Wednesday 31 October 2012

நூலும்-நானும்!


நூற்கள்-
கடல்கள்-
குட்டி குட்டி-
தீவுகள்!

தேடி தேடி-
படித்ததுண்டு!

புத்தகத்திலேயே-
தொலைந்ததுண்டு!

புத்தகமே-
உனக்கும்-
எனக்கும்-
என்ன -
உறவிருக்கு!?

ஆமாம்ல-
ஒரே -
"எண்ண"-
உறவிருக்கு!

புத்தகங்களும்-
பிடித்தவங்களும்-
வடிவம் -
வேறு!

செயல்-
வடிவம்-
ஒன்று!

பிடித்தமானவர்கள்-
அருகே இருந்தால்-
சண்டை பிடிப்பார்கள்!

விலகி கொண்டால்-
வருந்துவார்கள்!

புத்தகம்-
படிக்கும்போது-
தூக்கம்-
வருது!

தூங்க சென்றால்-
படிக்க சொல்லி-
தூண்டுகிறது!

கலவரத்தில்-
கிழிக்கப்படும்-
மனிதர்கள்!

படிக்கும் போது-
உணரபடுது-
கிழிப்பது-
மனித மிருகங்கள்!

வாசிப்பது-
நேசிப்பது-
தேவைபடுது!

வாழும் காலம்-
முழுவதும்!





Tuesday 30 October 2012

மறைக்க தெரியல...

விரும்புகிறேன்-
கவலையின் போது-
மழையில்-
நனைந்து விட!

வழி தெரியவில்லை-
என் கண்ணீரை-
மறைக்க-
அதை விட!

Monday 29 October 2012

வீட்டு பூங்கா....

கணக்கில்-
எத்தனையோ-
பூங்காக்கள்-
உலகெங்கிலும்!

மொத்த-
பூங்காக்களையும்-
ஒத்த உருவமாக-
பெண் குழந்தைகளை-
இறைவன் -
அமைக்கிறான்-
ஒவ்வொரு-
வீட்டிலும்!

Sunday 28 October 2012

சிணுங்கி.....

 ஏதாவது -
பட்டால்தான்-
சுருங்கிடும்-
"தொட்டால் சிணுங்கி!"

என்னை-
வதைக்கிறாயடி-
நீ!
சிணுங்கி!

Friday 26 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (12)

"கயல் விழி!

இது-
இனியவனின்-
மொழி!

அன்புள்ள!
பாசமுள்ள!-என
ஆரம்பிக்கவில்ல!

காரணம்-
ஒரு வார்த்தையில்-
உன்னை அடக்கிட-
எனக்கு-
விருப்பமில்ல!

எனக்கு-
தெரிந்து-
என்னை நேசித்த-
ஒரு உயிர்-
என் தாய்!

எனக்கு-
தெரியாமல்-
நேசித்தவள்-
நீயாகத்தான்-
இருந்தாய்!

என் தாய்-
கண்ணீருக்கு-
சொந்தகாரி!

நீயோ-
சிரித்த-
முகத்துக்காரி!

"குடியால்-"
கெட்டது-
எத்தனையோ-
குடும்பங்கள்!

அதில்-
என்னைப்போல்-
எத்தனையோ-
இளைஞர்களின் -
எதிர்காலங்கள்!

"இருக்கிறவன்"-
குடித்தால்-
"அலுப்பு"-
என்கிறான்!

"இல்லாதவன்-"
குடித்தால்-
"கொழுப்பு"-
என்கிறான்!

எவன்-
"குடித்தாலும்-
அது-
மலம்தான்!

இதை-
ஏன்-
மறந்தான்!

"நான் என்ன-
செய்வேன்..!!?"

ஏன்-
கேவல சொற்களுக்கு-
நான்-
உள்ளானேன்!

என்னை-
பார்த்து-
திரும்பியவர்கள்!

ஒரு நாள்-
என்னை-
"அண்ணாந்து"-
பார்ப்பார்கள்!

சார்லி சாப்ளின்-
உலகையே-
சிரிக்கவைக்கவில்லையா!?

"என்னை -
அழவைத்த-
உலகை -
சிரிக்கவைக்காமல்-
விடமாட்டேன்-என
அவர் -
சொன்னவரில்லையா!?

இன்றைய -
தலைமுறைக்கு-
இலவச கல்வி-
கொடுத்தவர்-
காமராசர்-
இல்லையா!?

அவர்-
"படிக்காத-"
மேதையில்லையா!?

நம் தேசத்திற்கு-
உமருடைய ஆட்சி-
வேண்டும்-என்று
காந்தி -
சொன்னாரில்லையா!?

அந்த-
உமர்(ரலி..)அவர்கள்-
தந்தையால்-
"ஆடு மேய்க்க கூட-
லாயக்கில்லாதவன்-"என
திட்டுவாங்கியவரில்லையா!?

வையகம்-
சாக்கடைகளையும்-
கண்டதுண்டு!

சாதித்தவர்களையும்-
சுமந்ததுண்டு!

ஒரு-
நாள் நானும்-
வாழ்ந்து காட்டுவேன்-என
நம்பிக்கை -
எனக்குண்டு!

வரும் காலம்-
எந்தாய்-
கண்ணீர் துடைப்பேன்!

முடியுமான -
அளவு-
மற்றவர்களின்-
துயர் துடைப்பேன்!

காலம்-
கனிந்தால்-
உன் கரம்-
பிடிப்பேன்!

காலமெல்லாம்-
காத்திரு -என்று
சொல்லமாட்டேன்!

வேறொருவருடன்-
மணவாழ்க்கை-என்றாலும்
மனமார-
வாழ்த்துவேன்!

எனது -
பயணம்-
வெகு தூரம்!

எனக்காக-
நீ!
"வாடினால்"-
அது-
பெரும்பாவம்..!!

இவண்-
இனியவன்!

