Sunday, 31 August 2014

பாழுங்கிணறு.!

இவ்வுலகில்
பாழுங்கிணற்றில் விழுந்து
செத்தவர்களை விட!

மதுப்பாட்டிலினுள் மூழ்கி
மடிந்தவர்களே அதிகம்!

          

Saturday, 30 August 2014

கழிவு..!!

துருநாற்றமாக வெளியேறும்
மனிதர்களின் கழிவுகளைப்போல்!

"டாஸ்மாக்"கில் குவிகிறார்கள்
மனிதர்களில் கழிவுகள்!

        

Friday, 29 August 2014

குடிவெறி!

வெறி நாய்கள் கூட
வருவோர் போவோரைத்தான்
கடித்து குதறும்!


ஆனால்
"குடிவெறி"நாய்களோ
தன் குடும்பத்தையே
அசிங்க வார்த்தைகளால்
குதறிவிடுகிறது!

      

Thursday, 28 August 2014

கஷ்டம்தான்!

உன்னையே எழுதினேன்!
யார் இது !?என
கேள்வியெழுப்புகிறாய்!

யாரையோ எழுதுவேன்!
என்னைத்தானே!?என
குழைகிறாய்!

பேசிப்பழகிடும்
என்னையே புரிந்துக்கொள்ளாத
உன்னால்!

என் எழுத்தைப்
புரிந்துக்கொள்வது
கஷ்டம்தான்!

      

Tuesday, 26 August 2014

இல்லைதான் !

குளிர்சாதன அறை!

அதிவேக இணைய இணைப்பு !

ஐந்து நிடத்திற்கொரு பேருந்து வசதி!

திறந்ததும் கொட்டிடும் தண்ணீர் குழாய்!

பச்சைபசேல் புல் வெளிகள் !

கடந்திடும் ஒப்பனை முகங்கள் !

இத்தனையும் இல்லைதான் !

ஆனால் நிம்மதி இருக்கிறது!

நான் பிறந்த ஊரில்!

             

Monday, 25 August 2014

பொக்கைவாய்..!! (1400வது பதிவு)

ஆச்சாக்களுக்கும்! (பாட்டிகள் )
குழந்தைகளுக்கும் மட்டுமே
அழகு சேர்க்கிறது !

பொக்கைவாய் சிரிப்பு!

பொம்மை !

வாங்கிக்கொடுத்த பொம்மைக்கு
பிண்ணனிக்குரல் கொடுப்பவர்கள் !

அப்பா-ஆச்சாமார்கள்!
(தாத்தா-பாட்டிமார்கள்)

      

கைக்குட்டை !

கண்ணீர் துடைக்க அல்ல!

வியர்வை துடைக்க!

       

Sunday, 24 August 2014

முன்னோக்கிச் செல்வோம்!

தீபங்களின் எரிதலும்!

நதிகளின் பயணங்களும்!

விதைகளின் வளர்ச்சிகளும்!

இருள்களின் விடியல்களும்!

பறவைகளின் இரைத்தேடலும்!

இத்தனைக்கும்
பயணம் முன்னோக்கித்தான்!

நேற்று
முன்னோக்கிப் பயணித்தவர்கள்!
இன்றைய வரலாறுகள்!

இன்று
முன்னோக்கிப் பயணிக்க போகிறவர்கள்தான்
நாளைய வரலாறுகள்!


     

Friday, 22 August 2014

காதலன்!

நான்
காதல் கவிஞனல்ல!

கவிதைகளின்
காதலன்!
   
      

Thursday, 21 August 2014

நான் காஸா..!!

அழிவுப்பறவைகள்
எங்கள் வானங்களில் வட்டமிடுகிறது
அழிவுகளை வீசிக்கொண்டே!

எங்கும் குண்டுகளின்
சப்தங்கள்!

எத்திசையிலும்
அலறல் சப்தங்கள்!

சல்லடைகளாகிறார்கள்
எம்மண்ணின் மைந்தர்கள்!


ஆனாலும்
மனிதம் பேசும் உலகமோ
எங்கள் விசயத்தில் மௌனிக்கிறது!

எங்கள் ரத்தங்களை பாராமல்
குருடாகி விட்டது!

எங்கள் அலறல்களை கேளாதவண்ணம்
செவிடாகி விட்டது!

ஓ!
உலகமே!
ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்!

