Sunday, 8 January 2012

வாலிபனே...!

வாழ்வு என்பது-
நண்பர்களிடம் -
"மொக்கை" போடுவதும்!

பெண்ணை கண்டால்-
"கடலை"போடுவது தானா!?

ஆராய்ச்சி நடக்குதடா-
வட்ட நிலவுல!

அசிங்கம்டா -
"வட்ட வட்ட" -
புகை விடுவதிலே!

ஒரு கிராம்-
தங்கம் இருக்காம்-
ஒரு டன் -
மண்ணுல !

உன் குடும்ப எதிர்காலம்-
இருக்குதடா-
உன் வளமான-
வாழ்வுல!

உறக்கம் போதாதா?
ஓய்வும் போதாதா?-

இவ்விரண்டிலும்-
கழிவதுதான்-
உன் வாழ்வானதா?

பொறந்து இருக்கலாம்-
பணக்கார அப்பனுக்கோ!

கட்டி இருக்கலாம்-
பணக்கார பொண்ணையோ!

இதில் சிறப்பு அடையுமோ-
உன் பிறவி பயனோ?

கௌரவம் இல்லை -
அடுத்தவன் பணம்-
லட்சங்களை வைத்து கொள்வதிலே!

மானமும் மரியாதையும்-
உள்ளது -
உழச்ச பணத்தில் மிச்சம் -
ஒரு ரூபாய்-
உன் கையில-
 இருப்பதிலே!

எச்ச"தண்ணிக்கும்"-
எச்சி பீடிகளிலும்-
கழியனுமா?-
உன் மிச்ச வாழ்கையும்!

பாட்டில்"களில்- 
பங்கு தருபவன்!
சாப்பாட்டில் -
பங்குதர மாட்டான்!

பெரியவங்களை குறை-
சொல்லாதே!

பெருசா-
 என்ன-
 நாம் செய்தோம் -
என்பதை -
எண்ண மறவாதே!

படைத்ததின் நோக்கத்தை -
அடையுதடா-
படைப்புகளெல்லாம்!

படைப்புகளில்-
சிறந்தவனே!

உன் வாழ்வு-
வீணாக கழியலாமா?

முழிசிகிட்டு இருக்கையிலேயே-
முழுசா முழுங்குற -
உலகம் இது!

இங்கே தூக்கத்துல -
இருந்தா என்ன ஆவது!

உனக்காக -
எனக்காக-
உலகம் நிக்காது!

உருப்படியான வாழ்வு-
வாழ நீ-
ஓடு !

ஓடுனால்தான் -
நீர் நதியாகும்!

தேங்கினால்-
அது-
சாக்கடையாகும்!

நீ எப்படி-
உயிருள்ள பிணமா!!?

இல்லை -
உயிர் போன-
பின்னும் -
வாழுபவனா?(சாதனையாளனா)

கூடா "குளம்

பேருந்து கட்டணம்-
உயர்வு!

பால் விலை-
உயர்வு!

தடையான -
மின்சாரம்!

தடையில்லா-
மது பானம்!

ஏன்?-
கொஞ்சம் கொஞ்சமாக-
சாவுறீங்க!

மொத்தமா சாவுங்க-
என்பது போல!

மடியட்டும்-
மனித குளம் என!

'அணு' நிலையத்தை -
தாங்கி நிக்குதோ-
"கூடங்குளம்"!

Saturday, 7 January 2012

காதல்,கயிறு!

சொல்லபோகிறது -
காதலோ!!

மாட்டபோகிறது-
தூக்கு-
கயிறோ!!

நல்லா-
யோசித்துகொள்-
"மாட்டிய பிறகு"-
தப்பிக்க -
முடியாது!

Monday, 2 January 2012

அது போதும்!

கைக்குள்ளே-
மடித்து வைக்கும் -
பத்த மடை-
பாயா!?

இலவம் பஞ்சு வைத்த -
மெத்தையா!?

பூக்கள் தூவிய-
படுக்கையா!

ஆனந்தம் படுத்தும்-
அருவியா!?

கண்ணுக்கு-
குளிர்ச்சி-
தரும் பசுமையா!?

உச்சியை உரசி செல்லும்-
உதகை மேகமா!?

இத்தனையவும்-
விட!

என்னவளின்-
இதழின் ஓரத்தில்-
இடம் போதும்-
நான் இருந்து -
விட!

''நான்'' ''தான்''

வேலையை -
பார்த்துகொண்டு-
போயிருக்கனும் தான்!

உன் வீட்டு -
கதவின் இடுக்கை-
பார்த்து இருக்க கூடாது -
நான்!

நீ-
என்னை பார்த்து -
கொண்டு இருந்ததை -
பார்த்தேன் தான்!

அந்த நொடி பொழுதில் -
தொலைந்தவன் -
நான்!

எப்படின்னு தெரியல!

ஆரம்பிக்கவும் -
தெரியல!

முடிக்கவும் -
முடியல!

கவிதை -
எழும்போது!

கன்னி -
அவளின்-
கண்களை-
பார்க்கும்போது!

அடியே....

அடி பாவி!
வாய்தாக்களும்-
விசாரிப்புகளும்-
உண்டு !-
கொலை-
குற்றத்திற்கும்!

என்னையவே -
தேடி அலைய வைத்து-
விட்டாயே-'
'உன்னை-
திரும்பி பார்த்ததுக்கு!