எதெற்கெடுத்தாலும்
கோபப்படும்
வாப்பாமார்கள்
இப்போதெல்லாம்
பொறுமையாக இருப்பதின்
காரணமெல்லாம்
தன் கோபத்தால் தான் இழந்தவைகள்
நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!
எதெற்கெடுத்தாலும்
கோபப்படும்
வாப்பாமார்கள்
இப்போதெல்லாம்
பொறுமையாக இருப்பதின்
காரணமெல்லாம்
தன் கோபத்தால் தான் இழந்தவைகள்
நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!
உன்னோடு பேச ஆரம்பித்ததோ
பேச்சை நிறுத்தியதோ
நினைவில் இல்லை...
எப்போது
ஏன் தடைப்பட்டது
தெரியவில்லை..
திடீரென்ற உள்ளுணர்வில்
உன் எண்களை கைப்பேசியில்
தேடிப் பார்க்கிறேன்
அதிலும் இல்லை..
ஆனால்
நீ வாசித்ததாக பகிர்ந்த
கதைகளும் கவிதைகளும்
அலமாரியில் வைத்திருக்கிறேன்...
ஒருவேளை
அதனை மீண்டும் நான் வாசிக்கையில்
உனக்காக அது என்னிடம்
உரையாடலாம்..
காற்றில் கலந்திட்ட உன்னை
கவிதையில் ஒளிந்திட்ட உன்னை
ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை
கரும்பில் கரைந்திட்ட உன்னை
உணர்வில் உறைந்திட்ட உன்னை
புகைத்தில் எங்கே தேடுவேன் உன்னை.!