பத்திரபடுத்தி இருந்தேன்-
"பாதகத்தி-" தந்த
பொருள் ஒன்னை!
துடைக்க கூட-
மனம் இல்லை-
வியர்வையை!
இன்று நான்-
துடைக்கிறேன்-அவள்
பிரிவில் வரும்-
கண்ணீரை!
இதனால் தானோ-
தந்தாள் எனக்கு-
கைகுட்டையை!?
-----------------------
கோமணத்தில் இருந்து-
வேஷ்டிக்கு மாறினான்-
பசியமத்தும்-
விவசாயி!
பெண்ணை-
புடவையிலிருந்து-
கச்சை துண்டுடன்-
ஆட வைப்பவனா!?-
படைப்பாளி!?
--------------------
அரசு அறிவிப்பு-
நாள் வருமானம்-
இருபது ரூபாய் என்றால்-
வறுமை கோட்டுக்கு-
கீழ் இல்லையென்று!
இனி சொல்லலாம்-
கிழிஞ்ச கோமனதுண்டும்-
ஒட்டு போட்ட கைதுண்டும்-
வைத்திருப்பவன்-
கோடீஸ்வரன் என்று!!
----------------------------
"பொட்டு" கூட-
வாங்க முடியாத-
விலைவாசி!
"குறிப்பிட்ட நாளில்"-
பொட்டு தங்கமாவது-
வாங்கனுமா!?-
நண்பா-
நீ-யோசி!
-------------------
வேஷ்டி -
நாள் ஆக ஆக-
கோமனதுண்டானது!
அது-
எழுபதஞ்சி சதவிகிதம்-
ஆடி தள்ளு படியில-
வாங்கினது!
------------------------
Sunday, 29 April 2012
Saturday, 28 April 2012
இது கவிதை அல்ல...(2 )
செவ்வனே-
கடமை செய்வது-
இயற்கைகள்!
சேவகதுக்கு-
ஆள் தேடுபவர்கள்!-
மனிதர்கள்!
உதிக்க ஆயத்தமானான்-
கதிரவன்!
கலவரம் செய்ய-
கண் விழித்தான்-
"ஒருவன்"!
திறக்க பட்ட-
கடை வீதிகள்!
பரப்பி வைக்கபட்ட-
காய் கறிகள்!
கொஞ்ச நேரத்தில்-
நடக்க இருக்கும்-
ரத்த களரிகள்!
அணையாது-
ஆலமரத்தில்-
பட்ட தீ!
நகரெங்கும் பரவியது-
ஒரு செய்தி-
இல்லை-
"வதந்தீ" !
டிக் - டிக்-
வினாடிகள் -
கரைந்தது!
மணி எனும் -
கடலில் தொலைந்தது!
ஓ வென-
வரும் கொலைவெறி-
கூட்டம்!
ஆ வென-
அலறி சிதறும்-
மக்கள் ஓட்டம்!
தாக்குதல்-
மூர்க்கதனமானது!
இரக்க குணம்-
அற்றது!
சில நாட்கள்-
தொடர்ந்தது!
கடைசி காட்சியில்-
வரும்- காவல் துறையை-
போல!
எல்லாம் "முடிந்த"-
பின் வந்தது-
நாடகம் போல!
ஏன் இந்த -
கலவரம்!?
என் நாட்டில்-
தொடருதே-
இந்த நிலவரம்!
சிந்திக்க மறுக்குதே-
மக்கள்!
சிந்தனை இல்லைஎன்றால்-
அது மாக்கள்!
பரப்பிய" வதந்தீ-"
வழி பாட்டு தளத்தில்-
மாட்டு இறைச்சி!
வீசியதாக சொல்ல பட்டது-
சிறுபான்மை மக்கள்-
என பேச்சி!
தீயில் கருகியது-
சொத்துகள்!
அத்துடன் சேர்ந்து-
மனித நேயங்கள்!
திருந்துமா!?-
என் நாடு!,?
இதுவே தொடர்ந்தால்-
நாடே-
சுடு காடு!!
-முற்றும்!
(உண்மை செய்தி -இறைச்சி வீசப்பட்ட இடம்;
ஹைதராபாத் ;பகத்புரா கோவில்;-
வீசிய கயவன்-சிவகுமார் (என்ற) ராகேஷ்-
இந்த உண்மை சம்பவத்தை வைத்து நடந்த கலவரம்)
நான் செய்தது-
கற்பனையுடன் கவிதையில் சொன்னது!
முதல் பாகம் படித்து கொள்ளவும்!
கடமை செய்வது-
இயற்கைகள்!
சேவகதுக்கு-
ஆள் தேடுபவர்கள்!-
மனிதர்கள்!
உதிக்க ஆயத்தமானான்-
கதிரவன்!
கலவரம் செய்ய-
கண் விழித்தான்-
"ஒருவன்"!
திறக்க பட்ட-
கடை வீதிகள்!
பரப்பி வைக்கபட்ட-
காய் கறிகள்!
கொஞ்ச நேரத்தில்-
நடக்க இருக்கும்-
ரத்த களரிகள்!
அணையாது-
ஆலமரத்தில்-
பட்ட தீ!
நகரெங்கும் பரவியது-
ஒரு செய்தி-
இல்லை-
"வதந்தீ" !
டிக் - டிக்-
வினாடிகள் -
கரைந்தது!
மணி எனும் -
கடலில் தொலைந்தது!
ஓ வென-
வரும் கொலைவெறி-
கூட்டம்!
ஆ வென-
அலறி சிதறும்-
மக்கள் ஓட்டம்!
தாக்குதல்-
மூர்க்கதனமானது!
இரக்க குணம்-
அற்றது!
சில நாட்கள்-
தொடர்ந்தது!
கடைசி காட்சியில்-
வரும்- காவல் துறையை-
போல!
எல்லாம் "முடிந்த"-
பின் வந்தது-
நாடகம் போல!
ஏன் இந்த -
கலவரம்!?
என் நாட்டில்-
தொடருதே-
இந்த நிலவரம்!
சிந்திக்க மறுக்குதே-
மக்கள்!
சிந்தனை இல்லைஎன்றால்-
அது மாக்கள்!
பரப்பிய" வதந்தீ-"
வழி பாட்டு தளத்தில்-
மாட்டு இறைச்சி!
வீசியதாக சொல்ல பட்டது-
சிறுபான்மை மக்கள்-
என பேச்சி!
தீயில் கருகியது-
சொத்துகள்!
அத்துடன் சேர்ந்து-
மனித நேயங்கள்!
திருந்துமா!?-
என் நாடு!,?
இதுவே தொடர்ந்தால்-
நாடே-
சுடு காடு!!
-முற்றும்!
(உண்மை செய்தி -இறைச்சி வீசப்பட்ட இடம்;
ஹைதராபாத் ;பகத்புரா கோவில்;-
வீசிய கயவன்-சிவகுமார் (என்ற) ராகேஷ்-
இந்த உண்மை சம்பவத்தை வைத்து நடந்த கலவரம்)
நான் செய்தது-
கற்பனையுடன் கவிதையில் சொன்னது!
முதல் பாகம் படித்து கொள்ளவும்!
Thursday, 26 April 2012
இது கவிதை அல்ல..(1 )
மயான-
அமைதியானது!
மரணங்களால்-
ஏற்பட்டது!
புகையும்-
டயர்கள்!-
ரோட்டில்!
எரியும்-
வயிறுகள்-
வீட்டில்!
சிதறி கிடக்கும்-
செருப்புகள்!
அதற்க்கு சாயம்-
குருதிகள்!
மிரட்சியான-
பார்வைகள்!
மிரட்டும்-
துப்பாக்கிகள்!
துடிக்க துடிக்க-
இறந்த உடல்கள்!
சொல்லப்பட்டது-
"கட்டு"படுத்த-
நடவடிக்கைகள்!
