Monday 6 December 2021

கடிதம்.!

 இரவு

பூமிக்கு எழுதும் கடிதம்

பனி.!

Sunday 5 December 2021

மாநாடு.!

        ரஜினி-கமல்,விஜய்-அஜீத் போன்றவர்கள் பேசாத வலிகள்,தனுஷ்-சிம்புகளால்பேசப்படுவது,வரவேற்புக்குரியது.இயக்குநர் வெற்றிமாறன் ,தனுஷை வைத்து  #அசுரன் மூலமாக,தலித்சமூகத்தோட  வலிகளை,அவரது பாணியில்,பிரமிப்பான ஒரு படைப்பை படைத்திருந்தார்.இன்றைக்குஇயக்குநர் வெங்கட் பிரபு,சிம்புவை வைத்து ,இஸ்லாமிய சமூகம் படும்,உளவியல் ரீதியான,மற்றும் அதிகாரவர்க்கங்களின் வாயிலாகப்படும்,அவஸ்தைகளை ,அவரது பாணியில் ,பிரமாண்டமான ,மிரள வைக்கும்படி#மாநாடு அமைத்திருக்கிறார்.


         படம் ஆரம்பத்திலிருந்து,முடியும்வரை சலிப்பே தட்டாத வகையில் கொண்டு சென்றிருப்பது சிறப்பு,படம்முடிந்தும்,படப்பிடிப்பின்போது நடந்த சிலவற்றை காண்பிப்பார்கள்.அதையும் கூட திரையரங்கில்இருந்தவர்கள் ,கிளம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.படத்தில் வரும் காட்சிகள்,எது கனவுகாலம்,எதுநிகழ்காலம் என்பது தெரியாத வகையிலேயே,சென்று விட்டு,முடிவில் கோர்வையான இணைப்பாக இருப்பதுசிலிர்ப்பாக இருக்கிறது.சிம்பு அழகாக இருக்கிறார்.எஸ் ஜே சூர்யா கலக்கி இருக்கிறார்.வரும் காட்சிகளில்இடைவேளைக்கு பிறகு,சிரிக்க வைத்து திக்குமுக்காட வைக்கிறார்.ரகுவரனுக்கு பிறகு,ஒரு பிரியமானவில்லனாக தெரிகிறார்.


        இப்படம் வெளியான சில நாட்களில்,பி ஜே பி யைச் சேர்ந்த வேலூர் இப்ராஹீம் ,படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.அச்செய்தியை பார்த்தப்போது,இப்பிரச்சனையை ,தயாரிப்பாளர்சுரேஷ் காமாட்சி,இயக்குநர் வெங்கட் பிரபு,நடிகர் சிம்பு எப்படி எடுத்துக் கொள்வார்கள்,காட்சிகளை எதுவும்நீக்கி விடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு இருந்தது.அப்படி எதுவும் நடக்கவில்லை.


         பி ஜே பியைச் சேர்ந்த வேலூர் இப்றாஹீம் சொன்னதைப்பற்றி,ஒரு தொலைக்காட்சியில் ,தயாரிப்பாளர்சுரேஷிடம்  கருத்து கேட்கப்பட்டது.அதற்கு அவர் சொன்ன பதில்


// இதுவரைக்கும் தமிழ் சினிமாவில்,தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களைத்தான் காட்டினார்கள்.தொப்பிபோட்டுருப்பான்,தாடி வச்சிருப்பான்..அந்த எண்ணத்தை மாற்றத்தான் ,வெங்கட் பிரபு இக்கதை சொன்னபோதுஇந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்..எல்லா மதத்திலும் சில கெட்டவங்க அதற்காக எல்லோரையும் குற்றம்சொல்ல முடியாது…// (இப்படியாக நீளும் அவரது பேட்டி நீளம் கருதி சுறுக்கமாக சொல்லிருக்கிறேன்)


     ஆயிரம் #மாநாடுகள் நடத்தி சொன்னாலும்,இவ்வளவு தூரம் மக்களிடம் போய் சேருமா என்றுதெரியவில்லை,ஆனால் ஒரு திரைப்படம் கொண்டு சேர்த்து விடுகிறது.


     இதுப்போன்ற கதையை ,தயாரிக்க,படமாக்க,அதில் நடிக்க சம்மதித்த ்அத்தனை நல்லுள்ளங்களுக்கும்,கோடான கோடி நன்றிகள்….❤️❤️