 2012
ஏன் இந்த கொலைவெறி..!
கடல் அட்டை-
கடல் குதிரை-
இருக்கு-
பிடிக்க தடை!
கடல்ல மீன் பிடிக்க செல்லும்-
மீனவனை சுட்டு -
கொல்ல எவன் கொடுத்தான்-
உரிமை!
அவையெல்லாம் -
அறிய வகை-
உயிரிணமாம்!
அரசு -
கண்டுக்க மறுக்குதே-
அதை விட -
மீனவன் என்ன-
அற்ப ஜென்மமா?
ஒரு -
தடவை நடந்தால்-
அது தவறு!
அதுவே -
தொடர்ந்தால்-
திமிரு!
ஒண்ணா இரண்டா?
செத்து இருக்காங்க -
ஐநூறுக்கும் மேலடா!
கண்டன ஆர்ப்பாட்டம்-
கண்ட பொதுக்கூட்டம்-
நடந்து இருக்கு-
எத்தனை!
அரசு கண்டுக்காம இருந்தா-
என்ன முறை!
மரண தண்டனை கூடாதுன்னு-
குரல் எழும்புது-
கொலை செய்தவனுக்கும்!
ஏன் இந்த கதி-
என்நாட்டு மீனவனுக்கு!
இந்தியனுக்கே நடக்குது-
உயிர் இழப்பு!
நியாயம் பேசினால்-
வழக்கு பாயுது -
இந்திய இறையாண்மைக்கு-
எதிர்ப்புன்னு!
நாட்டை நேசிப்பது -
குடிமகனின் உரிமை!
குடிமகனின் உயிரையும்-
உடமையையும் காப்பது-
அரசின் கடமை!
செய்யாமல்-
கடமையை!
எதிர்பார்க்கலாமோ-
உரிமையை!
உயிர் இழப்பு நடக்கும்போதும்-
கலவரங்கள் நடக்கும்போதும்-
நடவடிக்கை எடுத்து தடுக்கல!
ஒரு நாயும் பயப்படாது-
"அறிக்கை" மட்டும் -
வெளியிடுரதுல!
கடல் குதிரை-
இருக்கு-
பிடிக்க தடை!
கடல்ல மீன் பிடிக்க செல்லும்-
மீனவனை சுட்டு -
கொல்ல எவன் கொடுத்தான்-
உரிமை!
அவையெல்லாம் -
அறிய வகை-
உயிரிணமாம்!
அரசு -
கண்டுக்க மறுக்குதே-
அதை விட -
மீனவன் என்ன-
அற்ப ஜென்மமா?
ஒரு -
தடவை நடந்தால்-
அது தவறு!
அதுவே -
தொடர்ந்தால்-
திமிரு!
ஒண்ணா இரண்டா?
செத்து இருக்காங்க -
ஐநூறுக்கும் மேலடா!
கண்டன ஆர்ப்பாட்டம்-
கண்ட பொதுக்கூட்டம்-
நடந்து இருக்கு-
எத்தனை!
அரசு கண்டுக்காம இருந்தா-
என்ன முறை!
மரண தண்டனை கூடாதுன்னு-
குரல் எழும்புது-
கொலை செய்தவனுக்கும்!
ஏன் இந்த கதி-
என்நாட்டு மீனவனுக்கு!
இந்தியனுக்கே நடக்குது-
உயிர் இழப்பு!
நியாயம் பேசினால்-
வழக்கு பாயுது -
இந்திய இறையாண்மைக்கு-
எதிர்ப்புன்னு!
நாட்டை நேசிப்பது -
குடிமகனின் உரிமை!
குடிமகனின் உயிரையும்-
உடமையையும் காப்பது-
அரசின் கடமை!
செய்யாமல்-
கடமையை!
எதிர்பார்க்கலாமோ-
உரிமையை!
உயிர் இழப்பு நடக்கும்போதும்-
கலவரங்கள் நடக்கும்போதும்-
நடவடிக்கை எடுத்து தடுக்கல!
ஒரு நாயும் பயப்படாது-
"அறிக்கை" மட்டும் -
வெளியிடுரதுல!
Monday, 30 January 2012
என்ன தோணுது...!!?
சாட்சிகள் இல்லாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
கொலை செய்யும்போது!
கைரேகை பதியாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
திருடும்போது!
அப்படிதான் நினைக்க -
தோணுது!
ஆணுறை அணிந்து -
"பிறரிடம்"-
"உறவு "கொள்ளுங்கள்-என
அரசு விளம்பரம்-
செய்யும்போது!!!
பார்த்து கொள்ளுங்கள்-
கொலை செய்யும்போது!
கைரேகை பதியாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
திருடும்போது!
அப்படிதான் நினைக்க -
தோணுது!
ஆணுறை அணிந்து -
"பிறரிடம்"-
"உறவு "கொள்ளுங்கள்-என
அரசு விளம்பரம்-
செய்யும்போது!!!
Sunday, 29 January 2012
விசித்திரம்!
அன்று-
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!
இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!
என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!
இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!
என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?
இனியவளே....
எழுதிவிட்டேன்-
எத்தனையோ-
காதல் கடிதங்கள்-
உன்னை நினைத்து கொண்டே!
முதுமை -
அடைந்து விட்டேன்-
எந்த கடிதத்தை முதலில்-
கொடுப்பது!-என்று
யோசித்து கொண்டே!
மீத வாழ்வை -
கழித்துடுவேன்-
இருக்கும் -
கடிதங்களை-
படித்துக்கொண்டே!
எத்தனையோ-
காதல் கடிதங்கள்-
உன்னை நினைத்து கொண்டே!
முதுமை -
அடைந்து விட்டேன்-
எந்த கடிதத்தை முதலில்-
கொடுப்பது!-என்று
யோசித்து கொண்டே!
மீத வாழ்வை -
கழித்துடுவேன்-
இருக்கும் -
கடிதங்களை-
படித்துக்கொண்டே!
Saturday, 28 January 2012
என்னவளே...
குறைத்து விட்டேன்!-
சிலுப்பி கொண்டிருந்த-
பிடரி முடியை!
கத்தரித்து கொண்டேன்-
முறுக்கி இருந்த-
மீசையை!
இறக்கி விட்டுட்டேன்-
தூக்கி கட்டி இருந்த-
வேஷ்டியை!
விட்டு விட்டேன்-
"கூட்டத்தோட"-
சுத்துவதை!
சிரித்து மாத்தி கொண்டேன்-
சிடு சிடு என -இருந்த
முகத்தை!
மறந்து விட்டேன்-
கெட்ட வார்த்தையில்-
திட்டுவதை!
தவிர்த்து விட்டேன்-
என்னிடம் உனக்கு-
பிடிக்காததை!
தவித்து விட்டேன்-
தெரிந்த பின்-
என்னையவே உனக்கு-
பிடிக்காததை!!
சிலுப்பி கொண்டிருந்த-
பிடரி முடியை!
கத்தரித்து கொண்டேன்-
முறுக்கி இருந்த-
மீசையை!
இறக்கி விட்டுட்டேன்-
தூக்கி கட்டி இருந்த-
வேஷ்டியை!
விட்டு விட்டேன்-
"கூட்டத்தோட"-
சுத்துவதை!
