Thursday 31 January 2013

ஹபீப்-குர்சியத் (2)

சில வருடங்களுக்கு-
முன்னால்!

நினைவுகள் பல-
சுழற்றி அடிக்குது-
மனக்கண்கள்-
முன்னால்!

"தாங்கி விட்டு-"
வெளியேற்றுகிறது-
நம்மை-
கருவறைகள்!

பிறப்பே-
நமக்கு தருகிறது-
அழுகைகள்!

அழுகையே-
ஆரம்பமென்றால்-
"அது" இல்லாமல்-
இருக்குமா!?-
வாழ்க்கைகள்!

மடியிலும்-
மார்பிலும்-
தூக்கி வளர்த்தவர்கள்!

நம்மை-
குழந்தையின்போது-
உறவுகள்!

பாசத்தை-
"கொட்டி"-
வளர்த்தார்கள்!

ஒரு நாள்-
"பிரிவோம் என்றா!?-"
அப்படி செய்திருப்பார்கள்!?

தொட்டிலாகும்-
அப்பாமார்கள்-(தாத்தா)
கைலிகள்!

போர்வையாகும்-
ஆச்சாமார்கள்-(பாட்டி)
பிறை போட்ட-
தாவணிகள்!

விரல் பிடித்து-
நடக்கவைத்தவர்கள்!

இன்று-
கம்பு ஊன்றி-
நடப்பவர்கள்!

தாய் பறவை-
குஞ்சுகளை-
கூட்டிலிருந்து-
தள்ளி விடுமாம்!

குஞ்சு கீழே-
விழட்டும் என்றல்ல-
சிறகு விரிக்கவே-
அப்பயிற்சியாம்!

நம்மையும்-
பாடசாலையிலும்-
சேர்த்தார்கள்!

"பிரிவை"-
 தாங்கிடும்-
பயிற்சியா-
கொடுக்கிறார்கள்!?

பல-
கருவறையிலிருந்து-
வந்த-
வளர்ந்த-
வரவுகள்!

பள்ளிக்கூடத்திலும்-
மதரசாக்களிலும்-
இணைகிறது-
நட்பு எனும்-
உறவுகள்!

(நினைவுகள் சுழலும்....)





Wednesday 30 January 2013

ஹபீப்-குர்சியத்!(1)

2013-
சனவரி-
இருபத்திமூன்றாம் தேதி!

இரவு -
நேரமது!

அலைபேசி -
அலறியது!

அது-
அலறல் செய்தியை-
தாங்கி வந்தது!

மறு முனையில்-
என்னுடன்-
பிறந்தவன்!

படபடப்புடன்-
அச்செய்தியை-
சொன்னவன்!

மேகங்கள்-
வானில் மிதக்கவே-
செய்கிறது!

அத்தகவலை-
கேட்டபின்-
என் நிலை -
நிலைகொள்ளாமல் ஆனது!

ஹபீப்-
உன்அலைபேசிக்கு-
அழைத்தேன்!

சிறிது-
நேரத்திற்கு பின்னே-
எடுத்தாய்!

பேசிடமுடியாமல்-
தவித்தாய்!

பின்புறத்தில்-
அழுகை-
சப்தம் கேட்டேன்!

"உறுதியென-"
அறிந்தேன்!

ஹபீப்-
உன்னை காணவே-
விரைந்தேன்!

நெஞ்சில்-
இமயத்தின்-
பாரத்தை-
சுமந்தேன்!

நாம்-
அழுததில்லை!-
எத்தனை முறை-
தோற்றும்!

அன்று-
கண்ணீரை-
 மறைக்க முடியாமல்-
தோற்றோம்!

ஹபீப் -
"உன்னவளுக்காக"-
எவ்வளவோ-
இழந்தவன்-
நீ!

இன்று-
"உன்னவளையே"-
இழந்து நிற்க்கிறாயடா-
நீ!

உலகம்-
ஒரு நாள்-
"இவ்வெழுத்தை"-
படிக்கலாம்!

உன் நேசத்தையும்-
என் பாசத்தையும்-
அறியலாம்!

எத்தனையோ-
காவியங்கள்-
இவ்வுலகில்-
உண்டு!

எழுதுகிறேன்-
நம் வாழ்வையும்-
பகிர்ந்து செல்வோமே-
என்று!

(நினைவுகள் சுழலும்....)





Tuesday 29 January 2013

விஷ-ரூபம்! (7)


கமல் அவர்களின்-
ரசிகர்களே!

அபிமானிகளே!

இது-
சாமானியனின்-
கேள்விகளே!

கேட்கிறார்கள்-
இதுவரைக்கும்-
"இது"போன்ற படங்கள்-
வரவில்லையா!?

அப்போது-
"இவர்களுக்கு"-
கோபம் வரலையா!?

உறவுகளே-
இதை கொஞ்சம்-
படிக்கிறீகளா!?

தப்பான உறவு-
"வாலி"யில-
இல்லையா!?

"கலாபகாதலனில்-"
இல்லையா!?

"உயிர்"ல-
இல்லையா!?

சிந்து சமவெளியில-
இருந்ததில்லையா!?

இவைகளெல்லாம்-
தணிக்கை குழு-
அனுமதிததில்லையா!?

சிந்து சமவெளி-
ஓடிய திரையரங்குகள்-
தாக்கபடலையா!?

இயக்குனர் கூட-
தலைமறைவு -
ஆனாரில்லையா!?

இச்சமூகம்-
இவ்வாறாக-
போராடலியே!

சட்டப்படி-
எதிர்ப்பதும்-
ஒன்றும்-
தப்பில்லையே!

அடாவடி-
செய்பவர்கள்-
அரசியல் கட்சியாம்!

ஜனநாயக வழி-
போனால்-
வாய்க்கு வந்தபடியெல்லாம்-
திட்டலாம்!!

என்ன கொடுமை-
இது-
எனலாம்!

எதிர்க்கவில்லை-
ஒட்டுமொத்த-
திரைத்துறையை!

ஒட்டுமொத்தமக்களும்-
எதிர்க்கணும்-
எச்சமுதாயதிற்கு-
எதிராகவும்-
விதைக்கப்படும்-
விஷ வித்துகளை!

/////////////////////முற்றும்//////////////////

Monday 28 January 2013

விஷ-ரூபம்(6)

"ஆதிபகவானுக்கு"-
பிரச்னை-
பத்திரிகை-
செய்தி!

கமனாலும் சரி!
அமீரானாலும் சரி!

எவர் -
சமூகத்தில்-
பிணக்கை-
உருவாக்கும்படி-
செய்தாலும் சரி!

அப்படத்திற்கு-
தடை விதி!

இனவெறியாகாது-
தன் சமூகத்தை-
நேசிப்பது!

இன வெறியாகும்-
தன் சமூகம் செய்யும்-
தவறையும்-
ஆதரிப்பது!

