Monday, 29 September 2014

வாழு...!!

வாழ்ந்திட
வழியில்லதவர்களை விட!

வழியிருந்தும்
வாழத்தெரியாதவர்களே
இவ்வுலகில் அதிகம்!

         

சட்டை..!

குண்டூசிகளால்
காயம்படுகிறது!

ரோஜாப்பூவால்
அலங்கரிக்க விரும்பும்
சட்டைகள் !

      

Sunday, 28 September 2014

விமானம்!

கனவுகள் சுமந்தவர்களை
தனக்குள் சுமந்துச் செல்லும்
உலோகப் பறவை!

       

Saturday, 27 September 2014

நஞ்சு ..!

செடிகளுக்கு
பூச்சி மருந்தைத் தெளிப்பது போல்!

மனிதப்பூச்சிகளுக்கு
மதுவெனும் நஞ்சு விற்கப்படுகிறது !

        

Thursday, 25 September 2014

வீச்சம்..!

பழகி,பழகி
பழக்கமானதால்!

சாக்கடை
நாறுவதில்லை
பன்றிகளுக்கு!

மதுவின் வீச்சத்தில்
மதியிழந்த
மனிதர்களைப்போல்!

     

நோக்கம்.!

ஏக்கத்திலும்
தூக்கத்திலும்
வாழ்வை பாழாக்காதே!

ஓர் நோக்கத்திற்காக (லட்சியம் )
வாழ்ந்து அர்த்தமாக்கு.!!

     

Tuesday, 23 September 2014

ஓராயிரம் .!

கிடைத்திருப்பது
ஒரே ஒரு வாழ்க்கைத்தானே!

அதற்குள் ஏன்
ஓராயிரம் கவலைகள் !?

         

Sunday, 21 September 2014

வீரன்..!!

பிரம்புக்கு பயந்து ஓடும்
மாணவனாக இராதே!

இலக்கை நோக்கி ஓடும்
வீரனாக இரு!
 
       

மூன்றெழுத்து .!

வாழ்க்கை எனும்
நான்கெழுத்தை
பணம் எனும்
மூன்றெழுத்து
விழுங்காதிருக்கட்டும்!

      

Friday, 19 September 2014

கவிதையேதான்.!

சிரித்தாலும் !
முறைத்தாலும்!

பேசினாலும் !
மௌனித்தாலும்!

அழுதாலும்!
அடம்பிடித்தாலும்!

தவழ்ந்தாலும்!
தாவினாலும்!

முத்தமிட்டாலும்!
எச்சில்படுத்தினாலும்!

இப்படியான
குழந்தைகளின் செய்கைகளெல்லாம்!

கவிதைதான்!
கவிதைதான் !
கவிதையே தான்!

      

Thursday, 18 September 2014

முந்தானை ..!!

வெயிலுக்கு குடையாவாய்!

முகத்திற்கு திரையாவாய்!

கொஞ்சம் மடித்தால் தலையணையாவாய்!

மனதிற்கு பிடித்தவர்கள் நனைந்திட்டால்
துவாளையாவாய்!

சிறுபிள்ளைகள் பிடித்து பின்தொடர வழிகாட்டியாவாய்!

காற்றிலாடி கையாட்டுவாய்!

இப்படியாக
உன்னை ஊரார் அறியவார்கள்!

ஆனால்
முந்தானையே!
பெண்களின் கண்ணீரை
நீ மட்டுமேயறிவாய்!

     

Tuesday, 16 September 2014

நதி..!!

குட்டையாக தேங்கிடவோ!
காட்டாறாக சீறிடவோ!
எனக்கு விருப்பமில்லை !

நதிப்போல் நிற்காமல்
பயணிக்கவே விரும்புகிறேன் !

      

Monday, 15 September 2014

மணல்மேடு !

எத்தனையோ இரவுகள்
உன் மடியில் !

எத்தனையோ கனவுகள்
உன் கதகதப்பில்!

வானம்பார்த்து!

மண்ணில் முகம் வைத்து!

பேசிய கதைகள் !

மிதித்து பேசிய நட்புகள்!

தண்ணீர் சுமந்துச் சென்ற தாரகைகள்!

சாடையில் வீசிச் சென்ற வார்த்தைகள் !

இப்படியாக எத்தனையோ
நினைவுகளை தந்தது!

ஏக்கங்களை தந்தது!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
மீண்டும் உன் மடி மீது அமர்ந்தபோது!

உணர்வுகளின் அழுத்தங்கள் தாளாமல்!

அவசரமாக தோளில் கிடந்த
துண்டை விரித்து படுத்துக்கொண்டேன்!

கொஞ்சம் மனதும் ஆறுதல் கொண்டது!

தாயோட சேலை வாசத்தில்
நிம்மதியடைந்த குழந்தையைப்போல் !

      

Sunday, 14 September 2014

திப்பு சுல்தான் !

வரலாறுத் தெரியாத
முட்டாள் மட்டுமே சொல்வான்!