"அது"-
நடக்கும் வரை-
பிரியத்துக்குரியவர்கள்!
நடந்த பிறகோ-
பிரிவினைவாதிகள்!
நடந்தது-
களேபரம்!
வெறிச்சோடியது-
நகரம்!
ஆள் நடமாட்டம்-
இல்லாமல் ஆனது-
நரகம்!
ஊரு அடங்கியது-
கலவரத்தாலா!?
"அடக்க" சொல்லி -
வந்த உத்தரவாலா!?
காலம் தள்ள முடியாமல்-
கிடக்கிறார்கள்-
தள்ளு வண்டிக்காரர்கள்!
அடுத்த வேலை உணவுக்கே-
அரசு உதவியை-
எதிர்பார்க்கும்-
அடுக்கு மாடிகள்!
விடு முறை என்றாலே-
குதூகலிக்கும்-
குழந்தைகள்!
வீடே ஆகிவிட்டது-
சிறைகள்!
பிரசவ பெண்கள்!
அதை விட வலியில்-
அப்பெண்களின்-
தாய்மார்கள்!
ஏன் இந்த -
அவல காட்சி!
நாற்றம் அடிக்கும்-
ரத்த கவுச்சி!
காரணம்-
சில துண்டு-
இறைச்சி!
-(தொடரும்.....)
அமைதியானது!
மரணங்களால்-
ஏற்பட்டது!
புகையும்-
டயர்கள்!-
ரோட்டில்!
எரியும்-
வயிறுகள்-
வீட்டில்!
சிதறி கிடக்கும்-
செருப்புகள்!
அதற்க்கு சாயம்-
குருதிகள்!
மிரட்சியான-
பார்வைகள்!
மிரட்டும்-
துப்பாக்கிகள்!
துடிக்க துடிக்க-
இறந்த உடல்கள்!
சொல்லப்பட்டது-
"கட்டு"படுத்த-
நடவடிக்கைகள்!
"அது"-
நடக்கும் வரை-
பிரியத்துக்குரியவர்கள்!
நடந்த பிறகோ-
பிரிவினைவாதிகள்!
நடந்தது-
களேபரம்!
வெறிச்சோடியது-
நகரம்!
ஆள் நடமாட்டம்-
இல்லாமல் ஆனது-
நரகம்!
ஊரு அடங்கியது-
கலவரத்தாலா!?
"அடக்க" சொல்லி -
வந்த உத்தரவாலா!?
காலம் தள்ள முடியாமல்-
கிடக்கிறார்கள்-
தள்ளு வண்டிக்காரர்கள்!
அடுத்த வேலை உணவுக்கே-
அரசு உதவியை-
எதிர்பார்க்கும்-
அடுக்கு மாடிகள்!
விடு முறை என்றாலே-
குதூகலிக்கும்-
குழந்தைகள்!
வீடே ஆகிவிட்டது-
சிறைகள்!
பிரசவ பெண்கள்!
அதை விட வலியில்-
அப்பெண்களின்-
தாய்மார்கள்!
ஏன் இந்த -
அவல காட்சி!
நாற்றம் அடிக்கும்-
ரத்த கவுச்சி!
காரணம்-
சில துண்டு-
இறைச்சி!
-(தொடரும்.....)
Wednesday, 25 April 2012
தந்தை!
தீண்ட தகாதவராம்-
சட்ட தந்தை!
சுட்டு வீழ்த்தபட்டார்-
தேச தந்தை!
- மனித குல விரோதிகள் செயல்!
தன் தந்தையை-
"ஒதுக்கி "வைத்து பார்ப்பது-
மகனின் துரோக-
செயல்!
-------------------------
கரை ஒதுங்கும்-
கடலில் விழுந்த-
கல்!
கரை சேர வழி ஏது?-
கிணற்றில் விழுந்த-
கல்!
தாய்-
பாசத்தையோ-
கோபத்தையோ-
தெரிவித்திடுவாள்-
கண்ணீரால்!
தகப்பன்-
வரும் கண்ணீரை-
அடக்கி கொள்வான்-
வெட்கத்தால்!
------------------------
இருக்கும் வரை-
தெரியாது!
பணத்தின் -
மதிப்பும்!
நட்பின்-
இனிப்பும்!
"இருக்கும்" வரை-
தெரியாது-
தந்தையின்-
அருமையும்!
--------------------
சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
வறுமையில!
அவர்கள்-
தியாகங்களை-
மறந்தவர்கள்-
ஆட்சியில!
மகன்-
அப்பன் கட்டுன-
வீட்டுல!
அப்பன்-
முதியோர் இல்லத்துல!
--------------------------
நடை பயில-
நம்மை தாங்கியவர்கள்!
நடை தளர்ந்த பின்-
நாம் - தள்ளி விடலாமா!?
----------------------------
பிள்ளைகளே!
தாயின் கண்ணீரை-
ஊரறியும்!
தக்கப்பன்-
நெஞ்சில் வடியும்-
கண்ணீரை-
யார் அறிவார்!?
--------------------
வருடங்கடந்த-
ஆலமரத்தை-
விழுதுகள்-
தாங்கிட வில்லையா!?
வயாதான பெற்றோர்களை-
நாம் தாங்கா விட்டால்-
நாம என்ன-
பிள்ளையா!?
----------------------------
சட்ட தந்தை!
சுட்டு வீழ்த்தபட்டார்-
தேச தந்தை!
- மனித குல விரோதிகள் செயல்!
தன் தந்தையை-
"ஒதுக்கி "வைத்து பார்ப்பது-
மகனின் துரோக-
செயல்!
-------------------------
கரை ஒதுங்கும்-
கடலில் விழுந்த-
கல்!
கரை சேர வழி ஏது?-
கிணற்றில் விழுந்த-
கல்!
தாய்-
பாசத்தையோ-
கோபத்தையோ-
தெரிவித்திடுவாள்-
கண்ணீரால்!
தகப்பன்-
வரும் கண்ணீரை-
அடக்கி கொள்வான்-
வெட்கத்தால்!
------------------------
இருக்கும் வரை-
தெரியாது!
பணத்தின் -
மதிப்பும்!
நட்பின்-
இனிப்பும்!
"இருக்கும்" வரை-
தெரியாது-
தந்தையின்-
அருமையும்!
--------------------
சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
வறுமையில!
அவர்கள்-
தியாகங்களை-
மறந்தவர்கள்-
ஆட்சியில!
மகன்-
அப்பன் கட்டுன-
வீட்டுல!
அப்பன்-
முதியோர் இல்லத்துல!
--------------------------
நடை பயில-
நம்மை தாங்கியவர்கள்!
நடை தளர்ந்த பின்-
நாம் - தள்ளி விடலாமா!?
----------------------------
பிள்ளைகளே!
தாயின் கண்ணீரை-
ஊரறியும்!
தக்கப்பன்-
நெஞ்சில் வடியும்-
கண்ணீரை-
யார் அறிவார்!?
--------------------
வருடங்கடந்த-
ஆலமரத்தை-
விழுதுகள்-
தாங்கிட வில்லையா!?
வயாதான பெற்றோர்களை-
நாம் தாங்கா விட்டால்-
நாம என்ன-
பிள்ளையா!?
----------------------------
Sunday, 22 April 2012
எல்லா புகழும் இறைவனுக்கு! (2)

நீயெல்லாம் -
உருப்படவா?-
தந்தை!
வினா தாள்-
கஷ்டமாடா-?
தாய்!
-தேர்வு தோல்வியின் போது!
இவனுக்கெல்லாம் -
'இது' ஒரு கேடா?-
சொந்தக்காரன்!
'இதுகெல்லாம்'-'
கவலையாடா?-
நட்புகாரன்!
-காதல் தோல்வியின் போது!
'விளங்கும்'-
விளங்காதவர்களின் பேச்சு!
