Friday, 28 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(16)

விறகின் எரிதலில்
நெருப்பு உருவாவதைப் போல்!

இவர்கள்
இளமையின் எரிதலில்தான்
பணப்பூக்கள் பூக்கின்றன !

     

Thursday, 27 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(15)

புல்லைத் தின்னவும்
பழகிக்கொண்ட புலிகள்!

      

Wednesday, 26 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(14)

சொல்லாதக் காதல்
வாழ்நாள் முழுவதும்
ரணம்!

சேர்ந்தக் காதல்
பிரிந்து வாழ்வது
உயிருடன் மரணம்!

       

Tuesday, 25 November 2014

வெளிநாட்டு ஊழியர்.!(13)

ஓர் துளித்தேனுக்காக
ஒரு கிண்ண வேப்பஞ்சாற்றை
அருந்துபவர்கள்!

       

Monday, 24 November 2014

வெளிநாட்டு ஊழியர்.! (12)

தொப்புள்கொடி அறுபட்டபோது
நாமழுததை ஊரறியும்!
நாமறியோம்!?

தாய்மண்ணைப் பிரியும்போது
உள்ளமழுவுவதை
ஊர் அறியா.!
நாமறிவோம்.!

     

அய்ந்து ஆடுகள்..!!

ஆயிரக்கணக்கில்
ஆடுகளைக் குத்தி குதறிய கைகள்!

அய்ந்து ஆடுகளை
அவிழ்த்து விட்டதால்!

வேட்டையாடிய கைகள்
தற்போது காக்கும் கைகளாகி விட்டது!

         


வெளிநாட்டு ஊழியர்.! (11)

தாய் நாட்டின்
வெப்பக்காற்றின் அருமையை
வெளிநாட்டு
ஏசிக்காற்றில் அறிவார்கள் !

      

Saturday, 22 November 2014

வெளிநாட்டு ஊழியர்.! (10)

வறுமை விலங்கை
உடைக்க!

தனிமை விலங்கில்
அகப்பட்டவர்கள்!

       

Friday, 21 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(9)

காதலைக் கரம்பிடித்திட
கடலைத் தாண்டியவர்களுமுண்டு!

கடலைக் கடந்துச் சென்றதால்
காதலைத் தொலைத்திட்டவர்களுமுண்டு!

         

Thursday, 20 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (8)

சமுத்திரத்தையடைந்த பின்
ஊற்றுக்கண்ணிற்கு திரும்ப முடியாத
நதிகள்!

      

Wednesday, 19 November 2014

வெளிநாட்டு ஊழியர் ..!! (7)

கிளைகள் தழைத்தோங்க
நீரைத் தேடி
மண்ணில் புதையும்
ஆணிவேர்கள்!

      

Tuesday, 18 November 2014

வெளிநாட்டு ஊழியர்..! (6)


பூக்களின் வாசங்களை
நுகர முடியாத!

பூங்காக்களின்
உரிமையாளர்கள்!

      

Monday, 17 November 2014

வெளிநாட்டு ஊழியர்கள்.!!(5)

கனவுகளுக்காக
கண்களை விற்றவர்கள்!

         

Sunday, 16 November 2014

முத்தப் போராட்டம்.!

அடச்சே!
கார்த்திகை மாசம்
நாய்கள் தொல்ல(லை)!

தாங்க முடியல!

     

வெளிநாட்டு ஊழியர்..!! (4)

தாயின்
பாரபட்சத்தினால்!

செவிலித்தாயின்
பால்குடிக் குழந்தைகளானவர்கள்!!

     
//குறிப்பு-இவ்விடத்தில் தாய் என்பதை அரசாங்கம் என பொருள் கொள்க//

Saturday, 15 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(3)

வாசனைத்
திரவியங்களுக்காக!

ரத்தங்களைச்
சிந்துபவர்கள்!

       

Friday, 14 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (2)

இவர்கள்
தேடியெடுத்ததை விட!

தேடியதால்
தொலைத்தது அதிகம்!

       

Wednesday, 12 November 2014

வெளிநாட்டு ஊழியர்...!! (1)

உங்களைத் தொட்டு
எழுத முனைகையில் !