இதுவே-
நபிகளாரின்-
போதனையாகும்!

இன்று -
பேசபடுது-
தேசவெறி!
மதவெறி!

நியாயவான்களுக்கு-
தேவை-
வெறியல்ல-
நெறி!

சமூகத்தின்-
அமைதியை-
கெடுக்காத-
நெறி!

மனிதனை-
மனிதன்-
அடிமைபடுதாத-
நெறி!

மொழியால்-
நிறத்தால்-
இனத்தால்-
பிரிக்காத-
நெறி!

பெரும்பான்மை-
சிறுபான்மை-
பிரித்து பார்க்காத-
நெறி!

திரு. கமல் சகோதரரே!
ஒரு விஷயத்தை-
நினைத்தீரா!?

ஏன் உங்கள்-
சகோதர சமூகம்-
வெறுப்பாச்சி!?

முதலில்-
ஹேராம்-
அச்சமூகத்தின்-
தலையில்-
மண்ணை-
போட்டுச்சி!

பிறகு-
"உன்னை போல் ஒருவன்-"
கண்ணுல-
மண்ண போட்டுச்சி!

இப்போது-
விஸ்வரூபம்-
மொத்தமா -
வாயில மண்ணள்ளி-
போட்டுடுச்சி!

ஆரம்பத்தில்-
"அவர்கள்"-
பத்திரிக்கை வாயிலாக-
எதிர்த்தாக!

இப்போ-
சட்டப்படி-
எதிர்க்குறாக!

ஒரு தடவை-
நடந்தால்-
தவறு!

திரும்ப-
திரும்ப-
நடந்தால்-
அதன் பேரு.....!!?

(தொடரும்.....)

//குறிப்பு-புதிதாக பின்னூட்டம் இடுபவர்கள் இத்தொடரை முழுவதும் படித்தால் சிறப்பாக
இருக்கும்.///





விஷ-ரூபம்!(5)

திரு,
உலக நாயகனே!

இதை எழுதுவது-
உங்கள் இஸ்லாமிய-
சகோதரனே!

எதிர்க்கவில்லை-
கமல் எனும்-
கலைஞனை!

எதிர்ப்பது-
விஸ்வரூபம் எனும்-
கலைப்படைப்பை!

மதிக்கிறேன்-
கலாம் அவர்களை!

வியந்தேன்-
ஜனாதிபதியாக-
உயர்ந்ததை!

ஆட்சேபிக்கிறேன்-
அவர் -
ஆதரிக்கும்-
அணு உலையை!

கலாம் அவர்களுக்கு-
தேச வளர்ச்சி-
முக்கியம்!

எனக்கோ-
மக்களின்-
உயிர் முக்கியம்!

இதில்தான்-
வித்தியாசம்!

பிடிக்கும்-
கலைஞர் அவர்களிடம்-
"இருந்த"-
போராட்ட குணம்!

பிடிக்கவில்லை-
"பாசத்திற்காக"-
மாறுகின்ற-
மனம்!

பிடிக்கும்-
ஜெயலலிதா அவர்கள்-
மலிவு விலையில்-
உணவு விற்க-
அறிவித்ததை!

பிடிக்கவில்லை-
இலவச பேரில்-
மக்களை சோம்பேறி -
ஆக்குவதே!

பிடித்தது-
ராமதாஸ் அவர்களை-
"டாஸ்மாக் " எதிர்ப்பு-
காட்டியது!

பிடிக்கவில்லை-
சாதி வெறி சண்டையை-
மூட்டுவது!

"பிடித்தவர்" என்பதால்-
"செய்வதையெல்லாம்-"
நியாயம் படுத்த முடியாது!

"பிடிக்காதவர்"என்பதால்-
"செய்யும் நல்லதை"-
எதிர்க்க முடியாது!

நம்ம வீடுதானே-என
கழிவறையில்-
தூங்கிட மாட்டோம்!

நடு வீட்ல-
"கழிந்திடவும்"-
மாட்டோம்!

மீண்டும்-
சொல்லிகொள்கிறேன்!

எதிர்க்கவில்லை-
கலையை!

எதிர்ப்பது-
விதிக்கப்படும்-
"நச்சு விதைகளை"!

(தொடரும்.....)




விஷ-ரூபம்! (4)

"தே....மகன்-
அவன்-என
ஆங்கிலத்தில்-
ஸ்ரீ ப்ரியா-
சொன்னாக!

"நாலு பேரை-
வெட்டனும்தான்-
வந்தேன்-என
விஜயகுமார்-
சொன்னாக!

"ஈன பசங்க"-என
சூர்யா சொன்னாக!

"உன் அம்மா-
அக்கா-
ஆயா(பாட்டி)-
கூ...கொடுடா-
விவேக் சொன்னாக!

ஸ்ரீ ப்ரியா-
"சொன்னதையும்"-
எழுதியவன்-
குடும்ப உறுப்பினர்கள்-
குட்டி ஜட்டி-
ப்ரா போடணும்னு-
சத்யராஜ் சொன்னாக!

இது-
எப்போ நடந்ததுன்னு-
சொல்லுங்க!?

இல்லை-
மறந்தோமாங்க!?

இல்லை-
நாமெல்லாம்-
நடிக்கிரோமாங்க!?

புவனேஸ்வரி-
கைது செய்யப்பட்டபோது!

தப்பான தொழிலாளியாக-
சில நடிகைகளை-
தினமலர் செய்தி வெளியிட்டபோது!

"ஆபாபாச அர்ச்சனை"-
நடத்தினார்கள்-
நடிகர் சங்க-
கண்டன பொதுகூட்டதின்போது!

ஓ!
கருத்துரிமை-
பேசுவோர்களே!

அது படம்தானே-என
பிதற்றுவோரே!

இப்ப-
சொல்லுங்க-
அப்பத்திரிக்கை-
சொன்னது-
பத்திரிகை சுதந்திரம்-என
ஒதுங்கலாமே!

இல்லைஎன்றால்-
"ஆதாரங்கள் கேட்டு"-
வழக்கு தொடுக்கலாமே!

"தனக்கு -
தனக்கு-என்றால்தான்
படக்கு-
படக்குன்னு-
இருக்கும்!

தலைவலியும்-
வயித்தவலியும்-
வந்தவனுக்குதான்-
வலிக்கும்!

மற்றவங்களுக்கு-
வந்தால்-
வேடிக்கையாதாய்யா-
இருக்கும்!

அதே பத்திரிக்கை-
இணையத்தில்-
நபிகள் நாயக-
கேலி சித்திரம்-
வெளியிட்டார்கள்!

இஸ்லாமிய இயக்கத்தினர்-
ஆர்பாட்டம்-
நடத்தினார்கள்!