திப்பு சுல்தானே!
உன்னை மதவெறியெனென்று!

         

Saturday, 13 September 2014

புதுக்கவிதை..!!

அழகுசாதன பூச்சுக்கள்
இல்லாமலே!

அன்புக்குரியவர்கள்
என்றைக்கும்
அழகுதான் !

வார்த்தை ஜாலங்கள்
இல்லாமலே!

அர்த்தம் தரும்
புதுக்கவிதைகளைப் போல்!

     

Friday, 12 September 2014

ஒன்றுக்குள் மற்றொன்று..!!

மரத்தில் விதைகளும்
விதைகளினுள் மரங்களும் அடங்கி இருப்பதுப் போலும் !

சிந்தனைகள் எழுத்தாவதும்
எழுத்திற்குள் சிந்தனைகள் பொதிந்திருப்பதுப் போலும் !

நதியின் கீழ் பூமியும்
பூமியினுள் நீரூற்றுகள் ஓடுவதைப் போலும்!

லட்சியவாதிகளின் தியாகங்களும்
தியாகியாக துணிபவர்களே லட்சியவாதிகளாகுபவர்களைப் போலும்!

எனக்கு நீயும்!

உன்னை கவிதையாகவும்
கவிதைக்குள் உன்னையும்
பார்க்கிறேன் !

     

Wednesday, 10 September 2014

கவிதைகளாக ..!!

அடி வெளுக்கும்
அதிகாலை வானம் !

கடல் விழுங்கும்
மாலைநேர சூரியன்!

ஆழ்கடலின் மௌனம்!

குழந்தைகளின் குறுநகை!

நீளமான  தேசிய நெடுஞ்சாலை !

சிறுவர்கள் கட்டும் மணல்வீடு!

நிலவினை மறைக்கும் மேகம்!

மொட்டை பனைமரம் !

கரைவலை இழுத்தச் சொந்தங்களின்
"காய்த்த"கைகள் !

இப்படியான காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
கவிதைகளாக !

எனக்கு
கவிதைப்புத்தகங்கள்  கிடைக்காத
தருணங்களிலெல்லாம்!

Tuesday, 9 September 2014

திட்டம்..!!

திட்டமிடுபவன்
மனிதன் !

திட்டமிட்டதினுள்
தீர்வை வைப்பவன்
இறைவன் !

     

Monday, 8 September 2014

ஈக்கள் !

மலத்தை மொய்க்கும்
ஈக்களை நினைவூட்டுகிறது !

"டாஸ்மாக்"கில் குவிந்திருக்கும்
மனிதக் கூட்டம்!

        

Saturday, 6 September 2014

மனிதன் !

படைப்புகளிலேயே
சிறந்தவன்!

தன் செயல்களினால்
கேவலப்படுபவன்!

       

உள்ளங்கள் ..!!

காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்
இரும்புத்துகள்களைப் போல்!

நீர்நிலைகளில் வட்டமிடும்
பறவைகளைப் போல்!

கூந்தலில் சேர்ந்திடும்
மல்லிகையைப் போல்!

கரையொதுங்கி கடலுக்குள்
ஓடி மறையும் நண்டுகளைப்போல்!

எழுத்தின் வாயிலாகவும்
இணைந்திடுகிறது
சில உள்ளங்கள் !

        

Thursday, 4 September 2014

அருட்கொடை..!!

இறைவா!

நீ கொடுத்த
அருட்கொடைகளையே
"எண்ணி"ப்பார்த்திட முடியாதபோது!

எப்படி
நான் நன்றிக் கடன் தீர்ப்பது .!?

           

முதியவர்கள்!

நாளைய
நமது நிலையை காட்டும்
கண்ணாடிகள்!

     

Tuesday, 2 September 2014

காகிதம்..!!

உச்சம் தொட துணிந்த
காகிதமே
பட்டமாகிறது!

அச்சம் கொண்ட
காகிதமோ
காலில் மிதிப்படுகிறது!

     

Monday, 1 September 2014

எனது கவிதைப்புத்தகம்!

எல்லா புகழும் இறைவனுக்கே!
---------------------------------
          எனது மூன்றாவது கவிதைப்புத்தகமான  ''பேரொளி''வெளிவந்துவிட்டது.''பேரொளி''யும் முந்தைய கவிதைப்புத்தகங்களும் ,ரஹ்மத் பதிப்பகத்திலும் {தொடர்புக்கு -கவிஞர் உஸ்மான் அவர்கள்.கைப்பேசி-9444025000}இலக்கியச்சோலை பதிப்பகத்திலும் {இலக்கியச்சோலை,26, பேரக்ஸ்ரோடு,பெரியமேடு,சென்னை-3.போன்.+91
44 256 109 69}கிடைக்கும்.

      தற்போது மதுரையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கடை எண் -153 {இலக்கியச்சோலை}மற்றும் கடை எண்-158,159 {ரஹ்மத் பதிப்பகம்} இவ்விடங்களில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.