Tuesday, 13 October 2020

கண்ணீர்!

 பெண்ணின் முந்தானைக்குள்ளும்

ஆணின் புன்னகைக்குள்ளும்

புதைந்து போவதுண்டு.!


#கண்ணீர்

Monday, 10 August 2020

புதைந்த நினைவுகளைத் தோண்டும் புகைப்படங்கள்..!

 காற்றில் கலந்திட்ட உன்னை

கவிதையில் ஒளிந்திட்ட உன்னை

ஸ்பரிசத்தில் நிறைந்திட்ட உன்னை

கரும்பில் கரைந்திட்ட உன்னை

உணர்வில் உறைந்திட்ட உன்னை 

புகைத்தில் எங்கே தேடுவேன் உன்னை.!



Tuesday, 4 August 2020

அனுமதி.!

மரணம்
தன்னை சந்திக்க
இறைவன் தரும் அனுமதி.!

Monday, 3 August 2020

கவலைப்படாதிரு...

இறைவன்
விதித்த ஒன்று
விலாசம் மாறி போவதில்லை .!



Thursday, 30 July 2020

ஒளியும் மனிதர்களும்,உலா வரும் மிருகங்களும்.!


சிங்கங்கள் தன் கர்ஜனையை மறந்ததினால்
ஓநாய்கள் ஊளையிடுகிறது

மயில்கள் தோகையை விரிக்காததினால்
வான்கோழிகள் நடனத்தை தொடங்கி விடுகிறது

பள்ளங்கள் தனக்காக பங்கை கேட்காததினால்
மேடுகள் நாட்டமை செய்ய ஆரம்பித்து விடுகிறது

புலிகள் பாய்ச்சலை நிறுத்தியதினால்
வெள்ளாடுகள் வியாக்கியானம் பேசுகிறது

அதுப்போலத்தான்
நீதியை பேசாது மனிதர்கள் ஒளிந்ததினால்தான்

மிருகங்கள் உலா வருகிறது.!

பிரார்த்தனை .!

ஏதோ ஒரு ஏழையின் பிரார்த்தனைக்குள்
புதைந்துக் கொள்ள பார்க்கிறேன்
அந்த பிரார்த்தனை
இறைவனின் கோபத்திலிருந்து
என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்..

Friday, 24 July 2020

மூச்சில் அணையும் மெழுகுவர்த்திகள் .!

பொட்டல் காடு என்னை
உன் முத்த மழையில் குளிர்வித்து
காதல் பார்வையில் என்னை
தின்று தீர்த்து விட்டு
பட்டும்படாத ஓர் அணைப்பில்
ஆமாம் 
பட்டும்படாத ஓர் மெல்லிய அணைப்பில்
கழுத்தோர உன் மூச்சு காற்றால்

என்னுள் எரியும் தாகத்தை அணை.!

Wednesday, 22 July 2020

மழைச் சாரலை சுடும் தேநீர்.!

எப்போதும்
சன்னலை தாண்டு வந்து
நம்மோடு சல்லாபிக்கும்
மழைச்சாரல்
நீ இல்லாதபோது
சன்னலை தாண்டி வருவதே இல்லை
எங்கே தேநீர் குவளையில் 
ததும்பி இருக்கும் உன் நினைவுகள் 
தன்னை சுட்டு விடுமோ என்கிற

அச்சத்தில்.!

Tuesday, 21 July 2020

நிறமற்ற உலகில் நான் ஓவியன்.!

சிற்பிக்கே
பாறை சிற்பம் தரிக்கும்.!

குறவனுக்கே
தேனெடுக்க தேனீக்கள்
வழியை விடும்!

மாலுமிக்கே
அலைகடலும் பாதை காட்டும்!

கவிஞனுக்கே
சிந்தனைகள் தானாய் பிறக்கும்!

ஓவியனுக்கும்
தூரிகையில் நிறங்கள் சுரக்கும்!

நீ தீர்மானி
உலகமும் வளைந்து கொடுக்கும்.!



சுவடுகளற்ற அலை.!


வண்ணத்திட்டு அழிந்திடும்
ஆனால் கல்வெட்டு.!?

