Tuesday, 17 October 2017

தயாராகு..!!


வளைவுத் தழும்புகளை ஏற்றுக்கொள்ள
தென்னை மரம் தயாராகவில்லையென்றால்
அம்மரத்திற்கு வளர்ச்சிகள் இல்லை!

துளைகளைத் தாங்கிட மூங்கில் குழல்
தயாராகவில்லையென்றால் அக்குழலிற்குள்
செவித்தீண்டும் தேனிசை இல்லை!

காய்த்திட கைகள் தயாராகவில்லையென்றால் அக்கைகளுக்கு
உழைப்பின் ஊதியம் இல்லை!

தன் மையை இழந்திட
பேனாக்கள் தயாராகவில்லையென்றால்
எழுத்துப் படைப்புகள் இல்லை!

தொடர் தோல்விகளை தாங்கிட
நீ தயாராகவில்லையென்றால்
பெரும் வெற்றிகள் என்பதும் உனக்கில்லை.!


Sunday, 15 October 2017

ஈகை..!


கடலின் அழகு அது கரையை கடந்திடாத வரை!

பூக்களின் அழகு அதனுள் பூ நாகங்கள் புகுந்திடாத வரை!

மின்னலின் அழகு அது இடியாக விழுந்திடாத வரை!

மழையின் அழகு அது பெரும் வெள்ளமாக ஆகிடாத வரை!

நட்பின் அழகு அது துரோகமாக மாறிடாத வரை!

செல்வத்தின் அழகு பிறர்
பசி போக்கிட செலவழித்துக்கொண்டே இருக்கும் வரை!