ஏனோ-
அவளை பற்றிய-
எழுத்தில்-
ஈரம்!

இவளது-
கண்ணீரால்-
மேலும்-
ஈரமானது-
கடிதம்!

-----முற்றும்---------------

(குறிப்பு-இக்கவிதை தொடர் பன்னிரெண்டும்-
மதுவின் தீமைகளை சொல்லும்-
மனித உரிமை ஆர்வலர்களுக்கு-
அர்ப்பணம்/
உங்களுக்கு பிடித்து இருந்தால்-
சமூக தளங்களில் இணைத்து கொள்ளுங்கள்)




Thursday 25 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (11)

 சல சலத்து-
செல்லும்-
கண்மாய் -
தண்ணி!

"சிலு சிலுத்து"-
செல்கிறது-
பூவையர்கள்-
குளிப்பதை-
எண்ணி!

பெண்ணானவள்-
பனி கட்டி-
போன்றவள்!

உண்மை-
பாசமென்றால்-
உள்ளங்கையிலும்-
உருகிடுவாள்!

பாசம் -
வேஷம் என்றால்-
உயிரையும்-
உறைய-
 செய்திடுவாள்!

"தம் " பிடித்து-
முக்குளிக்க-
துணிவு உள்ளவர்கள்-
முத்தை -
அடைகிறான்!

புல்லின் நுனி-
பனியிலும்-
பிடித்தமானவளின்-
ஈர முடியில்-
வடியும்-
துளி நீரும்-
காதல் பித்து-
பிடித்தவன்-
முத்தை-
காண்கிறான்!

"பொழுது அடைஞ்சா"-
கோழிகள்-
வீடு திரும்புது!

குளிச்சி விட்ட-
பைங்கிளிகள்-
"கூடு" திரும்புது!

ஒரு கிளி மட்டும்-
சந்து வழி-
வந்தது!

அக்கிளி-
நம்-
கயல் விழி!

குளித்து-
விட்டு-
பனியில்-
நனைந்து கொண்டு-
வருது-
ரோசா!

வருவதை-
எதிர்பார்த்து-
காத்து கொண்டுஇருக்கிறான்-
நம்ம-
ராசா!

எதிர்-
எதிர்-
வருகை!

தூரம்-
அடைந்தது-
குறைவை!

சிரித்து-
கொண்டு-
அவன்-
வந்தான்!

பயந்து-
கொண்டு-
அவள்-
வந்தாள்!

நெருங்கி-
விட்டார்கள்!

வெட்கத்தில்-
"கனன்று-"
விட்டார்கள்!

அவன்-
கையில்-
கொண்டுவந்த-
கடிதத்தை!

யாரும்-
பார்க்கவில்லை-
அவள் கையில்-
திணித்ததை!

பட படத்து-
போனாள்-
அவள்!

சர சர-என
போனான்-
அவன்!

அவளை-
சுற்றி-
குடும்பத்தார்-
படித்திட-
முடியவில்லை-
அக்கடிதத்தை!

அவன்-
வீட்டில்-
பெத்தவளின்-
கண்களில்-
கண்டான்-
கண்ணீரை!

தத்தளித்து-
கொண்டிருந்தாள்-
"அதை"-
பிரித்து-
படித்து விட!

அவன்-
வீட்டை விட்டு-
வெளியேறினான்-
தாய் கண்ணீரால்-
விடை-
பெற்றிட!

அவளுக்கு-
சமயம் கிடைத்து-
பிரித்தாள்-
கடிதத்தை!

அவன்-
அவசரமாக-
அடைந்தான்-
வாகனத்தை!

ஆயிரம் கிளைகள்-
இருந்தாலும்-
தாங்கும்-
ஆணி வேர்-
போல!

ஆயிரம்-
வேலைகள் -
உடல் செய்தாலும்-
உயிர் -
ஒன்று போல!

அண்ட சராசரங்களை-
அடக்கி ஆளும்-
ஒருவனை-
போல!

அத்தனைக்கும்-
விடை இருக்குது-
அக்கடிதத்தின்-
உள்ளே!

(தொடரும்...)


Tuesday 23 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (10)

"பட்டை"-
சரக்குக்கு-
தடை -
இங்கே!

"பாட்டில்"-
சரக்குக்கு-
தாராளம்-
இங்கே!

"பட்டை-"
உடலுக்கு-
நோயை -
தரும்!

"பாட்டில்"-
என்ன -
வலிமையா-
தரும்!!?


பாலும்-
பழமும்-
சாப்பிடுபவனுக்கே -
பல நோய்-
வருதுங்க...!!

பாழ போன-
"நாத்தத்தை-
குடிச்சா !?--
உடலுக்கு-
உறுதியாங்க..!!??

 மது தீமைகளின்-
தாய்-
நபி மொழி!

குடிச்சே -
தனக்கு தானே-
தோண்டி கொள்கிறார்கள்-
மரண குழி!

படுத்த படுக்கை-
ஆனான்!
பாவி-
மகன்!

அவன்தாங்க-
இனியவன்!
அப்பன்!

"நடமாட்டம்"-
இருந்தாலே-
இவன் குடும்பத்தை-
நாய் கூட-
நாடாது!

இனி-
எறும்பு கூட-
எட்டி பார்க்காது!

முதலிலாவது-
பழைய சோறு-
கிடைத்தது!

இப்போ-
அதுலயும்-
மண்ணு -
விழுந்து-
விட்டது!

யார் கூப்பிட்டது-
"குடிக்க "-என
சொல்லலாம்-
விற்பவர்கள்!

இவர்கள்-
பசியில் இருப்பவன் -
முன்-
ஊறுகாய் திறந்து காட்டி-
எச்சில் ஊற கூடாதுன்னு-
சொல்கிறவர்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்-
இச்சைகள் எனும்-
மிருகம் -
இருக்கும்!