'விளங்குது'-
விபரம் அறிந்தவர்களின் -
பேச்சு!
-எழுத ஆரமபித்தபோது!
கை தட்டியவர்களும்-
உண்டு!
கை கொடுப்பவர்களும்-
உண்டு-
விழுந்த போது!
வாசம்-
விஷம்-உண்டு
பூக்களிலே!
அரவணைப்பும் -
கழுத்தறுப்பும்-
உண்டு!
-வாழ்க்கையிலே!
ஒளிர் விடும்-
தீபம்!
கடலில் ஒளிர்ந்து இருக்கும்-
முத்து!
இவைகளெல்லாம்-
சொல்லி கொள்வதில்லை-
தனது-
பேர்களை!
யாராவது ஒருவர்-
அதை உணர்த்தாமல் -
இருப்பதில்லை!
என்னை எனக்கே-
அடையாளமும்-
அங்கீகாரமும்-
தந்தவர்கள்!
கதிஜா எனது-
முதல் வாசகி!
முதல் விருதளித்த-
யுவராணி!
இரண்டாம் விருதளித்த-
ஹேமா!
உங்களது-
அங்கீகாரத்துக்கு -
நன்றிகள் மா!
(கதிஜா எனும் சகோதரி-
பரங்கி பேட்டையை சேர்ந்தவர்)
Thursday, 19 April 2012
இலவசங்களை விட....
புத்தக வாசமே-
தெரியாத அப்பனுக்கு!
பேருக்கு பின்னால்-
"பட்டம்" போட-
ஆசை மகனுக்கு!
முட்டி மோதியாவது-
குடும்ப சுமையை-
குறைக்க ஆசை-
"பட்டதாரிக்கு"!
தேவை படத்தான்-
இல்லை- இவன்
வேலைக்கு!
எத்தனையோ பேரு-
தள்ள பட்டிருக்கான்-
இந்த நிலைக்கு!
இதை பத்தியெல்லாம்-
கவலையேது?-
நம் அரசுகளுக்கு!
கூட்டணியில சொல்லியும்-
ஆட்சி கவிழும் நிலை-
வந்தும்-அனுமதி
அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு!
அழிவை தரும் என-
தெரிந்தும்-ஆதரவு-
கூடங்குளத்துக்கு!
தென்னை மரத்துல-
தேள் கொட்டுனால்-
பனை மரத்தில்-
நெரி கட்டுமா?
அயல் நாட்டுக்காரன்-
"அள்ளி" கட்டவும்-
நம் மக்கள்-
அழியவும்-இந்த
ஒப்பந்தமா!?
சொந்த நாட்டு-
மக்களின் நிலையாவது -
விடியுமா!,?
மண்டல்-
கமிசன்-
சொன்னது!
ரங்கநாத்-
கமிசன்-
சொன்னது!
சச்சார் -
கமிசன்-
சொன்னது!
அனைத்து மக்களுக்கும்-
சம நீதி-
இட ஒதுக்கீடு!
அரசுகள்-
ஏன் கண்டுக்க -
மாட்டேங்குது!?
இதுக்குத்தானா-
மக்கள் வரி பணத்தை-
அழித்தது!?
யாசகம்-
கொடுப்பதை விட-
கோடாலி கொடுப்பது-
மேல்-நல்லோர் மொழி!
மீன் கொடுப்பதை-
விட-தூண்டில்
கொடுப்பது மேல்-
சீன பழமொழி!
இலவசம் எனும்-
பிச்சையை விட-
மானத்தோட-வாழ
இட ஒதுக்கீடு-
அளி!
அவரவர் இஷ்டத்துக்கு -
"புத்தாண்டை "மாற்ற-
முடியுது!
இட ஒதுக்கீடு-
தர ஏன்-
கசக்குது!?
இந்தியா-
ஒரு பூந்தோட்டம்-
நேரு சொன்னது!
"பூந்தோட்டம்"-
கருகினால் என்ன?-
என- எண்ணுபவர்கள்-
ஆளும் காலமோ-
இது!?
( இந்த கவிதை இட ஒதுக்கீடுக்கு
போராடும்-அமைப்புகள்-மனித உரிமை ஆர்வலர்கள்- நடுநிலையாளர்கள்-
எழுத்தாளர்கள்-அனைவருக்கும்-
சமர்ப்பணம்)
தெரியாத அப்பனுக்கு!
பேருக்கு பின்னால்-
"பட்டம்" போட-
ஆசை மகனுக்கு!
முட்டி மோதியாவது-
குடும்ப சுமையை-
குறைக்க ஆசை-
"பட்டதாரிக்கு"!
தேவை படத்தான்-
இல்லை- இவன்
வேலைக்கு!
எத்தனையோ பேரு-
தள்ள பட்டிருக்கான்-
இந்த நிலைக்கு!
இதை பத்தியெல்லாம்-
கவலையேது?-
நம் அரசுகளுக்கு!
கூட்டணியில சொல்லியும்-
ஆட்சி கவிழும் நிலை-
வந்தும்-அனுமதி
அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு!
அழிவை தரும் என-
தெரிந்தும்-ஆதரவு-
கூடங்குளத்துக்கு!
தென்னை மரத்துல-
தேள் கொட்டுனால்-
பனை மரத்தில்-
நெரி கட்டுமா?
அயல் நாட்டுக்காரன்-
"அள்ளி" கட்டவும்-
நம் மக்கள்-
அழியவும்-இந்த
ஒப்பந்தமா!?
சொந்த நாட்டு-
மக்களின் நிலையாவது -
விடியுமா!,?
மண்டல்-
கமிசன்-
சொன்னது!
ரங்கநாத்-
கமிசன்-
சொன்னது!
சச்சார் -
கமிசன்-
சொன்னது!
அனைத்து மக்களுக்கும்-
சம நீதி-
இட ஒதுக்கீடு!
அரசுகள்-
ஏன் கண்டுக்க -
மாட்டேங்குது!?
இதுக்குத்தானா-
மக்கள் வரி பணத்தை-
அழித்தது!?
யாசகம்-
கொடுப்பதை விட-
கோடாலி கொடுப்பது-
மேல்-நல்லோர் மொழி!
மீன் கொடுப்பதை-
விட-தூண்டில்
கொடுப்பது மேல்-
சீன பழமொழி!
இலவசம் எனும்-
பிச்சையை விட-
மானத்தோட-வாழ
இட ஒதுக்கீடு-
அளி!
அவரவர் இஷ்டத்துக்கு -
"புத்தாண்டை "மாற்ற-
முடியுது!
இட ஒதுக்கீடு-
தர ஏன்-
கசக்குது!?
இந்தியா-
ஒரு பூந்தோட்டம்-
நேரு சொன்னது!
"பூந்தோட்டம்"-
கருகினால் என்ன?-
என- எண்ணுபவர்கள்-
ஆளும் காலமோ-
இது!?
( இந்த கவிதை இட ஒதுக்கீடுக்கு
போராடும்-அமைப்புகள்-மனித உரிமை ஆர்வலர்கள்- நடுநிலையாளர்கள்-
எழுத்தாளர்கள்-அனைவருக்கும்-
சமர்ப்பணம்)
Wednesday, 18 April 2012
சிசு கொலை...
பொறியும்-
முட்டையும்-
போடும்-
குட்டியும்-
வேண்டும்-
பொட்டைகளாக!
பிறப்பது-
பெண் பிள்ளை-
என்றால்-ஏண்டா
வெறுக்குறோம்-
அறிவு கெட்ட மட்டைகளாக!
---------------------------------------
பெண் என்றால்-
பேயும் இறங்கும்னாங்க!
பெண் குழந்தையினா-
ஏன் பேயா-
மாறுறாங்க!?
----------------
குப்பை கூலமாக்குது
மாடிகளையும்!
