Monday, 31 December 2012

முகலாயர்களே....(23)

ஆட்சியாளராக-
இருந்த -
மன்னர்!

சிறைவாசியாக-
ஆனார்!

நாடு-
கடத்தப்பட்டார்!

ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!

தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!

சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!

ஆண்டுகள்-
கழிந்தது!

உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!

பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!

பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?

என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?

பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?

பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?

மாட மாளிகைகள்-
எங்கே!?

மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?

என்றெல்லாம்-
அழவில்லையே!!

என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!

சிறையிலேயே-
இருந்தார்!

அதிலேயே-
இறந்தார்!

அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!

உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!

காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!

தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!

இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!

அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!

பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"

"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!

ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!

"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!

மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?

ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?

(தொடரும்....)

குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)






Sunday, 30 December 2012

முகலாயர்களே....(22)

"ஒண்ட வந்த-
பிடாரி-
ஊர் பிடாரியை-
விரட்டினது-
போல!

விழும் நிழல்களை-
தனக்கே-
சொந்தமென-
நிலங்கள்-
வாதிடுவது-
போல!

பசுமையோடு-
கலந்த-
மக்களை-
கொன்றுவிட்டு-
நிலத்தை-
அபகரித்து விட்டு-
பசுமை புரட்சின்னு-
சொல்வது-
போல!

ஜனங்களை-
பிணங்களாக்கி விட்டு-
ஜனநாயகத்திற்கு-என
சொல்வது-
போல!

பொழைக்க வந்த-
வெள்ளையர்கள்!

அடிமடியிலேயே-
கை வைத்தார்கள்!

வியாபாரம்-என
வந்து விட்டு!

நயவஞ்சகத்தால்-
மக்களை-
பிளந்து விட்டு!

தேச வளங்களை-
சுரண்டி கொண்டு!

மன்னரை-
கைது-
செய்வார்களாம்!

ராஜ துரோக-
வழக்கும்-
போடுவார்களாம்!

யாருக்கு-
யார் -
வழக்கு-
போடுவது!?

ராஜா பகதூர்ஷாதான்-
அவ்வழக்கை-
போடணும்-
அவர்களுக்கு!

மண்ணை-
ஆண்டவன்-
கைதியாம்!

வயிற்றை-
கழுவவந்தவன்-
நீதிபதியாம்!

மன்னருக்கு-
கொடுக்கப்பட்ட-
தண்டனை-
இல்லை-
அநியாயம்-
ஆயுள் தண்டனையாம்!

ஆங்கிலேயர்கள்-
செய்தது-
துரோகம்!
துரோகம்!
துரோகம்!

களங்கமில்லாமல்-
பகதூர்ஷா-
செய்தது-
தியாகம்!
தியாகம்!
தியாகம்!

அந்தோ-
பரிதாபம்-
மறந்து போனது-
அவரின்-
சமூகமும்!

நம்-
தேசமும்..!!

(தொடரும்.....)



Saturday, 29 December 2012

முகலாயர்களே...(21)

கட்சியிலும்-
பங்கு!

ஆட்சியிலும்-
பங்கு!

இன்றைய-
அரசியல் -
தலைவர்களின்-
வாரிசுகளுக்கு!

கக்கூஸ்-
கட்டினாலும்!

பாதாள-
சாக்கடை-
கட்டினாலும்!

கமிசன்-
பங்கெடுக்குறான்-
ஒவ்வொரு ஆளும்!

காற்றலை-
ஊழலை-
ஊளையிடுறாங்க-
"கலாசார -
காவலர்கள்"!

"காவலர்களுக்கும்"-
பங்குள்ளதாக-
சி.பி.ஐ.தகவல்கள்!

குடும்பம்-
நடத்தவே-
பொண்டாட்டி-
இல்லை!

இதுல-
புள்ளைக்கு-
பேர்தேடுறவன்-
கதையா-
இல்ல!?

மின்  உற்பத்தி-
இல்லையின்னு-
சொல்றாங்க!

அப்ப-
என்னத்துக்கு-
இலவச மின் பொருட்கள்-
கொடுத்தாங்க!?

என்னமோ-
போங்க!?

இப்ப-
வரலாறுக்கு-
வாங்க!

தலைநகரில்-
புகுந்தது-
காட்டேரிகள்!

ரத்தங்களில்-
குளித்தும்-
அடங்கவில்லை-
வெறிகள்!

செங்கோட்டையை-
விட-
சிகப்பானது-
மணற்மேடுகள்!

