Wednesday, 28 February 2018

கவலை..!

"வாழ்வில் கவலையென்பது கடல் அலைப்போல அது ஓயாது.நாம் தான் அதனை ரசித்து கடந்திட பழகிக்கொள்ள வேண்டும்."

Monday, 26 February 2018

வறுமைப்பாறை..!

வறுமைப்பாறையை கடந்தவர்கள் கூட,
செழுமைப்பாசியில் வழுக்கி விழுவதுமுண்டு.

Sunday, 25 February 2018

எரிக்கட்டை..!

சொர்க்கத்தின் பூஞ்சோலைக்க
இறைவன் அழைக்கிறான்!

மனிதனோ
நரகத்தின் எரிக்கட்டையாக பயணிக்கிறான்!

    

Saturday, 24 February 2018

மழை!

குளிர மட்டும் செய்வதில்லை
கொதிக்கவும் செய்துவிடுகிறது
மழை!


    

Thursday, 22 February 2018

கட்டுமரம் !

மூழ்கிடும் கப்பலை விட,
மிதந்திடும் கட்டுமரம் எவ்வளவோ மேல்.! 

Wednesday, 21 February 2018

தூக்கம்.!

"தூங்கியெழுவதற்கு கூட ,நிச்சயமில்லாத ,இவ்வாழ்க்கைக்குத்தான்.தூக்கம் தொலைத்து பொருளை தேடுகிறோம்."


    

Tuesday, 20 February 2018

அறுவடை.!

"யாரோ ஒருவர் அறுவடை செய்த உணவை உண்டுக்கொண்டே,சில ஜென்மங்கள் சொல்கிறது."யாருடைய உதவியும் தனக்கு தேவையில்லையென்று."


   

Monday, 19 February 2018

பாடம்..!

"காலம் எல்லோருக்கும் சேர்த்துத்தான் பாடம் நடத்துகிறது ,ஆனால் அறிவாளிகள் மட்டும்தான் படிப்பினை பெறுகிறார்கள்"


  

Tuesday, 13 February 2018

வார்த்தைச் செலவு..!

"கவனமுடன் செலவு செய்யப்பட வேண்டியது  உழைத்த பணம் மட்டுமல்ல ,பேசிடப்போகும் வார்த்தைகளும் தான்"


   

Sunday, 11 February 2018

நிரப்பு..

"உள்ளங்களை நறுமணங்களைக் கொண்டு   நிரப்பிடா விட்டால்,நாற்றங்கள் ஊற்றெடுக்க ஆரம்பித்து விடுகிறது "


    

Thursday, 8 February 2018

நட்பும் காதலும்!

காசும் பணமும்  வரும் போகும்
இரவும் பகலும் வரும் போகும்
குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும்
கோடையும் மழையும் வரும் போகும்
நிழலும் வெயிலும் வரும் போகும்

ஆனால்
நட்பும் காதலும் வரும் போகாது
நமக்குள்ளேயே தங்கி விடுகிறது!