ரத்தம்-
சொட்ட-
சொட்ட-
காவல்துறையால்-
தாக்கபட்டார்கள்!

ஆபாச அர்ச்சனை-
செய்த அவர்கள்-
யோக்கியவாதியா!?

ஜனநாயக வழி-
போராடிய-
போராடும்-
இச்சமூகம்-
தீவிரவாதியா!?

(தொடரும்.....)




Sunday 27 January 2013

விஷ-ரூபம்! (3)

கேள்விகள்-
விழுகிறது-
செவிகளின்-
வழியே!

தணிக்கை குழு-
அனுமதித்ததை-
எதிர்பதையே!

அக்குழுவின்-
அனுமதித்ததை-
எதிர்ப்பது-
கொலை குற்றமா!?

இல்லை-
தேச விரோதமா!?

அப்போ-
பின்வருபவை பற்றி-
கொஞ்சம் சிந்திப்போமா!?

"நியூ " படம்-
வெளிவந்தபின்-
ஏன் எதிர்ப்புகள்!?

பருத்தி வீரன்-
கூட்டு கற்பழிப்புக்கு-
ஏன் எதிர்ப்புகள்!

நயன் -
உதட்டை-
சிம்பு கடித்தாரு!

"வல்லவன் "-
சுவரொட்டியா-
ஊரெல்லாம்-
ஒட்டினாரு!

அப்போது-
ஏன் அவர்-
எதிர்க்கபட்டாரு!

"எவண்டி உன்னை பெத்தான்-
கையில கிடச்சா செத்தான்!"-
என்ற வரிகள்!

"பால் போன்ற தேகம்தாண்டி-
உடம்பு!
அதில் பாலாடை கொஞ்சம்-
விலக்கு"-
என்ற வரிகள்!

"பாவாடை கெட்டையில-
பார்த்தேனே மச்சம்-
ஆனாலும் நெஞ்சுக்குள்ளே-
ஏனோ அச்சம்"-என்ற
வரிகள்!

எதற்கு-
எதிர்ப்புகள்!?

தணிக்கை குழுவை-
நம்பி இருக்கலாமே-
அறிவு ஜீவிகள்!!

அனுமதித்த பிறகும்-
எதற்கு எதிர்ப்புகள்!?

மற்றவர்கள்-
எதிர்த்தால்-
ஜனநாயக போராட்டமா!?

பாதிக்கப்பட்ட-
சமூகம்-
எதிர்ப்பது-
கலாசார தீவிரவாதமா!?

இதுதான்-
உங்கள் நியாயமா!?

இல்லை-
விதண்டவாதமா!?

(தொடரும்...)





Saturday 26 January 2013

விஷ-ரூபம்..! (2)

பெரியவட்டமோ-
சிறிய வட்டமோ-
ஒரு புள்ளியே-
தொடக்கம்!

கலையோ-
கதையோ-
கவிதையோ-
ஒரு "கரு"விலிருந்தே-
உருவாக்கம்!

விஸ்வரூபம்-
"கதையின் கரு"-
ஒரு விஷ வித்தாகும்!

அது-
சொல்லி செல்வது-
தொழுபவர்களும்-
குர் ஆன் ஓதுபவர்களும்-
கொலை செய்பவர்களாக-
காட்சிகள்-
அமைக்கபட்டுள்ளதாகும்!

மேலும்-
தகவல்-
தாலிபானில்-
தமிழக  முஸ்லிம்களும்-
பங்கேற்கும்-
காட்சிகளாகும்!

இதற்கு-
முன்னர்-
தாடிகளும்-
தொப்பிகளும்-
தீவிரவாதிகள்-
அடையாளங்களாகும்!

இப்படிதான்-
ஊடகங்கள்-
விதைத்த -
விஷங்களாகும்!

தென்காசியில்-
சங்க்பரிவார-
அலுவலகத்தில்-
குண்டு வெடித்தது!

அதன் அருகினிலே-
தொப்பிகள்-
கண்டெடுக்கப்பட்டது!

உண்மை தெரியவந்தது-
சங்க்பரிவாரர்களே-
செய்து விட்டு-
தொப்பியை -
போட்டு விட்டு-
சென்றது!

"துப்பாக்கி"-
சுட்ட ரணங்களே-
இன்னும் ஆறவில்லை!

இப்போது-
விஸ்வரூபமாக-
விஷப்பாம்பு-
படம் எடுத்து-
கொத்துவது-
நியாயமில்லை!

முருகதாஸ்-
காட்டினார்-
ஒரு சமூகத்தை-
ஸ்லீப்பர் செல்லாக!

ராணுவத்தில்-
ஒரு "செல்லை-"
"பொறுப்பில்"-
அமர்த்திட போவதாக!

அவர் எச்சமூகத்தை-
சொன்னதாக-
படம்பார்த்த-
அனைவருக்கும்-
தெரியும்!

உண்மை-
எத்தனை பேருக்கு-
தெரியும்!?

அந்த -
ஸ்லீப்பர் செல்-
கர்னல் புரோகித்-எனும்
சங்கபரிவாரன்-
என!

அதை கண்டறிந்த-
ஹேமந்த் கர்கரே-
கொல்லபட்டார் -
என!

உண்மைகளை-
ஏன் திரிக்கிறீர்கள்!?

இது-
கருத்துரிமை-என
பிதற்றுகிறீர்கள்!

படத்தை-
படமாக-
பார்க்கணுமாம்!

"மருத்துவர் "அய்யா-
சொல்றாராமாம்!

அய்யா-
அப்போ உங்க-
அன்பு மணி-
படங்களில்-
புகை பிடிக்கும்-
காட்சிகளை-
எதிர்த்தது-
ஏனய்யா!?

அது -
அன்றைக்கு-
படமா -
தெரியலையா!?

உங்களுக்கு-
அவசியம் என்றால்-
எதிர்ப்பீங்க!

மற்றவங்க-
நியாயமான -
கோரிக்கை என்றாலும்-
எதிர்பீங்க!?

(தொடரும்....)

//குறிப்பு- நேற்றைய கவிதைக்கு
பின்னூட்டம் இட்ட சகோ..!சுரேஷ் அவர்களின் ஆவலான கேள்விக்கான பதிலாகவே-
இத்தொடரை தொடர்கிறேன்.
சுரேஷ் சகோதரா !
உன்னை போலவே எத்தனையோ-
உறவுகள் இருப்பார்கள்.
உண்மையை அறிந்திட-
என்னை எழுதிட தூண்டிய உங்களுக்கு மிக்க நன்றி!//





Friday 25 January 2013

விஷ-ரூபம்..! (1)

படையாட்சி-
ஏன் ஆனது-
மறுமலர்ச்சி!

வாட்டகுடி இரணியன்-
ஏன் ஆனது-
இரணியன்!

அன்பே ஆருயிரே-
பழைய தலைப்பே-
"பி எப்"பே!

