Friday, 10 July 2020

நுரை குமிழிகளில் உடைந்த கனவுகள்.!


விதை உடைந்தால் செடி
கனி உடைந்தால் விதை

மழலை உடைந்தால் இளமை
இளமை உடைந்தால் முதுமை

மூங்கில் உடைந்தால்  புல்லாங்குழல் 
காற்று அக்குழலுக்குள் உடைந்தால் இசை

மலை உடைந்தால் பாறை
பாறை உடைந்தால் சிற்பம்

தண்ணீர் குடம் உடைந்தால் ஜனனம்
ஆயுள் உடைந்தால் மரணம்

உடைப்படத்தான் அத்தனையும் 
விடைப்பெறத்தான் வாழ்க்கையும்.!


ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் .!

தாயை தெருவில் விடுகிறாய்
தாரத்தை தாக்குகிறாய்

குழந்தையையும் சிதைக்கிறாய்
நிலத்தையும் மலடாக்குகிறாய்

நதியையும் நாசமாக்குகிறாய்
காற்றையும் விசமாக்குகிறாய்

சுவாசம் தந்தமரம்என்னையும் வெட்ட
கோடாலி தூக்குகிறாய்

வீழ்வதற்கு முன்
ஆம் 
வீழ்வதற்கு முன்
ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் 
எனக்காக அல்ல
உனக்காக.!

Thursday, 9 July 2020

நினைவுகள் !


யாருமற்ற வேளையில்
கொரித்துக் கொண்டிருக்கிறேன் 

உன் நினைவுகளை..!

சிங்கம்.!

எலும்பு துண்டிற்காக
சிங்கங்கள்
வாலாட்டுவதில்லை.!



Wednesday, 8 July 2020

நிசப்தம்.!

நிசப்தத்திலும்
நீ சப்தமாய் பேசுகிறாய்
என்னுள்ளே.!


மரணம்.!

உலகில்
உனக்கான உணவு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை.!


Tuesday, 7 July 2020

கசப்பு.!

நாளைய இனிப்புகள் 
காத்துக் கொண்டிருக்க
ஏன்
நேற்றைய கசப்புகளை 
கொரித்துக் கொண்டிருக்கிறாய்.!?