அது ஒவ்வொரு-
வினாடியும்-
"ருசி "பார்க்க-
காத்து கொண்டிருக்கும்!

"எல்லா பூனையும்-
சைவ பூனைதான்-
அதற்க்கு-
எலி கிடைக்கும் வரை!"-
இது-
நான் படித்ததில்
பிடித்த ஒன்று!

அதை பகிர்ந்துள்ளேன்-
இவ்வாததிற்கு-
பொருந்தும் என்று!

இனியவனுக்கு-
விழுந்த-
முதல் அடி!

படிப்பில்-
விழுந்தது-
இடி!

வாயிற்றுபாட்டுக்கே-
வழி இல்ல!

இளமை காலம்-
வந்ததோ-
இவனை-
இம்சித்து கொல்ல!

எதை-
தொட!

எதை-
விட!

வாழ்கை-
தாரமா!?

வாழ்வாதாரமா!?

(தொடரும்....)





Monday 22 October 2012

நான் என்ன செய்வேன்..!!? (9)

 அறிய முற்பட்டான்-
இனியவன்!-
"சொன்னது"-
செய்தியா!?

இல்லை-
வதந்தியா!?

அஸ்ஸாமில்-
"அநியாயங்கள்-"
நடந்தேறியது!

வடகிழக்கு மக்களுக்கு-
தென்னிந்தியாவில்-
ஆபத்து என-
"வதந்தீ"-
பரப்பப்பட்டது!

அம்மக்களும்-
தென்னகத்தை விட்டு-
வெளியேறியது!

உணவு பொட்டலங்கள்-
"கலாசார காவலர்களால்-"
வழங்கப்பட்டது!

கோபத்துடன் கிளம்பிய-
மக்கள் -ரயிலிலேயே
சிலரை தாக்கியது!

அரசு-
வதந்தி பரப்புவதை-
தடுக்க நடவடிக்கை-
எடுத்தது!

அதில்-
இருபது சதவிகிதம்-
இணையங்கள் -
"அக்காவலர்கள்"-
இணையங்களை-
உள்ளடக்கியது!

சிறுபான்மை மக்களின்-
மேல் -சுமத்தப்பட்ட-
"கறையை"-
யார் நீக்குவது!?

உண்மையா-!?-என
அறிய-
ஆவல்கொண்டான்!

வஞ்சியவளிடம்-
கேட்டுவிட-
வீட்டை -
சுற்றினால்!

அவளோ!?-
தன்னை -
சுற்றுவதாக-
எண்ணி -
கொண்டாள்!

வானில் -
எப்போதாவது-
மின்னல் வெட்டும்!

இவன் போகும்போதெல்லாம்-
ஜன்னல் வழி-
"அம்மின்னல்" -
எட்டிபார்க்கும்!

கத்தி குத்து-
நடந்தாலும்-
எட்டி நின்று-
பார்க்காதவள்!

எட்ட- இவன்-
வந்தால்-
கதவை தட்டி கொண்டு-
பார்க்கிறாள்!

அவளின்-
 உறவுக்காரருக்கு-
குழந்தை பிறந்து-
இருந்தது!

அவளது-
குடும்பமே-
பேருந்துக்காக-
நின்றது!

கயழ்விழியை-
இவன்-
விழிகள்-
தேடியது!

அவளது-
முகம் அங்கு-
காணாமல்-
போய் இருந்தது!

வீட்டில்-
நிச்சயம்-
இருப்பாள்-
தனியாக!

எப்படியும்-
தெரிந்திடனும்-
விஷயத்தை-
உறுதியாக!

தொலை பேசி-
எண்ணை விசாரித்து-
வைத்து இருந்தான்!

ஒதுக்கு புறமான-
பொது தொலைபேசியில்-
எண்களை அழுத்தினான்!

குர்ர்ர்ர் .......
குர்ர்ர்ர்.....-.என்ற
சப்தம்!

தொலைபேசி-
எடுக்கும் வரை-
இவனை "கூறு "போட்டது-
அச்சத்தம்!

எடுக்கப்பட்டது-
தொலை பேசி!

சற்று-
தாமதமானது-
இவன் பேச்சி!

"ஹலோ ! யாரு..!?
"ஹலோ! யாரு!?-
அவளது குரல்!

உள் நாக்கில்-
ஒட்டிகொண்டது-
இவன் குரல்!

சற்று திணறி-
நான்-
இனியவன்-
பேசுறேன்-
என்றான்!

சற்று -
மூர்ச்சை ஆனாள்-
சுதாரித்து-
"சொல்லுங்க..-"
என்றாள்!

பேசிட-
ஆயிரவார்த்தைகள்-
இருந்தது!

அலைகடலில்-
ஆட்பட்டவர்களாக-
இவர்கள் நிலை-
இருந்தது!

இனியவனிடம்-
காசு போட்டு -
பேச கூட-
பணம் இல்லாமல்-
இருந்தது!

கேட்டான்-
வெள்ளையன்-
சொன்னதெல்லாம்-
உண்மையா!?

கொஞ்ச நேரம்-
இருந்தாள்-
ஊமையாக!

அவள்-
கேட்டாள்-
"ஏன் நீங்க-
நம்பலையா!?

பதிலுரைத்தான்-
இல்லை-
உறுதிபடுத்தி -
கொள்ளத்தான்! ?

சொன்னாள்-
உண்மையாகத்தான்!!

அனுமதித்த -
நேரம் -
முடிந்து விட்டது!

தொடர்பு-
துண்டிக்க பட்டது!

பதில்-
என்னவோ-
நேர்மறை தான்!

இவனோ-
கைகளுக்குள்ளே-
கவலையாக-
முகம் -
புதைத்தான்!

(தொடரும்...)




Sunday 21 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (8)

 "நெருப்பு"-
இறுக்கமாக-
முகத்தை வைத்து -
கொண்டான்!