சக்கரை-
மண்டியானது-
பள்ளிவாசல்கள்!

வாளுக்கு-
தீனியானார்கல்-
மன்னரின்-
உறவுகள்!

பிழைத்தது-
கடைசி-
இருவாரிசுகள்!

இருந்தார்-
மன்னர் -
சிறையில்-!

வருகிறது-
உணவைபோல்-
தாம்புல-
தட்டில்!

அதில்-
இருந்ததோ-
மன்னரின்-
இருமகன்களின்-
வெட்டப்பட்ட-
தலைகள்!

போராளிகள்-
இப்படிதான்-
காட்சியளிப்பார்கள்-என
கொக்கரித்து-
மன்னர்-
சிரித்தார்கள்!

நாட்டுக்காக-
அனைத்தையும்-
இழந்தார்கள்!

பொறுமை-
கொண்டார்கள்!

இவர்களா!?-
நாட்டின்-
துரோகிகள்!?
பாவிகள்!?

சுருக்கு கையிற்றை-
முத்தமிட்டு-
கிடைத்த -
சுதந்திரம்!

ஒரு சிலரிடம்-
மட்டும்-
சுருங்கிடவா!?-
அடைந்தோம்-
சுதந்திரம்..!!

(தொடரும்...)



Friday, 28 December 2012

முகலாயர்களே...(20)

நிக்கல்சன்-எனும்
ராட்சசன்!

ஆங்கிலேய-
படையின்-
தளபதிகளில்-
ஒருவன்!

போகும்-
வழிகளில்-
பிணங்களில்-
தொங்கி-
 கொண்டிருந்தால்!

இவன்-
கடந்ததாக-
சொல்லும்-
மௌனத்தால்!

போய்கொண்டிருக்கிறான்-
டெல்லியை-
நோக்கி!

அவனுக்கு-
தெரிந்திருக்கவில்லை-
போவது-
மரணத்தை-
நோக்கி!

ஆனால்-
டெல்லியிலே!

பக்த்கான்-
மிர்சா முகல்-
தலைமையிலே!

ஆயத்தம்-
கொண்டிருந்தார்கள்-
பதுங்கு குழிகளிலே!

அடைத்துவிட்டனர்-ஆங்கிலேயர்கள்-
போராட்டகாரர்களுக்கு-
கிடைக்கும்-
உதவிகளின்-
வழிகளை!

போராளிகளோ-
மனம் தளரவில்லை!

பசி-
வயிறு-
விலா எலும்பை-
ஒட்டுவது-
போல!

தாகம்-
உள் நாக்கோடு-
பெரு நாக்கு-
ஒட்டியது-
போல!

லட்சியவேட்கையால்-
ஜொலித்தார்கள்-
நெருப்பில் இட்ட-
இரும்பை-
போல!

எதிரிப்படை-
வந்தது!

போராளிகள்-
"வலைக்குள்"-
சிக்கியது!

ஆம்-
நிக்கல்சனை-
இளம் ஆலிம்-
ஒருவரின்-
தோட்டா-
துளைத்தது!

இன்னொரு-
படைத்தளபதி-
வில்சனை-
ஆட்டம் கொள்ள -
செய்தது!

திரும்பி-
செல்ல -
நினைத்தவனை-
அவன்கூட-
வந்தவர்கள்-
அதிருப்தி-
நிலை கொள்ள-
செய்துவிட்டது!

புதிய கனரக-
ஆயுதங்கள் !

மேலும்-
படைபலங்கள்!

எதிரிகளை-
பலம் கொள்ள-
செய்தது!

நம் தேச தியாகிகளை-
உயிர் தியாகிகளாக-
மாற்றியது!

சமபலம்-
மோதிகொண்டால்-
போர்க்களம்!

பட்டினியான
மக்களோடு-
மோதுவது-
அடாவடித்தனம்!

அத்தியாகிகள்-
கொண்ட -
போரில் -
தோற்றிருக்கலாம் !

லட்சியத்தில்-(வீரமரணம்)
வென்றதால்-
மகிழ்ச்சி பாய்ந்திருக்கும்-
அவர்கள்-
மனமெல்லாம்!

இப்படியாக-
செத்தொழிந்த-
சமூகத்தினரின்-
இன்றையபெயர்கள் !!?

அச்சமூகத்தின்-
நிலைகள்!?

சொந்தங்களே!
நீங்களே!-
சிந்தியுங்கள்....!!?

(தொடரும்....)