சடலங்களாக -
மிதக்க வைக்குது-
ஜாம்பவான்களையும் !
இதன் பேர் -
சுனாமியா?
கரு கலைப்பதும்-
கள்ளி பால்-
கொடுப்பதும்-
பச்சிளம் பூக்களை-
அழிப்பவர்கள்-
சுனாமியின்-
பினாமியா!?
-----------------
கோடி பூக்களையும் -
தோற்க வைக்கும்-
ஒரு மழலையின்-
சிரிப்பு!
அதை கொல்பவன்-
எப்படி ஆவான்-
மனித பிறப்பு!?
-------------------
கொடுபாதாக செயல்-
பூமிக்கு தெரிந்து-
இருக்குமோ!?
அது குலுங்கி அழுவதுதான்-
நில நடுக்கமோ!?
------------------
ஒரு நாளாவது-
வாழுதே-
ஈசல் கூட!
கலைக்க சொல்பவனே-
ஈசலை விட!
பெண் சிசு-
கேவலமாடா!,?
-------------------
இருந்தாங்களே-
நம் முன்னோர்கள்-
குருவி கூட்டை கூட-
கலைக்காம!!
இருக்கிறோமே-
மானுடத்தின்-
மடியான-
பெண் சிசுக்களை-
அழிக்கிறோமே!
-----------------------
இஷ்டப்பட்டு கொடுத்தான்-
குருவுக்கு-
தட்சணையாக!
இப்ப-
கஷ்டபடித்தி -
கேக்குறான் -பள்ளியில
லஞ்சமாக!
அப்போ-
அப்பன் விரும்பி-
செய்தான்-
சீர் செனத்தி!
இப்போ-
சீதனம்-
கேக்குறான்-
மிரட்டி!
அம்மா ! தாயே!-
கேட்பவன்-
பிச்சைகாரனா!,?
அதாட்டியமா-
கேப்பவன்-
மாப்பிள்ளை வீட்டு காரனா!?
இப்பாதக செயலுக்கு-
வரதட்சணையே-
இருக்குது-
முதல் காரணமா!?
வரதாட்சனை-
வாங்குவோம் ஆனால்-
நாம் என்ன ஆண் மகனா!?
திருந்த எண்ணும் மகனையும்-
கட்டாய படித்தும்-
தாய் மார்களே -
நீங்க ஒரு பெண்ணினமா!!?
-------------------------------
ஆணுக்கு பெண் ஆடை!
பெண்ணுக்கு ஆண் ஆடை!
இறைவன் வாக்கு!
பெண்ணெனும் ஆடையை-
கிழித்து (அழித்து)-விட்டு
அம்மணமா-அலையவா-
இந்த போக்கு!?
------------------
முட்டையும்-
போடும்-
குட்டியும்-
வேண்டும்-
பொட்டைகளாக!
பிறப்பது-
பெண் பிள்ளை-
என்றால்-ஏண்டா
வெறுக்குறோம்-
அறிவு கெட்ட மட்டைகளாக!
---------------------------------------
பெண் என்றால்-
பேயும் இறங்கும்னாங்க!
பெண் குழந்தையினா-
ஏன் பேயா-
மாறுறாங்க!?
----------------
குப்பை கூலமாக்குது
மாடிகளையும்!
சடலங்களாக -
மிதக்க வைக்குது-
ஜாம்பவான்களையும் !
இதன் பேர் -
சுனாமியா?
கரு கலைப்பதும்-
கள்ளி பால்-
கொடுப்பதும்-
பச்சிளம் பூக்களை-
அழிப்பவர்கள்-
சுனாமியின்-
பினாமியா!?
-----------------
கோடி பூக்களையும் -
தோற்க வைக்கும்-
ஒரு மழலையின்-
சிரிப்பு!
அதை கொல்பவன்-
எப்படி ஆவான்-
மனித பிறப்பு!?
-------------------
கொடுபாதாக செயல்-
பூமிக்கு தெரிந்து-
இருக்குமோ!?
அது குலுங்கி அழுவதுதான்-
நில நடுக்கமோ!?
------------------
ஒரு நாளாவது-
வாழுதே-
ஈசல் கூட!
கலைக்க சொல்பவனே-
ஈசலை விட!
பெண் சிசு-
கேவலமாடா!,?
-------------------
இருந்தாங்களே-
நம் முன்னோர்கள்-
குருவி கூட்டை கூட-
கலைக்காம!!
இருக்கிறோமே-
மானுடத்தின்-
மடியான-
பெண் சிசுக்களை-
அழிக்கிறோமே!
-----------------------
இஷ்டப்பட்டு கொடுத்தான்-
குருவுக்கு-
தட்சணையாக!
இப்ப-
கஷ்டபடித்தி -
கேக்குறான் -பள்ளியில
லஞ்சமாக!
அப்போ-
அப்பன் விரும்பி-
செய்தான்-
சீர் செனத்தி!
இப்போ-
சீதனம்-
கேக்குறான்-
மிரட்டி!
அம்மா ! தாயே!-
கேட்பவன்-
பிச்சைகாரனா!,?
அதாட்டியமா-
கேப்பவன்-
மாப்பிள்ளை வீட்டு காரனா!?
இப்பாதக செயலுக்கு-
வரதட்சணையே-
இருக்குது-
முதல் காரணமா!?
வரதாட்சனை-
வாங்குவோம் ஆனால்-
நாம் என்ன ஆண் மகனா!?
திருந்த எண்ணும் மகனையும்-
கட்டாய படித்தும்-
தாய் மார்களே -
நீங்க ஒரு பெண்ணினமா!!?
-------------------------------
ஆணுக்கு பெண் ஆடை!
பெண்ணுக்கு ஆண் ஆடை!
இறைவன் வாக்கு!
பெண்ணெனும் ஆடையை-
கிழித்து (அழித்து)-விட்டு
அம்மணமா-அலையவா-
இந்த போக்கு!?
------------------
Monday, 16 April 2012
வாழ்த்துக்கள்!
மக்களை மடிய -
செய்து-
மக்களாட்சிக்குனு-
சொல்றவங்களுக்கு!
அணு உலைகளை-
வச்சிக்கிட்டு-
அணு ஆபத்தை -
பேசுறவங்களுக்கு!
"நம்பி" வந்தவளையும்-
நடிக்க வந்தவளையும்-
சுழற்றி அடித்த நடன-
"புயலுக்கு"!
"வம்பால "-
வீதிக்கு வந்தும்-
புத்தி படிக்காம-
"புயலிடம்" மாட்டிய-
"தாரா"லமயமானவளுக்கு!
அன்று-
அல்வா-
நெல்லை!
இன்று-
"உலை"-
நெல்லை!
விஷயம் தெரிந்தவங்க-
மௌனமா இருந்தவங்களுக்கு!
விசமென-
தெரிந்த பின்னும்-
வாயை மூடி-
இருப்பவர்களுக்கு!
இந்தோனேசியாவில்-
நில நடுக்கம்!
ஆபத்து இல்லையாம்-
இந்தியாவில் உள்ள கூடன்குள-
உலைக்கு-
பொய்யை தரும்-
தின மலத்துக்கு!
சுய மரியாதை-
அண்ணா!-
பேரை வைத்துள்ள கட்சி-!
மானம் மரியாதை இல்லாமல்-
காலில் விழும்-
அமைச்சர்களுக்கு!
பக்கத்துக்கு வீட்டுல-
பசியில கிடக்குறத-
கவனிக்காம-
புண்ணியம் எனும் பேர்ல
கூட்டி போன சொந்தகாரனுக்கு-
ஆக்கி போடுறவனுக்கு!
ஸ்பைணுல இன சுத்தி கரிப்பு-
செய்ய பட்ட நாள் தான்-
ஏப்ரல் ஒன்னு!
அதைதான் சொல்றான்-
முட்டாள் தினம்னு!
