Saturday, 28 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(35)

என் ஈரக்கூந்தலில்
ஒற்றை ரோஜாவாக
நான் உன்னைச் சூடுகிறேன்!

நீயோ 
கூந்தலில் நீராக நழுவுகிறாய்!

      

Wednesday, 25 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(34)

என் பெயரைச் சொல்லத் தெரியாத
என் வீட்டுக்குழந்தை!

உன் பெயரைச் சொல்லியழைக்கும்
ரகசியத்தை நீ அறிவாய்..!! 

       

Monday, 23 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(33)

நான் உதிர்த்த வார்த்தைகளை 
புரிந்திடாத உன்னால் !

எனது மௌனங்களை மட்டும்
எப்படி மொழிப்பெயர்க்க முடிகிறது ?

       

Saturday, 21 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(32)

சன்னல் கம்பிகளிடம்
சம்பாசனைச் செய்யும்
திரைச்சீலையே!

உனக்குள்ள இரக்கம்கூட
என் மன்னவனுக்கு இல்லை!

    

Thursday, 19 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(31)

நான்
தோகை விரித்தாடுவதே
உனக்காகத்தான்!

நீயோ
ஓரிறகைப் பறித்துக்கொண்டு
திருப்திக் கொள்கிறாய்.!

       

Wednesday, 18 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(30)

உதடுகளாக நாமிருந்தும்!

வார்த்தைகள் 
ஏனோ இன்னும் 
ஜனிக்கவில்லை!

     

Monday, 16 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(29)

ஆசை தீர
உன்னைத் திட்ட ஆசை !

ஆனாலும் 
தவிர்க்கிறேன்!

உன்னைத் திட்டுவது
கண்ணாடியில் என்னைப் பார்த்து
திட்டுவதைப் போலுள்ளது !