Thursday, 27 December 2012

முகலாயர்களே....(19)

தேனடையை-
சுவைக்கும்-
நாம்!

தேனீக்களின் -
உழைப்பை-
அறிந்தோமா!?

நதிகளை-
ரசிக்கும்-
நாம்!

அது-
கடந்து வந்த-
கரடுமுரடுகளை-
அறிந்தோமா!?

கவிதை-
வாசிக்கும்-
நாம்!

சிந்தனைகள்-
பிரசவிக்கும்-
வலிகளை-
உணர்ந்தோமா!?

கலை-
நயத்தில்-
லயிக்கும்-
நாம்!

லயிக்கும்போது-
நைந்த விரல்களை-
அறிவோமா!?

சொகுசான-
பயணங்கள்-
மேற்கொள்ளும்-
நாம்!

சாலையில்-
புதையுண்டிருக்கும்-
சரளை கற்களை-
அறிவோமா!?

பச்சிளம்-
குழந்தையை-
உச்சி முகர்ந்து-
முத்தமிடும்-
நாம்!

பேறுகாலத்தின்போது-
மரணத்தின் எல்லையை-
தொட்டு திரும்பும்-
தாய்மையை-
உணர்வோமா!?

புரட்சி-
புத்தகங்களை-
புரட்டி-
படிக்கும்-
நாம்!

அப்புரட்சியின்போது-
புரண்ட-
சில தளபதிகளை-
இன்று-
பார்ப்போமா!?

செங்குருதி-
சிந்தி-
செங்கோட்டையை-
காத்தவர்கள்!

ஆங்கிலேய-
படையை-
ஆட்டங்கான-
செய்தவர்கள்!

பக்த்கான்-
மௌலவி சர்ப்ராஜ் அலி-
போன்றவர்கள்!

இறக்கும்வரை-
போராடுவோம்!-என்று
சபதம்-
ஏற்றவர்கள்!

அச்சபதத்தை-
அடைந்தவர்கள்!

இரண்டாயிரம்-
போராளிகளுடன்-
இணைந்து-
போராட்டகளம்-
கண்டவர்கள்!

இத்தாத் அலிகான்-
மௌலவி நவ்ஜிஸ் அலி-
போன்றவர்கள்!

சதைகளும்-
ரத்த நாளங்களும்-
கொண்டது-
நம் உடலாகும்!

அந்த -
உடலை-
 கேடயமாக வைத்து -அடைந்ததே-
நம் சுதந்திரமாகும்!

சுதந்திரம்-
ஒவ்வொருவரின்-
பிறப்புரிமை!

அதனை-
பறிக்க-
யாருக்கும்-
இல்லை-
உரிமை...!!

(தொடரும்....)


Wednesday, 26 December 2012

முகலாயர்களே...(18)

உலகை-
உலுக்கி-
உள்ளது-
போர்கள்!

பூமியை-
குளிக்க-
செய்திருக்கிறது-
குருதிகள்!

மண்ணை-
வெற்றி-
கொண்டால்!

அவ்வளங்களை-
கொள்ளை -
கொள்வதால்!

பெண்களை-
சொல்ல வாய்-
கூசும்-
"அளவுக்கு"-
நடப்பதால்!

சடலங்களால்-
மலை-
அமைப்பதால்!

இதனையே-
சாதனையாக-
எண்ணினார்கள்-
குரும்புத்தியால்!

இது-
மடமை காலம்!

படிப்பறிவில்லாத-
காலம்!

மனிதநேயம்-
மடிந்த காலம்!

எப்படியெல்லாம்-
முடியுமோ-
உங்களால்-
திட்டி கொள்ள-
கூடிய காலம்!


அதெல்லாம்-
உண்மைதாங்க!!

அக்காலம்-
கொடுமைதாங்க!?

இப்பமட்டும்-
என்ன-
"வாழுதுங்க"..!!?

பேருந்தில்-
ஒரு-
சகோதரி-
சீரழிக்கபட்டாள்!

ஒரு சில-
நாய்களால்-
குதறபட்டாள்!

மனிதநேயம் உள்ள-
அத்தனை பேரும்-
மன சஞ்சலத்தால்-
அலைக்கழிக்கபட்டார்கள்-
அச்சம்பவத்தால்!

இது போன்ற-
சம்பவங்கள்!

இதை விட-
கொடூரமானவைகள்!

நடந்திருக்கிறது-
நடந்துகொண்டுதான்-
இருக்கிறது!

யாருக்கோ-
நடக்கிறது!

