சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday, 28 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(35)
என் ஈரக்கூந்தலில்
ஒற்றை ரோஜாவாக
நான் உன்னைச் சூடுகிறேன்!
நீயோ
கூந்தலில் நீராக நழுவுகிறாய்!
Wednesday, 25 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(34)
என் பெயரைச் சொல்லத் தெரியாத
என் வீட்டுக்குழந்தை!
உன் பெயரைச் சொல்லியழைக்கும்
ரகசியத்தை நீ அறிவாய்..!!
Monday, 23 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(33)
நான் உதிர்த்த வார்த்தைகளை
புரிந்திடாத உன்னால் !
எனது மௌனங்களை மட்டும்
எப்படி மொழிப்பெயர்க்க முடிகிறது ?
Saturday, 21 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(32)
சன்னல் கம்பிகளிடம்
சம்பாசனைச் செய்யும்
திரைச்சீலையே!
உனக்குள்ள இரக்கம்கூட
என் மன்னவனுக்கு இல்லை!
Thursday, 19 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(31)
நான்
தோகை விரித்தாடுவதே
உனக்காகத்தான்!
நீயோ
ஓரிறகைப் பறித்துக்கொண்டு
திருப்திக் கொள்கிறாய்.!
Wednesday, 18 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(30)
உதடுகளாக நாமிருந்தும்!
வார்த்தைகள்
ஏனோ இன்னும்
ஜனிக்கவில்லை!
Monday, 16 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(29)
ஆசை தீர
உன்னைத் திட்ட ஆசை !
ஆனாலும்
தவிர்க்கிறேன்!
உன்னைத் திட்டுவது
கண்ணாடியில் என்னைப் பார்த்து
திட்டுவதைப் போலுள்ளது !
Saturday, 14 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!!(28)
காக்கையின் கரைதலிலும்
தாயின் திட்டுதலிலும்!
என் காதில் கேட்பது
உன் பெயர்தான் !
Wednesday, 11 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(27)
விரல்கள் மீட்டாததினால்
விறகுக்கூடாகக் காட்சியளிக்கிறது
ஓர் வீணை.!
Sunday, 8 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(26)
ஓ!
கவிதைகளே!
என்னைத் திரும்பிக்கூட
பார்க்காதவன்!
உன்னிடம்
மயங்கி கிடப்பதின் மாயம்தான்
என்ன..!?
அவள் சொல்ல மறந்த கவிதை..?(25)
மணிப்புறா
மாடப்புறாக்களை
எழுதிடும்
என்னவனின் பேனாவே!
இந்த கன்னிப்புறாவினையும்
அவனுக்கு நினைவூட்டு!
Saturday, 7 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(24)
எனக்கு நீ!
குளிர்காலக்
கம்பளிப் போர்வையா..!?
அல்லது
முதுகுத்தண்டில் ஊர்ந்திடும்
கம்பளிப் பூச்சியா..!?
Wednesday, 4 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(23)
ஊரார் வாயிக்கு
நான் இரையாகி விடக்கூடாதென்றா..!?
உன் வார்த்தைகளை
சிறையிலிட்டு விட்டாய் ..!?
Tuesday, 3 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(22)
உனக்கே நீ
புதிராக இருக்கும்போது!
எனக்கெப்படி
விடையாவாய்.!?
Monday, 2 February 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(21)
பூஞ்சோலையின்
பைங்கிளி நான்!
உனக்காக
கருவேலங்காட்டு
கரிச்சான் குருவியானேன்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)