சிரித்து மாத்தி கொண்டேன்-
சிடு சிடு என -இருந்த
முகத்தை!
மறந்து விட்டேன்-
கெட்ட வார்த்தையில்-
திட்டுவதை!
தவிர்த்து விட்டேன்-
என்னிடம் உனக்கு-
பிடிக்காததை!
தவித்து விட்டேன்-
தெரிந்த பின்-
என்னையவே உனக்கு-
பிடிக்காததை!!
Friday, 27 January 2012
என் நாட்டு மக்களே...
என்னருமை -
இந்திய மக்களே!
பதில் இருந்தா -
சொல்லுங்களேன்!
மக்கள் தொகையோ-
நூறு கோடிக்கு மேல'!
எத்தனையோ-
மக்கள்கிடக்குறாங்க -
தெரு கோடியில!
சுதந்திரம் கிடைத்து-
ஆகிவிட்டது-
அறுபது ஆண்டுக்கு-
மேல!
அதிகமா பசியில-
சாவுறாங்க -
குழந்தைங்க-
நம்ம நாட்ல!
எத்தனையோ பேர்-
இறந்தாங்க-
சுதந்திர போராட்டத்துல!
இப்ப நடக்குற அரசியலோ-
மண்ண அள்ளி போடுடுசி-
அவங்க நினைப்புல!
நாட்ல உயர்வது-
அம்பானிகள்"!
இதில் -
எங்கே இருக்காங்க -
ஏழைகள்!?
வெள்ளைக்காரன்-
பிரித்தாளும் சூழ்ச்சியால்-
ஒண்ணா இருந்த-
ஹிந்து-முஸ்லிம் மக்களை-
பிரிச்சான்!
இப்ப ஆட்சி வெறி -
பிடிச்சவங்க -
மதவெறி-
ஊட்டி மக்களை -
அடிச்சிக்க வைக்கிறான்!
கலவரம் செய்து-
கொல்வது -
பாசிச பயங்கரவாதம்!
சுட்டு கொல்வது(போலி என்கௌன்டர்)-
அரச பயங்கரவாதம்!
மக்களை திசை திருப்ப
பயன்படும் சொல்-
தீவிரவாதம்!
காங்கிரசால் -
நாடு உருப்படாம -
போனது!
பி ஜே பி யால்-நாடு
சுடுகாடானது!
ஓ!
வஞ்சிக்க பட்டவர்களே!
வாழ வழி இல்லாதவர்களே!
சிறுபான்மை மக்களே!
சிறுமை படுத்தபட்டவர்களே!
தாழ்த்த பட்டவர்களே!
தாழ்ந்தே "இருக்க -கட்டாயபடுத்தபட்டவர்களே!
உங்களுக்கு கவலை-
வேண்டாம்!
இனி கண்ணீர்-
வேண்டாம்!
உங்களது உரிமையை-
மீட்டெடுக்க!
உங்களுக்காக-
குரல் கொடுக்க!
கணிசமான வாக்குகள்-
கடந்த சட்டமன்ற தேர்தலில்!
"கண்ணியமான"வெற்றிகள்-
உள்ளாட்சி தேர்தலில்!
கண்டிட வேண்டுமா-?
மக்கள் கண்ணீர் வடிக்காத
காட்சியை!
மக்கள் அனைவரும்-
இணையுங்கள் -
எஸ்.டி.பி.ஐ என்ற -
தேசிய கட்சியில்!
இந்திய மக்களே!
பதில் இருந்தா -
சொல்லுங்களேன்!
மக்கள் தொகையோ-
நூறு கோடிக்கு மேல'!
எத்தனையோ-
மக்கள்கிடக்குறாங்க -
தெரு கோடியில!
சுதந்திரம் கிடைத்து-
ஆகிவிட்டது-
அறுபது ஆண்டுக்கு-
மேல!
அதிகமா பசியில-
சாவுறாங்க -
குழந்தைங்க-
நம்ம நாட்ல!
எத்தனையோ பேர்-
இறந்தாங்க-
சுதந்திர போராட்டத்துல!
இப்ப நடக்குற அரசியலோ-
மண்ண அள்ளி போடுடுசி-
அவங்க நினைப்புல!
நாட்ல உயர்வது-
அம்பானிகள்"!
இதில் -
எங்கே இருக்காங்க -
ஏழைகள்!?
வெள்ளைக்காரன்-
பிரித்தாளும் சூழ்ச்சியால்-
ஒண்ணா இருந்த-
ஹிந்து-முஸ்லிம் மக்களை-
பிரிச்சான்!
இப்ப ஆட்சி வெறி -
பிடிச்சவங்க -
மதவெறி-
ஊட்டி மக்களை -
அடிச்சிக்க வைக்கிறான்!
கலவரம் செய்து-
கொல்வது -
பாசிச பயங்கரவாதம்!
சுட்டு கொல்வது(போலி என்கௌன்டர்)-
அரச பயங்கரவாதம்!
மக்களை திசை திருப்ப
பயன்படும் சொல்-
தீவிரவாதம்!
காங்கிரசால் -
நாடு உருப்படாம -
போனது!
பி ஜே பி யால்-நாடு
சுடுகாடானது!
ஓ!
வஞ்சிக்க பட்டவர்களே!
வாழ வழி இல்லாதவர்களே!
சிறுபான்மை மக்களே!
சிறுமை படுத்தபட்டவர்களே!
தாழ்த்த பட்டவர்களே!
தாழ்ந்தே "இருக்க -கட்டாயபடுத்தபட்டவர்களே!
உங்களுக்கு கவலை-
வேண்டாம்!
இனி கண்ணீர்-
வேண்டாம்!
உங்களது உரிமையை-
மீட்டெடுக்க!
உங்களுக்காக-
குரல் கொடுக்க!
கணிசமான வாக்குகள்-
கடந்த சட்டமன்ற தேர்தலில்!
"கண்ணியமான"வெற்றிகள்-
உள்ளாட்சி தேர்தலில்!
கண்டிட வேண்டுமா-?
மக்கள் கண்ணீர் வடிக்காத
காட்சியை!
மக்கள் அனைவரும்-
இணையுங்கள் -
எஸ்.டி.பி.ஐ என்ற -
தேசிய கட்சியில்!
Thursday, 26 January 2012
நண்பா...
ஓட்டை விழுந்த-
அரைக்கால் சட்டை-
போட்டு இருந்த போதும்!
பித்தான்கள் இல்லாத-
சட்டை அணிந்து இருந்த-
போதும்!
வேப்பங்கொட்டை -
சேர்த்த போதும்!
வெறுங்கையோட-
அலைந்த போதும்!
வீதிகளில்-
சுற்றிய போதும்!
புழுதிகளில்-
உருண்ட போதும்!
கண்மாய் தண்ணிய-
"கலக்கிய"போதும்!
கண்மாய் வற்றிய போது-
கண்கலங்கி நின்ற போதும்!
தேவையில்லாததுக்கு-
அடிசிகிட்ட போது!
அடிச்சிக்க வேண்டியதுக்கும்-
சிரிசிகிட்ட போதும்!
வேடிக்கை பார்க்கும்-
காவல் துறை-"
மத வெறி"-
சொற்பொழிவு நடக்கும்போதும்!
