சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Tuesday, 31 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை .!(45)
அழுவதிலும்
ஆனந்தம்தான்!
உன்
உள்ளங்கையில்
முகம் புதைத்து அழுதால்!
Monday, 30 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(44)
மேகமாக
நீயிருந்தாலும்!
பூமி என் மீது
பொழியந்திடத்தானே வேண்டும்!
Friday, 27 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(43)
வானமாக நீயும்
பூமியாக நானும்
இருந்தாலென்ன .!?
உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்
வரமொன்றே போதும்
எனக்கு.!
Wednesday, 25 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(42)
திரும்ப திரும்ப
யோசிக்கிறேன்!
நீ !திரும்பாமல்
என்னைப் பார்ப்பது
எப்படியென்று..!!
Monday, 23 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(41)
உன் நேசமெனும் கடல்தனை
சருகினில் அமர்ந்துக்கொண்டு
சுற்றி வர விரும்பும்
சித்தெறும்பு நான்!
Wednesday, 18 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(40)
நிறைய காதல்
கொஞ்சனூண்டு காமம் கலந்து
உனக்காக செய்யப்பட்ட
காதல் தேநீர் நான்!
Wednesday, 11 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(39)
பேரின்பதிற்கும்
பெருந்துயரத்திற்கும்
மாற்று வார்த்தை
என்னிடம் கேட்கப்பட்டால்!
சட்டென்று சொல்வேன்
உனது பெயரை..!!
Monday, 9 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை.!(38)
யாருக்கும் விளங்கிடாத
உனக்கு மட்டும் புரிந்திடும்
புதுக்கவிதை நான்!
Saturday, 7 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(37)
ஆண்கிளி நீயென்றால்
கழுத்தின் கோடு நானல்லவா..!?
Tuesday, 3 March 2015
அவள் சொல்ல மறந்த கவிதை..!(36)
முக ஒப்பனையை விரும்பாத
என்னை
சிலர் எள்ளிநகையாடுகிறார்கள்!
அவர்களுக்கு எப்படி
விளங்க வைப்பேன்!!?
முகத்தில் மச்சமாக இருக்கும்
உன்னை மறைக்க விருப்பமில்லையென்பதை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)