பேனா முனையும்
கண்ணீர் வடிக்கிறது.!

       

Monday, 10 November 2014

ஒன்னுமே தெரியாத..!! (நகைச்சுவை )

        "மாப்ள..!! என்னைப் பத்தி ஒன்னுமே தெரியாதப் பொண்ண கட்டிக்கச் சொல்லி வீட்ல தொந்தரவுப் பண்ணுறாங்கடா..!!

       என்னடா செய்ய.!?உன்னை "நல்லா"தெரிஞ்சிக்கிட்டா,யார்டா கல்யாணம் பண்ணிக்குவா..!?

       

Sunday, 9 November 2014

வழி(லி)..!!

கண்களின் வழி
கவிதையைத் தந்துவிட்டு
இலவச இணைப்பாகவா
கண் வலியை தந்தாய்.!?

       

Saturday, 8 November 2014

கருப்புப் பருக்கை..!!

மணமில்லாதப் பூவை
மல்லிகையில் தேடுவதைப் போல்!

கருப்புப் பருக்கையை
சோற்றுப்பானையில்  தேடுவதைப் போல்!

காயமில்லாதவர்களை
போர்களத்தில்  தேடுவதைப் போல்!

நுரைகளில்லாத அலைதனை
கடலலையில் தேடுவதைப் போல்!

நீலமில்லாதப் பகுதியினை
நீளவானில் தேடுவதைப் போல்!

நிழல் விழாத உருவப்படிமங்களை
நிலம்தனில் தேடுவதைப் போல்!

மனிதச் சமுத்திரத்தில்
கவலையில்லாத மனிதர்களைத் தேடுவது..!!

     

Friday, 7 November 2014

தவங்கள்.!!

மேகத்தின் தவம் மழை!

சிப்பியின் தவம் முத்து!

மண்ணின் தவம் வைரம்!

கருவறையின் தவம் குழந்தை !

விதையின் தவம் மரம்!

பருத்தியின் தவம் பஞ்சு!

கிளைகளின் தவம் கனி!

யோகியின் தவம் தியானம்!

எனது தவம் கவிதை!

     


Thursday, 6 November 2014

நெருங்குங்க....!! (நகைச்சுவை )

      (கூட்ட நெரிசலான பேருந்தில் நடத்துனரும்,பயணியும் ..)

      "சார்..!! நெருங்கி நெருங்கி நில்லுங்க..!இன்னும் ரென்டு டிக்கட் ஏறனும்...!!

     "யோவ்! கண்டக்டரு..அதுக்கு நீயும் ,டிரைவரும் எறங்கிட்டு,அந்த ரென்டுப் பேர ஏத்துய்யா.!!

         

Wednesday, 5 November 2014

பேசும்ஊமை..!!

வான்மழையாலேற்படும்
உயிரிழப்புகளை சொல்லும்
ஊடகங்கள்!

மதுவாற்றின்
தாலியறுப்புகளைச் சொல்லாத
ஊமைகள்!

   

தண்ணீர்..!! (நகைச்சுவை )

(செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்பவர்..)

        "மாப்ள! தமிழ் நாடே தண்ணியில மிதக்குதுனுப் போட்டிருக்கு..!!

     "எந்த தண்ணியில..!? மழைத் தண்ணியிலயா.!? டாஸ்மாக் தண்ணியிலயா..!?

            

Monday, 3 November 2014

தடை...!!

தன் வீட்டில்
அடுப்பெரிய உழைக்காதவன்
சொல்கிறான்!

தலைவன் படத்திற்கு
தடையென்றால்
தமிழ் நாடு எரியுமென்று..!!

        

Sunday, 2 November 2014

மேகப்பானை..!!

மேகமெனும்
மண்பானையின் மீது
குளிர்க்காற்றெனும் கற்களை
வீசியது யார்..!?

      

Saturday, 1 November 2014

எண்ணத்துளி..!!

துளிகளாய்  விழுந்து
மண்ணைக் குளிரச்செய்த
மழையே!

எனக்குள்
எண்ணத்துளிகளை மேலெழச்செய்து
என்னை ஏன் கொதிக்கச் செய்தாய் .!?