உருக்கமாக-
பேச -
ஆரம்பித்தான்!

மாப்ள!

உன்னை -
விரும்புதுடா-
அந்த -
"புள்ள"!

முன்னேயே-
சொல்லனும்னு-
நினைச்சேன்-
உன்கிட்ட!

நீதான்-
எப்பவுமே-
இருந்தாய்-
முறைசிகிட்டே!

இனியவன்-
"ஏதோ"-
பேச-
எத்தனித்தான்!

வெள்ளையன்-
"பேசி முடிச்சிக்கிறேன்-"
என்ற -அர்த்தத்தில்-
கையமர்த்தினான்!

எப்படி!?-
எனக்கு-
தெரியும்னு-
நினைக்கிறியா!?

எல்லாத்தையும்-
சொல்லுறேன்-
கொஞ்சம்-
பொறுக்குரியா!?

கயல் விழியும்-
சோபி கண்ணும்-
சினேகிதிகள்!

சோபி கண்ணும்-
நானும்-
காதலர்கள்!

என்னவளிடம்-
உன்னவள் -
சொல்லியிருக்கிறாள்-
உன் மேல் கொண்ட -
காதலை!

என் மூலம்-
செய்தி அனுப்பி-
எதிர் பார்க்குது-
உன் பதிலை!

உன் விருப்பத்தை-
"அது" கிட்ட-
சொல்லிடு!

இல்லையினா-
என் மூலமாவது-
சொல்லி விடு!

கோடை மழையாக-
"கொட்டி" விட்டு-
சென்று-
விட்டான்!

இனியவன்-
கொட்டும் பனியிலும்-
வியர்ப்பதாக-
உணர்ந்தான்!

காதலானது-
காட்டு தீ-
போன்றது!

பரவாமல்-
இருந்தால்-
நல்லது!

காதலானது-
அருவி-
 போன்றது!

விழுந்தாலும்-
அழகாக-
காட்சி-
தருவது!

காதலானது-
தீப்பெட்டி-
போன்றது!

"உரசாமல்-"
பயன்படாது!

காதலானது-
மெழுகுவர்த்தி-
போன்றது!

"கண்ணீரையும்"-
தன்னுடன்-
வைத்து கொண்டு-
ஒளி தருவது!

காதலானது-
பள்ளி கூடம்-
போன்றது!

தமிழ் தாய் -
வாழ்த்தும்-(ஆரம்பம்)
தேசிய கீதமும்-(முடிவு)
உள்ளது!

காதலானது-
தேர்தல்-
வாக்குறுதி-
போன்றது!

வாய் கிழிய-
வசனம்-
பேசுவது-
கடைசி வரை-
ஏமாற்றுவது!

இனியவன்-
என்ன தர-
போகிறது!?

"பின் தொடர்ந்தால்"-
உங்களுக்கும்-
தெரிய போகிறது!

(தொடரும்....)






Friday 19 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (7)

"டேய் மாப்ள!-என்று
அழைத்தான் -
ஒருவன்!

திரும்பி பார்த்தான்-
இனியவன்!

கூப்பிட்டது-
"கருப்பு நெருப்பு"-என
தனக்கு தானே-
வச்ச பேரு!

"வெள்ளையன்"-இது
அவனை பெத்தவங்க-
வச்ச பேரு!

கிராமங்களில்-
சொல்லுவாங்க-
"கழுதை கெட்டா-
குட்டிய சுவரு!"

இன்று-
குட்டி சுவருகளில்-
இருப்பவர்கள்-
பேரு-
வேறு!

ஆம்-
இப்ப -
"வெட்டி ஆபிசரு"!

அழைத்தவன்-
அந்த ஆபிசரில்-
ஒருவரு!

"என்ன மாப்ள"-
பார்க்காமலே"-
போறே-இது
வெள்ளையன்!

அவனை நோக்கி-
வந்த இனியவன்-
திரும்பி-
போனான்!

"ஏண்டா போறே"-
கேட்டாரு-
வெள்ளையரு!

பார்த்துட்டேன்-
போறேன்-இது
இனியவரு!

கையை பிடித்து-
இழுத்தான்!

கூட அமர சொல்லி-
பல்லிளித்தான்!

குட்டி சுவரில்-
உட்கார்ந்தார்கள்!

சிறிது நேரம்-
மௌனம்-
நிலவியது!

"மாப்ள-
கயல்விழியை -
பற்றி  என்ன-
நினைக்கிறே!?-
வெள்ளையன்!

எந்த கயல்விழி!?-
இனியவன்!

அலுத்து கொண்டு-
சொன்னான்-
"உன் சொந்தக்கார-
புள்ளதான்..!!"

புரியல-
எனக்கு-
"அதை" பற்றி-
என்னிடம் ஏன்-
கேக்குறே-
என்றுதான்!?

"காரணமாகத்தான்-
சொல்லு"-இது
கூப்பிட்டவன்!

என்ன காரணம்னு-
சொல்லு-இது
வந்தவன்!

சரி!
காதலை பற்றி-
என்ன நினைக்கிறே!

"நீயெல்லாம்-
அதை பத்தி-
பேசுவேன்னு-
நினைக்கல!"

உன் அப்பனை-
மாதிரியே-
"எடக்கு மடக்கா "-
பேசாதே!

நீயும்-
சுத்தி வளைச்சி-
பேசாதே!

அப்போ சரி-
மேட்டருக்கு-
வாரேன்-
வெள்ளையன்!

"மேட்டருக்கும்-
வருவியா!?-
இனியவன்!

கடுப்புடன்-
சரி!-
விசயத்துக்கு-
வாரேன்!-
என்றான்!

"இன்னும் வரலியா!?-என
இனியவன்-
கேட்க நினைத்தான்!

ஆனால்-
வெள்ளையன்-
பொறுமையை-
சோதிக்க -
விரும்பவில்லை!