"பாரதி கண்ணம்மா"வால்-
இயக்குனருக்கு-
கிடைக்காத-
"அபிசேகமா!?"

டேம் 999-
படத்திற்கு-
தடையும்-
ஏனம்மா!?

பையன்கள்-(பாய்ஸ்)
சங்கரு!
மகளிர் அமைப்புகளால்-
எதிர்க்கபட்டாரு!

"சண்டியரு"-
ஏன்-
"விருமாண்டி" ஆனாரு!

"தெய்வ திருமகளா-"
ஏன்-
 தெய்வதிருமகன்-
ஆனாரு!

உத்தமபுத்திரனால்-
ஒரு சமூகம்-
ஏன்-
ஆத்திரமானார்கள்!

இத்தனைக்கு -
போராடியவர்கள்!

பேரை-
 மாற்றியவர்கள்!

நாமெல்லாம்-
வேடிக்கை பார்த்தவர்கள்!

இது அவர்களின்-
கருத்துரிமை-என
நாமெல்லாம்-
பீற்றி கொண்டவர்கள்!

ஆனால்-
விஸ்வரூபம்-
பற்றிய-
ஆட்சேபனை-
என்றால்!

சொல்கிறோம்-
கருத்து சுதந்திரத்திற்கு-
எதிரானவர்கள்!

அட போங்கப்பு..!!

நல்லா இருக்கு-
நம்ம தீர்ப்பு.....!!?

(தொடரும்...)

Thursday 24 January 2013

தப்பு....!!இல்லையா ....!!!?

தப்பில்லை-
நீண்ட நாள் வாழ-
ஆசை கொள்வது!

தப்பு-
வாழும்போது-
மற்றவர்களுக்கு-
உதவ கை-
"நீளாமல் "-
இருப்பது!

தப்பில்லை-
பணம் காசு-
சேர்ப்பது!

தப்பு-
பசித்தவர்களுக்கு-
அதில் -
பங்கில்லாமல்-
இருப்பது!

தப்பில்லை-
உலக தரமான-
படம் எடுப்பது!

தப்பு-
சமூக உறவுகளுக்கிடையே-
"உலை "வைப்பது!

தப்பில்லை-
மனதுக்கு பிடித்த-
மணாளியை-
தேடுவது!

தப்பு-
"பிடித்துள்ளது"-என
பழகுறோம் எனும்-
பெயரில்-
"பாழாய்போவது!"

தப்பில்லை-
அறிவியல் வளர்வது!

தப்பு-
"அழிவுக்கும்"-
பயன்படுவது!

தப்பில்லை-
தன்  சமூகத்தை-
நேசிப்பது!

தப்பு-
தன் சமூகம் செய்யும் -
தவற்றையும்-
ஆதரிப்பது!

தப்பில்லை-
வெற்றியை நோக்கி-
பயணிப்பது!

தப்பு-
"இலக்கை அடைந்ததும்"-
தலைக்கணம்-
பிடிப்பது!

இன்னும் சொல்ல-
எவ்வளவோ-
உள்ளது!

எப்படி-
இச்சிறு பாகதிற்குள்-
அடைப்பது!?

இன்றைய-
உலகின் -
நிலையானது!

கொடுமையானது!

தப்பில்லாதவற்றை-
தப்பாக-
பார்ப்பது!

தப்பாக உள்ளதை-
தப்பில்லாததுபோல்-
நினைத்து-
வாழ்வது!




Wednesday 23 January 2013

ஆண்பிள்ளையா...!!?

காசுக்கு-
"சம்மதிப்பவள்"-
விபச்சாரியா!?

"காசு பெற்று-"
கல்யாணம்-
செய்பவன்-
ஆண்பிள்ளையா!?

இரண்டுக்கும்-
என்ன -
வித்தியாசமடா !?

காரி உமிழபடுது-
நம் -
ஆண்மையடா!

"கால்கட்டு"-
போடாதவர்கள்-
கைக்கூலி வாங்காமல்-
கல்யாணம்-
கட்டு!

"வாங்கி "-
"கட்டி இருந்தால்-"
திருப்பி கொடுத்திடு!

மாட்டேன் என்றால்-
மரியாதையை-
எதிர்பார்க்காமல்-
அடிமையாக-
இருந்திடு!

பாவப்பட்ட -
ஜென்மமல்ல-
பெண்மக்கள்!

"இவ்விசயத்தில்-"
இழிவடைந்தது-
ஆண்வர்க்கங்கள்..!!






Tuesday 22 January 2013

நம் எழுத்துக்கள்.....!!

பாலையில்-
பிறந்ததால்-
பேரீத்தம்பழம்-
சுவையில்-
குறைவில்லை!

சேற்றில்-
பூத்ததால்-
தாமரை அழகு-
மங்கிட வில்லை!

புதைந்து-
கிடந்ததால்-
கனிமங்கள்-
"கண்ணியம்"-
காணாமல் -
போகவில்லை!

பட்டறையில்-
அடிபட்டதால்-
இரும்பினாலான-
ஆயுதங்கள்-
அசிங்கபடுவதில்லை!

கரும்பாறை-
நிறமான-
பனை மரத்திலிருந்து-
வருவதால்-
பதநீர்-
கசப்பதில்லை!

தழும்புகள் உள்ள-
உடம்பான-
தென்னையில் இருந்து-
வருவதால்-
இளநீர்-
இனிக்க மறுப்பதில்லை!

எதிலிருந்து-
என்ன வருகிறது-
முக்கியமில்லை!

இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!

இன்று-
நாம் "வலையில்-"
பதியலாம்!

நாளை-
நம் எழுத்துக்கள்-
வரலாற்றையும் -
நிர்மாணிக்கலாம்!!









Monday 21 January 2013

இது விவாதமல்ல.....!!

கருவே-
கல்லறை-
"கரு"-
பெண் சிசுவென்றால்!

தப்பினாலும்-
கள்ளிப்பால்-
கருவறுக்குது-
பெண் குழந்தைஎன்றால்!

விரண்டோடிய-
"பேருந்தொன்று"!

தப்பிக்க-
வழி இல்லை-
அப்பெண்ணுக்கு -
என்று!

கற்பழிப்பு-
ஓட ஓட!

கண்ணை-
மூடிக்கொள்கிறார்கள்-
மதச்சாயம்-
"பூசிட"!

யாராக-
இருந்தாலும்!
பெண்தானே!

வித்தியாசம்-
பார்ப்பது-
வீணே!

நிர்மூலமாக்கப்பட்டு!
நிர்வாணமாக்கப்பட்டு!

கிடப்பவர்கள்-
எத்தனையோ-
சூறையாடப்பட்டு!

தெருக்களில்-
பிணமாக்கபட்டு!

காதல் ரசமாக-
பேசிக்கொண்டு!