நமக்கென்ன-
வந்தது!?

இப்படியாக-
நாமெல்லாம்-
இருந்தது!

இப்பொழுது-
தலை நகரை-
தலைகுனிய-
வைத்திட்டது!

குழந்தைகள்-
பெண்கள் இருக்கும்-
இடம்களில்-
அம்பு எய்தல்-
கூடாது!

இது-
நபிகளார்-
வாழ்வானது!

யுத்தங்களிலும்-
தத்துவம்-
சொன்னது!

எதிரிகளின்-
நாற்பத்திரண்டு-
பெண்கள்-
குழந்தைகள்-
சமயலறையில்-
ஒளித்து-
வைத்திருந்தார்!

பகதூர்ஷா-
மன்னர்!

உயிரைகாக்க-
இதனை-
செய்தார்!

எதிரிகளின்-
ரத்த உறவுகளை-
கூட-
நேசித்தார்!

தன்-
சிப்பாய்களை-
கட்டுபடுத்திடுவார்!

தேசமெங்கும் வந்த -
சிப்பாய்கள்!?

ஒளிந்து இருந்தவர்களை-
ஒளித்து கட்ட-
முனைந்தார்கள்!

மன்னரோ-
கலங்கி போய்-
நின்றார்கள்!

அவர்களின்-(ஒளிந்து இருந்தவர்கள்)
கொலைகளுக்கு பின்-
ஆறாத-
ரணங்களுடனே-
வாழ்ந்தார்கள்!

சொல்லுங்க-
அப்பேர்பட்ட-
ஆட்சியாளன்-
எங்கே!?

பிணங்களின் மேல்-
ஆட்சிகள்-
புரிகின்ற-
இன்றைய-
யோக்கியர்கள்!!-
எங்கே...!?

(தொடரும்....)




Tuesday, 25 December 2012

முகலாயர்களே....(17)

மரம்-
வெட்ட -
தடையுண்டு!

மயிலை-
பிடிக்க-
தடையுண்டு!

மானை-
சுட-
தடையுண்டு!

மனிதனை-
வெட்டுவது-
சாதாரண-
நிகழ்வானது-
இன்று!

கங்கை-
யமுனை-
காவேரி-
ஆறுகளுக்கு-
பெண்களின்-
பேருண்டு!

பூமியை-
தாய்-
என்பவர்களும்-
உண்டு!

கடலை-
அம்மா -
என்பவர்களும்-
உண்டு!

மணிக்கு-
ஒரு-
கற்பழிப்பு-
வீதம்-
நடக்கிறது-
இன்று!

பயம்-
தீராமல்-
அணு உலை-
திறக்கப்பட-
மாட்டாது-என
பிரச்சாரம்-
சொன்னவர்கள்-
உண்டு!

லத்தியால்-
அடி கொடுத்து-
திறக்க-
 முனைகிறார்கள்-
இன்று!

சில்லறை-
வர்த்தகத்திற்கு-
மத்திக்கு-
ஆதரவு-
உண்டு!

மாநிலத்திற்கு-
எதிர்க்கிறார்கள்-
இன்று!

இருந்த-
இடத்தில-
பள்ளி கட்டி -
கொடுக்கப்படும்-
சொல்லிய -
கட்சி-
உண்டு!

அவர்கள்-
அமைத்த -
கமிசனையே-
மறந்தார்கள்-
இன்று!

மத கலவரங்கள்-
நடந்தி-
மனிதங்களை-
கொன்றவர்கள்-
உண்டு!

மத நல் இணக்கத்திற்கு-
உண்ணாவிரதம்-
இருப்பதாக-
கேலி பண்ணுகிறார்கள்-
இன்று!

இதெல்லாம்-
சொல்லபடுது-
அரசியல்-
சாணக்கியத்தனம்-
என்று!

சுதந்திர-
புரட்சியில்-
ஐந்தாவது-
மகன்-
மிர்சா முகல்-
வீர மரணம்-
அடைந்தது-
நம்மில் எத்தனை-
பேருக்கு-
தெரிந்த -
ஒன்று!?

இந்துக்களும்-
இஸ்லாமியர்களும்-
எனது இரு கண்கள்-என்று
பகதுர்ஷா-
சொன்னதை-
நம்மில் -
எத்தனை பேர்-
அறிந்த-
ஒன்று!?

இவர்களை-
வசைபாடவாவது-
யாருக்கு-
யோக்கியதை-
இருக்குது-
இன்று..!!?


(தொடரும்.....)