முன்னெச்சரிக்கை-
நடவடிக்கை என-
நம்மை கைது பண்ண-
முயன்ற போதும்!
கன்னிகளை-
பார்த்த உடனே-
காதல் வயபட்ட போதும் !
காதலித்தவள்-
வேறொருவனை-
மணக்கும் போதும்!
இரண்டையுமே-
ஒரே போல-
நினைத்து-
கவலை இல்லாமல்-
இருந்த போதும்!
"அடி மேல் அடி-
விழுந்த போதும்!
அடிக்கு அடி-
திருப்பி அடித்தபோதும்!
அடிக்கடி இது-
தொடர்ந்த போதும்!
கல்யாணம் முடிஞ்சா-
"பிரிஞ்சிடுவானுங்க"-என
மூத்தவங்க சொன்னபோதும்!
விதண்ட வாதம் பேசி-
அவங்க வாயை-
அடைத்த போதும்!
இத்தனைக்கும்-
நாம பிரியல-
பிரியவும் மனம் வரல!
எங்கோ பிறந்து-
வளர்ந்து!
திருமணம் என்ற-
ஒப்பந்தத்தில்-
இணைந்தது!
இணைந்து "வாழ்ந்ததால்"-
ஒரு குழந்தையும் -
பிறந்து!
தாய் தகப்பன்-
வயோதிகம் அடைந்து!
தங்கை இருக்கிறாள் -
பூப்படைந்தது!
தம்பியும் இருக்கிறான்-
கல்லூரி செல்ல பரீட்சை -
முடிவை எதிர் பார்த்து!
இத்தனை பேரும்-
இவன் உழைக்க போக -
மாட்டானா? -என
இருக்கிறார்கள்-
என்னை எதிர்பார்த்து!
நண்பா..!
நாம சென்றோம் -
பிரிந்து !
"பொறுப்புகளை"-
சுமந்து!
பொறுப்புகளை யாரும்-
சுமக்க விரும்புவதில்லை!
ஒவ்வொருவர் மீதும்-
பொறுப்புகள்-
ஏறாமல்-
இருப்பதில்லை!
தன் மீதே கண்ணீரை-
ஊற்றி கொள்ளும்-
மெழுகுவர்த்தியை போல!
சிலரின் தேவைக்காக-
இலக்கே இல்லாமல் பயணிக்கிறோம்-
ஓடையில் விழுந்த -
சருகுகளை போல!!
அரைக்கால் சட்டை-
போட்டு இருந்த போதும்!
பித்தான்கள் இல்லாத-
சட்டை அணிந்து இருந்த-
போதும்!
வேப்பங்கொட்டை -
சேர்த்த போதும்!
வெறுங்கையோட-
அலைந்த போதும்!
வீதிகளில்-
சுற்றிய போதும்!
புழுதிகளில்-
உருண்ட போதும்!
கண்மாய் தண்ணிய-
"கலக்கிய"போதும்!
கண்மாய் வற்றிய போது-
கண்கலங்கி நின்ற போதும்!
தேவையில்லாததுக்கு-
அடிசிகிட்ட போது!
அடிச்சிக்க வேண்டியதுக்கும்-
சிரிசிகிட்ட போதும்!
வேடிக்கை பார்க்கும்-
காவல் துறை-"
மத வெறி"-
சொற்பொழிவு நடக்கும்போதும்!
முன்னெச்சரிக்கை-
நடவடிக்கை என-
நம்மை கைது பண்ண-
முயன்ற போதும்!
கன்னிகளை-
பார்த்த உடனே-
காதல் வயபட்ட போதும் !
காதலித்தவள்-
வேறொருவனை-
மணக்கும் போதும்!
இரண்டையுமே-
ஒரே போல-
நினைத்து-
கவலை இல்லாமல்-
இருந்த போதும்!
"அடி மேல் அடி-
விழுந்த போதும்!
அடிக்கு அடி-
திருப்பி அடித்தபோதும்!
அடிக்கடி இது-
தொடர்ந்த போதும்!
கல்யாணம் முடிஞ்சா-
"பிரிஞ்சிடுவானுங்க"-என
மூத்தவங்க சொன்னபோதும்!
விதண்ட வாதம் பேசி-
அவங்க வாயை-
அடைத்த போதும்!
இத்தனைக்கும்-
நாம பிரியல-
பிரியவும் மனம் வரல!
எங்கோ பிறந்து-
வளர்ந்து!
திருமணம் என்ற-
ஒப்பந்தத்தில்-
இணைந்தது!
இணைந்து "வாழ்ந்ததால்"-
ஒரு குழந்தையும் -
பிறந்து!
தாய் தகப்பன்-
வயோதிகம் அடைந்து!
தங்கை இருக்கிறாள் -
பூப்படைந்தது!
தம்பியும் இருக்கிறான்-
கல்லூரி செல்ல பரீட்சை -
முடிவை எதிர் பார்த்து!
இத்தனை பேரும்-
இவன் உழைக்க போக -
மாட்டானா? -என
இருக்கிறார்கள்-
என்னை எதிர்பார்த்து!
நண்பா..!
நாம சென்றோம் -
பிரிந்து !
"பொறுப்புகளை"-
சுமந்து!
பொறுப்புகளை யாரும்-
சுமக்க விரும்புவதில்லை!
ஒவ்வொருவர் மீதும்-
பொறுப்புகள்-
ஏறாமல்-
இருப்பதில்லை!
தன் மீதே கண்ணீரை-
ஊற்றி கொள்ளும்-
மெழுகுவர்த்தியை போல!
சிலரின் தேவைக்காக-
இலக்கே இல்லாமல் பயணிக்கிறோம்-
ஓடையில் விழுந்த -
சருகுகளை போல!!
Wednesday, 25 January 2012
தாய்க்கு ஒரு தகவல்...$
சனியன் பிடிச்சவ-
மாமியாளுக்கு!
முட்டா சிரிக்கி-
தகப்பனுக்கு!
பொழைக்க தெரியாதவ-
சொந்தகாரவங்களுக்கு!
ஆம்பள புள்ளையை பெத்தவ-
பொறாமைகாரர்களுக்கு!
உயிருள்ள பொம்மை-
பேரன் பேத்திகளுக்கு!
தகப்பனிடம்-
தகவல் சொல்லும்-
தபால் பொட்டி-
மகன்களுக்கு!
எதிரானவ (தெரியாதவ)-
எரி வாயு அடுப்புக்கு!
உறவானவ-
விறகு அடுப்புக்கு!
சந்திராயன்-
போனதாம்-
நிலவுக்கு!
முருங்கை கீரையை-
"சுத்தமா" கழுவனுமே-
என்ற கவலைதான் -
உனக்கு!
மாவட்ட ஆட்சியாளராக-
ஆசை இருந்தது-
எனக்கு!
கிடைத்ததோ-
மாவை பிசைந்து-
புரோட்டா போடுறேன்-
இப்போதைக்கு!
ஆசை இருந்த-
என்னிடம்-
காசு இல்ல!
பாசம் இருந்த-
உன்னிடமும்-
பணம் இல்ல!
படிக்க வைக்க முடியாம -
போனவளே!
"மனுசனா" என்னை-
வளர்க்க மட்டும்-
மறக்கலையே!
பணம் பணம் என்ற-
ஆசையிலே!