மேகம் நகர்த்திடும்
ஆனால் வான்மகள்!?

நாற்றம்  நீங்கிடும்
ஆனால் காற்று.!?

தற்குறி தூற்றப்படும்
ஆனால் அறநெறி !?

நுரை மறைந்திடும்
ஆனால் கடல்.!

முடிவெடு

நீ!

சுவடுகளற்ற அலையா.!?
முத்திரையிடும் உளியா.!?



Saturday, 18 July 2020

தந்தை.!


பிள்ளைகள் வாசிக்க மறந்த
கவிதையொன்று

தகப்பன்.!

Friday, 17 July 2020

வங்கி அட்டை.!


தேய்த்து தேய்த்து எடுத்து விட்டு
தேய்ந்த பின் தூக்கியெறிப்பட்ட
தந்தையெனும்

வங்கி அட்டை நான்.!

கனவுகள்.!

கருப்பு வெள்ளை 
படங்களுக்குள்
வண்ண வண்ண கனவுகள் .

Wednesday, 15 July 2020

விடைப்பெறத்தான்..


விதை உடைந்தால் செடி
கனி உடைந்தால் விதை

மழலை உடைந்தால் இளமை
இளமை உடைந்தால் முதுமை

மூங்கில் உடைந்தால்  புல்லாங்குழல் 
காற்று அக்குழலுக்குள் உடைந்தால் இசை

மலை உடைந்தால் பாறை
பாறை உடைந்தால் சிற்பம்

தண்ணீர் குடம் உடைந்தால் ஜனனம்
ஆயுள் உடைந்தால் மரணம்

உடைப்படத்தான் அத்தனையும் 
விடைப்பெறத்தான் வாழ்க்கையும்.!


Friday, 10 July 2020

நுரை குமிழிகளில் உடைந்த கனவுகள்.!


விதை உடைந்தால் செடி
கனி உடைந்தால் விதை

மழலை உடைந்தால் இளமை
இளமை உடைந்தால் முதுமை

மூங்கில் உடைந்தால்  புல்லாங்குழல் 
காற்று அக்குழலுக்குள் உடைந்தால் இசை

மலை உடைந்தால் பாறை
பாறை உடைந்தால் சிற்பம்

தண்ணீர் குடம் உடைந்தால் ஜனனம்
ஆயுள் உடைந்தால் மரணம்

உடைப்படத்தான் அத்தனையும் 
விடைப்பெறத்தான் வாழ்க்கையும்.!


ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் .!

தாயை தெருவில் விடுகிறாய்
தாரத்தை தாக்குகிறாய்

குழந்தையையும் சிதைக்கிறாய்
நிலத்தையும் மலடாக்குகிறாய்

நதியையும் நாசமாக்குகிறாய்
காற்றையும் விசமாக்குகிறாய்

சுவாசம் தந்தமரம்என்னையும் வெட்ட
கோடாலி தூக்குகிறாய்

வீழ்வதற்கு முன்
ஆம் 
வீழ்வதற்கு முன்
ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் 
எனக்காக அல்ல
உனக்காக.!

Thursday, 9 July 2020

நினைவுகள் !


யாருமற்ற வேளையில்
கொரித்துக் கொண்டிருக்கிறேன் 

உன் நினைவுகளை..!

சிங்கம்.!

எலும்பு துண்டிற்காக
சிங்கங்கள்
வாலாட்டுவதில்லை.!



Wednesday, 8 July 2020

நிசப்தம்.!

நிசப்தத்திலும்
நீ சப்தமாய் பேசுகிறாய்
என்னுள்ளே.!


மரணம்.!

உலகில்
உனக்கான உணவு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை.!


Tuesday, 7 July 2020

கசப்பு.!

நாளைய இனிப்புகள் 
காத்துக் கொண்டிருக்க
ஏன்
நேற்றைய கசப்புகளை 
கொரித்துக் கொண்டிருக்கிறாய்.!?



Tuesday, 31 March 2020

கேட்டு அறிகிறேன் ..

தொட்டு தொட்டு உணரும்
மாற்றுத்திறனாளியாய்
கேட்டு கேட்டு உணர்கிறேன்

வரிகளில் உன்னை !