இந்த வரலாறு- தெரியாம
பத்தோட பதினொன்னா-
கொண்டாடுபவனுக்கு!
அதென்ன ?-
ஒரு நாள் மட்டும்-
முட்டாள் தினம்!
அலங்கோல உலக-
நடப்பால்-
ஒவ்வொரு நிமிடமும்-
முட்டாள் நிமிடம்தான்!
செய்து-
மக்களாட்சிக்குனு-
சொல்றவங்களுக்கு!
அணு உலைகளை-
வச்சிக்கிட்டு-
அணு ஆபத்தை -
பேசுறவங்களுக்கு!
"நம்பி" வந்தவளையும்-
நடிக்க வந்தவளையும்-
சுழற்றி அடித்த நடன-
"புயலுக்கு"!
"வம்பால "-
வீதிக்கு வந்தும்-
புத்தி படிக்காம-
"புயலிடம்" மாட்டிய-
"தாரா"லமயமானவளுக்கு!
அன்று-
அல்வா-
நெல்லை!
இன்று-
"உலை"-
நெல்லை!
விஷயம் தெரிந்தவங்க-
மௌனமா இருந்தவங்களுக்கு!
விசமென-
தெரிந்த பின்னும்-
வாயை மூடி-
இருப்பவர்களுக்கு!
இந்தோனேசியாவில்-
நில நடுக்கம்!
ஆபத்து இல்லையாம்-
இந்தியாவில் உள்ள கூடன்குள-
உலைக்கு-
பொய்யை தரும்-
தின மலத்துக்கு!
சுய மரியாதை-
அண்ணா!-
பேரை வைத்துள்ள கட்சி-!
மானம் மரியாதை இல்லாமல்-
காலில் விழும்-
அமைச்சர்களுக்கு!
பக்கத்துக்கு வீட்டுல-
பசியில கிடக்குறத-
கவனிக்காம-
புண்ணியம் எனும் பேர்ல
கூட்டி போன சொந்தகாரனுக்கு-
ஆக்கி போடுறவனுக்கு!
ஸ்பைணுல இன சுத்தி கரிப்பு-
செய்ய பட்ட நாள் தான்-
ஏப்ரல் ஒன்னு!
அதைதான் சொல்றான்-
முட்டாள் தினம்னு!
இந்த வரலாறு- தெரியாம
பத்தோட பதினொன்னா-
கொண்டாடுபவனுக்கு!
அதென்ன ?-
ஒரு நாள் மட்டும்-
முட்டாள் தினம்!
அலங்கோல உலக-
நடப்பால்-
ஒவ்வொரு நிமிடமும்-
முட்டாள் நிமிடம்தான்!
Saturday, 14 April 2012
ஒத்த சொல்லால....$
சிரிச்சிகிட்டே இருக்குற-
பய!
இளிச்சவாய-
பய!
குணமானவன்!
கோபக்காரன்!
உறுதியானவன்!
உருப்படாதவன்!
நல்லவன்!
நடிப்புகாரன்!
வடிவான-
முகம்!
"விளங்காத"-
முகம்!
அறிவாளி!
ஏமாளி!
பாசக்காரன்!
மோசக்காரன்!
விடா முயற்சிக்காரன்!
வீம்புகாரன்!
பொறுமையானவன்!
பொழைக்க தெரியாதவன்!
கேட்ட வார்த்தை-
எத்தனையோ!!
"கேட்க " கூடாத-
வார்த்தை-
எத்தனையோ!!
அலசி ஆராய்வதில்ல!-
வாழ்த்தையும்!
வைய்யிரதையும்!
சுட்டது-
எது!?
"சுடர" செய்தது-
எது!?
அதை பற்றியெல்லாம்-
கவலை ஏது!?
பெத்தவளை-
அம்மா என்றழைப்பது-
நடப்பு!
அம்மா -
மகனை "வாப்பா"-
என்றழைப்பது-
பாச பிணைப்பு!
என் மகள்-
முகத்தில் காணுகிறேன்-
தாயே-
உன்னை!
என் முகத்தில்-
காண்கிறாயோ-
உன் தகப்பனை!,?
கண்கலங்காம-
பார்த்து இருப்பார்-
உன் அப்பன்-
உன்னை!
அந்த பொறுப்பையும்-
சுமக்க வைத்தாயே-
என்னை!
என்னை-
நீ!-
சுமந்தது-
சுகமாக!
உன்னை முதுமையில்-
நான் பார்த்துகொள்வதை-
எண்ணுகிறேன்-
கடமையாக!
கலக்கம் தரவில்லை-
எந்த சொல்லும்!
கலங்க வைக்காம-
இருப்பதில்லை-
தாயே-
என்னை "வாப்பா"-
அழைக்கும்-"
"ஒத்த சொல்லு!!"
Friday, 13 April 2012
மயான காடு!
உலகையே-
ஆள நினைத்தவர்கள்!
அடங்கி கிடக்குற-
உலகங்கள்!
-------------------
அலைகிறோமே-
"நான் நான்"-
என்று!
மறந்தோமே-
முடிவு -
"இதுதானென்று"!
-------------------------
மரணத்துக்கு-
"பின்னால்"-
உண்டு-
கருத்து வேறுபாடா!
மரணம் இல்லையென-
சொல்பவன்-
யாரடா!?
தூக்கம்-
சிறு மரணம்!
மரணம்-
பெரும் தூக்கம்!
----------------------
ஆடுனவன்-
அடங்கிட்டான்!
ஆடுகிரவனும்-
அடங்குவான்!
அடங்கியவர்களைஎல்லாம்-
ஆட்டங்கான வைப்பான்!
"ஒருவன்"!
---------------------------
மண்ணை -
ஆண்டவனும்!
மண் வீட்டு காரனும்!
மக்கி போனாங்க!
மனுசங்க ஏங்க-
மறுக்குரோம்ங்க!?
----------------------
சுடு காடு-
ஊழல்!
சவ பெட்டி-
ஊழல்!
இவர்களுக்கும்-
இருக்கு-
நாட்டை ஆளும்-
கனவுகள்!
------------------
பெருகி வரும்-
காணாமல்-
போனவர்கள்!
பெருவாரியாக-
கண்டுபிடிக்கபடுது-
புதை குழிகள்!
இது தான்-
காஷ்மீர் மக்கள்!
---------------------
ஜனனம்-
மரணம்!
இரண்டும்-
அவள் பார்வையின்-
ரணம்!
-------------------
தேவைக்கு அதிகமாக-
கட்டிடங்களை-
கட்டி தொலைக்கிறான்!
-வாழும்போது!
சுமையாக-
சமாதிகளையும்-
எழுப்புறான்!
-செத்த பிறகும்!
--------------------
உயிரோட இருக்கையிலும்-
தீட்டு!
பொணமா போகையிலும்-
விடாத தீட்டு!
தாழ்த்தபட்டவர்களின்-
சடலத்தை-
புழு பூச்சி தின்னும்!
உயர் ஜாதி-
என்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?
---------------------
ஆள நினைத்தவர்கள்!
அடங்கி கிடக்குற-
உலகங்கள்!
-------------------
அலைகிறோமே-
"நான் நான்"-
என்று!
மறந்தோமே-
முடிவு -
"இதுதானென்று"!
-------------------------
மரணத்துக்கு-
"பின்னால்"-
உண்டு-
கருத்து வேறுபாடா!
மரணம் இல்லையென-
சொல்பவன்-
யாரடா!?
தூக்கம்-
சிறு மரணம்!
மரணம்-
பெரும் தூக்கம்!
----------------------
ஆடுனவன்-
அடங்கிட்டான்!
ஆடுகிரவனும்-
அடங்குவான்!
அடங்கியவர்களைஎல்லாம்-
ஆட்டங்கான வைப்பான்!
"ஒருவன்"!