பெத்த புள்ளயை-
வேலைக்காரர்களிடம்
ஒப்படைத்து-
போறவங்க-
மத்தியிலே!
உன் வாழ்கையவே-
எங்களுக்காக-
இழந்தாயே!
உன்"கடனை"-
எப்படி நான் தீர்ப்பேன்-
என் தாயே!?
மாமியாளுக்கு!
முட்டா சிரிக்கி-
தகப்பனுக்கு!
பொழைக்க தெரியாதவ-
சொந்தகாரவங்களுக்கு!
ஆம்பள புள்ளையை பெத்தவ-
பொறாமைகாரர்களுக்கு!
உயிருள்ள பொம்மை-
பேரன் பேத்திகளுக்கு!
தகப்பனிடம்-
தகவல் சொல்லும்-
தபால் பொட்டி-
மகன்களுக்கு!
எதிரானவ (தெரியாதவ)-
எரி வாயு அடுப்புக்கு!
உறவானவ-
விறகு அடுப்புக்கு!
சந்திராயன்-
போனதாம்-
நிலவுக்கு!
முருங்கை கீரையை-
"சுத்தமா" கழுவனுமே-
என்ற கவலைதான் -
உனக்கு!
மாவட்ட ஆட்சியாளராக-
ஆசை இருந்தது-
எனக்கு!
கிடைத்ததோ-
மாவை பிசைந்து-
புரோட்டா போடுறேன்-
இப்போதைக்கு!
ஆசை இருந்த-
என்னிடம்-
காசு இல்ல!
பாசம் இருந்த-
உன்னிடமும்-
பணம் இல்ல!
படிக்க வைக்க முடியாம -
போனவளே!
"மனுசனா" என்னை-
வளர்க்க மட்டும்-
மறக்கலையே!
பணம் பணம் என்ற-
ஆசையிலே!
பெத்த புள்ளயை-
வேலைக்காரர்களிடம்
ஒப்படைத்து-
போறவங்க-
மத்தியிலே!
உன் வாழ்கையவே-
எங்களுக்காக-
இழந்தாயே!
உன்"கடனை"-
எப்படி நான் தீர்ப்பேன்-
என் தாயே!?
Tuesday, 24 January 2012
பண்ணை!
மாட்டு பண்ணை!
ஆட்டு பண்ணை!
சேவல் பண்ணை!
கோழி பண்ணை!
மனிதனுக்கு பண்ணை!?
அதுக்குதான்-
நாகரிக பேரை சொல்லி!
இருக்குதே-
"மழலையர் பள்ளி"!
ஆட்டு பண்ணை!
சேவல் பண்ணை!
கோழி பண்ணை!
மனிதனுக்கு பண்ணை!?
அதுக்குதான்-
நாகரிக பேரை சொல்லி!
இருக்குதே-
"மழலையர் பள்ளி"!
விளம்பரம்!
அன்று-
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!
இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!
தாய் தந்தையை -
விடங்க!
தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?
இன்னார் மகன்-
நான் !-
என்று சொன்னதுங்க!
இன்று-
ஐ அம் காம்பளான் "பாய்"-என
சொல்லுதுங்க!
தாய் தந்தையை -
விடங்க!
தொலைக்காட்சி -
உறவாகி போனதை-
என்னவென்று சொல்வேனங்க!?
Sunday, 22 January 2012
அய்யா....! சாமி..!
ஊருக்கு-
காத்து வர-
ஜன்னலை திற!
அறைக்குள்-
கதவை சாத்து-
எதை வேணும்னாலும்-
திற!
மக்கள் ஏன் தான்-
மறுக்கிறார்கள்-
அறிவுகண்ணை-
திறக்க!
சீடரே-
கேமரா கண்ணை -
திறந்து வைக்க!
ஆசாமிக்கு-
சபலம் வந்தது-!
வெளிச்சத்திற்கு-
வந்தது!
கற்பழிப்பு புகழ்-
பிரேமானந்தா!
வெடிகுண்டு புகழ்-
அசிமானந்தா!
வீடியோ புகழ்-
நித்தியானந்தா!
மக்கள் ஏமாற-
மாட்டார்கள்-கொஞ்சமாவது
அறிவு இருந்தா!
ஆயிரம் வேர்களை-
கற்றால் தான்-
அரை வைத்தியன்-என்பதுதான்
முதுமொழி!
ஆயிரம் பேரை கொன்றால்தான்-
அரை வைத்தியன்-என்பதாக
மாறியது -புது மொழி!
அன்று-
மண்ணாசை-
பொன்னாசை-
பெண்ணாசை-
துறந்தவன்(வெறுத்தவன்)
முற்றும் துறந்தவன்-
ஆவானே!
இன்று-
முழுசா"தொறக்குரதுதான்-
முற்றும் துறந்தவன்-
என்று எண்ணினார்களோ!
என்னவோ!
Saturday, 21 January 2012
கொலை வெறி!
நடந்தது என்னவோ-
கொலைவெறி -
தாக்குதல் தான்!
கொடுமை என்னவென்றால்-
வழக்கே இல்லாமல் -
ஆனதுதான்!
சாட்சிகள்-
வேண்டுமாம்-வழக்கு
"நிக்க"!
அவள் என்னை-
தாக்க!
பதைபதைப்புடன்-
நான் நிக்க!
பயன்படுத்திய -ஆயுதம்
சிறு புன்னகையை!
நான் எங்கே-
தேடுவேன் சாட்சியை!
கொலைவெறி -
தாக்குதல் தான்!
கொடுமை என்னவென்றால்-
வழக்கே இல்லாமல் -
ஆனதுதான்!
சாட்சிகள்-
வேண்டுமாம்-வழக்கு
"நிக்க"!
அவள் என்னை-
தாக்க!
பதைபதைப்புடன்-
நான் நிக்க!
பயன்படுத்திய -ஆயுதம்
சிறு புன்னகையை!
நான் எங்கே-
தேடுவேன் சாட்சியை!
Friday, 20 January 2012
"பொம்பள பொறுக்கி!"
மறைந்து கொண்டு-
பார்ப்பதும்!
மறையும் வரை-
பார்ப்பதும்!
சிரித்து விட்டு-
சிணுங்குவதும்!
சிணுங்கி கொண்டே-
சிரிப்பதும்!
சாடையாக-
பேசுவதும்!
சத்தமாக -
பேசியதும்!
வேகமாக -
நடப்பதும்!
நடையின் வேகத்தை-
குறைப்பதும்!
தொலை பேசியில்-
அழைத்து விட்டு-
பேசாமல் இருப்பதும்!
பேசாமல் இருக்கவே-
தொலை பேசிக்கு-
அழைப்பதும்!
செய்கைகளால்-
வினாக்கள் தொடுத்தவள்-
நீயே!
விடை தேடி-உன்
வீட்டை சுற்றியவன்-
நானே!
உனக்கு-
"அப்புராணி" என்ற -
பெயரும்!
எனக்கு-
"பொம்பள பொறுக்கி"-
என்ற பெயரும்!
ஏனடி!?
பார்ப்பதும்!
மறையும் வரை-
பார்ப்பதும்!
சிரித்து விட்டு-
சிணுங்குவதும்!
சிணுங்கி கொண்டே-
சிரிப்பதும்!
