Sunday, 16 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (4)

தாயின்
பாரபட்சத்தினால்!

செவிலித்தாயின்
பால்குடிக் குழந்தைகளானவர்கள்!!

     
//குறிப்பு-இவ்விடத்தில் தாய் என்பதை அரசாங்கம் என பொருள் கொள்க//

Saturday, 15 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(3)

வாசனைத்
திரவியங்களுக்காக!

ரத்தங்களைச்
சிந்துபவர்கள்!

       

Friday, 14 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!! (2)

இவர்கள்
தேடியெடுத்ததை விட!

தேடியதால்
தொலைத்தது அதிகம்!

       

Wednesday, 12 November 2014

வெளிநாட்டு ஊழியர்...!! (1)

உங்களைத் தொட்டு
எழுத முனைகையில் !

பேனா முனையும்
கண்ணீர் வடிக்கிறது.!

       

Monday, 10 November 2014

ஒன்னுமே தெரியாத..!! (நகைச்சுவை )

        "மாப்ள..!! என்னைப் பத்தி ஒன்னுமே தெரியாதப் பொண்ண கட்டிக்கச் சொல்லி வீட்ல தொந்தரவுப் பண்ணுறாங்கடா..!!

       என்னடா செய்ய.!?உன்னை "நல்லா"தெரிஞ்சிக்கிட்டா,யார்டா கல்யாணம் பண்ணிக்குவா..!?

       

Sunday, 9 November 2014

வழி(லி)..!!

கண்களின் வழி
கவிதையைத் தந்துவிட்டு
இலவச இணைப்பாகவா
கண் வலியை தந்தாய்.!?

       

Saturday, 8 November 2014

கருப்புப் பருக்கை..!!

மணமில்லாதப் பூவை
மல்லிகையில் தேடுவதைப் போல்!

கருப்புப் பருக்கையை
சோற்றுப்பானையில்  தேடுவதைப் போல்!

காயமில்லாதவர்களை
போர்களத்தில்  தேடுவதைப் போல்!

நுரைகளில்லாத அலைதனை
கடலலையில் தேடுவதைப் போல்!

நீலமில்லாதப் பகுதியினை
நீளவானில் தேடுவதைப் போல்!

நிழல் விழாத உருவப்படிமங்களை
நிலம்தனில் தேடுவதைப் போல்!

மனிதச் சமுத்திரத்தில்
கவலையில்லாத மனிதர்களைத் தேடுவது..!!