---------------------------
மண்ணை -
ஆண்டவனும்!
மண் வீட்டு காரனும்!
மக்கி போனாங்க!
மனுசங்க ஏங்க-
மறுக்குரோம்ங்க!?
----------------------
சுடு காடு-
ஊழல்!
சவ பெட்டி-
ஊழல்!
இவர்களுக்கும்-
இருக்கு-
நாட்டை ஆளும்-
கனவுகள்!
------------------
பெருகி வரும்-
காணாமல்-
போனவர்கள்!
பெருவாரியாக-
கண்டுபிடிக்கபடுது-
புதை குழிகள்!
இது தான்-
காஷ்மீர் மக்கள்!
---------------------
ஜனனம்-
மரணம்!
இரண்டும்-
அவள் பார்வையின்-
ரணம்!
-------------------
தேவைக்கு அதிகமாக-
கட்டிடங்களை-
கட்டி தொலைக்கிறான்!
-வாழும்போது!
சுமையாக-
சமாதிகளையும்-
எழுப்புறான்!
-செத்த பிறகும்!
--------------------
உயிரோட இருக்கையிலும்-
தீட்டு!
பொணமா போகையிலும்-
விடாத தீட்டு!
தாழ்த்தபட்டவர்களின்-
சடலத்தை-
புழு பூச்சி தின்னும்!
உயர் ஜாதி-
என்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?
---------------------
Tuesday, 10 April 2012
தொழில் நுட்பம்!
ஐ பேட்!
ஐயோ-
பெரும்பாடு!
-------------------
கையடக்க-
தொலைபேசி!
மனுசனையே-
முழுங்கிடுச்சி!
--------------------
சமூக வலை -
தளங்க!
"சாக்கடை"யை-
தெளிக்கவும்-
உதவுதுங்க!
மத்திய கிழக்கில்-
உதவியது!-
மறுமலர்ச்சிக்கு!
மங்களகரமா-
வழி கேக்குறான்-
மல சிக்கலுக்கு!!
------------------------
முகம் பார்த்து-
பேசிட வீடியோ -
கான்பரன்சு !
அதுலயும்-
நடக்குது-
செக்சு!
-------------
செல் போனு-
டவரு!
குருவிகளுக்கு-
சாவு!
-------------------
செல்லமா வளர்த்தவங்கள-
மறக்குதுங்க!
செல் போன் -
ஈர்ப்பை காதலென-
நம்பி "ஓடுதுங்க!"
---------------------
அதிக விளைச்சலுக்கு-
பூச்சி கொல்லி!
பறவைகளுக்கு-
வைத்தோம்-
"கொள்ளி"!
அடுத்ததா-
மனுஷர்களுக்கு-
போடும் வாயில-
மண்ணை அள்ளி!
--------------------
போராட்டம்-
சாலை சீரமைப்புக்கு!
விழிப்புணர்வு-
விபத்தில்லாத-
பயணத்துக்கு!
தப்பு-
சீர் செய்யப்பட்ட-
சாலையா!?
"வெட்டி பந்தா-"
வேகத்தை கூட்டும்-
விளக்கெண்ணைகளா!?
----------------------------
நாடெங்கு நடக்குது-
"வெடிப்பு"கள்!
நடக்க தொடங்கவே-
இல்லை - விசாரணைகள்!
ஏன் குறிப்பிட்ட சமூகத்தின்-
மேல்-
குற்றச்சாட்டுகள்!
"இவங்கட்ட"-
சொல்லிட்டு அவனுங்க-
வாரானுங்களா!?
பரபரப்பு-
விற்பனைக்காக-
உண்மைக்கு புறம்பான-
செய்திகளா!?
---------------------------
ஐயோ-
பெரும்பாடு!
-------------------
கையடக்க-
தொலைபேசி!
மனுசனையே-
முழுங்கிடுச்சி!
--------------------
சமூக வலை -
தளங்க!
"சாக்கடை"யை-
தெளிக்கவும்-
உதவுதுங்க!
மத்திய கிழக்கில்-
உதவியது!-
மறுமலர்ச்சிக்கு!
மங்களகரமா-
வழி கேக்குறான்-
மல சிக்கலுக்கு!!
------------------------
முகம் பார்த்து-
பேசிட வீடியோ -
கான்பரன்சு !
அதுலயும்-
நடக்குது-
செக்சு!
-------------
செல் போனு-
டவரு!
குருவிகளுக்கு-
சாவு!
-------------------
செல்லமா வளர்த்தவங்கள-
மறக்குதுங்க!
செல் போன் -
ஈர்ப்பை காதலென-
நம்பி "ஓடுதுங்க!"
---------------------
அதிக விளைச்சலுக்கு-
பூச்சி கொல்லி!
பறவைகளுக்கு-
வைத்தோம்-
"கொள்ளி"!
அடுத்ததா-
மனுஷர்களுக்கு-
போடும் வாயில-
மண்ணை அள்ளி!
--------------------
போராட்டம்-
சாலை சீரமைப்புக்கு!
விழிப்புணர்வு-
விபத்தில்லாத-
பயணத்துக்கு!
தப்பு-
சீர் செய்யப்பட்ட-
சாலையா!?
"வெட்டி பந்தா-"
வேகத்தை கூட்டும்-
விளக்கெண்ணைகளா!?
----------------------------
நாடெங்கு நடக்குது-
"வெடிப்பு"கள்!
நடக்க தொடங்கவே-
இல்லை - விசாரணைகள்!
ஏன் குறிப்பிட்ட சமூகத்தின்-
மேல்-
குற்றச்சாட்டுகள்!
"இவங்கட்ட"-
சொல்லிட்டு அவனுங்க-
வாரானுங்களா!?
பரபரப்பு-
விற்பனைக்காக-
உண்மைக்கு புறம்பான-
செய்திகளா!?
---------------------------
Monday, 9 April 2012
பாதை!
பாதை!
-----------
வந்த வழி-
ஒன்னு!
காட்டும் வழி-
இரண்டு!
எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!
நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?
குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?
(ஹேமா அவர்களின் வேண்டுகொளிணங்க-
அவர்களின் "படங்களுக்கு" எழுதியது!)
-----------
வந்த வழி-
ஒன்னு!
காட்டும் வழி-
இரண்டு!
எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!
நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?
குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?
(ஹேமா அவர்களின் வேண்டுகொளிணங்க-
அவர்களின் "படங்களுக்கு" எழுதியது!)
Friday, 6 April 2012
தீ பொறி..!
பட்டாசு சாலையவும்-
காணாமல் ஆக்கிடும்-
சிறு தீ பொறி!
மடமைதனை எரிப்பவனே-
சீர்திருத்தவாதி!
----------------------
ஊதினால் -
ஒதுங்க-
சோள பொரியா!?
இலக்கை அடையாமல்-
திரும்புபவன்-
லட்சியவாதியா!?
------------------------
உணவுக்கு-
சுவை-
கூட்டு பொரியல்!
வாழ்வே மாறும்-
சிந்தனை பொறியால்!
---------------------------
அனலடிக்கும்-
அக்னி வெயிலு!
இல்லாத மின்சாரத்துக்கு-
கட்டண உயர்வு!
---------------------------
வெளிச்சமே இல்லாம-
தமிழ் நாடு!
விளக்கு மழையில்-
ஐ பி எல்லு!
உருப்படுண்டா-
நாடு!
------------------
பெட்ரோல் பல்குக்கு -
எரி பொருளோட போக-
தடை!
விலை உயர்வால்-
எரியும் வயிரோட-
ஏழைகளால் ஏன் -
பல்கு எரியல!?
--------------------
காதல்-
தீ பொறி!
காமம் -
காட்டு தீ!
இரண்டுக்கும்-
நூலளவே-
இடைவெளி!
-----------------
தீ பொறி-
கண்டு பிடித்தவன்-
ஆதி மனிதனாம்!