சாடையாக-
பேசுவதும்!
சத்தமாக -
பேசியதும்!
வேகமாக -
நடப்பதும்!
நடையின் வேகத்தை-
குறைப்பதும்!
தொலை பேசியில்-
அழைத்து விட்டு-
பேசாமல் இருப்பதும்!
பேசாமல் இருக்கவே-
தொலை பேசிக்கு-
அழைப்பதும்!
செய்கைகளால்-
வினாக்கள் தொடுத்தவள்-
நீயே!
விடை தேடி-உன்
வீட்டை சுற்றியவன்-
நானே!
உனக்கு-
"அப்புராணி" என்ற -
பெயரும்!
எனக்கு-
"பொம்பள பொறுக்கி"-
என்ற பெயரும்!
ஏனடி!?
Thursday, 19 January 2012
எங்கே நீதி!
"அம்மாவை"-
பத்தி எழுதுன-
"நக்கீரன் "-
உடைப்பு!
"தீர்ப்பு" வழங்குனா-
மாணவிகளோட -
பேருந்து எரிப்பு!
அஞ்சா நெஞ்சர்" பத்தி-
கணிப்புனா-
தினகரன்"ஆட்கள் -
எரித்து கொலை!
"தோழர்"பத்தி சொன்ன-
"மக்கள்" தொலைகாட்சிக்கு-
தொல்லை!
இத்தனையும்-
செஞ்சவாங்க-
ஜனநாயக வாதி!
"கேலி சித்திரம்"-
"தினமலர்" முன்னால்-
ஆர்பாட்டம் செஞ்சா -
ரத்தம் சொட்ட சொட்ட-
லத்தி அடி!
இதுல எங்கே-
இருக்கு நீதி!?
பத்தி எழுதுன-
"நக்கீரன் "-
உடைப்பு!
"தீர்ப்பு" வழங்குனா-
மாணவிகளோட -
பேருந்து எரிப்பு!
அஞ்சா நெஞ்சர்" பத்தி-
கணிப்புனா-
தினகரன்"ஆட்கள் -
எரித்து கொலை!
"தோழர்"பத்தி சொன்ன-
"மக்கள்" தொலைகாட்சிக்கு-
தொல்லை!
இத்தனையும்-
செஞ்சவாங்க-
ஜனநாயக வாதி!
"கேலி சித்திரம்"-
"தினமலர்" முன்னால்-
ஆர்பாட்டம் செஞ்சா -
ரத்தம் சொட்ட சொட்ட-
லத்தி அடி!
இதுல எங்கே-
இருக்கு நீதி!?
சிற்றின்பம்!
பெண்ணின் -
சிரிப்பும்!
உதட்டில் புகையும்-
சிகரட் நெருப்பும்!
தெரியும்-
சிற்றின்பமாக!
தெரியாது -
மாறுவது-
பெரும் துயரமாக!
சிரிப்பும்!
உதட்டில் புகையும்-
சிகரட் நெருப்பும்!
தெரியும்-
சிற்றின்பமாக!
தெரியாது -
மாறுவது-
பெரும் துயரமாக!
Wednesday, 18 January 2012
அப்படி போடு..
இலவசமா போட்டாங்க-
சோறு தட்டுல!
அப்புறம்-
கூடுதலா -போட்டாங்க
முட்டையை!
இப்ப இலவசம் -என்கிற
பேர்ல போடுறாங்க -
மக்களுக்கு "பட்டையை"!
சோறு தட்டுல!
அப்புறம்-
கூடுதலா -போட்டாங்க
முட்டையை!
இப்ப இலவசம் -என்கிற
பேர்ல போடுறாங்க -
மக்களுக்கு "பட்டையை"!
Tuesday, 17 January 2012
அபராதம்!
அரசு தரும்-
தண்டனை!
சாலை விதி முறைகளை-
மீறுபவர்களுக்கு!
யார் தருவது -
தண்டனை!?
சாலையோர மக்களின்-
நிலை மாற்றாத-
அரசுகளுக்கு!
தண்டனை!
சாலை விதி முறைகளை-
மீறுபவர்களுக்கு!
யார் தருவது -
தண்டனை!?
சாலையோர மக்களின்-
நிலை மாற்றாத-
அரசுகளுக்கு!
Monday, 16 January 2012
உங்களை பற்றியதுதான்...
காய்ந்து போனது-
பூக்களும்!
மடிந்து போனது-
மரங்களும்!
ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!
பிளவு பட்டது-
பூமியும்!
இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!
இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!
வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!
"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!
நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!
நீங்கள் !
தியாகிகள்!
அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!
பூக்களும்!
மடிந்து போனது-
மரங்களும்!
ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!
பிளவு பட்டது-
பூமியும்!
இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!
இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!
வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!
"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!
நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!
நீங்கள் !
தியாகிகள்!
அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!
Sunday, 15 January 2012
குள்ளமாக இமயம்!
குள்ளமாக-
தெரிந்திடும்-
இமயமும்!
ஒன்று சேர்க்க-
முடியுமானால்-
காஷ்மீர் மக்களின்-
கண்ணீரை!
தெரிந்திடும்-
இமயமும்!
ஒன்று சேர்க்க-
முடியுமானால்-
காஷ்மீர் மக்களின்-
கண்ணீரை!
தாயே. ! கேவலம்...!
தாய் பால்-
கடவுள் கொடுத்த -
வரம்!
குழந்தைக்கு-
கொடுக்க மறுக்கும்-
தாய்தான் -
அடைகிறாள்
கேவலம்!
கடவுள் கொடுத்த -
வரம்!
குழந்தைக்கு-
கொடுக்க மறுக்கும்-
தாய்தான் -
அடைகிறாள்
கேவலம்!
Saturday, 14 January 2012
காதல் வந்தால்..
கழுதையின் சத்தம் -
கேட்கும் கவிதையாக!
கவிதை பேசும்-
கவிஞன் தெரிவான்-
கழுதையாக!
சிறகு முளைக்கும்-
படகுக்கும்!
சிறகு விரிய மறுக்கும்-
பறவைக்கும்!
தெரு கோடி பிடிக்கும்-
மாடியில உள்ளவனுக்கு!
விண் மீனை சேர்த்து -
வீடுகட்ட தோண்டும்!-
குடிசையில் உள்ளவனுக்கு!
வன்முறை பேசும்-
சமாதான புறாவும்'!
பூக்களை துப்பும்-
துப்பாக்கியின் முனைகளும்!
அற்புதமாக்கும்-
அற்பனையும்!
அசிங்க படுத்தும்-
அழகனையும்!
உயிர் நண்பனையும் -
ஒதுக்கிட வைக்கும்!
ஒதுங்கி போறவளை-
உயிராய் நினைக்க வைக்கும்!
மணம் இருக்காது-
தன் வீட்டு மல்லிக்கு!
மூக்கை துளைக்கும்-
அவ வீட்டு ஊமத்தம் பூ!
காதல்-
எத்தனையோ-
மாற்றங்கள் தருவது!
எத்தனையோ பேருக்கு-
ஏமாற்றங்கள் தந்தது!
கேட்கும் கவிதையாக!
கவிதை பேசும்-
கவிஞன் தெரிவான்-
கழுதையாக!