வெள்ளையன்-
சொல்லபோற "விஷயம்-"
இவனது-
தூக்கத்தை-
கெடுக்காது-என்று
சொல்வதற்கில்லை!!

(தொடரும்...)





Wednesday 17 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (6)

வாலிபம்-
உழுது போட்ட-
விளை நிலம்!

எண்ணங்கள் எனும்-
விதைகளை-
விதைக்கும்-
காலம்!

எண்ணிட-
வேண்டும்!

விதைப்பது-
விதைகளையா!?-
விஷங்களையா!?-
எதை ஊன்றுகிறது-
இன்றைய சமூகம்!

என்றைக்கும்-
நம் -
தமிழகம்!

கட்டுண்டு கிடப்பது-
திரைப்படம்!

"நடிப்பவர்கள்"-
பின்னாலேயே-
போனதால்!

நாடும்-
பின்னோக்கி-
போகிறதா!?

தொலை காட்சி-
அறிவியல்-
வளர்ச்சி!

கோள் மூட்டி-
குடும்பங்களை-
பிரிக்கிறதே-
"தொடர் காட்சி"!?

பெண்ணென்றால்-
மதிக்கணும்-
மனித மனம்!

மணிக்கொரு வீதம்-
கற்பழிப்பு நடக்குதே-
என்ன ஒரு-
கேவலம்!?

ஈவ் டீசிங்-
காரணம் -
ஆடை குறைப்பு-
காவல் துறை-
அறிவிப்பு!

அது-
"உரிமை"-என
இன்னொருபக்கம்-
கொந்தளிப்பு!

ஆபாசம்-
ஆபாசம்!

எங்கும்-
எதிலும்-
ஆபாசம்!

விளம்பரங்களிலும்-
தொடர்வது-
அலங்கோலம்!

முகச்சவரம்-
"குறிப்பிட்ட "கத்தி-
பயன்படுத்தினாலும்!

"குறிப்பிட்ட"பற்பசை-
பயன்படுத்தினாலும்!

"குறிப்பிட்ட"-
இரு சக்கர வாகனம்-(பைக்)
ஓட்டினாலும்!

மயங்குவது-
என்னவோ-
ஒரு பெண்ணாம்!

ஏன் பெண்ணென்றால்-
போக பொருளாக-
பார்வையாம்!?

அன்று-
பயிர்களுக்கு இடையே-
"களைகள்"!

இன்று-
களைகளுக்கு இடையே-
பயிர்கள்!

அன்று-
வளமான சிந்தனைக்கு-
இடையே-
அவலமான சிந்தனைகள்!

இன்று-
"அவலங்கள்"-
இடையே-
"வளங்கள்"!

இனியவன்!

இனி-
என்ன-!?
அவன்!

பயிரா!?
களையா!?

வளமா!?
அவலமா!?

(தொடரும்.....)








Monday 15 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (5)

 விடியாமல்-
இருக்காது-
இரவு!

நிமிருமா!?-
குடியில்-
"கவுந்திட்டவர்களின்"-
வாழ்வு!

இப்பொழுது-
பார்ப்போம்-
இவர்களின்-
வீட்டை!

படுத்து கொண்டு-
பார்ப்போமேயானால்-
முகட்டை!

இரவில்-
நிலவு-
நட்சத்திரங்களாகவும்!
பகலில்-
சூரிய வெளிச்சம்-
வீட்டினுள்-
நட்சத்திரங்களாகவும்-
தெரியும்-
அவ்வளவு-
ஓட்டை!

புகைப்பதால்-
இதயத்தில்-
ஓட்டை!

குடிப்பதால்-
குடலில்-
ஓட்டை!

"விற்கவும்"-
அனுமதித்து விட்டு-
"வேண்டாம்"-என
விழிப்புணர்வு-
நடத்துவது-
என்ன சொல்ல-
இந்த நிலைபாட்டை!?

கதிரவன்-
கக்கியது-
சூட்டை!

கலைத்தது-
இனியவனின்-
தூக்கத்தை!

"ஆட்டம்"போட்டவர்-
இன்னும்-
எழவில்லை!

"நடந்தவை"பற்றி-
தாய் முகத்தில்!-
சஞ்சலமே இல்லை!

"காலை கடன்"-
முடிக்க போகிற-
தெருக்காரர்கள்!

இவனை-
கடன் கடன்காரனை-
போல-
பார்த்தார்கள்!

புரிந்து-
கொண்டான்-
அப்பனின்-
செய்கைகளால்-
இந்த-
பார்வைகள்!

பார்த்தவர்கள்-
எப்படி பட்டவர்கள்!?

அவன் அப்பனை-
விட-
"ஒரு இரு வார்த்தை"-
குறைவாக -
"பேசி இருப்பார்கள்"!

எல்லாம்-
ஒரே குட்டையில்-
ஊறிய-
மட்டைகள்!

வழக்கம்போல்-
கிளம்பினான்-
பள்ளி நோக்கி!

காலம் -
கழிகிறது-
நம்மை-
தாங்கி!

நடுநிலை பள்ளி!
உயர்நிலை பள்ளி!
மேல்நிலை பள்ளி!

இடைப்பட்ட-
காலத்தில்தான்-
கனன்று கொண்டிருக்கும்-
இளமை எனும்-
நெருப்பு கொள்ளி!

(தொடரும்...)


Saturday 13 October 2012

நான் என்ன செய்வேன்...!!?(4)

வெளியே -
"கச்சேரி"-
ஆரம்பித்தது!

உள்ளே-
இனியவனை-
தாயின் குரல்-
சாப்பிட -
அழைத்தது!

பழைய சோறு-
சூடாக்கியும்!

கூனி ஆனம்-(குழம்பு)
சுண்டவைத்தும்!

தேனாய் இனித்தது-
தொண்டை வழி-
இறங்கியதும்!

