Wednesday, 29 April 2015

காதல் எழுத்து..!!(நகைச்சுவை )

(ஒரு எழுத்தாளரைப் பார்த்து ஒரு வாசகர் கேட்கிறார்)

          "சார்! நீங்க காதலப் பத்தி நெறய எழுதுறீங்க.!உங்க காதல் அனுபவத்தை சொல்லுங்களேன்!

      "ம்ம்.. சொல்றேன் .!நான் ஏழு,எட்டுப் பொண்ணுங்கள லவ் பண்ணேன்....''

      "என்னது.?ஏழு,எட்டு லவ்வா..?

    "ஆமா!ஆனால் ஒரு சின்ன மாற்றம்,அதில ஒரு பொண்ணும் என்னைய லவ் பண்ணல.....!!

       

Monday, 27 April 2015

மயிலிறகு.!

என் மனமெனும் புத்தகத்தில்
மறைந்திருக்கிறது!

மயிலிறகாய் 
உனது நினைவுகள்.!
 

Sunday, 26 April 2015

தீர்மானிக்காதே...!!

நான்
கடந்து வந்த பாதையையோ
அடைந்திட நினைக்கும் இலக்கையோ
அறியாமலும், தெரியாமலும்!

நான்
நடந்துக் கொண்டிருக்கும்
இடத்தை வைத்துக்கொண்டு 
என்னைத் தீர்மானித்து விடாதே!

     

Saturday, 25 April 2015

சிற்பம் ..!!

பாறைதானே என
பரிகசிக்காதே!

அதனுள்ளிருக்கும் சிற்பம் 
நமக்கு தெரியாதிருக்கலாம்!

       

Wednesday, 22 April 2015

யார்டா போன்ல ..!!?(நகைச்சுவை )

(கைப்பேசி அலறலை அணைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்த நண்பனைப் பார்த்து.)

     "என்னடா..!?போன்ல கூப்பிட்டது யாரு..!?உன் மனைவியா.!?

    "ஆமா.!உனக்கெப்படித் தெரியும் .!?

       "அதான்.!"எவன்டி ஒன்னப் பெத்தான்.?கையில கெடச்சா செத்தான்"னு ரிங்டோன் வச்சிருந்தியே..!!

       

Tuesday, 21 April 2015

நாய் பொழப்பு..!! (நகைச்சுவை )

      "ஏன்டா..!?காதலிச்ச பொண்ணைத் தானே கல்யாணம் பண்ணுனே!ஏன் "நாய் பொழப்புனு" பொழப்புறே..!!

    "ஆமாடா.! காதலிக்கும்போது "லோ லோ"னு அலைய வச்சா.!கல்யாணத்துக்கு பிறகு "லொள்,லொள்"கத்துறா..!!


          

Sunday, 19 April 2015

போலி என்கௌன்டர்!

நர மாமிச நரிகளின் முன்
நிமிர்ந்து நிற்க ஆண்மையற்ற
துப்பாக்கிகள்!

புல்லுக்கட்டுக்கு கத்தும்
வெள்ளாடுகளை பலி கொடுத்து விட்டு
பதக்கங்களை அணிந்துக் கொள்கிறது!

      

Wednesday, 15 April 2015

மீன் குழம்பு..!!!(நகைச்சுவை)

(காதலிக்கும்போது..)

"நேத்து வீட்லருந்து மீன் கொழம்பு கொண்டு வந்தேனே .!?எப்படி இருந்துச்சி !?

"ஒங்கையால வெசத்த தந்தாலும் ருசிக்கத்தான்லா செய்யும்.!

(கல்யாணமான பிறகு)

"ஏங்க !இன்னக்கி வச்ச  மீன் கொழம்பு எப்படி இருந்துச்சி !?

"ம்ம்...!!கொஞ்ச வெசத்த கலந்துருந்தா,நல்லா இருந்துருக்கும்..!!!

         

Sunday, 12 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(50)

ஒரு தடவை
ஒரே ஒரு தடவை
திரும்பிப் பார்!

துளிர் விடட்டும்
என் உயிர்ப் பூ!

      

Saturday, 11 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!!(49)

மண்ணில் விழுந்து
மறைவதற்குள்!

உன் உள்ளங்கையில் 
தாங்கிக்கொள்!

மழைத்துளியான 
என்னை!

     

Thursday, 9 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(48)

நீ கோதிவிட 
வேண்டுமென்பதற்காக !

என் கூந்தலைக் 
கலைத்துச் செல்கிறது
காற்று!

      

Monday, 6 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(47)

எங்கேயும்
என்னைத் தேடாதே!

உன் 
உதட்டில் ஒளிந்திருக்கும் 
புன்னகைத்தான் நான்!

      

Thursday, 2 April 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(46)


இரவும் இப்படி 
இம்சிக்குமா.!? -என
மலைத்துத்தான் போனேன்!

நீயில்லாத 
இரவுப்பொழுதினில் !