சிறகு முளைக்கும்-
படகுக்கும்!
சிறகு விரிய மறுக்கும்-
பறவைக்கும்!
தெரு கோடி பிடிக்கும்-
மாடியில உள்ளவனுக்கு!
விண் மீனை சேர்த்து -
வீடுகட்ட தோண்டும்!-
குடிசையில் உள்ளவனுக்கு!
வன்முறை பேசும்-
சமாதான புறாவும்'!
பூக்களை துப்பும்-
துப்பாக்கியின் முனைகளும்!
அற்புதமாக்கும்-
அற்பனையும்!
அசிங்க படுத்தும்-
அழகனையும்!
உயிர் நண்பனையும் -
ஒதுக்கிட வைக்கும்!
ஒதுங்கி போறவளை-
உயிராய் நினைக்க வைக்கும்!
மணம் இருக்காது-
தன் வீட்டு மல்லிக்கு!
மூக்கை துளைக்கும்-
அவ வீட்டு ஊமத்தம் பூ!
காதல்-
எத்தனையோ-
மாற்றங்கள் தருவது!
எத்தனையோ பேருக்கு-
ஏமாற்றங்கள் தந்தது!
மகிழ்ச்சி!
கொடுத்தாலும்-
பெற்றாலும்-
மகிழ்ச்சி-
முத்தத்தில்-
பிரியமானவர்களுக்கு!
வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
மகிழ்ச்சி-
யுத்தத்தில்-
வீரர்களுக்கு!
பெற்றாலும்-
மகிழ்ச்சி-
முத்தத்தில்-
பிரியமானவர்களுக்கு!
வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
மகிழ்ச்சி-
யுத்தத்தில்-
வீரர்களுக்கு!
Friday, 13 January 2012
Wednesday, 11 January 2012
"அகதி"தாய்! $
வெளியில்-
உள்ளதை-
உள்ளிழுக்கும்-
பேரலை!
என்னிலிருந்து-
வெளிவந்தாய்
மகளே!
உன் பசியமத்த -
நெஞ்சுல-
பால் இல்ல!
பொருளாதார தடை-
விதிச்சவனுக்கோ-
நெஞ்சுல-
ஈரம் இல்ல !
என்னென்னமோ-
செஞ்சுகிட்டு!
ஏதேதோ-
பண்ணிக்கிட்டு!!
மக்களை அழிக்கிறான்-
குண்டுகளை வீசி கொண்டு!
மகளே!
உன் அப்பனோட-
நான் "தங்கியது"-என்
தவறா?
என் கருவுல-
நீ "தங்கியது-"
உன் தவறா?
வலியும் சுகமாக-
இருந்தது-
நீ கருவுல-
நெளிந்திடும்போது!
புதை குழியில் அசைவற்று-
கிடப்பதை பார்க்கையில்-
அழுதிட மனம் வெதும்புது!
மகளே!
பொறந்த மண்ணுல -
மடிஞ்ச சந்தோசம்-
உனக்கு இருக்கலாம்!
இந்த நிலைக்கு-
நம்மை தள்ளியவனுக்கு-
அடக்கம் செய்ய-
ஒரு-
புடி மண்ணு
இல்லாம போகலாம்!
இனத்தின் பேரல்-
மொழியின் பேரால்-
மக்கள் மடிகிறார்கள்-
ஆக்கிரமிப்பு போரால்!
காரணங்கள் தெரியாமல்.
இருக்குமோ!-
என்னவென்று. !
தெரிந்த காரணம் தான். -
அது "எண்ணெய்"என்று!
மாறிடுது உலகம்-
ஒவ்வொரு நாளும்!
நிலையில்லாதது-
எந்த நிலையும்!
உலகை மிரட்டிய -
கிட்லருக்கு கிடைத்தது-
தற்கொலை!
முசோலினிக்கு-
தூக்கு!
இது-
கடந்த கால-
வரலாறு!
இன்றைய அத்துமீற்பவர்களே!
இன்றைக்கும் நிலை மாறி வருதே!
நேற்று வரை -
நாட்டின் அதிபதி!
இன்று-
சிறை அறையில்-
கிடக்கிறார் அடைந்து!
அநீதி-
நிலைபெறாது!
ஒரு நாள் -
வெற்றி பெறும்-
நீதியானது!
மகளே!
பொறந்த மண்ணை-
விட்டு செல்கிறேன்!
சுவாசித்த காற்றை-
விட்டு செல்கிறேன்!
நாட்டை துறந்து -
செல்கிறேன்!
"அகதி'என்ற பேருக்குள்-
அடங்கிட போகிறேன்!
உயிர் வாழும் -
ஆசையில் இல்ல!
உயிரின் உருவமான-
மிச்ச குழந்தைகள்-
சாககூடாது-
என்பதாலே!
ஓ!
உலக மக்களே!
பதில் சொல்லுங்களேன்!
சொர்க்கம் என்-
குடும்பமாக இருந்தது!
நரகத்தை சுவைக்கத்தான்-
நான்-
போறதோ?
உள்ளதை-
உள்ளிழுக்கும்-
பேரலை!
என்னிலிருந்து-
வெளிவந்தாய்
மகளே!
உன் பசியமத்த -
நெஞ்சுல-
பால் இல்ல!
பொருளாதார தடை-
விதிச்சவனுக்கோ-
நெஞ்சுல-
ஈரம் இல்ல !
என்னென்னமோ-
செஞ்சுகிட்டு!
ஏதேதோ-
பண்ணிக்கிட்டு!!
மக்களை அழிக்கிறான்-
குண்டுகளை வீசி கொண்டு!
மகளே!
உன் அப்பனோட-
நான் "தங்கியது"-என்
தவறா?
என் கருவுல-
நீ "தங்கியது-"
உன் தவறா?
வலியும் சுகமாக-
இருந்தது-
நீ கருவுல-
நெளிந்திடும்போது!
புதை குழியில் அசைவற்று-
கிடப்பதை பார்க்கையில்-
அழுதிட மனம் வெதும்புது!
மகளே!
பொறந்த மண்ணுல -
மடிஞ்ச சந்தோசம்-
உனக்கு இருக்கலாம்!
இந்த நிலைக்கு-
நம்மை தள்ளியவனுக்கு-
அடக்கம் செய்ய-
ஒரு-
புடி மண்ணு
இல்லாம போகலாம்!
இனத்தின் பேரல்-
மொழியின் பேரால்-
மக்கள் மடிகிறார்கள்-
ஆக்கிரமிப்பு போரால்!
காரணங்கள் தெரியாமல்.
இருக்குமோ!-
என்னவென்று. !
தெரிந்த காரணம் தான். -
அது "எண்ணெய்"என்று!
மாறிடுது உலகம்-
ஒவ்வொரு நாளும்!
நிலையில்லாதது-
எந்த நிலையும்!
உலகை மிரட்டிய -
கிட்லருக்கு கிடைத்தது-
தற்கொலை!
முசோலினிக்கு-
தூக்கு!
இது-
கடந்த கால-
வரலாறு!
இன்றைய அத்துமீற்பவர்களே!
இன்றைக்கும் நிலை மாறி வருதே!
நேற்று வரை -
நாட்டின் அதிபதி!
இன்று-
சிறை அறையில்-
கிடக்கிறார் அடைந்து!