"பர்க்கரும்"-
"பீசாவும்"-
கிடைக்கும் காலம்!

ஆனாலும்!

கிடைக்கவில்லை-
எந்த  ருசியும்!

தாய்-
உணவு-
பாந்தமானது!

நாகரீக -
உணவு-
பந்தாவானது!

சாப்பிட வரலியா!?-
கணவனை-
அழைத்தாள்-
உள்ளே இருந்து!

சாப்பிடனுமா!?-
இவன் -
வெளியே இருந்து!

கேள்வி-
பதில்-
சரியா!?-
தெரியவில்லை!

"எடக்கான"-
பதில்-
மறுப்பதற்கில்லை!

இதற்க்கு-
கைதட்டல்-
கிடைக்கவில்லை!

ஏனென்றால்-
"நடந்த "இடம்-
சட்டமன்றம்-
இல்லை!

வந்தார்-
பரிமாறப்பட்டது-
அதே-
சோறு!

கடுப்பானாரு-
மைனரு!

தட்டை வீசியதில்-
கரையானது-
சுவரு!

சட்டியில் உள்ளதுதானே-
அகப்பையில்-
வரும்!

இவன் உழைத்த-
பணத்தை-
வீட்டில் கொடுத்தால்தானே-
உணவாகும்!

கட்டியவளிடம்-
காட்ட தேவை இல்லை-
கோபத்தை!

காட்ட வேண்டியது-
காசுக்கு -
"கட்டிங் "-
 கொடுத்தவனிடத்தே!

"என்னடி-
நாய் சாப்பிடுமா!?-"என
குதித்தான்!

அதனால்தான்-
உனக்கு வைத்தேன்-என்று
சொல்லி இருப்பாள் !

இவள்-
"சீரியல் " பார்ப்பவளாக-
இருந்திருந்தால் !!

ஏனோ-
அநியாத்திற்கு-
நல்லவளாக -
இருந்தாள்!

அதனால்தான்-
பொறுமையாக-
இருந்தாள்!

பொறுமைக்கும்-
எல்லை உண்டு-என்பதை
இவன் மறந்தான்!

அதனாலேயே-
தகாத வார்த்தையை-
தொடர்ந்தான்!

மப்பில் பேசிய-
வார்த்தை -
"கப்படித்து-"
வீட்டை நிறைத்தது!

பிறகு-
தெருவே-
நாறியது!

இனியவனின்-
கண்ணீரால்-
குளித்தது-
தலையணை!

அன்பானவர்களே-
தேவையா!?-
எத்தனையோ பேர்-
கண்ணீருக்கு-
காரணமான-
மது விற்பனை..!!?

(தொடரும்...)





Friday 12 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (3)

 வீடருகே-
நின்றது-
சப்தம்!

வீட்டில்-
தொடங்கியது-
நிசப்தம்!

இவரு-
குடும்ப தலைவரு!
மொடா-
குடிகாரரு!

ஏனைய இடங்களில்-
தகப்பனுக்கும்-
பிள்ளைக்கும்-
பிரச்னை-
"பிடித்து " போவதில்!

காரணம்-
தகப்பன்-
பெரும்பகுதி-
நேரம் செலவழிப்பது-
உழைப்பில்!

மிச்ச சொச்ச -
நேரமும் கழியுது-
வீட்டு-
சண்டையில்!

குழந்தை-
மனம் முதலில்-
பதிந்து கொள்வது-
தாய் முகத்தை!

எப்படி ஏற்கும்-
அம்முகத்தை-
அடிக்கும்-
கைகளை!

யார் மீது-
தவறு என்பதா-
இங்கே -
முக்கியம்!!??

பிள்ளைகள்-
எதிர்காலம்-
அதை விட-
முக்கியம்!

சண்டை போடும்-
பெற்றோர்களே!

நிலை தடுமாறும்-
உங்கள் மழலைகள்-
நிலைகளே!

சண்டைபோடும்-
பெற்றோர்களால்-
பிள்ளைகள் -
உருவாகிறார்களாம்!

முரடனாகவோ!?
வன்முறையாளன்ஆகவோ!?

ஏன் சைக்கோ -
கொலையாளிகளாகவோ!?

இதை -
மனோவியல்-
சொல்லுது!

ஏனோ-
நாம்மெல்லாம்-
மறந்தது!?

உழைச்ச -
அலுப்பு-
குடிக்கிறார்களாம்!!

அப்போ ஏன்-
மனிதனை விட-
கஷ்டப்படும்-
மாடுகளுக்கு-
புண்ணாக்காம்!?

என்னடி-
புள்ளை வளர்த்தே-என
திட்டுபவர்களே!

என்ன யோக்கியமாக-
நாம வீட்டில்-
நடக்கிறோம்-என்பதை
சிந்தியுங்களேன்!

போதை-
போதை-என
அலையும்-
இக்காலம்!

அது-
அழிவின்-
விரைவுச்சாலை-என்பதை
மறந்ததே-
பெரும்சோகம்!

அரசு எடுத்து-
நடத்துவது-
அதை விட-
கேவலம்!

வழிய வந்து-
வங்கிகள்-
வட்டிக்கு பணம்-
கொடுக்கும்!

பின்பு-
வாங்கியவன்-
தோலை உரிக்கும்!

அது போலதானோ!!?-
தாலிக்கு-
தங்கம்-
இலவசமா!?

அதற்க்கு-
பங்கம் விளைவிக்க-
டாஸ்மாக்கா!!?

தகப்பன்-
அறிமுகம்-
இதுதான்!

இனி-
விடிய விடிய-
ஆட்டம்தாம்..!!

(தொடரும்...)



Wednesday 10 October 2012

நான் என்ன செய்வேன்...!!?? (2)

 பொழுது-
அடையும்-
நேரம்!

பள்ளி-
கதவுகள்-
திறக்கும்-
நேரம்!