காம ரசம்-
பகிர்ந்து கொண்டு!

"கைகழுவபடுது"-
"காரியங்கள்"-
முடித்துக்கொண்டு!

ஒரு முறை-
சேலை உருவியவன்-
துரியோதனன்-
வில்லனா!?

எத்தனையோ முறை-
உருவி விட்டு-
உலாவ விடுபவன்-
"இயக்குனனா!?"

பதினைந்தே ஆன-
சிறுமி -
நடித்த காட்சி!

உதத்தோடு-
உதடு-
முத்தகாட்சி!

சில நாட்களில்-
வரக்கூடிய-
கடல் படத்துலதான்-
அக்கேவலகாட்சி!

"கேவலபடுத்தியவனுக்கு-"
கிடைக்கலாம்-
விருது!

சபலத்தை பார்த்து-
சபலம் தலைக்கேறியவனுக்கு-
சபலங்கொண்டால்-
கைது!!

பெண்ணென்றால்-
அவ்வளவு-
கேவலமா!?

அப்பெண்ணின்-
வழி வந்த-
ஆண்களே-
நாம் மட்டும்-
புனிதமா!?

இது-
ஆணா-
பெண்ணா!?-
விவாதம்-
அல்ல!

இரு பாலினமும்-
ஓரினம் என்பது-
பொய்யில்லை!

அதனதன்-
தன்மையில்-
இருந்துகொண்டால்-
தப்பு நடக்க-
வாய்ப்பில்லை!

கற்பு-
ஆணுக்கும்-
பெண்ணுக்கும்
ஒன்றுதான்-
யாரும்-
மறுப்பதற்கில்லை!

ஆனால்-
ஆண் -
பெண்களிடம் மட்டும்-
எதிர்பார்ப்பது-
நியாயமில்லை!




Sunday 20 January 2013

வழியே இல்லை....!!

எப்போது-
கடல்-
அலையை-
நிறுத்திட!

நாம்-
அதில்-
குளித்திட!

எப்போது-
எவரெஸ்ட்-
பணிந்திட!

நாம்-
அதன் மேல்-
நின்றிட!

எப்போது-
முள்ளில்லாத-
ரோஜா  -
பூத்திட!

நாம்-
அதனை-
பறித்திட!

எப்போது-
பூக்களை வீசி-
போர்க்களம்-
நடந்திட!

நாம் -
போய்-
பங்காற்றிட!

எப்போதும்-
எதிரும்-
புதிருமாக-
இவ்வுலகம்-
இருந்திட!

கலங்கியே-
நின்றால்-
எப்படி-
முடியும்-
நாம் வாழ்ந்து-
காட்டிட!

நமக்கு-
சாதகமாக-
வையகம்-
அமையாது!

சாதிக்க-
நினைப்பவன்-
பாதகங்களையும்-
சாதகமாக்குவதை-
தவிர்த்து-
வேறு வழியேது...!!?




Friday 18 January 2013

சோதனைகள்.....!!

கூர் தீட்டிடும்-
நீ!-
கத்திஎன்றால்!

குத்தி கிழித்திடும்-
நீ!-
"அட்டை கத்திஎன்றால்!"

மோதி உடைந்திடும்-
நீ-
இரும்பு கவசமென்றால்!

பாதியாக்கி-
வீசிடும்-
நீ!-
காகித பட்டமென்றால்!

ஜொலித்திட-
உரசிடும்-
நீ!-
வைர கற்கள் என்றால்!

நசுக்கி-
உடைத்திடும்-
நீ!-
உப்பு கற்கள் என்றால்!

விரைந்தோடும்-
நீ!-
எதிர்க்கும்-
வேங்கை என்றால்!

துரத்தி-
கொண்டே இருக்கும்-
நீ!-
வெள்ளாடு என்றால்!

இறையாகிடும்-
நீ!-
தீக்கங்குகள் என்றால்!

சுழற்றி-
அடித்திடும்-
நீ!-
சாம்பல் என்றால்!

அடைபடும்-
இடத்தை பொறுத்தே-
உருவம் கொள்ளும்-
திரவகங்கள்!

அடையும்-
மனிதனின்-
தன்மையை கொண்டே-
மாறிடும்-
சோதனைகள்!

சோதனை-
வரும்போது-
தந்திடும்-
வேதனை!

போகும்போது-
தந்து செல்லும்-
படிப்பினை!

Thursday 17 January 2013

நீரும் -வாழ்வும்!

இருக்கவேண்டாம்-
அசுர வேக-
அழிவை தரும்-
காட்டாறு போல!

தேங்கி கிடந்தது-
நாற்றம் தரும்-
சாக்கடை போல!

இருப்போமே-
சல சல என-
நிதானமாக-
செல்லும்-
நதியை போல!

மித வேகம்-
மிக நன்று-
வாகனம் ஓட்டுவதற்கும்-
மட்டும்-
அல்ல!

நம் வாழ்க்கைக்கும்-
பொருந்தும்-
அச்சொல்லே!



Wednesday 16 January 2013

மறுத்தால் ஏது.....!?

வார்த்தைகள்-
ஏது!?-
உதடுகள்-
இணைந்திட-
மறுத்தால்..!

மரங்கள்-
ஏது!?-
மண்-
தாங்கிட-
மறுத்தால்..!

மழலைகள்-
ஏது!?-
பிரசவவலியை-
தாய்மை-
தாங்கிட-
மறுத்தால்..!

எழுத்துக்கள்-
ஏது!?-
பேனா மையை-
கசிந்திட-
மறுத்தால்..!

வான் மழை-
ஏது!?-
பூமி நீரை-
ஆவியாக்கிட-
மறுத்தால்..!

சிற்பம்-
ஏது!?-
பாறை கற்கள்-
சில பாகங்களை-
இழந்திட-
மறுத்தால்..!

லட்சியம் வெல்வது-
எப்போது!?-
நாம் அதனை-
நோக்கி பயணிக்க-
மறுத்தால்...!!!

Tuesday 15 January 2013

கொட்டி கொண்டிருக்கிறது...!!

குடுவையிலிருந்து-
கொட்டும்-
தண்ணீர்-
அது!

வேடிக்கை!-
"கொள்ளளவும்-"
தெரியாது!

வடியாமல்-
இருக்க-
"அடைக்கவும்-"
முடியாது!


கொட்டும் தண்ணீரால்-
பயனா!?
வீணா!?

அது-
நடபட்டிருப்பதை-
பொறுத்தது!

நட்டு-
இருப்பது-
கள்ளி செடியா!?
மல்லி கொடியா!?

அது-
வரும் காலம்-
பதில் சொல்லகூடியது!

குடுவை-
நம் உடல்!

தண்ணீர்-
நம் ஆயுள்!

"கொட்டபடுவது"-
நம் செயல்!