அழிவு-
அணு உலை - வைப்பவன்
விஞ்ஞானியாம்!!!?
------------------------
ஒவ்வொரிடமும்-
உண்டு-
அறிவு சுடர்!
சிந்திப்பதை கொண்டே-
வெளிச்சம் தரும்-
அச்சுடர்!
------------------
தீ பிடிக்க தீ பிடிக்க
முத்தம் கொடுடா!!
காட்டு கத்து-
கத்துறா!
கெட்ட ஆட்டம்-
போடுறா!
பொண்ணை பார்த்து-
ஆண் பாடினால்-
ஈவ் டீசிங் கேஸ் போடுறா!!
எழுதுனவன்-
ஆடுனவள்-
பண வரவு!
"பாடுனவனுக்கு"-
வழக்கு பதிவு!!
----------------------
காணாமல் ஆக்கிடும்-
சிறு தீ பொறி!
மடமைதனை எரிப்பவனே-
சீர்திருத்தவாதி!
----------------------
ஊதினால் -
ஒதுங்க-
சோள பொரியா!?
இலக்கை அடையாமல்-
திரும்புபவன்-
லட்சியவாதியா!?
------------------------
உணவுக்கு-
சுவை-
கூட்டு பொரியல்!
வாழ்வே மாறும்-
சிந்தனை பொறியால்!
---------------------------
அனலடிக்கும்-
அக்னி வெயிலு!
இல்லாத மின்சாரத்துக்கு-
கட்டண உயர்வு!
---------------------------
வெளிச்சமே இல்லாம-
தமிழ் நாடு!
விளக்கு மழையில்-
ஐ பி எல்லு!
உருப்படுண்டா-
நாடு!
------------------
பெட்ரோல் பல்குக்கு -
எரி பொருளோட போக-
தடை!
விலை உயர்வால்-
எரியும் வயிரோட-
ஏழைகளால் ஏன் -
பல்கு எரியல!?
--------------------
காதல்-
தீ பொறி!
காமம் -
காட்டு தீ!
இரண்டுக்கும்-
நூலளவே-
இடைவெளி!
-----------------
தீ பொறி-
கண்டு பிடித்தவன்-
ஆதி மனிதனாம்!
அழிவு-
அணு உலை - வைப்பவன்
விஞ்ஞானியாம்!!!?
------------------------
ஒவ்வொரிடமும்-
உண்டு-
அறிவு சுடர்!
சிந்திப்பதை கொண்டே-
வெளிச்சம் தரும்-
அச்சுடர்!
------------------
தீ பிடிக்க தீ பிடிக்க
முத்தம் கொடுடா!!
காட்டு கத்து-
கத்துறா!
கெட்ட ஆட்டம்-
போடுறா!
பொண்ணை பார்த்து-
ஆண் பாடினால்-
ஈவ் டீசிங் கேஸ் போடுறா!!
எழுதுனவன்-
ஆடுனவள்-
பண வரவு!
"பாடுனவனுக்கு"-
வழக்கு பதிவு!!
----------------------
Wednesday, 4 April 2012
வாழ்கை பயணம்!
சுவராசியமானது-!
பேராசையால்-
சுமையாவது!
-----------------------
மலை கோட்டை-
சத்திய வாழ்கை!
ஓட்டை ஓடம்!
அசத்திய வாழ்கை!
----------------------
விரும்பியோ-
விரும்பாமலோ-
பயணிப்பது!
தொடருமா-?
"முடியுமா"-
தெரியாதது!
----------------
இடிகளை தரும்-
வானம் உண்டு!
புதை குழி-
கொண்ட -பூமியும்
உண்டு!
"தான் "என்ற-
திமிரில் மனிதன்-
நடுவில் உண்டு!
--------------------
தொடக்கம்-
கருவறை!
அடக்கம்-
கல்லறை!
இடையில் ஏன்-
மமதை!?
------------------
உண்மை சொல்பவன்-
பேமாளி!
எல்லாத்துக்கும்-
சரி என்பவன்-
அறிவாளி!
தீர்வு தெரியும்-
தீர்ப்பு நாளில்!
-----------------------------
அவிழ்க படுத்து-
ஒவ்வொரு நிமிடமும் -
மர்ம முடிச்சி!
தெரிவதில்லை-
எது கடைசி-
முடிச்சி!?
---------------------
வாழ்கை-
மைகள் உள்ள-
எழுதுகோல்-
குடுவை!
கதை-
கவிதை-
கிறுக்கல்-
செய்வது- உன்
கையில்!
எதை செய்தாலும்-
எதுவுமே செய்யாமல்-
விட்டாலும்-"கரைவது"
உண்மை!
----------------------
தேனீக்கள் இடையே-
தேனும் உண்டு!
தேனில் கூட-
விசமும் உண்டு!
வாழ்த்துகளும்-
உண்டு!
வாழ்துகளிலே-
பழிப்பும் உண்டு!
----------------------
பேராசையால்-
சுமையாவது!
-----------------------
மலை கோட்டை-
சத்திய வாழ்கை!
ஓட்டை ஓடம்!
அசத்திய வாழ்கை!
----------------------
விரும்பியோ-
விரும்பாமலோ-
பயணிப்பது!
தொடருமா-?
"முடியுமா"-
தெரியாதது!
----------------
இடிகளை தரும்-
வானம் உண்டு!
புதை குழி-
கொண்ட -பூமியும்
உண்டு!
"தான் "என்ற-
திமிரில் மனிதன்-
நடுவில் உண்டு!
--------------------
தொடக்கம்-
கருவறை!
அடக்கம்-
கல்லறை!
இடையில் ஏன்-
மமதை!?
------------------
உண்மை சொல்பவன்-
பேமாளி!
எல்லாத்துக்கும்-
சரி என்பவன்-
அறிவாளி!
தீர்வு தெரியும்-
தீர்ப்பு நாளில்!
-----------------------------
அவிழ்க படுத்து-
ஒவ்வொரு நிமிடமும் -
மர்ம முடிச்சி!
தெரிவதில்லை-
எது கடைசி-
முடிச்சி!?
---------------------
வாழ்கை-
மைகள் உள்ள-
எழுதுகோல்-
குடுவை!
கதை-
கவிதை-
கிறுக்கல்-
செய்வது- உன்
கையில்!
எதை செய்தாலும்-
எதுவுமே செய்யாமல்-
விட்டாலும்-"கரைவது"
உண்மை!
----------------------
தேனீக்கள் இடையே-
தேனும் உண்டு!
தேனில் கூட-
விசமும் உண்டு!
வாழ்த்துகளும்-
உண்டு!
வாழ்துகளிலே-
பழிப்பும் உண்டு!
----------------------
Tuesday, 3 April 2012
உயரம்!
உயர்ந்த உடலுக்கு-
ஆரோக்கிய உணவு-
தேவையாம்!
உயர்ந்த உள்ளத்தை-
தரும் தாய் பாலை-
கொடுக்க மறந்தது-
ஏனாம்!?
உடலை மட்டும்-
வளக்கும்-
ஆரோக்கிய உணவு!
மனிதத்தை-
வளர்க்கும்-
தாய் பாலு!
--------------------
சாதனையாளர்-
பணத்தின் -
உச்சத்தை தொட்டவர்!
புண்ணியவாளர்-
உள்ளம் விரிவடைஞ்சவர்!
--------------------------------
வாழ்வின் ஆசை-
விண்ணையும் தாண்டுது!
வாழ்வாதார -
தண்ணியோ கண்ணுக்கே-
தெரியாம-
மண்ணுக்குள்ள போகுது!
----------------------------
குடிசையில-
இருக்கையில-
பக்கத்து-குடிக்கும்
கறி சமைப்பாங்களே!
-அன்று!
அடுக்கு மாடியில-
பக்கத்துக்கு வீட்டுக்காரன்-
பேர் கூட-
தெரியல-
இன்று!