மனதை-
அள்ளும்-
மாலை-
நேரம்!

பள்ளி விட்டதும்-
மாணவர்கள்-
பறந்தார்கள்-
சிட்டாக!

இனியவனோ-
சென்றான்-
எதையோ-
இழந்தவனாக!

அவனின்-
கவலை-
அறியும்!

கண்மாயும்-
பிளந்து கிடக்கும்-
கரம்பையும்!

அவன் காலின்-
தளர்வில்-
"அவைகளுக்கு-"
புரியும்!

காலாற-
நடந்தான்!

பாரம் கொஞ்சம்-
குறைந்ததாக-
நினைத்தான்!

ஊரில் யாரும்-
சொந்தமில்லை-என்று
சொல்வதற்கில்லை!

"இல்லாதவனை" யாரும்-
சொந்தம் கொண்டாட-
விரும்புவதில்லை!

பல உள்ளது-
இளமையில்-
கொடுமை!

இவனுக்கோ-
சொந்தங்களின்-
ஏளன பார்வை!

வீட்டின் அருகே-
வந்தான்!

வேதனைதான்-
மிச்சம்-என்று
தெரிந்ததுதான்!

தாய் இருந்தாள்-
ஒடிசலான-
தேகம்!

உயிர் ஒட்டி -
இருப்பதே-
அதிசயம்!

குழந்தை காலத்தில்-
பாசத்தை-
பாலாக புகட்டியவள்!

காலமெல்லாம்-
நம் கண்ணில்-
கண்ணீரை பார்க்க-
பிடிக்காதவள்!

நீர் ஊற்று தேடி-
மண்ணை-
 பிளக்கிறார்கள்!

தானாக ஊறும்-
தாய் பாலை-
கொடுப்பதை-
தவிர்க்கிறார்கள்!

அதற்க்கு-
நவீன யுவதிகள்-
நாகரீகம் -என்று
பிதற்றுகின்றார்கள்!

தாய்பால்-
கொடுப்பதால்-
மார்பு புற்று வருவது-
குறைவு என்பதை-
ஏனோ-
மறந்தார்கள்!?

அது சரி-
ஊர் வம்பு-
நமக்கெதற்கு!?

சொல்லவேண்டிய-
கதை மிச்சம்-
இருக்கு!

வீட்டில்-
தாயும்-
தனயனும்!

தெரு முனையில்-
நாயின் சப்தமும்!

கூடவே-
இவர்களை "இம்சிக்கவரும்"-
சப்தமும்!

(தொடரும்...)






Monday 8 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (1)

டிங் டிங் -என்று
மணி காட்டியது-
சுவர் கடிகாரம்!

டண் டண்-என்று
அழைத்தது-
பள்ளி கூடம்!

தேசம் விட்டு-
பறவைகள்-
ஒன்று சேரும்-
இடம்-
வேடந்தாங்கல்!

நட்பு எனும்-
கயிறால் பிணையும்-
இடம்-
பள்ளி கூடங்கள்!

கோடைகால -
விடுமுறைக்கு-
பிறகு!

படிக்கணும் என-
நினைவு வந்தது-
மணி சப்தம்-
கேட்ட பிறகு!

கட்டு பாடு-
மிகுந்த காலம்!

கடுப்புடன்-
செல்லும்-
காலம்!

காலமெல்லாம்-
நினைவுகளில்-
இனிப்பை தடவிடும்-
பள்ளி காலம்!

மழை காலத்தில்-
எங்கிருந்தோ-
கிளம்பும்-
தும்பிகள்-
கூட்டம்போல்!

பிடித்தமானவளின்-
தாவணி முனை-
உரசிடும்போது-
ஏற்படும்-
திடீர்  உணர்வின் -
உயிர்ப்பு போல்!

பள்ளி மைதானம்-
மாறியது-
மைனாக்களின்-
மாநாடு போல்!

சில "மொட்டுக்கள்"-
"பூவாகி -"
இருந்தார்கள்!

பல மலர்கள்-
வறுமையாலும்-
வெயிலாலும்-
காய்ந்து இருந்தார்கள்!

ஒவ்வொரு -
செயலுக்கும்!
எதிர்வினை-
இருக்கும்!

அடக்கு முறைகளால்-
மக்கள்-
அடங்கி விடுவதில்லை!

அவதூறுகள்-
உண்மைகளை-
மறைத்தே -
வைத்திட-
முடிவதில்லை!

பிரிவுகள்-
பாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை!

பள்ளி ஆரம்பித்தது-
முதல் நாளாக!

வகுப்பறைகள்-
காட்சியளித்தது-
நிரம்பிய பூக்களாக!

மாணவர்களிடையே-
இருந்தான்-
ஒருவன்!

பெயர்-
இனியவன்!

பேரில்-
இனிப்பு-
உள்ளது!

வாழ்வோ-
கசப்பு-
நிறைந்தது!

(தொடரும்...)



Saturday 6 October 2012

காந்தியும்-துளி நம்பிக்கையும்..!!

மகாத்மாவே!

அன்று-
குஜராத் என்றால்-
காந்தி!

இன்று-
குஜராத் என்றால்-
கலவர தீ!

உனது அடையாளம்-
மூக்கு கண்ணாடி!
ஒரு தடி!
போர்த்திய துணி!

இலவசமாக-
ரத்தகரைகள்-
அடையாளமிட்டான்-
கோட்சே!

இருந்தும்-
தாகம் அடங்கவில்லை!-
நீ பிறந்த மண்ணையும்-
ரத்தம் ஆக்கினார்கள்-
அவனின் வாரிசுகளே!

நீ!
பல கோரிக்கைக்கும்-
போராட ஒரே வழி-
அகிம்சை!

கூடன்குள மக்கள்-
ஒரே கோரிக்கை-
ஒரே வழி-
அதே அகிம்சை!

உன்னை -
இம்சித்தவர்கள்-
அந்நியர்கள்!