அநீதங்களும்
அட்டூழுயங்களும்
எங்களுக்கு புதிதல்ல!

அநியாயக்காரர்க்களும்
அட்டூழிக்காரர்களும் வென்றதாக
வரலாறும் இல்லை!

        

Wednesday, 20 August 2014

மௌன மொழி!

சாலையும்!
சருகுகளும்!

ஏரிகளும்!
துடுப்புகளும்!

தென்றலும்!
மலர்களும்!

மலைகளும்!
மேகங்களும்!

பேசியக்கொண்ட
 மொழிகள்!

நினைவூட்டியது!

நாம் பேசாமல்
புரிந்துக்கொண்ட
மௌன மொழிகளை!

     






Tuesday, 19 August 2014

பள்ளத்தாக்கு !

பள்ளத்தாக்கான
என் உள்ளத்தில்!

பசுமையாக
நிறைந்திருக்கிறது !

உன் நினைவுகள் !

    

Monday, 18 August 2014

பதவி!

தீப்பந்தம் போன்றது!

தானாக கிடைத்தால்
வழிகாட்டும்!

தனக்கே
சொந்தமென்று தொட்டால்
சுட்டு விடும்!

     

Sunday, 17 August 2014

வியர்வை..!

வியர்த்திட்ட
உன் முகத்தினை
நினைவூட்டுகிறது !

பனியில் நனைந்த
ரோஜா!

      

ரோஜாத்தோட்டம்..!!

தோட்டத்தை
சுற்றிப்பார்த்து விட்டு
திரும்புகையில்!

உடமைகளை
சரிப்பார்த்துக்கொண்டேன்!

நான் என்னை தோட்டத்தினுள்
தொலைத்துவிட்டதை அறியாமல்!

       




Friday, 15 August 2014

துளிகளாய்..!!

நீல கடல்!
சுடு வெயில் !

பால் வண்ண அலை!
குழிகள் கொண்ட பாறை!

கடற்கரை மணல்!
கானல் நீர்!

இறுக்கி குலுக்கிய கைகள் !
ஆச்சரியமாக பார்த்த கண்கள் !

ஆறு கைகள் எடுத்துக்கொண்ட
ஒரு தட்டு சாப்பாடு!

புன்னகைத்த உதடு!

இத்தனைக்குள்ளும்
இருந்தது !
எனக்கான பாசத்துளிகள்!

மழை நின்றும்
இலைகளில் தங்கிய
மழைத்துளியாய்!

       

Wednesday, 13 August 2014

இந்தியா..!! (9)

நானும்
ஓர் காதலன்தான்!

என் தேசமே
உன்மேல் கொண்ட காதலால் !

      

இந்தியா..! (8)

தாய்நாடே!
நான் தாய்மடியில்
இருப்பதுபோலவே உணர்கிறேன் !

ஏனென்றால்
உன் மடியான தென்னகத்தில்
நான் பிறந்து வாழ்வதால்!

             

இந்தியா..!!(7)

தேசியக்கொடியே!

தலைநிமிர்ந்து
உனக்கு மரியாதை செய்கிறேன் !

உனக்காக
உருண்ட தலைகளை எண்ணிக்கொண்டே.!

     

இந்தியா..!! (6)

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்பதில்
எனக்கு நம்பிக்கையில்லை!

மண்ணிலிருந்தே
மனிதன் வந்தான் என்பதில்தான்
நம்பிக்கை எனக்கு!

தாய்மண்ணே!
அதனால்தான் என்னவோ!

எனக்கு உன்மேல்
நேசம் அதிகம் !

        

இந்தியா..!!(5)

செம்மண் சாலைகளை
எப்போதுப்பார்த்தாலும்!

சுதந்திரத்திரத்தியாகிகளின்
ரத்தங்களாகவே!

எனக்கு
காட்சியளிக்கிறது!

     

இந்தியா..!!(4)

தாய் நாடும்
தாய் மடியும்
ஒன்றுதான் !

நம்மைத் தாங்குவதால் !

     

இந்தியா..!(3)

என் தேசக்காற்றே!

நான்
எத்தனையோ
வாசங்களை
சுவாசித்திருக்கிறேன்!

ஆனாலும்
உன்னை உள்ளிழுக்கும்போதுதான்
உள்ளம் மகிழ்கிறேன் !

     

Monday, 11 August 2014

இந்தியா..!! (2)

மண்ணின் மீது
ஆசையில்லை
எனக்கு!

