Thursday, 7 August 2014

தூரம்..!!

தூரமென்பது
நிலப்பரப்பிற்குத்தான்!

எண்ணங்களுக்கில்லை!

        

Wednesday, 6 August 2014

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு உள்ளங்கள்
யாரிடமும் எதிப்பார்ப்பதில்லை!

ஆதலால் அவ்வுள்ளங்களிற்கு
ஏமாற்றங்களில்லை!
-----------------------
 //எனதருமை உறவுகளே!
தற்போது பயணத்தில் இருப்பதாலும், இணைய வசதி சரிவர கிடைக்காத காரணத்தாலும் ,எந்த வலைப்பூக்கள் சகோதர/சகோதரிகள் பக்கங்களுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.//

Tuesday, 5 August 2014

கணவன் -மனைவி!

நாரே!
பூக்களை நீ தாங்குவதால்
இறுமாப்பு கொள்ளாதே!

பூக்களை தாங்குவதால்தான்
உனக்கு பூமாலையென்று பேரு.!!

     
          

Monday, 4 August 2014

தேடிச்செல்கிறேன்...!!

கடலைத்தேடும்
நதியாக!

வாசிப்பைத்தேடும்
வாசகனாக!

வேடந்தாங்கலைத்தேடும்
பறவையாக!

பாதாளத்தைத்தேடும்
அருவியாக!

குழியைத்தேடும்
நண்டாக!

மின்சாரத்தைத்தேடும்
தமிழகமாக!

நானும்தான் தேடிச்செல்கிறேன்
விட்டுப்பிரிந்த பாடங்களை
மீண்டும் தொடர்வதற்காக!

     

Sunday, 3 August 2014

ஓடுவது எதைத்தேடி ..!?

அதிகாலையில்
கண் விழித்து!

இளஞ்சூடான
கிணற்று நீரில் குளித்து!

சிமென்ட் சாலையில்
சரக் சரக் என நடந்து!

விடிவதற்குமுன் இருக்கும்
வானத்தைப்பார்த்து!

செருப்பினில் நுழைந்திடும்
மண்ணை உதறிவிட்டுக்கொண்டு!

கூரையின் மேல் நின்று கூவும்
சேவலைப்பார்த்துக்கொண்டு!

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைத்த
மன அமைதியோடு!

தொழுகையில் கிடைத்த
நிம்மதியோடு!

யோசித்துக்கொண்டிருக்கிறேன்!

சுற்றியிருக்கும்
சந்தோசங்களை மறந்துவிட்டு !

மனித சமுக எதைத்தேடி
ஓடுகிறதென்று!?

     

Saturday, 2 August 2014

களவு..!!

நான் களவுப்போனதில்லை
கன்னிகளின் பேச்சில்!

ஆனால்
தொலைந்துதான் போகிறேன்
மழலைகளின் பார்வைகளில்!

              

Friday, 1 August 2014

கவிதை நிறம்..!!

கவிதைகளுக்கு
நிறமில்லை என
இதுவரை எண்ணியிருந்தவன்
நான்!

அது தவறென்று
புரிந்துக்கொண்டது!

கருவாச்சி
உன்னை கண்ட பின்னால்தான்!