இம்மக்களை-
துன்புறுத்துவதோ
இந்தியர்கள்!

உனது வழியை-
பின்பற்றும்-
இம்மக்களின்-
குரலை!

கேட்க ஒரு-
நாதி இல்ல!

உன் படங்களை-
"வாக்குக்கு" பயன்படுத்திட-
குறைச்சல் இல்ல!!

மது விலக்கு-
நீ!
போதித்தாய்!

இன்னும் -
நீ!-
வாழ்திருந்தால்!-
"விளங்கும் "-என
வருந்திருப்பாய்!

பெத்தவங்களையே-
ஏதோ "இல்லத்துல"-
தள்ளுறாங்க!

"தினங்கள்"மட்டும்-
யோக்கியமா!?-
கொண்டாடுவாங்க!!

தாயிக்கும்-
தந்தைக்கும்-
"குறிப்பிட்ட" தினத்தன்று-
பூங்கொத்து!

இச்செயல் சமூகத்தின்-
காதில்-
பூவை-
குத்தும்!

அப்பனை-
ஆத்தாளை-
தெருவில்-
விட்டவர்கள்!

"தாத்தா"-
உன் போதனைகளை-
யோசிப்பார்கள்!!?

உன்னை போல-
எத்தனையோ-
உள்ளங்கள்!

நாட்டுக்காக-
"புதைந்தார்கள் "!

தேசம் என்பதை-
நேசித்தார்கள்!

தியாகிகளே!
கவலை வேண்டாம்!
கலங்க வேண்டாம்!

நாளையே -
மாறும் -
என் தேசம்-என்று
நம்பிக்கை இல்லை!

என்றாவது -
ஒரு நாள்-
மாறும்-என்ற
நம்பிக்கையை -
இழக்கவில்லை!

ஏனென்றால்-
தியாகங்களின்-
உணர்வுகள்-
உயிர்பிக்காமல்-
இருந்ததில்லை!!






Thursday 4 October 2012

வாழ்வதா முக்கியம்....!!??

  பிறப்பின் -
நோக்கம் -
தெரிந்தவர்கள்!

இறந்தும்-
மனித மனங்களில்-
வாழ்கிறார்கள்!

நோக்கமே-
இல்லாமல்-
வாழ்பவர்கள்!

வாழும் போதே-
இறந்தவர்கள்!

பல ஆயிரம்-
உயிர்கள் -
அழிந்தால்!

இயற்கை -
சீற்றத்தால்-
மடிந்தால்!

கதறும்-
உலகின் உயிர்கள்!

ஒரு உண்மை-
ஆத்மா -
மரித்தால்!

பல கோடி -
கண்கள்-
குளமாகும்-
கண்ணீரால்!

சர்வாதிகாரர்கள்!
சாகடிப்பவர்கள்!
சாதித்தவர்கள்!

கொடுங்கோலர்கள்!
கொடுமைக்காரர்கள்!
குணமானவர்கள்!

ஆயுத தாங்கிகள்!
ஆயுதத்தால் தாக்குண்டவர்கள்!

அரவணைப்பவர்கள்!
அழுபவர்கள்!
அழ வைத்தவர்கள்!

"வந்து போனா "-
மனிதர்கள் தான்-
எத்தனை!?

நாம் தேர்ந்தெடுத்து-
செல்லும் பாதைதான்-
குறிப்பது-
எதனை!?

ஒரு கவள-
உணவிற்கு!

ஓராயிரம் -
கைகளின்-
உழைப்பிற்கு!

நாம் -
உதவி உள்ளோமா-
ஒரு உயிருக்கு!?

படைப்புகளெல்லாம்-
படைப்புகளில்-
சிறந்த மனிதனுக்கு-
உதவுகிறது!

மனிதனுக்கு-
மனிதன் உதவுவதில்-
என்ன குறைந்திட-
போகிறது!?

எவ்வளவு காலம்-
வாழ்ந்தோம்-என்பதா
முக்கியம்!?

எப்படி வாழ்கிறோம்-என
எண்ணுவது-
மிக அவசியம்!


Tuesday 2 October 2012

கலங்காதிரு....



"வந்தது"-
கோடி!

"சேர்ந்தது"-
ஒன்று மட்டும்-
கருவறை-
தேடி!

ஆரம்பித்தது-
தேடலும்-
ஓட்டமும்-
பிறப்புக்காக!

முடங்குவதும்-
முனங்குவதும் -
ஆகிடுமா!?-
வாழ்வின்-
அர்த்தமாக!?

"வரவில்"-
இல்லை-
பொட்டு துணி!

"போகையில்"-
உண்டு-
ஒத்த துணி!

இடையில் -
வெல்ல நீ!-
"துணி!"

கொட்டும் தேனீயால்-
மருந்தும்-
உண்டு!

வரும் சோதனையால்-
பாடங்களும்-
உண்டு!

மண்ணை பிளக்க-
வீரியம் உள்ளதால்-
விதை புதைகிறது!

தாங்கிடும் தன்மை-
உள்ளதால்தான்-
சோதனையும்-
வருகிறது!

வானம்-
பூமி-
காலமெல்லாம்-
ஒன்றுதான்!

"வந்தவர்களும்-"
"போனவர்களும்-"
உண்டுதான்!

வென்றவர்கள்-
என்றும்-
மனங்களில்-
இடம் உண்டுதான்!

விடியாத-
இரவுகளா!?

நகராத-
மேகங்களா!?

நம் சோகங்கள்-
ஒரு நாள்-
விலகாதா!?

"கஷ்டத்தில்-
இலகு உள்ளது!
நிச்சயமாக-
கஷ்டத்தில்-
இலகு உள்ளது"-
இறை வாக்கு!

படைத்தவனின்-
வாக்கு இப்படி இருக்கு!

கவலைகள்-
ஏன் நமக்கு...!?