நடபட்டிருப்பது-
பிறரது-
வாழ்வியல்!




Monday 14 January 2013

புண்ணியமில்லை....!!

மொத்தவலிகளையும்-
சுத்தமாக-
அனுபவித்து விடுகிறாள்-
நம்மை -
பெற்று எடுக்கையிலே!

அதனால்தானோ-!?
பெத்த புள்ளை-
பாசம் மறந்தும்-
பிரிஞ்சு போகையிலே!

அவ்வலியை கூட-
மறைத்து கொள்கிறாள்-
தன் முந்தானையிலே!

கூரை ஏறி -
கோழி பிடிக்கதெரியாதவன்-
வானம் ஏறி வைகுண்டம்-
போனானாம்!-என்று
சிலர்-
சொல்வதுண்டு!

அதுபோலவே-
"மதிக்க வேண்டியவளை"-
ஒதுக்கி வைத்து விட்டு-
புனிதத்தலங்கள் செல்வதால்-
புனிதம் அடைவதாக-
நினைப்பவர்களும்-
இவ்வுலகில் உண்டு!



Sunday 13 January 2013

சிந்தித்தால் மட்டுமே....!!!?

மண்ணும்-
மலைகளும்-
மூடி இருப்பதால்-
மௌனித்து-
விடுகிறதா-
எரிமலைகள்!?

தூரத்தை எண்ணி-
இரை தேடலை-
நிறுத்திவிடுகிறதா-
பறவைகள்!?

மேகங்கள் -
மறைப்பதால்-
மாசுபடிந்ததா-
சூரிய கீற்றுகள்!?

இலையில்-
சோறு கிடைக்கலியே-என
"சும்மா " இருக்கிறதா-
எறும்புகள்!?

கூண்டில் அடைந்து-
கிடந்தாலும்-
தன் கர்ஜனையை-
நிறுத்திடுதா-
சிங்கங்கள்!?

அணை வைத்து-
அடைத்தாலும்-
அடங்கிடுதா-
நதிகள்!?

வெட்டுவதால்-
துளிர் விடாமல்-
இருக்குமா-
மரகிளைகள்!?

பறிப்பார்கள் -என
தெரிந்தும்-
மலராமல்-
இருக்கிறதா-
பூ மொட்டுக்கள்!

படைப்புகளிடம்-
பிரதிபலிக்கிறது-
அதன் தன்மைகள்!

""படைப்புகளில்-
சிறந்த படைப்பு-
மனிதர்கள்!""

அவை-
படைப்பை பற்றி-
"படைத்தவன் -"
சொன்னவைகள்!

மனிதர்களே-
நமக்குள்-
இருக்காதா-
திறமைகள்!?

சிந்தித்தால்-
மட்டுமே-
சிக்கிடும்-
அவைகள்..!!



Saturday 12 January 2013

நாளைய வரலாறு...

இளைஞனே..!
அடித்தளமாக்கு-
அவமானங்களை!

எரிதணலாக்கு-
ஏளனங்களை!

சோர்ந்தே-
போகும்-
சோதனைகளே!

வெந்தே-
விலகிடும்-
வேதனைகளே!

இன்று -
நாம் இருக்கலாம்-
பசியோடு!

ஆனால்-
உயிர் ஒட்டி-
இருக்குது-
நாளை மாறும்-என்ற
நம்பிக்கையோடு!

மண் ஒன்றும்-
தடை இல்லை-
முளைக்க தெரிந்த-
விதைகளுக்கு!

வறுமை-
ஒன்றும் தடை இல்லை-
சாதிக்க துடிக்கும்-
இளைஞர்களுக்கு !

விழும் -
சருகுகள் கூட-
விறகாகுது!!

சாய்வு நாற்காலியில்-
சாய்ந்து கிடக்கவா-
நம் இளைமையாவது!?

விழும்-
நீரினால்தான்-
அருவிக்கு-
அழகு!

விழுந்தாலும்-
எழுந்து -
முயன்றால்தான்-
வீரனுக்கு-
அழகு!

வென்றால்தான்-
திரும்பி பார்க்கும்-
இவ்வுலகு!

முயற்சியை-
மூலதனமாக்குவோம்!

உழைப்பை-
பொருளாதாரம் ஆக்குவோம்!

இறைவன்-
நாடுவான்-
நாளைய வரலாறை-
நமதாக்குவோம்...!!



Friday 11 January 2013

என்ன செய்ய முடியும்......!!?

விவசாயி-
மண்ணுல இருந்து-
சோறு -
போடுறவங்க!

"ஆண்டவங்க"-
"ஆள்கிரவங்க"-
விவசாயிங்க-
சோத்துல-
மண்ணை அள்ளி-
போடுறாங்க!

விவசாயி-
முதுகெலும்பா-
தேசத்தை-
நிமிர்த்தியவங்க!

"வேசதாரிகள்"-
தேகத்தை -
காட்டி-
பொழைக்கிறாங்க!

பசியமர்த்தியவர்களை-
மறந்தோம்!

"வெறி"ஏற்றுபவர்களை-
"தலைவா"னு-
அழைக்கிறோம்!

வறண்டு-
பிளந்து-
கிடக்கும்-
விளை நிலங்கள்!

வறண்டது-
நிலமட்டுமா!?
அல்ல-
நம்ம-
மனங்கள்!

"கேவலமா-"
பேசியவர்களிடமும்-
கூட்டணி-
வைப்பாங்க!

அரசியல் -
சாணக்கியம்னு-
அதற்கு பேர்-
வைப்பாங்க!

இவங்க-
ஆட்சியை-
பிடிக்க-
சேர்ந்துப்பாங்க!

ஆனால்-
நதிகளை-
மட்டும்-
இணைக்கவே-
மாட்டாங்க!

ஆமாம்-
அவங்களும்-
பொழப்பு(அரசியல்)-
நடத்த-
வேணாமாங்க!?

ஆசை-
எனக்கில்லை-
தழைக்கனும்-
தமிழ் நாடென்றும்!

காயனும்-
கர்நாடகமென்றும்!

அற்ப ஆசைதான்-
"இருப்பதை"-
பகிர்ந்து கொண்டால்-
தேசம் வளம் பெறுமே-
என்று!

விதை கூட-
உப்புதண்ணிக்கு-
வளர்வதில்லை-
என்றுமே!

அப்படி வளருமேயானால்-
அம்மக்களின்-
வியர்வையும்-
கண்ணீரும்-
போதுமே!

நாம்-
விவசாயம்-
வாழ -
வழி செய்யவில்லையானால்!

கல்லையும்-
மண்ணையும்-
சாப்பிட பழகிகொள்வோம்-
வேற என்ன -
செய்ய முடியும்-
நம்மால்......!!!?



Thursday 10 January 2013

கடல் கூட.....

