Wednesday, 29 November 2017

ஹாதியா..!

சகோதரி ஹாதியாவே.....

உனது மொழி எனக்குத் தெரியாது
உனது வலி எனக்குப் புரியும்!

உனது உறைவிடம் எனக்குத் தெரியாது
உனது உணர்வு எனக்குப் புரியும்!

உனது காயங்கள் எனக்குத் தெரியாது
உனது கண்ணீர் எனக்குப் புரியும்!

நீயும் நானும் ரத்த உறவுகளல்ல
அதனால் என்ன
நாம் ஈமானிய உறவுகள்!

நீ வடித்த கண்ணீர் 
நீ அறியாதவர்களை கலங்கச் செய்து விட்டது!

உனது கதறல்
சஜ்தாவில் விழ வைத்து விட்டது!

நீ வெற்றி அடைந்து விட்டாய்!

ஆம்
வரலாறுகளை படித்தவர்களுக்கு 
வரலாறாய் தெரிகிறாய்..!





Sunday, 19 November 2017

வாசி..!!

வாசிப்பு ஒரு சிறுப்பொறி ,அது சிந்தனைத் தீயை பற்ற வைப்பதினால்!

வாசிப்பு ஒரு தாய்மடி,அது சோகத்தின் போதெல்லாம் தலைக்கோதி விடுவதினால்!

வாசிப்பு ஒரு கலங்கரைவிளக்கம் ,அது குழப்ப இருளின்போது வெளிச்சமாய் தெரிவதினால்!

வாசிப்பு ஒரு ஆசை முத்தம்,அது நினைக்கும் போதெல்லாம். இனிப்பதினால்!

வாசிப்பு ஒரு உளி,அது மனதினை செதுக்குவதினால்!

வாசிப்பு ஒரு கோடை மழை,அது வறண்டுப்போன நெஞ்சத்தை குளிர்விக்க செய்வதினால்!

ஆதலால்
வாசி வாசி!

கொஞ்சம் உன்னையாவது
நீ நேசிப்பாய்!






Monday, 6 November 2017

சொத்து..!

திங்காம உங்காம
சக்காத்தும் கொடுக்காம
சேத்து வைக்கும் சொத்துகளெல்லாம்
தான் செத்த பெறகு
தன் புள்ளைங்க அடிச்சிக்கிட்டு 
சாகத்தான்!