ஆனால்
தாய்மண்ணே
உன் மீதான நேசமோ.!
என் நெஞ்சமெங்கும்
நிறைஞ்சி இருக்கு!

      

இந்தியா ! (1)

என் பாரதம்
அழகிய மலர்வனம் !

அம்மலர்வனத்தில்
நானும் ஓர் மலரென்பதால்!

ஆனந்தம் கொள்கிறது
என் மனம்!

      

Sunday, 10 August 2014

தேன் ..!!

தேடித் தொட்டவனுக்குத்தான்
தேன் கூட இனிக்கும்!

       

Saturday, 9 August 2014

மாற்றம்..!

தன்னைத்தானே
மாற்றிக்கொண்டவர்களே!

உலகை
மாற்றியிருக்கிருக்கிறார்கள்!

        

Friday, 8 August 2014

அழகுதானே..!!

எப்போது எடுத்தது!

எப்படி எடுத்தது!

பூங்காவனத்தின்
புகைப்படங்களை!

அதுசரி!

எப்படியானாலும் !
எப்போதானாலும்!

அழகு!
என்றைக்கும்
அழகுதானே.!?

      

Thursday, 7 August 2014

தூரம்..!!

தூரமென்பது
நிலப்பரப்பிற்குத்தான்!

எண்ணங்களுக்கில்லை!

        

Wednesday, 6 August 2014

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு உள்ளங்கள்
யாரிடமும் எதிப்பார்ப்பதில்லை!

ஆதலால் அவ்வுள்ளங்களிற்கு
ஏமாற்றங்களில்லை!
-----------------------
 //எனதருமை உறவுகளே!
தற்போது பயணத்தில் இருப்பதாலும், இணைய வசதி சரிவர கிடைக்காத காரணத்தாலும் ,எந்த வலைப்பூக்கள் சகோதர/சகோதரிகள் பக்கங்களுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//

Tuesday, 5 August 2014

கணவன் -மனைவி!

நாரே!
பூக்களை நீ தாங்குவதால்
இறுமாப்பு கொள்ளாதே!

பூக்களை தாங்குவதால்தான்
உனக்கு பூமாலையென்று பேரு.!!

     
          

Monday, 4 August 2014

தேடிச்செல்கிறேன்...!!

கடலைத்தேடும்
நதியாக!

வாசிப்பைத்தேடும்
வாசகனாக!

வேடந்தாங்கலைத்தேடும்
பறவையாக!

பாதாளத்தைத்தேடும்
அருவியாக!

குழியைத்தேடும்
நண்டாக!

மின்சாரத்தைத்தேடும்
தமிழகமாக!

நானும்தான் தேடிச்செல்கிறேன்
விட்டுப்பிரிந்த பாடங்களை
மீண்டும் தொடர்வதற்காக!

     

Sunday, 3 August 2014

ஓடுவது எதைத்தேடி ..!?

அதிகாலையில்
கண் விழித்து!

இளஞ்சூடான
கிணற்று நீரில் குளித்து!

சிமென்ட் சாலையில்
சரக் சரக் என நடந்து!

விடிவதற்குமுன் இருக்கும்
வானத்தைப்பார்த்து!

செருப்பினில் நுழைந்திடும்
மண்ணை உதறிவிட்டுக்கொண்டு!

கூரையின் மேல் நின்று கூவும்
சேவலைப்பார்த்துக்கொண்டு!

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைத்த
மன அமைதியோடு!

தொழுகையில் கிடைத்த
நிம்மதியோடு!

யோசித்துக்கொண்டிருக்கிறேன்!

சுற்றியிருக்கும்
சந்தோசங்களை மறந்துவிட்டு !

மனித சமுக எதைத்தேடி
ஓடுகிறதென்று!?

     

Saturday, 2 August 2014

களவு..!!

நான் களவுப்போனதில்லை
கன்னிகளின் பேச்சில்!

ஆனால்
தொலைந்துதான் போகிறேன்
மழலைகளின் பார்வைகளில்!

              

Friday, 1 August 2014

கவிதை நிறம்..!!

கவிதைகளுக்கு
நிறமில்லை என
இதுவரை எண்ணியிருந்தவன்
நான்!

அது தவறென்று
புரிந்துக்கொண்டது!

கருவாச்சி
உன்னை கண்ட பின்னால்தான்!