------------------------
உயரத்துல இருந்து-
குண்ட போடுறான்-
எவனாவது செத்தா-
சரியென்று!
பாதிக்க பட்டவங்களுக்கும்-
உயரத்துல இருந்து-
உணவை வீசுறான்-
"போட்டா" சரியென்று!
இவர்களிடம்-
யார் சொல்வது-
இதெல்லாம் - தவறென்று!
-------------------------------
உயர்ந்த-
தாழ்ந்த-
தகுதிகள்-
இறைவன்-
கொடுப்பதாகும்!
உயர்ந்து விட்டால்-
தலை கீழ் ஆட்டம்--
மனிதனாகும்!
----------------------
உயர்வதும்-
தாழ்வதும்-
உலகின் நியதி!
உயர்ந்து விட்டால்-
செய்யலாமோ-
அநீதி!?
--------------------
உயர போக போக-
மூச்சி முட்டும்!
"பட பட"-
வாழ்வின் அர்த்தம்-
பிறக்கும்!
--------------------------
ஆரோக்கிய உணவு-
தேவையாம்!
உயர்ந்த உள்ளத்தை-
தரும் தாய் பாலை-
கொடுக்க மறந்தது-
ஏனாம்!?
உடலை மட்டும்-
வளக்கும்-
ஆரோக்கிய உணவு!
மனிதத்தை-
வளர்க்கும்-
தாய் பாலு!
--------------------
சாதனையாளர்-
பணத்தின் -
உச்சத்தை தொட்டவர்!
புண்ணியவாளர்-
உள்ளம் விரிவடைஞ்சவர்!
--------------------------------
வாழ்வின் ஆசை-
விண்ணையும் தாண்டுது!
வாழ்வாதார -
தண்ணியோ கண்ணுக்கே-
தெரியாம-
மண்ணுக்குள்ள போகுது!
----------------------------
குடிசையில-
இருக்கையில-
பக்கத்து-குடிக்கும்
கறி சமைப்பாங்களே!
-அன்று!
அடுக்கு மாடியில-
பக்கத்துக்கு வீட்டுக்காரன்-
பேர் கூட-
தெரியல-
இன்று!
------------------------
உயரத்துல இருந்து-
குண்ட போடுறான்-
எவனாவது செத்தா-
சரியென்று!
பாதிக்க பட்டவங்களுக்கும்-
உயரத்துல இருந்து-
உணவை வீசுறான்-
"போட்டா" சரியென்று!
இவர்களிடம்-
யார் சொல்வது-
இதெல்லாம் - தவறென்று!
-------------------------------
உயர்ந்த-
தாழ்ந்த-
தகுதிகள்-
இறைவன்-
கொடுப்பதாகும்!
உயர்ந்து விட்டால்-
தலை கீழ் ஆட்டம்--
மனிதனாகும்!
----------------------
உயர்வதும்-
தாழ்வதும்-
உலகின் நியதி!
உயர்ந்து விட்டால்-
செய்யலாமோ-
அநீதி!?
--------------------
உயர போக போக-
மூச்சி முட்டும்!
"பட பட"-
வாழ்வின் அர்த்தம்-
பிறக்கும்!
--------------------------
Sunday, 1 April 2012
கண்கள்!
உருவத்தை -
காட்டும்-
கண்ணாடி!
உள்ளத்தை-
பிரதிபலிப்பது-
"கண்ணே"-
நீ!
------------------
"அறிவாளிகளால்"-
மெகா வாட்டுக்கு-
வழி தெரியல!
அருளாளன் கொடுத்த-
மகா ஒளியினை-
விவரிக்க மொழியே-
இல்லை!
-------------------
நெஞ்சுல-
ஈரம் இல்ல!-
சிறைவாசிகளுக்கு!
ஈரம் குறைவது-
தெரியல-
கண்ணீரை வடித்த-
கண்களுக்கு!
நாட்டுல நீதிக்குதான்-
பாரபட்சம்-
தண்டனைக்குமா?
ஏன் இந்த- நிலை
சாமானிய-
மக்களுக்கு!?
-----------------------
பூ இதழ்களால்-
உடல்-பச்சிளம்
குழந்தை!
பூவில்-
ஒரு கரும் பூ-
கரு விழியே!
அரக்கத்தனம்-
செய்து கொண்டு!
போர் என்று-
சொல்லி கொண்டு!
ஒரு பாவமும்-
அறியாத மழலைகளை-
மடிய செய்து-
விட்டு!
புகை பட-
காட்சியிலோ-
பாவனை-
சிரித்து கொண்டு!
பூக்கள் என்ன?-
புற்கள் கூட முளைக்காது-
உங்கள் சாமாதிகளை-
சுற்றி கொண்டு!
-----------------------
மரங்கொத்தி-
பறவை!
கண் கொத்தி-
பாம்பு!
இவை இரண்டும்-
என்னவளின்-
கண்கள்!
-----------------
பார்வையை-
பறிக்க கூடியது -
மின்னல் ஒளி!
பட்டம் பெற்றவனும்-
மதுவில் மடியும்-
அறிவிலி !
--------------------
துச்சாதனன்-
கொடியவனாம்!
பாவம்-
பாஞ்சாலியாம்!
சேலையை இல்லாமல்-
நடிக்க வைப்பனும் !
அதுக்கும்-
விலை பேசி -
நடிப்பவளும்!
கண்ணுக்கு விருந்து-
என பார்ப்பவனும்!
இவர்களெல்லாம்-
யாராம்..!?
--------------------
காட்டும்-
கண்ணாடி!
உள்ளத்தை-
பிரதிபலிப்பது-
"கண்ணே"-
நீ!
------------------
"அறிவாளிகளால்"-
மெகா வாட்டுக்கு-
வழி தெரியல!
அருளாளன் கொடுத்த-
மகா ஒளியினை-
விவரிக்க மொழியே-
இல்லை!
-------------------
நெஞ்சுல-
ஈரம் இல்ல!-
சிறைவாசிகளுக்கு!
ஈரம் குறைவது-
தெரியல-
கண்ணீரை வடித்த-
கண்களுக்கு!
நாட்டுல நீதிக்குதான்-
பாரபட்சம்-
தண்டனைக்குமா?
ஏன் இந்த- நிலை
சாமானிய-
மக்களுக்கு!?
-----------------------
பூ இதழ்களால்-
உடல்-பச்சிளம்
குழந்தை!
பூவில்-
ஒரு கரும் பூ-
கரு விழியே!
அரக்கத்தனம்-
செய்து கொண்டு!
போர் என்று-
சொல்லி கொண்டு!
ஒரு பாவமும்-
அறியாத மழலைகளை-
மடிய செய்து-
விட்டு!
புகை பட-
காட்சியிலோ-
பாவனை-
சிரித்து கொண்டு!
பூக்கள் என்ன?-
புற்கள் கூட முளைக்காது-
உங்கள் சாமாதிகளை-
சுற்றி கொண்டு!
-----------------------
மரங்கொத்தி-
பறவை!
கண் கொத்தி-
பாம்பு!
இவை இரண்டும்-
என்னவளின்-
கண்கள்!
-----------------
பார்வையை-
பறிக்க கூடியது -
மின்னல் ஒளி!
பட்டம் பெற்றவனும்-
மதுவில் மடியும்-
அறிவிலி !
--------------------
துச்சாதனன்-
கொடியவனாம்!
பாவம்-
பாஞ்சாலியாம்!
சேலையை இல்லாமல்-
நடிக்க வைப்பனும் !
அதுக்கும்-
விலை பேசி -
நடிப்பவளும்!
கண்ணுக்கு விருந்து-
என பார்ப்பவனும்!
இவர்களெல்லாம்-
யாராம்..!?
--------------------
Subscribe to:
Posts (Atom)