வாடிக்கையானது-
வேட்டையாடுவதும்-
வேதனைக்குள்ளாவதும்!

வெறியும்-
அடங்கவில்லை-
வேட்டை நாய்களுக்கும்!

இடைவெளியோடு-
இருக்க தெரியவில்லை-
பகடை காய்களுக்கும்!

எல்லைக்குள்-
இருந்தால்தான்-
கடல் கூட-
அழகு!

எல்லை மீறி வந்தால்-
ஊருக்கே-
அழிவு!

அதுபோலவே-
ஆண்-
பெண்-
உறவு!

Wednesday 9 January 2013

சதை துண்டு....!!

கழுத்து-
அறுத்து!

தோல்-
உரித்து!

தலை கீழாக-
தொங்க விட்டு!

கழிவுகளை-
அகற்றி விட்டு!

கறி-
ஒரு பக்கமாக!

எலும்புகள்-
மறு பக்கமாக!

இறைச்சி கடைகாரர்-
இருப்பார்-
வாடிக்கையாளர்களை-
எதிர்பார்த்துக்கொண்டு!

அணிந்திருக்கும்-
ஆடைகளை-
காற்றில் -
ஆட விட்டு!

ஒவ்வொன்றாக-
கழற்றி-
 வீசி  விட்டு!

நேரம்-
செல்ல செல்ல-
இரு கைக்குட்டை அளவே-
மிஞ்சம் வைத்து கொண்டு!

அழகை -
காட்டிடுவார்-
சிரித்து கொண்டு!

இதனை-
ஒருவர்-
இருப்பார்-
புகைப்படம்-
எடுத்துகொண்டு!

"கறி வைத்து"-
ஒருவர்-
வயிறு பிழைக்கிறார்!

மற்றொருவர்-
"சதையை வைத்து"-
வயிறு வளர்க்கிறார்!

"கடைகாரர்"-
பசிக்கு -
உணவு விற்கிறார்!

"படக்காரர்"-
"காம பசி"-
ஏற்றுகிறார்!

எனக்கோ-
குருதிபடிந்த-
கைகளில்-
முத்தமிட-
ஆசை!

"உருவியதை"காட்டி-
பிழைப்பவரை-
எட்டி மிதிக்காமல்-
போகவும்-
ஆசை!

முத்தமிடுவது-
மரியாதைக்காகவே!

"மிதிக்காமல்"-
போவது-
என் பிஞ்சி போன-
செருப்புக்கு-
இழுக்கு வாராமல்-
இருக்கவே!


Tuesday 8 January 2013

பரிதாபம்...

அரை வயிற்று-
உணவோடுதான்-
தூங்க செல்கிறார்கள்!

வசதியானவர்களும்!
வசதி இல்லாதவர்களும்!

காரணம்-
ஒரு சாரார்-
நோயினாலும்!

மறு சாரார்-
வறுமையினாலும்!

Monday 7 January 2013

துளிகள்.....!!

நெடுஞ்சாலை-
நெடுகிலும்-
விழுந்திருக்கும்-
மழை துளிகள்!

பூக்களின் மேல்-
தெளிக்கப்படும்-
நீர் -
துளிகள்!

பாட்டில்-
நிரப்பும்-
போட்டியில்-
மழலைகள்-
சிந்திடும்-
தண்ணீர்-
துளிகள்!

புற்களின் மேல்-
இருக்கும்-
பனி துளிகள்!

உச்சியில் -
விழுந்து-
உயிர் கூச்செறியும்-
அருவியின்-
துளிகள்!

மரகிளைகளின் கீழ்-
செல்கையில்-
ஈரமாக்கிடும்-
இலையில்-
மறந்திருக்கும்-
துளிகள்!

இத்தனை-
துளிகளும்-
நெருக்கத்தையும்-
நெருடலையும்-
தருகிறது!

என்னவளே-
உன் முகத்தில்-
துளிர்விடும்-
வியர்வை துளிகள்!

Sunday 6 January 2013

சோம்பேறி...

இன்றைய-
சாதனையாளர்கள்-
நேற்றைக்கு-
சோம்பேறிகள்-
இல்லை!

இன்றைய-
சோம்பேறிகள்-
நாளைக்கு-
சாதிக்க-
போவதில்லை!

வாழ்கை பயணம்!

காலம் எனும்-
கடலில்!

ஆடம்பர வாழ்கை-
பாறையை நோக்கி-
பயணிக்கும்-
டைட்டானிக் -
கப்பலாகும்!

எளிய வாழ்கை-
கட்டவிழ்ந்தாலும்-
மூழ்கிடாத-
கட்டு மரமாகும்!


ஆயுதமும்..அதிகாரமும்...

ஆயுதமும்-
அதிகாரமும்-
ஒன்றுதான்!

அதன்-
பயன்பாடு-
"இருக்கும் "-
இடத்தை-
பொருத்துதான்!

மக்களை-
நேசிப்பவரிடம்-
இருந்தால்-
காக்கும்!

தூசியாக-
நினைப்பவரிடம்-
இருந்தால்-
தாக்கும்!


Saturday 5 January 2013

உண்மை அழகி.....!!

ஒப்பிடமாட்டேன்-
உண்மை அழகி-
உன்னை!

உலக-
அழகி-
என!

"உடைவாள்"-எனும்
போர் வாள்-
நீ எங்கே!

உடையை-
ஓர் இரு -
"இடங்களில்"-
மட்டும்-
"ஒட்டி கொள்ளும்-"
"அவர்கள்"-
எங்கே...!!?


இருப்பான்.....!!?

செத்து -
பிழைச்சவனாவது-
இருப்பான்.!

என்னவளே-!
உன்னழகில்-
"பித்து" பிடிச்சவன்-
"தெளிஞ்சி -"
இருப்பான்....!!!?

Friday 4 January 2013

வரவு....

பணமும்-
பொருளும்-
வரவாகும்!

மானமும்-
மரியாதையும்-
அதற்கு-
அடமானமாகும்!

அதுதான்-
வரதட்சணை!

சமூகத்தின்-
பெரும்பிரச்சனை!

உரிப்பது.....!!

மேளங்கள் -
ஆகுது-
மாட்டு தோலை-
உரிப்பது!

கல்யாணம்-
ஆகுது-
மாமனார் -
"தோலை உரிப்பது"...!!


Thursday 3 January 2013

ஒரே வித்தியாசம்தான்....

கல்யாணத்தை பற்றி -
பேசலாம்-
"இவ்வளவும் செஞ்சா"-என்று
பெண் வீட்டாரிடம்-
பேசுபவனுக்கும்!

"ஏதாவது-
இருந்தா தர்மம்-
பண்ணுங்க தாயி-"என்று
பிச்சை கேட்பவனுக்கும்!

ஒரே-
வித்தியாசம்!
முதலானவன்-
நடுவீட்ல உட்கார்ந்து-
கேட்டதால்-
"கௌரவ பிச்சை"!

