Thursday, 25 July 2019

இறகு..0

இலக்குகளை தீர்மானி
இறகுகள் தானாய் முளைக்கும்...

Monday, 15 July 2019

பூந்தோட்டம் ..

பூந்தோட்டங்கள் நமக்காக பூக்களையே விரித்திருக்கிறது.ஆனால் நாமோ குப்பைத்தொட்டிகளை தேடி கிளறிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Wednesday, 10 July 2019

தொடர்வேன்..

உன்னை தொடர்ந்தேன்
கவிதையை அடைந்தேன்
மௌனத்தை தொடர்ந்தேன்
என்னை கண்டடைந்தேன்...

Tuesday, 9 July 2019

ஆச்சர்யம்..

நீ தங்கியிருக்கும்
நெஞ்சுக் கூட்டிலிருந்து
கவிதைகள் தோன்றாம லிருந்தால்தான்
ஆச்சர்யம்...!

Thursday, 4 July 2019

காலடி..

அலை கரை வந்து வந்து போவது
உன் காலடியை தேடித்தான்..

Wednesday, 19 June 2019

மௌன விரதம்..

“ஏன் முன்புப்போல் எழுதுவதில்லை”என்று
கேட்பவர்களிடம்
எப்படி நான் சொல்வேன்
என் பேனாக்கள்
தன் மனக்காயங்கறை ஆற்றிட
மௌன விரதங்கள் இருக்கிறதென்பதை..!

Tuesday, 23 April 2019

புத்தகமே..

மயிலிறகாய் 
உனக்குள் புதையவே
விரும்புகிறேன்

புத்தகமே ...

சடங்கள்..

தாகமுள்ள மரங்கள் படகுகளாகின்றன.இலக்குள்ள மனிதன் பயணிக்கத் தொடங்கி விடுகிறான் .குறிக்கோளற்ற சடங்கள்தான் பேசிக் கொண்டே அலைகிறது...

Thursday, 28 February 2019

கவிதையாய்..!

மஞ்சள் வெயில்
கொஞ்சம் சாயா
கவிதையாய் நீ!

Friday, 22 February 2019

புரிந்திட..!

எஸ்டிபிஐக்காரர்களின்
தாகமும் வேகமும்
வார்த்தையும்  மௌனமும்
பாய்ச்சலும் பதுங்குதலும்
பார்வையும் பயணமும்
உழைப்பும் களைப்பும்
கனவும் கண்ணீரும்
உங்களுக்கு புரிய வேண்டுமென்றால்
விடியல் வாசகர் வட்டம்
மனித நீதி பாசறை
பாப்புலர் ப்ரண்ட் வரையுள்ள 
பயணங்களை வாசித்து விட்டு
எஸ்டிபிஐயை படிக்க தொடங்குங்கள்
இலகுவாக புரிந்து விடும்.!



Tuesday, 19 February 2019

நீ தான் நீயே தான்.!

தாயின் மடி நீ
காதலியின் தலைக்கோதல் நீ
மகளின் முத்தம் நீ
நட்பின் சினேகப் பார்வை நீ
மௌன ஆசான் நீ
மாயக்கண்ணாடி நீ
கோடைச் சாரல் நீ
போர்வை கதகதப்பு நீ

இப்படியாக எனக்கு
எப்பொழுதும் இருக்கிறாய்
புத்தகமே நீதான்.!



கனவுகளை காதலிக்கிறேன் .!

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் பூக்களின் மடியில்
துயில் கொள்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் இருண்ட என் வானில்
வெள்ளை அடித்துக் கொள்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் வண்ணத்துப்பூச்சிகளின் முதுகில் அமர்ந்து
வானம் முட்ட பறக்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் என் காயங்களுக்கு மருந்திட
மயிலிறகிற்கு தூது அனுப்புகிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் மேகத்தை பிழிந்து
என் தாகத்தை தணிக்கிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதில்தான் என் கண்ணீரை கவிதைகளாக்குகிறேன்

கனவுகளை காதலிக்கிறேன்
அதுதான் என் நிழல்போல் உணர்வுப்போல்
என்னுடவே இருக்கிறது.


Wednesday, 13 February 2019

அனாதை.!

மனிதர்களைப் போலவே
பிரியங்களும் அனாதையாய்
அலைவதும் உண்டு.!

Monday, 4 February 2019

புன்னகை..!

யாருக்காகவும்
எதற்காகவும்
உன் புன்னகையை இழக்காதே..!

Saturday, 19 January 2019

வீடு.!

சென்னையில் ஒரு வீடு
மதுரையில் ஒரு வீடு
இராமநாதபுரத்தில் ஒரு வீடு
பாவம்
தாய் தகப்பபனை இருக்க வைக்கத்தான்
ஒரு அறை இல்லாமல் போய் விட்டது
இன்றைய மகன்களுக்கு ..!