அநீதி-
நிலைபெறாது!
ஒரு நாள் -
வெற்றி பெறும்-
நீதியானது!
மகளே!
பொறந்த மண்ணை-
விட்டு செல்கிறேன்!
சுவாசித்த காற்றை-
விட்டு செல்கிறேன்!
நாட்டை துறந்து -
செல்கிறேன்!
"அகதி'என்ற பேருக்குள்-
அடங்கிட போகிறேன்!
உயிர் வாழும் -
ஆசையில் இல்ல!
உயிரின் உருவமான-
மிச்ச குழந்தைகள்-
சாககூடாது-
என்பதாலே!
ஓ!
உலக மக்களே!
பதில் சொல்லுங்களேன்!
சொர்க்கம் என்-
குடும்பமாக இருந்தது!
நரகத்தை சுவைக்கத்தான்-
நான்-
போறதோ?
Tuesday, 10 January 2012
யுக்தி!
ஒன்று வாங்கினால்-
ஒன்று இலவசம்-
இது-
வியாபார யுக்தி!
கொஞ்ச நேர இன்பம்-
நீண்ட கால துன்பம்(எய்ட்ஸ்)-
இது-
விபசாரத்தின் புத்தி!
ஒன்று இலவசம்-
இது-
வியாபார யுக்தி!
கொஞ்ச நேர இன்பம்-
நீண்ட கால துன்பம்(எய்ட்ஸ்)-
இது-
விபசாரத்தின் புத்தி!
மன்னிப்பு!
மழையையும் -
இடிகளையும்-
தருவதுண்டு-
மேகம்!
அம்மேகங்களை-
வெறுப்பதில்லை!-
மனம்!
சூட்டினால்-
புண்ணாக்கிய-
உணவையும்-
சுவைக்க-
மறுப்பதில்லை-
நாக்கு!
சாலை விபத்துகளால்-
சாலை பயணத்தை யாரும்-
விடுவதில்லை!
தெருவுல வீசுவதில்லை-
தன் மடியில்-
சிறு நீர் கழித்த-
குழந்தையை!
ரசிக்காமல் இருப்பதில்லை-
அழிவுகளை தந்த -
கடலையும்!
பிரச்சனை பேசுவதில்லை-
நேரந்தவறி வந்த -
பேருந்திடம்!
யாரும் விட்டு போக-
விரும்புவதில்லை-
பொறுமை இழந்து -
குலுங்கும்-
பூமியை!
இவையெல்லாம் -
ஏற்றுகொள்ளும்-
மனதுக்கு!
"காயபடுத்திவர்களை"-
மன்னிக்க மறுப்பது-
எதெற்கு?
இடிகளையும்-
தருவதுண்டு-
மேகம்!
அம்மேகங்களை-
வெறுப்பதில்லை!-
மனம்!
சூட்டினால்-
புண்ணாக்கிய-
உணவையும்-
சுவைக்க-
மறுப்பதில்லை-
நாக்கு!
சாலை விபத்துகளால்-
சாலை பயணத்தை யாரும்-
விடுவதில்லை!
தெருவுல வீசுவதில்லை-
தன் மடியில்-
சிறு நீர் கழித்த-
குழந்தையை!
ரசிக்காமல் இருப்பதில்லை-
அழிவுகளை தந்த -
கடலையும்!
பிரச்சனை பேசுவதில்லை-
நேரந்தவறி வந்த -
பேருந்திடம்!
யாரும் விட்டு போக-
விரும்புவதில்லை-
பொறுமை இழந்து -
குலுங்கும்-
பூமியை!
இவையெல்லாம் -
ஏற்றுகொள்ளும்-
மனதுக்கு!
"காயபடுத்திவர்களை"-
மன்னிக்க மறுப்பது-
எதெற்கு?
எண்ணம்!
என் "எண்ணத்தை-"
உன்னிடம் -
சொல்லிட-
எனக்கில்லை-
தயக்கம்!
"இவன் கூடவா..!!?"-என
பரிதவிப்பியோ-
என்கின்ற-
தயக்கமே-
எனக்கு..!!
உன்னிடம் -
சொல்லிட-
எனக்கில்லை-
தயக்கம்!
"இவன் கூடவா..!!?"-என
பரிதவிப்பியோ-
என்கின்ற-
தயக்கமே-
எனக்கு..!!
Sunday, 8 January 2012
வாலிபனே...!
வாழ்வு என்பது-
நண்பர்களிடம் -
"மொக்கை" போடுவதும்!
பெண்ணை கண்டால்-
"கடலை"போடுவது தானா!?
ஆராய்ச்சி நடக்குதடா-
வட்ட நிலவுல!
அசிங்கம்டா -
"வட்ட வட்ட" -
புகை விடுவதிலே!
ஒரு கிராம்-
தங்கம் இருக்காம்-
ஒரு டன் -
மண்ணுல !
உன் குடும்ப எதிர்காலம்-
இருக்குதடா-
உன் வளமான-
வாழ்வுல!
உறக்கம் போதாதா?
ஓய்வும் போதாதா?-
இவ்விரண்டிலும்-
கழிவதுதான்-
உன் வாழ்வானதா?
பொறந்து இருக்கலாம்-
பணக்கார அப்பனுக்கோ!
கட்டி இருக்கலாம்-
பணக்கார பொண்ணையோ!
இதில் சிறப்பு அடையுமோ-
உன் பிறவி பயனோ?
கௌரவம் இல்லை -
அடுத்தவன் பணம்-
லட்சங்களை வைத்து கொள்வதிலே!
மானமும் மரியாதையும்-
உள்ளது -
உழச்ச பணத்தில் மிச்சம் -
ஒரு ரூபாய்-
உன் கையில-
இருப்பதிலே!
எச்ச"தண்ணிக்கும்"-
எச்சி பீடிகளிலும்-
கழியனுமா?-
உன் மிச்ச வாழ்கையும்!
பாட்டில்"களில்-
பங்கு தருபவன்!
சாப்பாட்டில் -
பங்குதர மாட்டான்!
பெரியவங்களை குறை-
சொல்லாதே!
பெருசா-
என்ன-
நாம் செய்தோம் -
என்பதை -
எண்ண மறவாதே!
படைத்ததின் நோக்கத்தை -
அடையுதடா-
படைப்புகளெல்லாம்!
படைப்புகளில்-
சிறந்தவனே!
உன் வாழ்வு-
வீணாக கழியலாமா?
முழிசிகிட்டு இருக்கையிலேயே-
முழுசா முழுங்குற -
உலகம் இது!
இங்கே தூக்கத்துல -
இருந்தா என்ன ஆவது!
உனக்காக -
எனக்காக-
உலகம் நிக்காது!
உருப்படியான வாழ்வு-
வாழ நீ-
ஓடு !
ஓடுனால்தான் -
நீர் நதியாகும்!
தேங்கினால்-
அது-
சாக்கடையாகும்!
நீ எப்படி-
உயிருள்ள பிணமா!!?
இல்லை -
உயிர் போன-
பின்னும் -
வாழுபவனா?(சாதனையாளனா)
நண்பர்களிடம் -
"மொக்கை" போடுவதும்!
பெண்ணை கண்டால்-
"கடலை"போடுவது தானா!?