இரண்டாமானவன்-
நடு தெருவுல-
அவன் நின்னு -
கேட்பதால்-
"ராப்பிச்சை"!

Wednesday 2 January 2013

முகலாயர்களே....(25)

பிரித்தாளும்-
சூழ்ச்சி!
(hate policy)

கொலைகாரர்கள்-
தயாராவது-
விஷம செய்திகளை-
விதைச்சி!

ஒருவர்-
ஒரு நாயை-
அடிப்பாரேயானால்!

அடுத்தவர்-
தடுப்பார்-
மிருகங்களை-
நேசிப்பவரானால்!

அந்த நாயை-
சிலகாலம்-
அவதூறுகள்-
பரப்பி!

வெறி நாய்!
சொறி நாய்!
கடி நாய்!
ஆளை கடித்து-
கொல்லும் நாய்!-என
மக்களை-
திசை திருப்பி!

அந்நாயை-
அடித்து கொன்றால்-
தடுப்பவர்-
யாரும் இரார்!

அனைவரும்-
கண்டும் காணாததுபோல்-
செல்வார்! 

அது போலவே-
ஒரு சமூகத்தை-
பிற்போக்குவாதி!
தீவிரவாதி!
பயங்கரவாதி!-என்று
செய்திகள்-
பரப்புகிறார்கள்!

பிறகு-
"ஏதோ" -
ஒரு காரணம்-
சொல்லி-
கொல்கிறார்கள்!

மற்ற மனிதநேயமக்களும்-
குரல் கொடுக்க-
தயங்குகிறார்கள்!

இதில் விதிவிலக்கு-
ஒரு சில -
மனித உரிமை-
ஆர்வலர்கள்!

வாணிபம்-
செய்ய வந்த-
வெள்ளையர்கள்!

கொஞ்சம் கொஞ்சமாக-
தேசத்தை-
விழுங்க ஆரம்பித்தார்கள்!

அதில்-
சில வழிகள்!

குறுநில-
மன்னர்களை-
குழிபறித்தார்கள்!

சாதிய சண்டைக்கு-
எண்ணெய் ஊற்றினார்கள்!

பிறகே-
மக்கள் -
பொதுவான எதிரியை -
அறிந்தார்கள்!

அதன் பிறகே-
சுதந்திர போருக்கு-
ஆயத்தம்-
ஆனார்கள்!

வெள்ளையர்கள்-
"நிரந்தர விஷத்தை-"
விதைக்க முனைந்தார்கள்!

இரு பெரும் -
சமூகத்தை-
பிளக்க -
வழிகள்-
செய்தார்கள்!

அங்கேதான்-
வரலாற்றை-
"திரித்தார்கள்"!

இறந்த உடல்களையே-
இரக்கம் இன்றி-
"நாசம்" செய்த-
அவர்களுக்கு!

"திரித்து" எழுதுவதில்-
சிரமம் இல்லை-
அவர்களுக்கு!

இன்றும்-
அவ்வரலாற்றை-
வைத்து கொண்டு-
வகுப்புவாதத்தை-
வளர்கிறார்கள்-
சிலர்!

அதன் விளைவோ-
"அனைத்தையும்"-
இழந்தவர்கள்-
பலர்!

சொல்லிவிட்டேன்-
எனக்கு தெரிந்த-
உண்மையை-
உங்களிடம்!

சீர்தூக்கி பார்க்க-
கேள்விகளை-
 கேட்டு கொள்ளுங்கள்-
உங்கள் -
மனசாட்சியிடம்!

--------------முற்றும்-----------------

Tuesday 1 January 2013

முகலாயர்களே.....(24)

உடலை விட்டு-
உயிர்-
பிரிந்தது!

தியாகங்களோ-
எரிமலை-
போன்றது!

மலை போன்ற-
பொய்களையும்-
பிளந்துகொண்டு-
வெளிவருவது!

சரிந்தது-
சிங்கம்!

அவசரம் -
கொண்டது-
புதைத்திட-
"டேவிஸ்" எனும்-
அசிங்கம்!

உடல் வேகமாக-
அழிய -
சுண்ணாம்பு கற்களோடு-
புதைத்தான்!

சரித்திரத்தை-
மறைத்ததாக-
மனப்பால்-
குடித்தான்!

தியாகம்-
கடல்-
போன்றது!

அவதூறுகள்-
கடல் நுரைகளை-
போன்றது!

கடல்-
நிலைத்து-
இருக்கும்!

நுரை-
காலில்-
மிதிபட்டே-
இருக்கும்!

ஆனது-
கிட்டத்தட்ட-
தொண்ணூறு-
வருடங்களாக!

சுபாஷ் சந்திர போஸ்-
தன் சுதந்திர போரை-
தொடக்கம் செய்தார்-
பகதூர்ஷா-
கல்லறை முன்பாக!

"பின்னாடிகள்"-
அறிவோமே!

"முன்னோடிகள்"-
மறந்தோமே!

வில்லியம் டெல்ரிம்பில்-
சொன்னார்-
பகதூர்ஷா ஆவணங்கள்-
இந்திய தேசிய -ஆவணக்காப்பகத்தில்-
தூங்கியதை-
தூசி தட்டி-
படித்தேன்-
யாரும் படிக்காதது-
மக்களிடம்-
சமர்பிக்காதது-
துரதிஷ்டமே!

மால்கம் எக்ஸ்-
சொன்னார்-
வரலாறு தெரியாத சமுதாயம்-
வரலாறு படைப்பதில்லை!

உறவுகளே-
வரலாறுகளை-
படிப்போமா!?-
வரலாறுதான்-
படைப்போமா!?
தெரியவில்லை!

முயற்சித்தால்-
வெற்றி என்பது-
தூரமில்லை!

(தொடரும்......)

(குறிப்பு-இத்தொடரில் வரும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரமாக சொல்லவேண்டிய கட்டாயம் இது-
1 - எனது முகநூல் நண்பர் பி.எஸ்.கனி என்பவர் பகிர்ந்து கொண்ட தகவல்!

2-இப்னு முஹம்மத் அவர்கள்-
பகதூர்ஷா நூற்று ஐம்பதாவது நினைவுநாளை முன்னிட்டு-
வெளியிடப்பட்ட கட்டுரையிலிருந்துதான்!
இப்னு முகமது அவர்கள்-
ஆதராமாக சொன்ன புத்தகங்கள்!
1.The Last mughal by william darlymple.
2.Pritchett/nets of awarness.
3.Trial Evidences.
4.NAM,Wilsan Letters.
5.The Hindu ,May 26,2012
6.DVA 31 May 1857.
இந்த சகோதரர்களுக்கு மனமுவந்து நன்றியினை சொல்லி கொள்கிறேன்)