Monday 5 November 2012

தெரியாது.....

இரை-
கிட்டயா!?-
எட்டயா!?-
தெரியாது!

உணவு -
கிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!

விழும் இடம்-
நதியா!?-
கடலா!?-
தெரியாது!

பெய்யும்-
மழை-
கொட்டுவதை-
நிறுத்தாது!

அடுத்து-
பள்ளமா!?-
மேடா!?-
தெரியாது!

ஓடும்-
நதி-
பயணத்தை-
நிறுத்தாது!

நீர்-
தருமா!?-
நிறுத்துமா!?-
ஊற்று கண்-
தெரியாது!

தண்ணீர்-
அள்ளுவதை-
கிணறுகள்-
தடுக்காது!

அண்ணாந்து-
பார்த்ததா!?-
இல்லையா!?-
எலி-
தெரியாது!

தனக்கான-
"வலைக்கு"-
மலையை -
குடையவும்-
மலைக்காது!

தாங்குமா!?-
தொங்குமா!?-
புயல் காற்றுக்கு-
தெரியாது!

தூக்கணாங்குருவி-
கூடு கட்டுவதை-
நிறுத்தாது!

மற்றவைகள் -
எல்லாம்-
தன் கடமை-
செய்ய தவறியதா!?-
தெரியாது!

அப்படி-
நடந்திருந்தால்-
இரவும்-
பகலும்-
வராது!

படைப்புகளிலெல்லாம்-
சிறந்த படைப்பான-
மனிதா!?
நம் திறமை-
பற்றி சிந்தித்தோமா!?-
என்றால்-
தெரியாது!

சிந்தித்தவர்கள்தான்-
இன்றைய-
வரலாறு!

நாம்-
நம் படைப்பின்-
நோக்கம்-
அறிந்தோமா-
என்றால்-
தெரியாது!

"ஒவ்வொருவரும்-
சுரங்கத்தை -
போன்றவர்கள்-என
தன்னம்பிக்கையூட்டுது-
நபி மொழியானது!


19 comments:

  1. //உணவு -
    கிடைக்கும்வரை-
    பறவைகள்-
    சிறகை-
    மடக்காது!//

    நம்பிக்கையூட்டும் வரிகள். சிறப்பான ஆக்கம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. nagaraj sako!

      ungal karuthukku mikka nantri!

      Delete
  2. சிந்தித்தவர்கள்தான்-
    இன்றைய-
    வரலாறு! nice ..

    ReplyDelete
  3. நம்பிக்கை... தன்னம்பிக்கை...

    ReplyDelete
  4. கருத்துகள் கிடைக்குமா கிடைக்காதா ?!
    எனினும் நம் பதிவுகள் தொடரும் .
    சிறப்பான புனைவு !

    ReplyDelete
    Replies
    1. sravani sako..!

      mikka nantri!

      nalla karuthirkku..

      Delete
  5. நம்பிக்கை வரிகள் சிறப்பு.

    ReplyDelete
  6. சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! அருமை!

    ReplyDelete
  7. வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. //என் -
    முயற்சி-
    தொடர்கிறது-
    கூடன்குள-
    மக்களின்-
    போராட்டமாய்!//

    கவிதைகளில் வரலாற்றையும் இணைக்கும் அழகு. காலம் காட்டும் இலக்கியம் இது.

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே...
    அருமையான தன்னம்பிக்கை வரிகள்
    எண்ணத் துளிகளாய் வீழ்ந்த விதைகள்
    விருட்சமாகாமல் போகாது....
    அருமை அருமை...

    ReplyDelete