ஆராய்ச்சி நடக்குதடா-
வட்ட நிலவுல!
அசிங்கம்டா -
"வட்ட வட்ட" -
புகை விடுவதிலே!
ஒரு கிராம்-
தங்கம் இருக்காம்-
ஒரு டன் -
மண்ணுல !
உன் குடும்ப எதிர்காலம்-
இருக்குதடா-
உன் வளமான-
வாழ்வுல!
உறக்கம் போதாதா?
ஓய்வும் போதாதா?-
இவ்விரண்டிலும்-
கழிவதுதான்-
உன் வாழ்வானதா?
பொறந்து இருக்கலாம்-
பணக்கார அப்பனுக்கோ!
கட்டி இருக்கலாம்-
பணக்கார பொண்ணையோ!
இதில் சிறப்பு அடையுமோ-
உன் பிறவி பயனோ?
கௌரவம் இல்லை -
அடுத்தவன் பணம்-
லட்சங்களை வைத்து கொள்வதிலே!
மானமும் மரியாதையும்-
உள்ளது -
உழச்ச பணத்தில் மிச்சம் -
ஒரு ரூபாய்-
உன் கையில-
இருப்பதிலே!
எச்ச"தண்ணிக்கும்"-
எச்சி பீடிகளிலும்-
கழியனுமா?-
உன் மிச்ச வாழ்கையும்!
பாட்டில்"களில்-
பங்கு தருபவன்!
சாப்பாட்டில் -
பங்குதர மாட்டான்!
பெரியவங்களை குறை-
சொல்லாதே!
பெருசா-
என்ன-
நாம் செய்தோம் -
என்பதை -
எண்ண மறவாதே!
படைத்ததின் நோக்கத்தை -
அடையுதடா-
படைப்புகளெல்லாம்!
படைப்புகளில்-
சிறந்தவனே!
உன் வாழ்வு-
வீணாக கழியலாமா?
முழிசிகிட்டு இருக்கையிலேயே-
முழுசா முழுங்குற -
உலகம் இது!
இங்கே தூக்கத்துல -
இருந்தா என்ன ஆவது!
உனக்காக -
எனக்காக-
உலகம் நிக்காது!
உருப்படியான வாழ்வு-
வாழ நீ-
ஓடு !
ஓடுனால்தான் -
நீர் நதியாகும்!
தேங்கினால்-
அது-
சாக்கடையாகும்!
நீ எப்படி-
உயிருள்ள பிணமா!!?
இல்லை -
உயிர் போன-
பின்னும் -
வாழுபவனா?(சாதனையாளனா)
கூடா "குளம்
பேருந்து கட்டணம்-
உயர்வு!
பால் விலை-
உயர்வு!
தடையான -
மின்சாரம்!
தடையில்லா-
மது பானம்!
ஏன்?-
கொஞ்சம் கொஞ்சமாக-
சாவுறீங்க!
மொத்தமா சாவுங்க-
என்பது போல!
மடியட்டும்-
மனித குளம் என!
'அணு' நிலையத்தை -
தாங்கி நிக்குதோ-
"கூடங்குளம்"!
உயர்வு!
பால் விலை-
உயர்வு!
தடையான -
மின்சாரம்!
தடையில்லா-
மது பானம்!
ஏன்?-
கொஞ்சம் கொஞ்சமாக-
சாவுறீங்க!
மொத்தமா சாவுங்க-
என்பது போல!
மடியட்டும்-
மனித குளம் என!
'அணு' நிலையத்தை -
தாங்கி நிக்குதோ-
"கூடங்குளம்"!
Saturday, 7 January 2012
காதல்,கயிறு!
சொல்லபோகிறது -
காதலோ!!
மாட்டபோகிறது-
தூக்கு-
கயிறோ!!
நல்லா-
யோசித்துகொள்-
"மாட்டிய பிறகு"-
தப்பிக்க -
முடியாது!
காதலோ!!
மாட்டபோகிறது-
தூக்கு-
கயிறோ!!
நல்லா-
யோசித்துகொள்-
"மாட்டிய பிறகு"-
தப்பிக்க -
முடியாது!
Monday, 2 January 2012
அது போதும்!
கைக்குள்ளே-
மடித்து வைக்கும் -
பத்த மடை-
பாயா!?
இலவம் பஞ்சு வைத்த -
மெத்தையா!?
பூக்கள் தூவிய-
படுக்கையா!
ஆனந்தம் படுத்தும்-
அருவியா!?
கண்ணுக்கு-
குளிர்ச்சி-
தரும் பசுமையா!?
உச்சியை உரசி செல்லும்-
உதகை மேகமா!?
இத்தனையவும்-
விட!
என்னவளின்-
இதழின் ஓரத்தில்-
இடம் போதும்-
நான் இருந்து -
விட!
மடித்து வைக்கும் -
பத்த மடை-
பாயா!?
இலவம் பஞ்சு வைத்த -
மெத்தையா!?
பூக்கள் தூவிய-
படுக்கையா!
ஆனந்தம் படுத்தும்-
அருவியா!?
கண்ணுக்கு-
குளிர்ச்சி-
தரும் பசுமையா!?
உச்சியை உரசி செல்லும்-
உதகை மேகமா!?
இத்தனையவும்-
விட!
என்னவளின்-
இதழின் ஓரத்தில்-
இடம் போதும்-
நான் இருந்து -
விட!
''நான்'' ''தான்''
வேலையை -
பார்த்துகொண்டு-
போயிருக்கனும் தான்!
உன் வீட்டு -
கதவின் இடுக்கை-
பார்த்து இருக்க கூடாது -
நான்!
நீ-
என்னை பார்த்து -
கொண்டு இருந்ததை -
பார்த்தேன் தான்!
அந்த நொடி பொழுதில் -
தொலைந்தவன் -
நான்!
பார்த்துகொண்டு-
போயிருக்கனும் தான்!
உன் வீட்டு -
கதவின் இடுக்கை-
பார்த்து இருக்க கூடாது -
நான்!
நீ-
என்னை பார்த்து -
கொண்டு இருந்ததை -
பார்த்தேன் தான்!
அந்த நொடி பொழுதில் -
தொலைந்தவன் -
நான்!
எப்படின்னு தெரியல!
ஆரம்பிக்கவும் -
தெரியல!
முடிக்கவும் -
முடியல!
கவிதை -
எழும்போது!
கன்னி -
அவளின்-
கண்களை-
பார்க்கும்போது!
தெரியல!
முடிக்கவும் -
முடியல!
கவிதை -
எழும்போது!
கன்னி -
அவளின்-
கண்களை-
பார்க்கும்போது!
அடியே....
அடி பாவி!
வாய்தாக்களும்-
விசாரிப்புகளும்-
உண்டு !-
கொலை-
குற்றத்திற்கும்!
என்னையவே -
தேடி அலைய வைத்து-
விட்டாயே-'
'உன்னை-
திரும்பி பார்த்ததுக்கு!
வாய்தாக்களும்-
விசாரிப்புகளும்-
உண்டு !-
கொலை-
குற்றத்திற்கும்!
என்னையவே -
தேடி அலைய வைத்து-
விட்டாயே-'
'உன்னை-
திரும்பி பார்த்ததுக்கு!
Subscribe to:
Posts (Atom)